வெள்ளி, 10 ஜூலை, 2026

நடிகன் விஜய்யை முதல்வர் ஸ்டாலின் ஏன் கைது செய்யவில்லை? வரலாற்று தவறு செய்துவிட்டார்?

 Rebel Ravi :   நான் ஸ்டாலின் மீது முதலில் மதிப்பே வைக்காதவன்.
கலைஞரின் கீழ் வளர்ந்தவன் என்பதால் ஸ்டாலின் எனக்கு ஆளுமையாய்த் தெரியவில்லை.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மதிக்க ஆரம்பித்தேன்.
ஆனால் கரூரில் அவர் வரலாற்றுப் பிழை செய்தார் என்று அன்றே சொன்னென்.
ஸ்டாலின் அப்படி மன்னிக்கக் கூடியவர் அல்ல.
அவரை பல ஆண்டுகளாய்ப் பார்த்து வருகிறேன்.
அவர் ஜெ பாணியைப் பின் பற்றியவர்.
ஆட்சிக்கு வந்த பின் பென் மீடியா அவரை ஒரு மென்மையான மனிதராக அடையாளம் காட்டியது.
அவரது இயல்பு அது அல்ல.
கரூரில் விஜயை ஏர்போர்ட்டுலேயே கைது செய்து சிறையில் அடைத்து இருக்க வேண்டும்.
அன்பில் அழுகை செந்தில் வருகை முதல்வர் நள்ளிரவு வருகை எல்லாம் அபத்தத்தின் உச்சம்.
கூட்டத்தை நடத்தியவனே ஓடுகிறான்.
நீங்கள் ஏன் போனீர்?
அது அரசு நிகழ்வில் நடந்த மரணம் அல்ல.
இவ்வளவு ஓவர் ரியாக்சன் ஏன்?
150 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 40 மரணம் பெரிய டிராஜடி அல்ல.
வரலாற்றுப் பிழை புரிந்து இன்று தமிழ்நாடு அழியக் காரணம் ஆகி விட்டார் ஸ்டாலின்.


2031ல் பிஹார் அளவுக்குக் கீழே இறங்கி இருக்கும்.
அதற்கு மிகப் பெரிய காரணம் ஸ்டாலின் தான் என்று தான் வரலாறு அவரைத் தூற்றும்.
ஆனால் அந்த தூற்றல் உண்மையான ஸ்டாலின் மீதல்ல; எவனோ சொல்லி அதைச் செய்த ஸ்டாலின் மீது தான்.

Rajendra Selvaraj
நான் உயிராக மதிக்கும், நேசிக்கும் என்னுடைய கட்சியான திமுக வின் தோல்விக்கு காரணமான ஸ்டாலினை என்னால் மன்னிக்கவே முடியாது...
எல்லோரும் கடந்த ஐந்தாண்டுகளாக அவர் செய்தது நாகரீக அரசியல் என்கிறார்கள்...
என்னுடைய பார்வையில் அது நாகரீக அரசியல் அல்ல...
அதற்கு பெயர் கோழைத்தனமான பயந்தாங்கொள்ளி அரசியல்....
உதயநிதி ஸ்டாலின் அவர்களாவது அந்த கோழைத்தனமான அரசியல் செய்யாமல் அவருடைய தாத்தா கலைஞரின் துடிப்பு மிக்க சாமர்த்தியமான, எதிரியை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அடித்து வீழ்த்தும் வீரமான அரசியல் செய்வார் என்று நம்புகிறேன்...

திராவிடச்செல்வன்
இப்பவும் சொல்றேன் விஜய கைது செய்யாமல் விட்டது தான் சரி தோல்வி உங்கள சிந்திக்க விடாம செய்யுது
அப்படி உள்ள தூக்கி போட்ருந்தா கீளின் ஸ்வீப்180+தட்டிருப்பான் தலைவர் சரியாகவே மூவ் பன்னார் கூட்டணிகட்சிகளோட கழுத்தறுப்பும் பெண் வாக்காளர்கள் அதிருப்தியும் தான் தோல்விக்கி முக்கிய காரணம்

Joel Jeyasekharan
தெற்கைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் தலைவர் கூட இதை என்னிடம் சொன்னார் அண்ணா.அவர் சொன்ன வார்த்தைகள் இவைதான். திமுகவின் இந்தச் செயல்கள், TVK இணையதளச் சூழலால் திரித்துக்கூறப்பட்டன. மேலும், ஸ்டாலின்தான் அவர்களைத் திட்டமிட்டுக் கொன்றார் என்று பலர் ஆழ்மனதில் நம்புகிறார்கள். என் அம்மா ஒரு மூதாட்டியிடம், அவர் ஏன் இப்படி நம்புகிறார் என்று கேட்டார். அதற்கு அவர், அதிகாலை 2 மணிக்கு அங்கு வந்த ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர்களின் செயல்கள் மூலம் அதை உணர முடிந்ததாகக் கூறினார்.
May be an image of text that says "அன்பில் அழுகை செந்தில் வருகை முதல்வர் நள்ளிரவு வருகை எல்லாம் அபத்தத்தின் உச்சம். கூட்டத்தை நடத்தியவனே ஓடுகிறான். நீங்கள் ஏன் போனீர்? அது அரசு நிகழ்வில் நடந்த மரணம் அல்ல. இவ்வளவு ஓவர் ரியாக்சன் ஏன்? 150 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 40 மரணம் பெரிய டிராஜடி அல்ல. வரலாற்றுப் பிழை புரிந்து இன்று தமிழ்நாடு அழியக் காரணம் ஆகி விட்டார் ஸ்டாலின்."

Abu Rayyan
Rebel Ravi 100% True... DMK and its Leader was mislead by his Son in Law Sabarisan and his useless PEN in which 80% young Techis where loyal to Adhav Arjuna

Prabakaran Jaganathan
It is the fault of dmk not to take actions on tvk fellows in karur incident

Rebel Ravi
Blunder. And illegal. Injustice

Manny ..
நடந்து முடிந்ததை இப்போது ஆளுக்கொரு கருத்து சொல்வது எந்த உபயோகமும் இல்லை. கெட்டதிலும் நல்லது, விஜய்க்கு நிர்வாகத் திறமை இல்லை என்று expose ஆகிக் கொண்டிருப்பது.

Rebel Ravi
தமிழ்நாடு அழிந்து கொன்டிருப்பது தெரியவில்லையா?

May be an image of text that says "ஜனியர் விய்டால் " கரூர் சம்பவத்தின்போதே ஜோசப் விஜய்யை 'லாக்' செய்திருக்க வேண்டும்! தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இளகிய மனதுக்காரர். கரூர் சம்பவத்தின்போதே, இந்த ஜோசப் விஜய் செய்த தவற்றுக்கு, திருச்சியில் வைத்தே அவரை லாக் செய்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்கும். ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் எங்கள் தலைவர் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார்.. அதனால்தான் 'கரூர் சம்பவத்துக்கு போலீஸ்தான் காரணம்', 'முட்டாள் முதல்வர்' என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! -முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட் ட்டியில்...) (ஜூனியர் விகட டனுக க்கு அளி 08/07/2026 Read more at www.vikatan.com /juniorvikatan"

கருத்துகள் இல்லை: