வெள்ளி, 10 ஜூலை, 2026

ஈரான் மதவெறி அரசும் ஈரான் மக்களும்

 ராதா மனோகர் : நான் புரட்சியை பேசும்போது புரட்சியை பற்றிய நூல்கள் பற்றி பேசவில்லை 
நான் எனது நாட்டை இழந்தது பற்றி பேசுகிறேன் 
என் பெற்றோர் வாழ்நாள் முழுவதும் கட்டி எழுப்பிய வீடு வாசல் கல்வி எல்லாவற்றையும் பறிகொடுத்து நாடு நாடாக அலையும் நிலையை உண்டாக்கிய அந்த புரட்சி பற்றி பேசுகிறேன் 
ஈரான் என்ற ஒரு நல்ல நாட்டை சூறையாடிய இஸ்லாமிய  புரட்சி பற்றி பேசுகிறேன் 
உலகின் மிக பழமையான மனிதர்கள் உருவாக்கிய நாகரிக தேசத்தை உலகின் மோசமான ஒரு சிறைச்சாலையாக மாற்றிய இசுலாமிய புரட்சி பற்றி பேசுகிறேன் 
அது பெண்களின் சிறைச்சாலை 
அது மாற்று கருத்தாளர்களின் சித்திரவதை கூடம் 
அது அரச பயங்கரவாதத்தின் தலைமை செயலகம் 
நான் இங்கே கூறப்போவது உங்களில் சிலருக்கு சங்கடத்தை தரலாம் 
இந்த பையாஸ்க்கோப்பை ஏற்கனவே நான் பார்த்துள்ளேன் 
இது எப்படி முடியும் என்பதையும் நான் அறிவேன் 


1979 இல் ஈரான் மன்னர் ஷாவின் அரசு தூக்கி ஏற்ப்பட்டது?
யாரால்?  எந்த காலத்திலும் சுயமாக சிந்திக்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விசித்திர கூட்டணி  மன்னர் ஷாவின் ஆட்சியை தூக்கி எறிந்தது.
இஸ்லாமியா அடிப்படைவாதிகள் 
இடது சாரி மார்க்சிஸ்டுகள் மற்றும் சோஷலிஸ்டுகளோடு கூட்டு சேர்ந்தனர்
இதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்  ஏற்கனவே கேட்டது போல் இருக்கிறது அல்லவா .. ஆம் அதே நாடகம்தான் 
மார்க்சிடுகள் மதத்தை பிற்போக்கானது என்று கூறுகிறார்கள் 
இஸ்லாமிய மதவாதிகள் ( ஷரியா ) மதத்தின் ஆட்சிதான் வேண்டும் என்பவர்கள்.
இடதுசாரிகள் பெண்களுக்கு முழு உரிமையும் வேண்டும் என்பார்கள் 
இசுலாமியர்கள் பெண்களை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பவர்களை 
அவர்கள் என்ன உடை உடுக்க வேண்டும் 
எப்படி அவர்கள் நடந்து கொள்ளவேண்டும் 
எங்கே அவர்கள் செல்ல வேண்டும் என்றெல்லாம் அடக்குபவர்கள் 
இடதுசாரிகள் பாலியல் சுதந்திர பற்றி வகுப்பு எடுப்பவர்கள் 
இஸ்லாமியவாதிகள் பாலியல் சுதந்திரம் பற்றி பேசும் ஒரு பால் இனத்தவர்களை கொலை செய்ப்பவர்கள் 
இந்த இரு குழுக்களிடையேயும் எந்த விதமான கருத்து ஒற்றுமையும் கிடையவே கிடையாது 
இவர்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் வெறுப்பவர்கள் . இது மட்டும்தான் இவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை.
ஈரான் அரசை தங்கள் காலடியில் வீழ்த்துவதற்காக ஒன்று சேர்ந்தார்கள் 
ஈரானிய இடதுசாரிகள் இஸ்லாமிய மதவெறியர்களை தாங்கள் பயன்படுத்துவதாக  கற்பனை செய்து கொண்டார்கள் 
இஸ்லாமியவாதிகள் தங்களுக்கு பயன்படுவார்கள் என்று மனப்பால் குடித்தார்கள் இடதுசாரிகள் 
இப்போது நாங்கள் இஸ்லாமியாவாதிகளோடு கூட்டு சேர்ந்து ஷா அரசை கவிழ்ப்போம் 
இந்த இன்றிருக்கும் ஜனநாயக அமைப்பை அடித்து நோக்குவோம் 
பின்பு ஒரு மார்க்சிடு அரசை நிறுவுவோம் என்று முரட்டுதனமாக சிந்தித்தார்கள் 
கொடூரமாக செயலாற்றினார் 
ஆனால் நடந்தது வேறு 
இஸ்லாமிய மதவெறியர்கள் இடதுசாரிகள் துணையோடு ஷா அரசை கவிழ்த்தார்கள் 
தங்கள் இசுலாமைய பாணி அரசை அமைத்தார்கள் 
பின்பு இடதுசாரிகளை கவனிக்க தொடங்கினார்கள் 
ஷா அரசை அடித்து நொறுக்குவதில் முன்னணியில் நின்று போராடிய இடதுசாரி மாணவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்  அவர்களின் இருப்பே நிர்முலமாக்கப்பட்டது 
பேராசிரியர்கள் சித்திரவதை செயப்பட்டனர் 
கொன்று குவிக்கப்பட்டனர் 
பல்கலை கழகங்கள் இழுத்து மூடப்பட்டன 
இந்த மாணவர்களை பார்த்து இஸ்லாமிய மதவாதிகள் என்ன கூறினார்கள் தெரியுமா?
உங்களை நம்ப முடியாது ! உங்கள் சொந்த நாட்டையே அழித்தவர்கள் நீங்கள் 
உங்கள் சொந்த நாட்டுக்கே துரோகம் செய்த உங்களை நாங்கள் எப்படி நம்ப முடியும்?
இடதுசாரி மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கூறியது பொன்மொழிகள் இவை 
இதுதான் ஈரான் இஸ்லாமிய புரட்சி என்று கூறப்படும் கொடூர வரலாறு 

கருத்துகள் இல்லை: