ஈரானில் ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி 22 வயதே நிரம்பிய மஹ்சா அமினியை மதப் பொலிசார் அழைத்து கொண்டுபோய் அடித்தே கொன்றுவிட்டனர்
ஈரானின் மதவாத அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் பொதுவெளியில் தங்கள் ஹிஜாப்பை அகற்றி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஈரானிய “சர்வாதிகாரிக்கு மரணம்” என்றும் கோஷமிடுகிறார்கள்
தமிழ் மிரர் : ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் பெண்களுக்கான இஸ்லாமிய உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.







