ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ரங்கராஜ் பாண்டேக்கு தேவி சோமசுந்தரம் சரமாரி கேள்விகள் : பீகார்காரரா உங்க மக்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?

Devi Somasundaram : Rangaraj Pandey Ragunathacharya .. அவர்களின் கவனத்திற்கு ..அன்பின் ரங்கராஜ், அண்ணன் ஆ.ராசா அவர்களின் பேட்டில சொன்ன கருத்துகளுக்கு, பதில் கருத்தா உங்க வீடியோ பார்த்தேன். என் அலுவலக வேலைகளால் உடனே பதில் சொல்ல இயலவில்லை. அத்துடன் உங்கள மாதிரி ஆதாரம் தரேன் என்று கூறிவிட்டு வெறும் அரட்டைக் கச்சேரி செய்வது என் பழக்கம் இல்லை. தரவுகளைத் தேட இரண்டு நாள் ஆனது. உங்க வீடியோவ ஒரு பாடலுடன் ஆரம்பித்து இருந்தீர்கள். நம் தொன்மையான மொழி எ
ன்று பிடிக்கும் போது சமஸ்கிருதத்தை விரும்பும் நீங்கள், ஆரம்பப் பாடலுக்கு மட்டும் ஏன் தமிழுக்குத் தாவி விட்டீர்கள் என்று புரியவில்லை. சர்வ மங்கள மாங்கல்யேன்னு கருவறைக்குள்ளும், தட்ல தட்சணை போடுங்கோன்னு தமிழுக்கும் மாறும் இயல்பு அறிந்ததால் அதை விட்டு விடுவோம். நானும் ஒரு பாடலோடு ஆரம்பிக்கின்றேன்.."

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா ?

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?

பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே! ".

இதில் பணத்தி என்பது பா,பாத்தி என்பதன் சுருக்க வடிவம் தான்.. ஒசை நயத்திற்காக என் பாட்டன் சிவ வாக்கிய சித்தர் அதை பணத்தி என்று சொல்லி இருக்கின்றார். சாதியும், மதமும் இல்லாத அன்பின் மொழி தமிழ் என்பதை இந்த உலகம் அறியும்.

இருந்தாலும் உங்களுக்குப் புரிகின்ற மொழியில் இன்னொரு பாடல் சொல்கிறேன்.., all god are criminals. நான் சொல்லவில்லை, திராவிட இயக்கத்தார் சொல்லவில்லை. அய்யா மகா பண்டிதர், தோழர் ஜெயேந்திரர் சொன்னார். கந்தசஷ்டிக்குப் புண்ணான மனசு ஜெயேந்திரர் சொன்ன போது ஏன் புண்ணாகவில்லை என்று தங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

உங்களது அந்த ஒன் அவர் வீடியோவில், அதும் ஆதாரம் எதுவும் இல்லாத, தர்க்கமற்ற வெறும் பொய்களைப் பேசவே நீங்கள் ப்ராம்ப்ட் உபயோகித்ததைப் பார்த்தேன்... ஐ பேடில் குறிப்பு எடுத்துக்கொண்டு அதைத் தள்ளித் தள்ளிப் பேசினிர்கள். பொய்களைப் பேசவே - அதுவும் வெட்டியா வீட்ல உட்கார்ந்து இருக்கும் உங்களுக்கு ப்ராம்ப்ட் தேவைப்படுகிறது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பல கூட்டத்தில் பேச வேண்டிய அவசியமிருப்பவர் குறிப்பு துணுக்கு எடுத்து சென்றால், அதைத் துண்டுச்சீட்டு என்று கேலிசெய்தீர்கள். துண்டுச் சீட்டு எடுத்துச் செல்வது குற்றம் என்றால் இனி உங்களைப் ப்ராம்ப்ட் பாண்டே என்று அழைக்கலாமா. சரி போகட்டும். விஷயத்திற்கு வருகின்றேன்

உங்கள் முதல் வாதமே, ராசா அண்ணன் ஏன் தனித் தொகுதியில் போட்டியிட்டார்? ஏன் ராசா அண்ணன் தனித் தொகுதியில் போட்டியிடக் கூடாது, உங்க அக்கறை ராசா அண்ணன் மேலயா அல்லது பொதுத் தொகுதி மேலயா?

அம்பேத்கர் படிச்சு இருக்காரே, ரெட்டை மலை அய்யா படிச்சு இருக்காரே என்று கேட்டீர்களே... அம்பேத்கர் ஏன் தனித் தொகுதி வேண்டும்

என்று கேட்டார்? யார் அவர்களது அதிகாரத்தை தடுத்தது? உங்களால் பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

அடுத்து டிஃபன்ஸ் மோடில் வைத்திருப்பதாகச் சொன்னீர்கள். திராவிடமே டிஃபன்ஸிவ் தேவைதான்.. ஆரிய ஆதிக்கம் வராதிருந்தால் திராவிடத்தின் தேவை வரவே போவதில்லை. ஆக திராவிடத்தை டிஃபன்ஸ் சைடாக உருவாக்கியதே ஆரியம் தான்.. கன்ஸ்ட்ரக்டிவ் சைட்ல ஆரியம் உருவாக்கின ஒரே விஷயம் சாதி மட்டுமே. அதே நீங்க சொன்ன அடி மேல் அடி வைத்து அம்மிய நகர்த்தினது. உனக்கு ஆண்ட பரம்பரை பெருமை, எனக்கு உண்டியல் காசு, அய்யனைக் கொண்டாடினா அது புண்ணியம் நீ சொர்க்கத்துக்கு போவ, ஒருத்தர் சூத்திர சாதி, ஒருத்தர் பஞ்சமர், அய்யர பழிச்சா பிரம்மஹத்தி புடிச்சுக்கும்... அதே உங்க சாம, தான,பேத,தண்டம்ன்ற இத்துப்போன பழைய பாணில மக்கள அடிச்சு, அடிச்சு சாதின்னு ஒரு நம்பிக்கைய மக்கள் மனசுல பதிய வச்சது தவிர என்ன கஸ்ட்ரக்டிவ் இருக்கு உங்க பிராமண இந்து மதத்தில?.

கந்த சஷ்டி கவச மேட்டர்க்கு வருவோம். மொதல்ல 6 மாதம் முன்பு போட்ட வீடியோவுக்கு ஏன் இப்ப எதிர்வினை? அதைப் பேசுவதன் மூலம் அதிமுக அரசின் கொரானா ஊழல்களை மறைக்க முயன்றது தவிர அது மக்களின் எந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தது.

உங்க கேள்வி கந்தர் சஷ்டி கவசத்திற்கு திமுக ஏன் அறிக்கை தரல?. . அப்ப கந்த சஷ்டிக்கு எதிரா பொங்கினது அதன் மேல உள்ள அக்கறை இல்லயா? திமுக அறிக்கை தரனும் என்பதற்குத்தான் பேசினீர்களா ?.

கந்தர் சஷ்டிக்கு ஆர் எஸ் பாரதி அறிக்கை தருகிறார், ஏன் பெரியார்க்கு ஸ்டாலின் அறிக்கை தருகிறார்?. .உற்சவர் ஒன்னு, மூலவர் ஒன்னுன்னு கோவில்ல ரெண்டு ஏன்? உற்சவர வணங்குனா பலன் இருக்கும், மூலவர வணங்கினா இருக்காதா ?. ஏன் மூலவருக்கு 5 கால பூஜை, உற்சவர்க்கு உற்சவ காலத்தில் மட்டும் பூஜை. ரெண்டும் இந்து சாமியா, இல்லயா ?. அதுக்கு என்ன பதிலோ அது தான் ஆர் எஸ் பாரதி அறிக்கைக்கும், ஸ்டாலின் அறிக்கைக்கும் பதில்.

ஆர் எஸ் பாரதியின் தனிபட்ட கருத்து, திமுக கருத்தா இல்லயா?. மோடி 15 லட்சம் தரேன்னு பொதுக்கூட்டத்தில் சொன்னார். தரவில்லை...கேட்டால் அது பி ஜே பி கருத்து இல்லை என்று கூறுகிறீர்கள். அது மட்டும் எப்படி வேறு வேறு ஆனது?

கந்த சஷ்டி கவச தவறுகளைச் சொன்னால் ஏன் புண்படனும் என்று கூறும் திமுக பெரியார் சிலைக்கு காவி துண்டு போட்டால் ஏன் புண்படனும். ?.

கந்த சஷ்டி கவசத்தில் எல்லாம் சரியா இருக்கு என்றால் யாரோ வீடியோ போட்டா ஏன் கோவம் வருது பாண்டேவுக்கு? .சரி தன் நம்பிக்கை மீது தவறு சொல்லும் போது கோபம் இயல்பு தான். அதே போல் ரங்கராஜ்க்கு தன் சக மனிதர்கள் ஒரு மதத்தின் பேரால் இத்தனை ஆண்டுகாலம் இழிவு படுத்தப்பட்ட போது ஏன் மனம் புண்படவில்லை. சாதி சொல்லி, ஜெண்டர் சொல்லி மனிதர்களை ஒடுக்கியதற்கு ரங்கராஜ் மனம் புண்பட்டுச் செய்த போராட்டம் என்ன ?.

கந்த சஷ்டிக்கு புண்படக் கூடாதுன்னா ஏன் கார்ட்டூனுக்கு புண்பட்டிங்க ?. ஜெயலலிதாவை எதிர்தது அரசியல் செய்யும் திமுக இலங்க ராணுவ வெப்சைட் அவரை இழிவாப் பேசிய போது அதை முதலில் கண்டித்தது திமுக தான். ஏன் கண்டிக்கனும்? ஜெயாவின் அரசியலை எதிர்ப்பது ஜெயா என்ற தனி மனிதரை எதிர்ப்பது இல்லை. அதனால் கண்டித்தது! அது போல் தான் கந்த சஷ்டி கவசத்தில தப்பு இருக்கு திருத்திக்கன்னா திருத்திக்கங்க. உங்க நல்லதுக்குத்தான சொல்லப்படுது. ..தப்பைத் திருத்திக் கொண்டால் அதை எல்லா மக்களும் பாடலாம். இந்து மதம் இன்னும் விரிவடையும். சண்டாளர்களும்னு ஒரு ஒடுக்கப்பட்ட சாதியை இழிவு படுத்தும் பாடலை பாட பாண்டே மனம் மகிழ்ச்சியா இருக்கா என பாண்டே தெளிவு படுத்தனும்.

பெரியார் உங்களுக்கு ஒசத்தின்னா, கந்த சஷ்டி எங்களுக்கு ஒசத்தி? எது சாதி பேசும் பாட்டு ஒசத்தியா ? அப்ப மக்களோ, அவர்கள் நிலையோ உங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஒரு பாட்டு தான் பிரச்சனை, அப்படி தான?

திமுக இந்து மதத்தை பற்றி மட்டும் பேசுகிறது. மற்ற மதத்தைப் பேசினால் என்னாகும் என்று தெரியும். மற்ற மதத்தைப் பாவாடை, துளுக்கன்னு நீங்கள் பேசுகிறீர்களே என்ன ஆயிற்று?. யார் என்ன செய்து விட்டார்கள்?. அப்றம் ஏன் பொய்த் தகவலைப் பரப்புகிறீர்கள். இந்து மதத்தை ஏன் விமர்சிக்கிறோம், ஏன் என்றால் எங்கள் அனுமதி இல்லாமல் எங்களை இந்து என்று இந்து மதம் தான் சொல்கிறது. எது என் அடையாளம் ஆக்கப் படுகிறதோ அதைத்தான் விமர்சிக்க முடியும்.
என்னை ஒருத்தன் அடிக்கிறான். நான் அவனை திருப்பி அடிக்கிறேன். நீங்க ரோட்ல சும்மா நிக்ற இன்னொருத்தனை ஏன் அடிக்கலன்னு கேட்டா என்ன நியாயம்?

இந்து மதம் மட்டும் தான் ஏற்றத்தாழ்வைப் பேசுகிறதா ? சிலுவைப் போர், சிரியா போர் ஏன் நடந்தது? கருப்பர் வெள்ளை ஏற்றத்தாழ்வு இல்லயா? ரொம்ப சாமர்த்தியமா எந்த மதம் கற்பிக்கின்றது என்ற கேள்விய மனிதர்களை நோக்கி டைவர்ட் செய்வதுதான் இந்து மதம் சொல்லித் தந்த ராச தந்திரமா? உலகம் முழுதும் ஏற்றத்தாழ்வு இருக்கு. ஆனால் அதை மதம் போதிக்கவில்லை.

பிராமண, சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன்னு மக்களை பிரித்த ஒரே மதம் இந்து மதம் தான். பைபிள்ள கறுப்பா இருப்பவன் மட்டம்னு சொல்லப்படலை, குரான்ல மனிதர்களில் இத்தனை வகைன்னு சொல்ல்லவில்லை. அந்தப் பெருமை இந்து மதத்திற்கு மட்டும் தான். மனிதர்கள் ஏற்றத்தாழ்வைக் கொண்டிருப்பது உலக இயல்பு. ஏற்றத்தாழ்வையே ஒரு மதமா சொல்லித் தருவது இந்துமதம் தான். அதுதான் என் சக மனிதர்களைப் பாதிக்கின்றது, சிலுவைப் போரோ, சிரியாவோ என் தேசம் இல்லை.
அதனால் தான் இந்து மதத்தை அதிகம் விமர்சிக்கின்றோம். அதை விட உன் சட்டை கிழிஞ்சுருக்குன்னா அவன் சட்டை கிழிஞ்சுருக்கேன்னு கேட்பது என்ன நியாயம் சார்? மதத்தில மட்டும் இந்து மதம் தொன்மையானது, உயர்வானதுன்னு சொல்ற நீங்க, தபவறைச் சுட்டிக்காட்டினா திருத்திக் கொள்வதில் முதன்மையான மதமா ஏன் இருக்க முயற்சிப்பதில்லை?

யாரோ செய்கிற தவறை எல்லாம் ஏன் மோடி மேல் எழுதுகிறீர்கள். கருப்பர் கூட்ட வீடியோவுக்கு நீங்க ஏன் திமுக மேல எழுதுறிங்க. யாரோ செய்வதுக்கு திமுக எந்த வகையில் பொறுப்பு ?.

ஒரு மரத்தில் பல கிளை இருப்பது போல், இந்து மதத்தில் பல பிரிவு இருக்கக் கூடாதா? நல்ல கேள்வி.
ஒரு மரத்தில பல கிளை இருக்கலாம் பாண்டே. ஆனா மாமரத்துக் கிளை, தென்னை மரத்து வேர், புளிய மரத்து இலை இதை எல்லாம் சேர்த்து ஆலமரம் என்று சொல்லக் கூடாது இல்லையா? சைவ மதம் அதற்கென்று ஒரு கொள்கை வைத்து உள்ளது, வைணவம் அதற்கென்று ஒரு கொள்கை வைத்துள்ளது. பெளத்தம் அதற்கென்று ஒரு கொள்கை வைத்துள்ளது. இதை எல்லாம் சேர்த்து ஒன்றுன்னு எப்படி சொல்கிறீர்கள்? அப்படி எல்லாம் ஒன்று என்றால் ஏன் ஒரு பிரிவுக்கு ஒரு சாமி, ஒரு குலத்துக்கு ஒரு தெய்வம், ஒரு சாதிக்கு ஒரு வேதம்?
ரிக் வேதத்தைக் கள்ளரோ, மறவரோ, பட்டியலினப் பிரிவோ ஏன் பிராமணப் பெண்களோ படிக்க முடியுமா? ஒரு கோவில் அர்ச்சகரா ஒரு சூத்திரர், பஞ்சமர் இவர்களைக் கூட விடுங்க ஒரு பிராமணப் பெண் ஆக முடியுமா? அப்பறம் எப்படி அவை அனைத்தும் ஒன்று?
சிதம்பரம் நடராஜர் கோவில்ல சிற்றம்பலத்தில் தமிழ் பாட முடியாது. உள்ள இருக்கும் பெருமாள் கோவிலில் இருந்த தூணில் இருந்த சிவன் சிற்பம் உடைத்து எடுக்கப்படடது. வைணவக் கோவில்ல சிவன் இருக்கக் கூடாதாம். பின் எப்படி இரண்டும் ஒரே மதம் ஆகும்? திகவோ திவிகவோ எல்லாருக்கும் ஒரே கொள்கைதான், சமத்துவம், சாதி மறுப்பு, சமூக நீதி என்ற ஒரே கொள்கை தான்! எல்லா இயக்கத்திலும் பெரியார் இருப்பார். பெரியார் இருந்தா தீட்டுனு எந்தச் சிலையும் உடைத்து எடுக்கப்படுவதில்லை. . அதனால் அவை அனைத்தும் திராவிடக் கட்சிதான்! முதலில் பெருமாள் கோவிலில் பட்டாசாரியார்க்குப் பதில் குருக்களும், சிவன் கோவிலில் குருக்களுக்குப் பதில் பூசாரியுமே பூஜை செய்ய முடியாத போது அது எப்படி ஒரே மதம்?

திமுகவிற்குள் ஏன் மகளிர் அணி, மாணவர் அணி? ஏன் ஸ்கூல்ல ஒன்னாப்பு, ரெண்டாப்புனு இருக்குன்னு கேக்ற மாதிரி என்ன கேள்வி சார் இது. உங்கள ஒரு ஆள்னு மதிச்சு பதில் சொல்லிட்டு இருக்கற என்ன சொல்லனும்..

கலைஞர், கருணாநிதி, முத்தமிழ் அறிஞர்னு ஒருவருக்குப் பேர் இருக்கலாம். இந்து மதத்தில் பல பிரிவு இருக்கக் கூடாதா? சார் நீங்க உங்க மனைவிக்குக் கணவர், குழந்தைக்கு அப்பா, பெற்றோருக்கு மகன், ஆனா உங்களுக்கு நீங்க ஒரே ஆள், ரங்கராஜ் பாண்டே தானே. அப்படி இந்து மதம் அதற்கு அது ஒரே ஆள்னு காட்டுங்க பார்க்கலாம்..

கீதைல இந்து என்ற வார்த்தை இல்லை, திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தை இருக்கா?
திருக்குறள் தன்னை தமிழுக்கான புனித நூல் என்று கூறுவதில்லை. அது அனைத்து மொழிகளுக்கான, அனைத்து மக்களுக்கான நூல். அதனால் அதை உலகப் பொதுமறை என்று கூறுகிறோம். ஆனா இந்து மதத்திற்கு தான் தான் அத்தாட்சின்னு சொல்ற நூல்ல இந்துன்ற பேரே இல்லன்னா அது எப்படி இந்து மதத்தின் நூல்.

திருக்குறள் தமிழில் இருக்கு அது தமிழர் நூல், கீதை சமஸ்கிருதத்தில் இருக்கு அது பிராமணர் நூல் தானே. அது எப்படி தமிழர் நூல் ஆக முடியும்?

சுடலை மாடனைக் கொண்டாடுவது சுப்ரமணியரை எதிர்ப்பதாகுமா? இல்லைன்னு நிரூபிங்க. சுடலை மாடனைக் கும்பிடுபவரும், சுப்ரமணியரைக் கொண்டாடுபவரும் ஒன்று என்றால் ஏன் சாதி மாறி திருமணம் செய்வதில்லை. கடவுளைக் கொண்டாடலாம் அந்த சாதி ஆண்களை, பெண்களைக் கொண்டாடக் கூடாதா? ஏன் இத்தனை சாதி மேட்ரிமொனி? ஒரு டிவி உரையில் நீங்களே சொன்னது தான் நம் வீட்டுப் பெண்களை காதல் செய்திடாமல் பத்திரமா வளர்க்கனும் என்று சொன்னீர்கள். ஒரே சாமி, ஒரே மதம் ஆகலாம் ஒரே சாதி ஆகாதா?

எல்லார் வீட்டிலும் கீதை இல்லை, திமுக காரர் வீட்டில் முரசொலி இருக்கா? கீதை இந்து மதத்தின் புனித நூல் என்றால் அது இந்து வீட்டில் இருக்க வேண்டாமா? அதை வாசித்துதானே தன் வாழ்க்கை முறை அறியனும்... அப்படி எல்லார் வீட்டிலும் இல்லை என்றால் அவர் இந்து வாழ்வியலை அறியவில்லை, அவர் இந்து இல்லை என்று அர்த்தம்... அப்புறம் திமுகவின் கீதை முரசொலி இல்லை.. அது கலைஞர், அண்ணா, பெரியார்! திமுககாரன் வீட்ல இவர்கள் இருப்பார்கள். உங்கள கேள்வி கேட்டா அதற்குப் பதில் சொல்லத் துப்பில்லாம எல்லா பதிலும் அவன் சட்டை கிழிஞ்சுருக்கு இவன் சட்டை கிழிஞ்சுருக்குன்னே சொல்வது ஏன்?

சூத்திரர்கள் கொண்டாடப்பட்டனர், ஆழ்வார்களாக இருந்தனர்? அரசியலமைப்பை எழுதிய அம்பேத்கர் சூத்திரர்கள் தாழ்த்தபட்டதைப் புத்தகமாகவே எழுதி இருக்கின்றார் வாசிக்கவும்..
பிராமணர்ன்னா நல்லவன், அப்ப சூத்திரன கெட்டவன்னு சொல்றன்னா, இல்ல இல்ல சூத்திரன்னா நல்லவன்னு அர்த்தம்ன்னா அப்ப அவனும் பிராமணன்னு தான சொல்லனும் ஏன் சொல்லல? என்னங்க பித்தலாட்டம்...?

மனிதர்கள் செய்யும் தவறை மதத்தின் தவறா சொல்லக் கூடாது? மதமே மனிதர்களைத் தவறு செய்யத் தூண்டினா அது மனித தவறா? பொய் சொல்லிக் கூட ஜெயிக்கலாம்னு மதம் சொல்லுது, மகாபாரத்தில் கண்ணன் அஸ்வத்தாமன் இறந்து விட்டான்னு பொய் சொல்கிறான், விதி மீறி சண்டை போடலாம்னு மதம் சொல்கிறது, இடுப்புக்குக் கீழ அடிக்கக் கூடாதுன்ன்னு விதி இருக்கும் போது துரியோதனனை இடுப்பு கீழ அடிக்கச் சொல்கிறான். இதைப் படிக்கிறவன் டிராபிக் ரூல்ஸ் மீற மாட்டானா ? மதம் சொல்லித் தந்ததுதானே ?.

சூத்திரன் என்றால் வேசி மகன் என்று எதில் சொல்லி இருக்கு? மனு ஸ்மிருதில சொல்லி இருக்கு, மனு ஸ்மிருதியைப் பெரியார் மொழி பெயர்க்கல, ஆர் எஸ் சர்மா, உங்க ஆளு தான், அவர் மனு ஸ்மிருதி மொழிபெயர்ப்பைச் செய்தவர். அவர் தான் சொல்கிறார். .

சூத்திரர்கள் யார், எப்படி நடத்தபட்டனர் என்று அம்பேத்கர் கூறியதை வாசிக்கவும்.

http://www.keetru.com/…/2018-01-1…/32665-2017-03-15-01-57-28..

அம்பேத்கர் எப்படி படித்தார் ?. ராசா அண்ணன் கேள்வி யார் தடுத்தார் என்பது? யார் படிக்க வைத்தார் என்பதில்லை? அம்பேத்கர், அயோத்தி தாஸர் எல்லாம் வெள்ளைக்காரன் படிக்க வைத்தான், அம்பேத்கர் தாத்தா, முப்பாட்டனைப் படிக்க விடாமல் யார் தடுத்தது... அம்பேத்கர் ஏன் இட ஒதுக்கீடு கேட்டார், யாருக்காகக் கேட்டார்,?

அவர்கள் கல்வியைப் பறித்தது யார். கர்ணனுக்குக் குருகுலம் மறுக்கப்பட்டது ஏன் ?. சம்பூகன் கொல்லப்பட்டது ஏன்? ஏகலைவன் விரல் வெட்டபட்டது யாரால்? பதில் சொல்ங்க பாண்டே.

1871 சென்சஸ் படி கல்வி அறிவு பெற்று அதிகாரத்தில் இருந்தது 3% உள்ள பிராமணர் 99% வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். 97 % மக்கள் வெறும் 1% வேலை வாய்ப்பை மட்டுமே பெற்றுள்ளனர் என்று கூறுகிறதே ஏன்? யார் அவர்கள் கல்வியை தடுத்தது?

பிரிட்டிஷ் அரசு கிறிஸ்துவ மிஷனரி மூலம் கல்வியில் அனைவருக்கும் பங்களிப்பு தந்தும் தொடர்ந்து 25% தாண்ட இயலவில்லை ( இணைப்பு ). பிராமணர்களே 85% இடத்தை ஆக்ரமித்தது எப்படி?

அம்பேத்கர் தான் எத்தனை போராடி படிக்க நேர்ந்தது என்பதை அவரது waiting for visa நூலில் எழுதியுள்ளார். அறியவும்.

https://mobile.twitter.com/angry_birdu/…/1291912000725905408

பிகார்காரரான நீஙகள் அந்த மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் அக்கறையைப் பயன்படுத்தலாமே ஏன் செய்யவில்லை? பிகார் தான் மிக நலிந்த மாநிலம், தமிழ் நாட்டை விட உங்கள் தேவை அதிகம் உள்ள இடம். ஏன் போகவில்லை?

திலகர் பிராமணர் தவிர மற்றவர் கல்வி மறுக்கபடனும் என்று கூறியது எந்த அடிப்படையில் ..

//Tllak opposed the education of non brahmins by arguing that ‘the government should not take away a farmer’s boy from the plough, the blacksmith’s boy from the bellows and the cobbler’s boy from his awl with the object of giving him liberal education’. Furthermore Tilak too argued giving education to non-Brahmin
children to schools would do ‘more harm than good’. Tilak also suggested that non-Brahmin children should be trained as ‘carpenters,
blacksmiths, masons and tailors’.

The Mahratta, May 15 1881, pp. 3–4, ‘Our system of Education—A Defect and a Cure’.

Who had faith in the varnashrama dharma alone could be rashtravadis(nationalists) and others were ‘un-national.’ ‘the Hindu religion owed its existence to the caste system’- B. G. Tilak. The Mahratta, July 10 1881, p. 1. ‘The Prospects of Hindu Caste’.///

குலத்தளவே ஆகுமாம் குணம்” என்றும் “அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” பாரதி வரிகளிலேயே உள்ளது பார்ப்பணர்களின் கல்வி மறுப்புக்கான ஆதாரம்!

இந்த ஆதாரங்கள் போதுமா மிஸ்டர் ரங்கராஜ் பாண்டே

கருத்துகள் இல்லை: