கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார்.
கருத்து கணிப்பு: இந்த நிலையில்தான் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுகதான் அதிக வாக்கு வங்கி எடுக்கும், பாஜகவின் அண்ணாமலை 3ம் இடம் பிடிப்பார் என்று கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பிரபல கருத்து கணிப்பு நிறுவனமான சி வோட்டர் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்த சுரேஷ் குமார் என்பவர் மூலம் அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி கோவையில்,
திமுக கூட்டணி 47 % வாக்குகள் பெறும்.
அதிமுக கூட்டணி 31 % வாக்குகள் பெறும்.
பாஜக கூட்டணி 16 % வாக்குகள் பெறும்.
நாம் தமிழர் 4 % வாக்குகள் பெறும்.
மற்றவர்கள் 2% வாக்குகள் பெறும்.
யார் இவர்?: கோவையின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிரமாக களத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.
கோவை முன்னாள் அதிமுக மேயர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் கணபதி ராஜ்குமார் ஆவார். 2020 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகரின் 5வது மேயராக 2011 - 16 வரை அதிமுகவில் இருந்து சேர்ந்த கணபதி பி.ராஜ்குமார் பதவி வகித்து வந்தார். அங்கே அதிமுகவின் டாப் தலைகளில் ஒருவராக இருந்தார்.
அதன்பின் 2020ல் கட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இடையே திமுகவிற்கு வந்தார். அங்கே திமுக வளர செந்தில் பாலாஜி எப்படி காரணமாக இருந்தாரோ அதேபோல் இவரும் முக்கியமான மாஸ்டர் மைண்டாக இருந்தார். இந்த நிலையில் அவரை திமுக வேட்பாளராக தேர்வு செய்துள்ளது.
அதிமுக வேட்பாளர்: அதேபோல் அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக பணியாற்றிய இவர், மார்ச் 2016ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ளார்.
இவர் 18 வயதில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாராம். அவர் பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள PSG தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். 2013 ஆம் ஆண்டு PGDM இல் சேர ஐஐஎம் அகமதாபாத்தில் சேர்வதற்கு முன்பு அவர் ஃபோகஸ் அகாடமி ஃபார் கேரியர் மேம்பாட்டிற்காக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
The Social Media Company என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியின் வெற்றிக்கு ஐடி பிரிவு பங்களித்தது. அதில் முக்கிய ரோல் இவருடையது.
வாக்கு சதவிகிதம்: கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கே கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக