திங்கள், 10 ஆகஸ்ட், 2020

திருப்பதியில் 743 பேருக்கு கொரோனா: பக்தர்களுக்குத் தடையா?

திருப்பதியில் 743 பேருக்கு கொரோனா: பக்தர்களுக்குத் தடையா?   மின்னம்பலம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள்  தரிசனத்துக்கு ஆந்திர அரசு தடை விதித்தது. இந்நிலையில் மீண்டும் ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த எண்ணிக்கை நாளடைவில் இரட்டிப்பாக்கப்பட்டது. 

இந்த சூழலில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு  ஆந்திர அரசு தடை விதித்தது. இந்நிலையில் மீண்டும் ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த எண்ணிக்கை நாளடைவில் இரட்டிப்பாக்கப்பட்டது.

இந்த சூழலில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால்,

“கோயில் திறக்கப்பட்டது முதல் இதுவரை 743 ஊழியர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 402 பேர் குணமடைந்துள்ளனர். 338 பேர் பல்வேறு கோவிட் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.     “நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஜூலை மாதத்தில் மட்டும் 2.38 லட்சம் மக்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.16.69 கோடி உண்டியல் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இ-உண்டியல் மூலம் 3.97 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வைரஸ் தொற்று விதிமுறைகளைப் பின்பற்றி தரிசனத்துக்குப் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ள அவர்,   “சமூக வலைதளங்களில்,  பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகச் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் பக்தர்களிடம் இருந்து வரும் காணிக்கைகளைக் காட்டிலும், covid-19 பாதுகாப்பு நடைமுறைகளுக்காக அதிகப்பணம் செலவிடுகிறோம்” என்று கூறியுள்ளார்.

 திருப்பதியில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை,  ஆந்திரா உட்பட நாடு முழுவதும் பாதிப்பு அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்குக்  காய்ச்சல் அறிகுறி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுவதாகத் தேவஸ்தான வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயத்தில் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பக்தர்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலளித்துள்ள அனில்குமார் சிங்கால் ஏழுமலையான் கோயிலில் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: