புதன், 5 அக்டோபர், 2022
"திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல!" - வள்ளலார் 200 விழாவில் முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் விழாவினை தொடங்கி வைத்தார்.
வள்ளலார் 200 இலச்சினை மற்றும் சிறப்பு மலரை வெளியிட்ட அவர் தொடர்ந்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள், அவர் தொடங்கிய தர்மசாலைக்கு 156 ஆண்டுகள் மற்றும் வள்ளலார் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த முப்பெரும் விழா சிலருக்கு ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருக்கலாம்.
புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறை அவசியம் – ஐ.நாவில் குழு !
தேசம் நெட் - அருண்மொழி : விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறை அவசியம் என கோர் குழு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்து கோர் குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உயர் ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள் பேரவையின் விசேட நடைமுறைகளுடன் இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை வரவேற்ற குறித்த குழு, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை, எரிபொருளில் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை மற்றும் வீட்டு வருமானம் குறைப்பு போன்றவற்றின் விளைவாக பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கம் பற்றி கோர் குழு கவலை வெளியிட்டுள்ளது.
ஜப்பானுக்கு மேலே பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்திய வட கொரியா - தென் கொரியா, அமெரிக்கா எதிர்வினை
bbc.com - ஜீன் மெக்கென்ஸீ, வெட்டீ டேன், ரூபெர்ட் விங்ஃபீல்ட் ஹேஸ் : அமெரிக்கா மற்றும் ஜப்பானின் கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டுமென்றே தீவிரமாக்குவதாகத் தோன்றக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்ரை ஜப்பானுக்கு மேலே வடகொரியா செலுத்தியுள்ளது.
இந்த பாலிஸ்டிக் ஏவுகணை பசிஃபிக் கடலில் விழுவதற்கு முன்பு 4,500 கிமீ (2800 மைல்) தூரம் பயணம் செய்தது. இதுவே இன்னொரு பாதையில் ஏவுகணை சென்றிருந்தால் அமெரிக்க தீவான குவாமை தாக்குவதற்கு அதுவே போதுமான தூரமாக இருந்திருக்கும்.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வட கொரியா ஜப்பானுக்கு மேலே செலுத்தும் முதலாவது ஏவுகணை இதுவாகும்.
இதன் காரணமாக பாதுகாப்பாக இருக்கும்படி தனது சில குடிமக்களுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு குண்டுமழை ஒத்திகையில் ஈடுபட்டு எதிர்வினையாற்றின.
செவ்வாய், 4 அக்டோபர், 2022
அமைச்சர் சிவசங்கர் மறுப்பு : பேருந்தில் பெண்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் தரலாம்?:
தமிழ்நாட்டில் முதலமைச்சராகக் கடந்த மே மாதம் 7ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றைய தினமே 'பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பெண்கள் வாழ்க்கையில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இலவச பேருந்து பயணத் திட்டத்தால் இதுவரை 173 கோடி பெண்கள் பயனடைந்து உள்ளனர்.
தி.மு.க அரசின் இந்த மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பெண்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் பெண்களைத் தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மதுரவாயல் – துறைமுகம் சாலை 2024ல் திறப்பு : அமைச்சர் எ.வ.வேலு உறுதி!
![]() |
Kalai
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதுரவாயல் – துறைமுகம் சாலைத் திட்டம் 2024 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலத்தில், நெடுஞ்சாலை,நீர்வளம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அமைச்சர்கள் எ.வ வேலு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது மக்களின் ஏழு வருட போராட்டம்
நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வரும் தோக்கமூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலையத்தின் அருகே 2015ம் ஆண்டு மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. மாற்று சமூகத்தினர் கட்டிய அந்த சுவரால் பட்டியலின மக்கள் கால்நடை மேய்ச்சலுக்கும் கூலித்தொழிலுக்கும் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சுவரை இடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தீண்டாமை சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.
சசிதரூரின் வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி.சசிதரூர் போட்டியிடும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன், மற்றொரு வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் வந்த சசிதரூர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
எனது வேட்பு மனுவை வாபஸ் பெற வலியுறுத்துமாறு, ராகுல் காந்தியிடம் சில கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அவரே என்னிடம் தெரிவித்தார். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருவதை அவர் (ராகுல் காந்தி) எனக்கு நினைவு கூர்ந்தார்.
மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகிறார்! மீண்டும் தென்னிந்தியர் கைவசமாகும் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார்.
அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
தலைவர் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஒரு தாய் மக்களாய் ஒரு கொள்கைக் குடும்பத்து சொந்தங்களாய் - பொதுக்குழுவில் நாம் காண்போம்": முதல்வர் மடல்!
அதன் விவரம் வருமாறு:-
திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் 15-ஆவது அமைப்புத் தேர்தல் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. கழகத் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7-ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன்.
பொன்னியின் செல்வன் மூன்று நாள் வசூல் எவ்வளவு?: அறிவிப்பு...
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.
கொட்டும் மழையில் பேசிய ராகுல் : காங்கிரஸில் புயல் வீசுமா?
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று இரவு, காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மைசூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாடினார்.
அப்போது அங்கு மழை பெய்யத் தொடங்கியது. எனினும் அவர் உரையை நிறுத்தவில்லை.
மழையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உரையாற்றிய அவர், “எனது யாத்திரையை இந்த மழையோ, வெயிலோ தடுத்து நிறுத்த முடியாது” என்று கூறினார்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பிறந்த தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது Zhagaram Editor
![]() |
zhagaram.tv : இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பிறந்த ஈழத் தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த திருமதி.நளினி தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடந்த 12.08.2022 அன்று அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது பாஸ்போர்ட் அதிகாரிகள் அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கியுள்ளார்கள். மறுவாழ்வு முகாமில் பிறந்த இலங்கை தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதன்முறை. இது தொடர்பான ஊடக அறிக்கையில்:
திங்கள், 3 அக்டோபர், 2022
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய நீண்ட கால கோல்டன்ட் விசா கிரீன் விசா .. முழு விபரம்
கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது விசா கொள்கையில் அறிவித்த மாற்றங்கள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
நாட்டின் குடியேற்றக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விசா விதிகளின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கான நீண்ட கால விசா, தொழில் வல்லுநர்களுக்கு நீண்ட காலம் தங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கான புதிய கோல்டன் விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த மாற்றப்பட்ட விதிகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் ஏராளமான இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.
சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்- சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 9 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் அந்த மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஹிர்ஷபெல்லே, சுகாதார ஆணையர் மற்றும் அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் .சோனியா , பிரியங்கா .கர்நாடகாவில் நாளை இணைகிறார்கள்
tamil.oneindia.com - Mathivanan Maran :பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைய உள்ளனர்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ந் தேதி இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
யுக்ரேன் பதிலடித் தாக்குதல்: முக்கிய நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா
![]() |
bbc.com : ஹ்யூகோ பச்சேகா & ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டு
பிபிசி நியூஸ், கீயவ்வில் : இழந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் படைகள் நடத்தும் போராட்டம்.
தமது அண்டை நாடான யுக்ரேன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த லைமன் நகரில் இருந்து பின் வாங்கியது.
ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் நகரத்தில் சுற்றி வளைக்கப்படுவார்கள் என்ற அச்சத்திற்கு இடையே இந்தப் பின்வாங்கல் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமையும் இந்திய போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சியும் 1947 இல் ஜேஆர் ஜெயவர்த்தன எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
.jpg)
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா 1947 ஆம் ஆண்டு மே மாதம்
அவர்களின் ஐக்கிய தேசிய கட்சி பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரை பல வரலாற்று
நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது.
விருப்பு வெறுப்புக்களை கடந்து உண்மையான வரலாற்று செய்திகளை இக்கட்டுரை
ஓரளவு எடுத்து காட்டுகிறது . முக்கியமாக இலங்கையில் இந்திய வம்சாவளி
மக்களின் குடியுரிமை பறிப்பு பற்றிய பல பின்னணிநிகழ்வுகள் இதுவரையில்
பொதுவெளிக்கு உரியமுறையில் வந்து சேரவில்லை.
அன்றைய காலக்கட்டங்களில் இலங்கையில் கம்யூனிச ஆபத்து உருவாகிய பின்னணியும்
அதில் இந்திய இடது சாரிகளின் பங்கு என்பதும் அறியவேண்டிய விடயமாகும்
இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இந்திய வம்சாவளி மக்களை மாற்றிய
தொழிற்சங்கங்களும் கட்சிகளும் ஆற்றிய பணிகள் பற்றி அறிவதற்கு இக்கட்டுரை
கொஞ்சம் உதவும் என்று எண்ணுகிறேன்
ராதா மனோகர் : இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா 1947 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களின் ஐக்கிய தேசிய கட்சி பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரை பல வரலாற்று நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது.
விருப்பு வெறுப்புக்களை கடந்து உண்மையான வரலாற்று செய்திகளை இக்கட்டுரை ஓரளவு எடுத்து காட்டுகிறது .
முக்கியமாக இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பு பற்றிய பல பின்னணி நிகழ்வுகள் இதுவரையில் பொதுவெளிக்கு உரியமுறையில் வந்து சேரவில்லை.
அன்றைய காலக்கட்டங்களில் இலங்கையில் கம்யூனிச ஆபத்து உருவாகிய பின்னணியும் அதில் இந்திய இடது சாரிகளின் பங்கு என்ன என்பதும் அறியவேண்டிய விடயமாகும்
![]() |
| Hon. J. R, Jayavaardana |
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : “தென்னிலங்கையின் எந்தவொரு தலைவரும் தனிநாட்டு கோரிக்கையை அங்கீகரிக்க மாட்டார்கள்
தேசியசபையின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றிருந்த நிலையில், பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் அதில் பங்கேற்றிருக்கவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபையில் தமிழ்த் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும்.
புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் கைது .. போராட்டத்தில் ஈடுபட்ட
ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் புதுவையில் மின் தடை தொடர்கதையாக இருந்து வருகிறது.
புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு வரை மின்சாரம் தடைபட்டதால் மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது.
இதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்வினியோகம் சீரமைக்கப்பட்டது.
ஞாயிறு, 2 அக்டோபர், 2022
ஈரானில் ஓட்டலில் ஹிஜாப் இன்றி சாப்பிட்ட பெண்.. சித்ரவதை சிறையில் அடைப்பு.... தொடரும் கொடூரம்-பதற்றம்
![]() |
tamil.oneindia.com - Nantha Kumar R : தெஹ்ரான்: முஸ்லிம் நாடான ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தான் ஓட்டலில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஹிஜாப்பை கட்டாயமாக அணிய வேண்டும்.
பொது வெளியில் ஹிஜாப் அணிய தவறினால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இளம்பெண் கொலை
மல்லிகார்ஜுன கார்கே Vs சசி தரூர் - யாருக்கு வெற்றி வாய்ப்பு? (மல்லிகார்ஜுன கார்கே?)
கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமை, காந்தி குடும்பத்தின் கைகளிலேயே உள்ளது. இதையே புகாராக எழுப்பும் பாஜக.வை சமாளிக்க, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி நிற்க காந்தி குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், அவர் போட்டியிடுவார், இவர் போட்டியிடுவார் என்று தினமும் செய்திகள் வெளியாயின. இது நாடு முழுவதிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கட்சித் தலைமையும் கடும் விமர்சனங்களில் சிக்கியது.
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் வன்முறை- உயிரிழந்தோர் எண்ணிக்கை 174ஆக உயர்வு
அந்த அணி சொந்த மண்ணில் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் தடுப்புகளை மீறி மைதானத்துக்குள் புகுந்தனர். அரேமா அணி வீரர்களை தாக்கினர். மைதானத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்த வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். சில வாகனங்களுக்கு தீயும் வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
பா. இரஞ்சித்தின், "நட்சத்திரம் நகர்கிறது"... படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசை அற்புதம்.
![]() |
Anna Mahizhnan : நட்சத்திரம் நகர்கிறது ....
பிரமாண்டங்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இந்த படத்தைப் பாருங்கள் என்று என் மனைவி சொன்னாள்.
நேற்றிரவு 2.47 மணி நேரம், பா. இரஞ்சித்தின், "நட்சத்திரம் நகர்கிறது" படத்தைப் பார்த்தேன். யதார்த்தங்கள் மனதைப் பிசைந்தன.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
இளையராஜாவின் இசையை இரசிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் படம். இளையராஜாவைப் பல இடங்களில் படம் சிலாகித்துப் பேசுகிறது.
நானும் இளையராஜாவின் இசையை மிகவும் நேசிப்பவன் தான். ஆனால், இளையராஜா என்ற பார்ப்பனீயத்தின் மொத்த உருவமான அந்த மனிதரைப் பிடிக்கவே பிடிக்காது.
செல்லியம்மாள், பாப்பம்மாள் போன்ற பெயர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட பெண்கள் என்பதையும், அந்தத் தவறை உணர்ந்த அடுத்த தலைமுறைகள் அவர்களைக் குல தெய்வமாக்கி வழி படுவதையும் அழகாகக் காட்டியிருக்கிறார் ரஞ்சித்.
குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து - குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு ...உத்தரபிரதேசத்தில் 27 Dead Tractor Overturns Uttar Pradesh Kanpur
உத்தர பிரதேச மாநிலத்தில், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு, சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள், கான்பூர் மாவட்டத்திற்கு, டிராக்டர் இழுவை வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தனர். கட்டம்பூர் என்ற இடத்தில் டிராக்டர் இழுவை வாகனம் வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென்று இழந்து சாலையோரத்தில் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கேரளா கம்யூனிஸ்டு தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்! விரிவான தகவல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் (வயது 68) புற்றுநோய் காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
கொடியேரி பாலகிருஷ்ணன் குறித்து விரிவாக பார்ப்போம்!







