வெள்ளி, 10 ஜூலை, 2026

எப்படி இருந்த தமிழ்நாடு ? கேவலம் இப்படி சிக்கிக்கொண்டதே!

 மு.ரா. விவேக் :  1.கலைஞர் மகளீர் உரிமை தொகை =மகளீர் உரிமைத்தொகை 
2.நான் முதல்வன் = திறன் மேம்பாட்டுத்திட்டம் 
3. முதல்வர் படிப்பகம் = படிப்பகம் 
4. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் =ஸ்டாலின் பெயரை மறைத்தது!
5. மகளீர் விடியல் பயணம் =மகளீர் பயணம் 
6. மின்சார வாரியத்தில் 30 to 40 சதவிகிதம் கமிசன்= அதை சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்க்கை எடுப்போம் 
7. தனியார் பள்ளிகள் உரிமை வழங்குவதில் ஊழல் - புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் 
8. டாஸ்மாக் பார்ட்டி fund : ன்னு பேசியது விஜய் , எந்த கட்சிக்கு fund யாருக்கு யார் கொடுத்ததுன்னு இதுவரை சொல்லவில்லை !
9. தொழிற்துறையில் பல தொழிற்சாலை, கமிசன் கேட்டதால்,ஆந்திராவுக்கு போயிட்டு என்று கீர்த்தனா சொல்லுது ,ஆனா ஆந்திர அமைச்சர் ; தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு முதலீட்டார்களும் எங்களிடம் வரவில்லை மேலும் புகாரும் தெரிவித்ததில்லை என்று சொல்கிறார்!


10.கஜானாவை துடைத்து எடுத்துட்டு போய்ட்டாங்கன்னு சொன்னது விஜய் ஆனா அடுத்தது திமுக திட்டங்களை செயல்படுத்தினார்!
11. கடந்த ஆட்சியில் உதயநிதிக்கும் , சபரீசனுக்கும் எல்லா துறைகளில் இருந்து கமிஷன் போனது ஆளுக்கு 16 துறைகள் என்று பிரித்துக்கொண்டார்கள் என்று பேசுவது ஆதவ் -ஆனா ஆதாரம் இல்லையாம்!
12. தமிழ்நாடு தீயணைப்புத்துறை ஆணைய தலைவராக மாற்றம் செய்யப்பட்ட சங்கர் ஜிவால் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
13. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாற்றம் செய்யப்பட்ட சுனில்குமார் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
14. தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அபய் குமார் சிங்கும் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
15. மாதம் மாதம் மின் கட்டணம் -சொல்லினர் ஆனால் தற்பொழுதும் இரெண்டு மாதம் ஒருமுறை தான் நடக்கிறது 
16. விஜய் தினமும் தலைமை செயலகத்தில் அவர் மேஜையில் ஒக்காந்து வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவை சாப்பிடுறார் : முழு பொய் 
17. விஜய் அமரும் நாற்காலியில் இருந்த வெள்ளை துண்டு சம்பந்தமான அழுகுணி பரப்புரை
18. சிங்கப்பெண் திட்டம்ன்னு சொல்லி பரப்புரை ஆனா திமுக ஆட்சியில் கொண்டுவந்த அதே ரோந்து வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி அம்பலப்பட்டது   
19. முதல் பெண் அமைச்சர் கீர்த்தனா என்ற முழு பொய் பரப்புரை 
20. 26 பட்டியல் சமுதாய மக்களை பொதுத்தொகுதியில் நிறுத்தியதாக பொய் பரப்புரை 
21. வெள்ளை அறிக்கை நாங்க தான் கொடுக்குறோம் முதலில் என்று பரப்பி அசிங்கப்பட்டது, திமுக அரசு விதிகளுக்கு உட்பட்ட கடன் வாங்கியதாக ஒப்புதல் 
22. விஜய்யின் சொந்த ஆஸ்தான ஜோசியருக்கு அரசு பதவி பிறகு பல்ட்டி 
23. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கு சேவகம் 
24. எண்ணிலடங்காத பாலியல் குற்றங்கள் சாதிய கொலைகள் 
25. டன் கணக்கில் போதை பொருட்கள் எரித்ததாக பரப்புரை காணொளி ஆனால் நடந்தது முந்தைய ஆட்சியில் 
26. கீர்த்தனா அமைச்சரின் ரீலிஸ் சர்ச்சை மற்றும் பள்ளி மாணவியை அவமானப்படுத்தும் விதமாக நடந்தது 
 27. 2024ல் ஸ்டாலினால் மீண்டும் துவங்கப்பட்ட போர்ட் தொழிற்சாலையை தான் தொடங்கியதா விஜய் கும்பல் பரப்புரை 
28. மாநிலங்களுக்கிடையே சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் கடலோர மாநிலங்களுக்கான பிரிவில் 2025க்கான ‘முன்மாதிரி மாநிலமாக’ (EXEMPLAR STATE) தமிழ்நாடு தேர்வு.அதை எடுத்துக்கொண்டு தங்கள் சாதனையாக விஜய் கும்பல் பரப்பியது  
29. பத்திரிக்க்கையாளர்கள் ஒருங்கிணைப்பில் உருவான திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்கு தடை 
30. மதம் மாறிய இசுலாமிய மக்களின் இடஒதிக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை விதத்தை கண்டுக்காமல் விட்டது !
31. பக்ரீத் (Bakrid) பண்டிகை மற்றும் இதர பொது நிகழ்வுகளில், பொது இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகளைப் , வெட்டுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம் இதற்கும் தலையாட்டி அமைதி .
32. பொது இடத்தில் போதை பொருள் பயன் படுத்திய ஒரு அமைச்சர் அதற்கும் நடவடிக்கை இல்லை
33.சென்னை அருகே உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ,இந்த விவகாரம் என்ன ஆனதுன்னு தெரியாது 
34. விஜய் கட்சிக்காரர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதே கட்சி சார்ந்த பெண் கட்சியில் இருந்து நீக்கம் அவர்கள் சுகந்திரமாக சுற்றிவருகிறார்கள்!
35. சென்னையில் போக்சோவில் கைதான இன்னொரு விஜய் கட்சிக்காரன் சில நாட்களில் விஜய் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறான்  
36.தினகரன் கட்சி சட்டமன்ற உறுப்பினரை தங்கள் பக்கம் இழுத்து 
37. அதிமுகவில் வென்ற ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யவைத்து தன் கட்சிக்குள் இணைத்து   
38. விஜய் கட்சிக்காரர்கள் பள்ளிக்கூடம் உள்ளே போய் விஜய் பாடலுக்கு மாணவர்களை ஆடவைத்தது 
39. சொந்த சகோதரனை அடித்த, வழக்கில் ஆஜராகாத வில்சன் என்ற அமைச்சர் விவகாரம் 
40.கட்சியில் பதவி வாங்க சொந்த கட்சி நிர்வாகிகளே லஞ்சம் வாங்குவதாக புகார்கள் 
41. விவசாயக் கடன் தள்ளுபடி என்று சொல்லிவிட்டு அதிலும் நிபந்தனை சொல்லி மோசடி 
42. டாஸ்மாக் பத்துரூவா என்று பேசிவிட்டு இன்னமும் அதையே செய்து கொண்டு இருப்பது 
43. தொடர்ச்சியான மின் தடை   
44. டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் திமுக ஆட்சியில் தொடங்கி முடிக்கப்பட்ட வள்ளுவர் சிலையை திறக்காமல் ஈகோவால் திரும்பிவந்து !
45. கோவையில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இறந்து போன சிறுமியை பெற்றோருக்கு சொல்லாமல் காவல்துறையே எடுத்து சென்று எரித்தது  
46. திமுக ஆட்சியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் உறவினருக்கு முன்பே கொடுத்த அரசு வேலையை விஜய் ஆட்சியில் கொடுத்ததாக பரப்பியது 
47. திமுக ஆட்சியில் ஒப்பந்தமான 32 திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்து தாங்களே கொண்டுவந்ததாக பரப்புரை 
48. தமிழ்நாட்டை சீரழித்த திமுகன்னு பரப்புரையில் பேசிய விஜய் ,டெல்லி நிதி ஆயுத்தா கூட்டத்தில் இந்தியாவில் ரெண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் என்று பேசியது 
49. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசிய விஜய் ,டெல்லி நிதி ஆயுத்தா கூட்டத்தில் பெண்களின் முன்னேற்றம் ,சுயஉதவிக்குழு ,தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் தமிழ்நாடு தான் முதலாவது என்று பேசியது 
50. முன்பு பொள்ளாச்சியில் நடந்ததை போல் , விஜய் கட்சிக்காரர் நிர்வாகி சேலம் மணிகண்டன் என்பவரால் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் அந்த விவகாரம் என்ன ஆனது என்று தெரியாது       
51. தமிழ்நாடு முழுதும் உள்ள எல்லா மாநகராட்சியிலும் தனியார் தூய்மை பணியாளர்கள் விவகாரம் மற்றும் பல்டி
52. சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை அப்பா எங்க என்று பேசி பெரும் கண்டனத்தை வாங்கியது 
53. விஜய் புகைபிடிக்கும் படத்தை கையில் பச்சை குத்திக்கொண்டு அலையும் ஒரு பெண் அமைச்சர் 
54. திமுக ஆட்சியில் தேர்வுநடத்தி தேர்வாகி பணி ஆணைக்கு காத்திருந்தவர்களுக்கு அந்த சான்றிதழை வழங்கி குரூப் படம் எடுத்து தன் சாதனனையாக பரப்பியது     
55. Rss ஸ்ரீதர் வேம்புவின் இயற்கை பள்ளிக்கு சான்றிதழ் நிறுத்திவைத்திருந்தது திமுக அதை கொடுத்தது விஜய் அரசு 
56. டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, தன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் என்ற வேறுமாநிலத்தவரை நியமித்தது 
57. தன்னை பார்க்க வரவைத்து நெரிசலில் இறந்த ரசிகர்கள் சம்பந்தமான கரூர் வழக்கு நடந்துகொண்டு இருக்கையில் அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை என்ற பேரம் 
58. ஆட்சியை கலைக்க சதின்னு அவதூறு 
59. திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் மேல வழக்கு கைது 
60. இப்படி சொல்லிகிட்டே போகலாம்...... பூமாலை, குரங்கு கையில் சிக்கிய கதையை ...!?
......etc
எப்படி இருந்த தமிழ்நாடு !?
கேவலம் இப்படி சிக்கிக்கொண்டதே! 
விஜய்யின் அறுபது நாள் அறுபது வேதனை !
-மு.ரா.விவேக்

கருத்துகள் இல்லை: