ராதா மனோகர் : நெக்ஸ்ட் குவெஸ்ட்சன் :வாட் இஸ் யுவர் காஸ்ட்
அந்த தற்குறி பெண் அமைச்சர் கீர்த்தனா பள்ளிக்கூட குழந்தையிடம் உன் அப்பா என்ன வேலை செய்கிறார் என்று கேட்ட கேள்விக்குள் ஒரு திமிர் தொக்கி நிற்கிறது
ஒரு சமூக அநீதி தொக்கி நிற்கிறது
ஒரு குழந்தையின் குடும்ப பின்னணியை அறியும் நோக்கம்தான் அந்த கேள்வியின் உள்நோக்கம்
அந்த குழந்தையின் தந்தை ஒரு வேளை ஒரு சில குறிப்பிட்ட ஜாதிகளே செய்யக்கூடிய தொழிலாக இருந்தால் அதை அறிவதுதான் இவரின் நோக்கம்!
இதை இந்த மந்திரியால் மறுக்க முடியுமா?
ஆங்கில அறிவை சோதித்து பார்க்கிறேன் பேர்வழி என்ற போர்வையில்
காலகாலமாக தமிழர்களிடையே ஊறிப்போயிருந்தா ஜாதிய மனோநிலையை வாந்தி எடுத்திருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா என்கின்ற தற்குறி.
பொருளாதார ரீதியியில் நலிந்த மக்களுக்கே உரிய ஒரு தொழிலை அந்த குழந்தையின் தந்தை செய்கிறார் என்றால் இவர் எல்லா தொழிலும் சமம்தான் என்று புத்தி ஜீவி வகுப்பு எடுப்பாரா?
இதை எல்லாம் புரியக்கூடியாய் அளவு புத்தி சுவாதீனம் இந்த அமைச்சருக்கு கிடையாது என்றெண்ணுகிறேன்
இவரை எல்லாம் தெரிவு செய்த மக்களுக்கும் இது கிடையாதுதான்
இந்த இடத்தில பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பத்தை கூறுகிறேன்
ஒரு மூன்றாம் வகுப்பில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிடமும் வரிசையாக உன் அப்பா பெயர் என்ன அப்ப்பா என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டு கொண்டே வந்தார்
சிலரிடம் தொழில் பற்றி கேட்கவில்லை வெறும் பெயர் மட்டுமே கேட்டார்
அந்த வரிசையில் இருந்த எனக்கு தெரிந்த ஒரு மாணவனிடமும் அந்த கேள்வியை கேட்டார்
அவனும் தந்தையின் பெயரை மட்டும் சொன்னான்
பின்பு உன் அப்பா என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டார்
அவன் தொழிலையும் சொன்னான்
அவர் ஊரில் கொஞ்சம் பிரபலமானவர் அவரை அவரது தொழில் பெயரையும் சேர்ந்துதான் சொல்வார்கள்
ஜட்ஜ் அல்லது டாக்டர் என்று வைத்து கொள்ளுங்க
அப்போது அந்த ஆசிரியர் அப்பாவின் பெயரை கேட்கும்போது இப்படி தொழிலையும் சேர்த்து சொல்வதுதானே என்று எரிச்சலோடு கூறினார்
தனது தந்தையின் அந்தஸ்தை குறிக்கும் அந்த தொழிலை கூறி சகமாணவர்களின் சுயமரியாதையை சீண்டி பார்க்கும் வேலையை அந்த மூன்றாம் வகுப்பு மாணவன் செய்யவில்ல.
இந்த சுயமரியாதை பற்றி உணர்வு அவனின் உள்ளத்தில் அப்போது இருந்தது
இந்த தடிமாடு ஒரு அமைச்சராக இருந்தும் இந்த புரிதல் இல்லை
இது ஒரு உண்மை சம்பவம் நம்பினால் நம்புங்கள்
இந்த இடத்தில அந்த மூன்றாம் வகுப்பு சுயமரியாதைகாரனுக்கு எனது வணக்கங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக