செவ்வாய், 9 நவம்பர், 2010

உலகத் தரச் சான்றிதழுக்குத் தயாராகும் திருச்செந்தூர்



திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஐ. எஸ். ஓ. உலகத் தரச் சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. முருகனின் மற்ற ஐந்து படை வீடுகள் மலை மீதுள்ள நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டும்தான், அலை வீசும் கடலருகே குடைவரை கோயிலாக (மலையை குடைந்து அமைத்தது) அமைந்துள்ளது. இக்கோயிலின் ஆண்டு வருமானம் தற்போது 22.50 கோடி ரூபாயாக அதிகரித்து தமிழக கோயில்கள் வருமானத்தில் மூன்றாமி டத்தில் உள்ளது. கடந்த காலங்களில் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்யலாம் என நினைப் போருக்கு கோயிலில் ஆங்காங்கே திரியும் ஆடு, மாடு, நாய்கள் மற்றும் எச்சில் இலைகள், குப்பை கிடங்குகள் தான் கண்ணில்படும்.
ஆனால் இப்போது தூய்மையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகம்பளிச்என காட்சியளிக்கிறது. பிரசித்தி பெற்ற தலமாகவும் பரிகார தலமாகவும் இக்கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வி.ஐ.பி.க்கள் முதல் பாமர மக்கள் வரை தினசரி வழிபட்டுச் செல்லும் இக்கோயிலின் வளர்ச்சிப் பணி கடந்த சில ஆண்டு களாக மந்த நிலையில் நடந்தது.
ஆனால் கடந்த 2009 ஜுலை 2ல் மகாகும்பாபி ஷேகம் நடந்த பின்னர்தான் ஆச்சரி யப்படும் வகையில் மாற்றங்கள் படிப் படியாக நடந்து வருகின்றன. முன்பு கோவில் மகாமண்டபத்தில் அமைதியாக தரிசனம் செய்ய முடியாது. பக்தர்களின் தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலில் அலறல் சத்தங்கள் என நமது மனதை புண்படுத் தும் வகையில் காட்சிகள் அரங்கேறும். இப்போது பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என வரிசை முறை வி.ஐ.பி. களுக்கு விரைவு தரிசனம் கட்டணம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, கோயில் வெளிப்பரிகாரங்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. பிரகாத் தூண்களில்கந்த சஷ்டி கவசம்எழுதப்பட்டுள்ளது. உலகத்தரச் சான்றிதழைப் பெறுவதன் ஒரு கட்டமாக நவ. 6ம் திகதி துவங்கும் கந்த சஷ்டி திருவிழாவில் மூலவர் சுப்பிரமணியர் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: