வியாழன், 9 ஜூலை, 2026

; ELLIS . R . DUNGAN - தமிழ் சினிமாவின் உண்மையான தந்தை எல்லிஸ் ஆர் டங்கன்

May be an image of one or more people and text that says "MEERA VEERAMAHADHIWRITEUP MAHADHI WRITEUP"

 Meera Mahadhi   ; ELLIS . R . DUNGAN - MGR நடிச்ச முதல் படம் ஒரு Hollywood படமா 🙄..சிங்கம் புலின்னு சண்ட போட்டு மாஸ் காட்டுன MGR சைக்கிள் ஓட்ட தெரியாம தெனருண கத
.தமிழ் சினிமா தலையெழுத்த மாத்துன இயக்குனர் யாருன்னு கேட்டா சில இயக்குனர்கள் உங்க mind ல வந்தா அவங்க எல்லாரையும் தூக்கி ஓரமா வச்சுடுங்க ஏன்னா இப்போ நான் சொல்லபோற real OG க்கு முன்னாடி இவங்க எல்லாம் கத்துக்குட்டிங்க…எல்லாரும் இவர் போட்ட வெதைல copy அடிச்சவங்க..
மேடை நாடகமா இருந்த நடிப்பு கலை சினிமா கேமரா கண்டுபுடிச்சு இந்தியாவுக்கு வந்து 1935 வாக்குல ஒரு 200 படங்கள் Release ஆச்சு..அதெல்லாம் என்ன படங்கள் தெரியுமா


.
அது எல்லாமே 'டாக்கிஸ்' (Talkies) என்ற பெயரில் வந்த வெறும் மேடை நாடகங்கள் தான்…கேமராவை ஒரு ஓரமா ஸ்டாண்ட்ல வச்சிட்டு கேமராமேன் டீ குடிக்க போயிடுவார், நாடகம் முடியுற வரைக்கும் கேமரா ஒரே இடத்துல ஓடிட்டே இருக்கும்…நாடகம் முடிஞ்சதும் இதுதான் சினிமான்னு சொல்லி எல்லாருக்கும் போட்டு காட்டி ஊற ஏமாத்திட்டு இருந்தாங்க இந்தியால…
அப்போ இந்தியால மெயினா தமிழ்நாட்டு சினிமாவோட தலையெழுத்த மாத்த ஒருத்தர் அமெரிக்காவுல இருக்க ஒரு university உள்ள கால் எடுத்து வைக்கிறார்.
.

May be an image of smiling and text that says "MEERA MAHADHI MEERAMAHADHIWRITEUP WRITEUP"
அது என்ன university தெரியுமா…சினிமால முதல்முறை கேமரா வந்தப்போ..உலகத்துல சினிமாவ ஒரு படிப்பா மாத்தி அதுக்காக ஆரமிச்ச முதல் univercity தான் University of Southern California (USC) 
.
அந்த university ல first batch student தான் ELLIS . R . DUNGAN என்ற இயக்குனர்…இந்தியாவுல இருந்து படிக்கப்போன ஒருத்தர் Dungan ன தமிழ்நாட்டுக்கு வந்து படம் எடுன்னு கூட்டிட்டு வராரு
.

May be an image of one or more people and text that says "MEERA MEERAMAHADHIWRITEUP MAHADHI WRITEUP ハー A"
Dungan தமிழ்நாட்டுக்கு வந்து கேமரா பொட்டிய வச்சு நம்மாளுங்க சினிமான்னு பண்ற பித்தலாட்டத்த கண்டுபுடிச்சு…உங்களுக்கு சினிமான்னா எப்படி எடுக்கணும்னு நான் கத்து தரேன்னு தமிழ்ல முதல் படம் எடுக்குறாரு
.தியாகராஜ பாகவதரை (MKT) பெண்கள் கொண்டாடும் சூப்பர்ஸ்டாராக மாற்றியது டங்கனின் 'அம்பிகாபதி' (1937) திரைப்படம். அந்த காலத்திலேயே தமிழ் சினிமாவின் முதல் 'லிப்லாக்' காட்சியை வச்சவர் டங்கன் தான். ஹீரோயினை அப்படியே தூக்கிட்டு போய் பெட்ல போடுற மாதிரியான ரொமான்டிக் காட்சிகளை வச்சு, அப்போதைய தியேட்டர்களை உசுப்பேத்தி விட்டார்! 
.
அப்போதெல்லாம் கேமராவை நகர்த்த முடியும்னு யாருக்கும் தெரியாது. டங்கன் தான் முதன்முதல்ல தன்னோட கார் மேல ஒரு ஸ்டாண்ட் ரெடி பண்ணி, காரை மூவ் பண்ணி காட்சிகளை நகர்த்திக்கொண்டே எடுத்தார். இதனால்தான் இன்றளவும் சினிமா துறையில் கேமராவை நகர்த்தும் ட்ராலி ஷாட்டுக்கு 'டங்கன் ட்ராலி' என்ற பெயர் உண்டு. ஸ்டுடியோவுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த சினிமாவை, தெருவுக்குக் கொண்டுவந்து 'ரியலிசம்' காட்டிய முதல் ஆள் இவர்தான்


அந்த படத்தோட பேருதான் சதி லீலாவதி…அந்த படத்துல ஒரு சின்ன police வேஷத்துல அறிமுகமானவர்தான் MGR…அந்த படத்துல cycle ஓட்ற காட்சி இருக்கு நம்மாளுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதாம்…ரெண்டு பேரு சேர்ந்து cycle ஐ தள்ளி விட cycle ஓட்டுவதுபோல் நடித்தவர்தான் MGR..ஆனால் Dungan camera angle மூலம் அவர் நிஜமாக cycle ஓட்டுவதுபோல் எடுத்துள்ளார்.
 

.May be an image of text that says "MEERAMAHADHIWRITEUP MEERA MAHADHI WRITEUP"
மேடை நாடக நடிகர்கள் என்பதால், கேமரா பக்கத்தில் இருந்தாலும் கத்தி கத்தி வசனம் பேசி, கண்களை உருட்டி மிரட்டுவார்கள். டங்கன் தான் முதன்முதலாக நடிகர்களை அருகில் நிற்கவைத்து, "டேய்... இது சினிமா, இதுல க்ளோஸ்அப் ஷாட்னு ஒன்னு இருக்கு. நீங்க லேசா கண்ணை அசைச்சாலே கேமரா காட்டிடும், கத்தாதீங்க, மைல்டா நடிங்க" என்று  நடிகர்களுக்கு முதல் 'ஆக்டிங் கிளாஸ்' எடுத்தார். 
.

May be a black-and-white image of one or more people, people smiling and text that says "MEERAMAHADHIWRITEUP MEERA MAHADHI WRITEUP"
பாகுபாலி பாத்து சில்றைய செதற விட்டோமே அதெல்லாம் graphics தான்..ஆனா இந்தாளு நெஜ baahubali எடுத்தவர் தெரியுமா
.
எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவை Pan-India சிங்கர் ஆக்கியது டங்கனின் 'மீரா' திரைப்படம். இந்தப் படத்துக்காக, தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக ராஜஸ்தானில் உள்ள உதய்பூருக்கே ஒட்டுமொத்த யூனிட்டையும் கூட்டிட்டுப் போனார்.
.
அங்கே இருந்த உதய்பூர் மகாராஜா முன்னாடி எம்.எஸ்.வி அம்மாவை பாட வச்சு, அதில் இம்ப்ரெஸ் ஆன மகாராஜா, தன்னுடைய சொந்த யானைப்படை, குதிரைப்படை, மற்றும் அரண்மனையையே ஷூட்டிங்குக்கு இலவசமாக தூக்கிக் கொடுத்தார். ஹாலிவுட் தரத்தில் உருவான அந்த பிரம்மாண்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது…இப்போ சொல்லுங்க எது மாசான பாகுபலின்னு
May be an image of text that says "சதில்ல ச சதிலலாவத லாவத தி THILEELA EEL Produced by FILMS TO MANORANA DIRECTEDBY Coimbatore MEERA MAHADHI MEERAMAHADHIWRITEUP WRITEUP ELLIS LLISR.DUNGAN R. DUNGAN Ellis EllisR.Dungan R. Dungan"
'சகுந்தலை' படப்பிடிப்பின் போது எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவுக்கு ஒரு கோபமான காட்சியில் நடிக்க வரவில்லை. உடனே டங்கன், எல்லாரும் முன்னாடியும் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துவிட்டார். "உங்களுக்கெல்லாம் நடிக்கவே வரல, என் உயிரை வாங்குறீங்க, ஷூட்டிங்கையே கேன்சல் பண்றேன்" என கத்த, அவமானத்தில் விம்மி விம்மி அழ ஆரம்பித்தார் MSS அம்மா.
.
உடனே டங்கன் சைலண்டாக 'ஆக்‌ஷன்' சொல்ல, அந்த அழுகையும் கோபமும் கலந்த முகபாவனை கேமராவில் அற்புதம் காட்டியது. உண்மையில், இது டங்கன் மற்றும் MSS அம்மாவின் கணவர் சதாசிவம் இருவரும் சேர்ந்து போட்ட ப்ரீ-பிளான்ட் டிராமா! நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்க அன்றே டங்கன் பயன்படுத்திய இந்த 'அடி/திட்டு' டெக்னிக்கைத்தான் பின்னாட்களில் நம்ம பாரதிராஜா கொஞ்சம் வயலன்ஸ் கலந்து பயன்படுத்தி, பல சிறந்த நடிகர்களை உருவாக்கினார்.
.

May be an image of hat and text that says "MEERAMAHADHIWRITEUP MEERA MAHADHI WRITEUP"
அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களை கோவிலுக்குள் விடமாட்டார்கள். ஆனால் டங்கன் இயக்கிய படங்களில் கோவில் காட்சிகள், சிலைகள் மிக முக்கிய பங்கு வகித்தன. இதற்காக டங்கன் செய்த அலும்பு கொஞ்ச நஞ்சமல்ல!
உடம்பு முழுக்க கறுப்புச் சாயம் பூசிக்கொண்டு, ஒரு வட இந்தியத் துறவி போல காவி ஆடை அணிந்துகொண்டு கோவிலுக்குள் நுழைந்திருக்கிறார். வாசலில் இருந்தவர்கள் தடுத்து, "யார் இவர்? தமிழ் பேசாமல் ஏதோ பாஷை பேசுகிறாரே?" என்று கேட்க, கூட இருந்த அசிஸ்டென்ட் இயக்குநர்கள், "இவர் காஷ்மீர்ல இருந்து வந்த பெரிய ரிஷி சாமி... மௌன விரதத்துல இருக்கார்" என்று சொல்லி ஏமாற்றி உள்ளே கூட்டிட்டுப் போய் ஷாட் எடுத்திருக்கிறார்கள்! 🤣
May be an image of one or more people and text that says "MEERAMAHADHIWRITEUP MEERA MAHADHI WRITEUP 10".


MGR-ரின் 'மந்திரி குமாரி' என்ற படத்தின் மூலம் MGR க்கு action hero என்ற மகுடத்தை சூட்டியவர் dungan தான்…11 தமிழ் படங்களை இயக்கிய dungan மந்திரி குமாரி படத்தோடு தன் தமிழ் சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பினார். 
.
அமெரிக்கா சென்று டாக்குமெண்டரி படங்களை எடுத்து வந்த டங்கனை தமிழ் சினிமா மறக்கவில்லை. 1994-ஆம் ஆண்டு டங்கன் மீண்டும் சென்னை வந்தபோது, அவருக்குத் தமிழ் திரையுலகம் சார்பில் ஒரு மாபெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
May be an image of text that says "MEERA MAHADHI WRITEUP".
சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு வந்த அந்த real OG சிங்கத்தைக் காண ஒட்டுமொத்த கோலிவுட்டும் திரண்டது. குறிப்பாக, உலகநாயகன் கமல்ஹாசன் போன்ற சினிமா வெறியர்கள் டங்கனை நேரில் சந்தித்து, காலில் விழுந்து தங்களது மரியாதையைச் செலுத்தினார்கள்.
.May be an image of text that says "MEERA MAHADHI VEERAMAHADHIWRITEUP WRITEUP"
"தமிழ் சினிமா நாடக மேடையில் இருந்து தியேட்டருக்குள் நுழைந்ததற்கு இந்த ஒற்றை வெள்ளைக்காரனின் கேமரா கண் தான் காரணம்! 

 May be an image of text that says "MEERA MAHADHI MEERAMAHADHIWRITEUP WRITEUP 1000000000:"

 May be an image of musical instrument and text

கருத்துகள் இல்லை: