செவ்வாய், 2 செப்டம்பர், 2025

மலையக மக்களின் அடையாள சிக்கல் . மீண்டும் வில்லங்கமாக மாறும்?

 ராதா மனோகர் : ஈழநாடு 11 பெப்ருவரி 1961 
பதிவு பிரஜைகளின் குழந்தைகள் இந்திய தமிழரே!
ரிஜிஸ்டர் ஜெனெரல் உத்தரவு!
இந்தியா பாகிஸ்தான் பிரஜா உரிமை சட்டப்படி இலங்கை பிரஜைகளாகி உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை  இந்திய தமிழர் என்றே பிறப்பு பதிவு புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டு, 
ரிஜிஸ்டர் ஜெனரல் பிறப்பு பதிவு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரிகிறது,
இச்செய்தி மலைநாட்டு தமிழர் வட்டாரங்களில் புதிய கவலையை அளித்துள்ளது,
இது பற்றி விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது 

அதாவது இலங்கை குடிமக்கள் அனைவரும் இலங்கையின் ஒரேவிதமான  குடிமக்களாகவே கருதப்படவேண்டும் என்று அன்று திரு சவுமியமூர்த்தி தொண்டமான் போன்றோர் போராடினார்கள் 
மேற்கண்ட பழைய  வரலாறு  தெரியாமல் இன்று பலரும்  மீண்டும் அந்த பாகுபாட்டு யுகத்திற்குள் மக்களை அழைத்து செல்கிறார்கள் !

எழுபதுகளில் ஒரு பத்திரிக்கை செய்தி இது: 
இலங்கையின் இறக்குமதி வர்த்தகம் 75 வீதம் பதிவு பிரஜைகளின் கைகளிலேயே உள்ளது!
இந்த செய்தியின் பின்னணி நோக்கம் புரிகிறதா? .
இந்த பதிவு பிரஜை என்றால் இந்திய பூர்வ குடி இலங்கை மக்கள் என்று கருதப்படும் 
இலங்கையில் முன்பு நடந்த இனக்கலவரங்கள் பெரும்பாலும்  இந்திய எதிர்ப்பு வாதத்தையே  முன் நிறுத்தியது என்பது எல்லோரும் அறிந்ததே.
ஒருவரின் பிறப்பு சான்றிதழ் மூலம் அவர் இந்திய வம்சாவளி என்று இனம் காணப்பட்டால்,
அது வரும் கால சந்ததிகளின் கல்வி வேலை வாய்ப்பு மட்டுமல்ல சமூக வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
இந்த இனபேத பதிவை  தொடர்ச்சியாக அரசுகளோடு போராடி நீக்கினார்கள் அன்றைய மலையக தலைவர்கள் 
,
இந்த வரலாற்றை எல்லாம் மறந்து வேறு வேறு லேபில்களில் மீண்டும் தங்கள் இலங்கையின் இரண்டாம் தர குடிமக்களாகதான் இருப்போம் என்று சில  மலையக அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள்,
வடக்கு கிழக்கின் அரசியல் போல மலையகமும் ஒரு தனித்தேசிய அரசியலை முன்னெடுக்க இவர்கள் விரும்புவதாக தெரிகிறது 
சில அரசியல்வாதிகளுக்கு மக்களை உணர்ச்சி ஊட்டி வாக்கு வேட்டை செய்ய இது உதவும் 
 நாங்கள் எப்போதும் ஒரு தனியான அதாவது இரண்டாம் தர குடிமக்களாகவே இருப்போம் என்று கச்சை கட்டி கொண்டிருக்கும் இந்த காலரி விசில் அரசியல்வாதிகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

தனி அடையாளம் என்ற மாயமானுக்கு பின்னால் சென்று ஒரு இரண்டாம் தர குடிமக்களாகவே இருப்போம் என்று  புலம்புகிறார்கள் 
சிந்திக்க வேண்டும் மக்களே .. நாம் இலங்கையர்கள்! 
எமக்கு நாம் இலங்கையர்கள் என்ற அடையாலம் உன்னதமானது! 

கருத்துகள் இல்லை: