வியாழன், 28 ஜூன், 2018

பெண்ணின் சுய இன்ப பாடலாக லதாவின் பாடலை ....இயக்குனர் கரன் ஜோகர் மீது லதா மங்கேஷ்கார் குடும்பம் ,,,


நெட்ஃபிளிக்ஸ் tamil.filmibeat.com- siva : சுய இன்ப சீனுக்கு லதா மங்கேஷ்கர் குரலா?- மும்பை: லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை தவறான காட்சிக்கு பயன்படுத்திய இயக்குனர் கரண் ஜோஹார் மீது மங்கேஷ்கர்கள் கோபத்தில் உள்ளனர்.
ஷாருக்கான், கஜோல், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரித்திக் உள்ளிட்டோரை வைத்து கரண் ஜோஹார் இயக்கிய கபி குஷி கபி கம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படத்கில் லதா மங்கேஷர் பாடிய கபி குஷி கபி கம் என்ற பாடல் மிகவும் பிரபலமானது. கரண் ஜோஹார் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற பெயரில் நெட்ஃபிளிக்ஸில் குறும்படம் வெளியிட்டார். அதில் நடிகை கியாரா அத்வானி சுயஇன்பம் காண அப்போது பின்னணியில் லதா மங்கேஷ்கர் பாடிய கபி குஷி கபி கம் பாடல் ஓடியது. ஒரு பெண் சுயஇன்பம் காணும் காட்சிக்கு பலர் பஜனை போன்று மதிக்கும் பாடலை பயன்படுத்துவதா என்று லதா மங்கேஷ்கரின் உறவினர்கள் கரண் ஜோஹார் மீது கோபத்தில் உள்ளனர்.

எட்டுவழிசாலை .. சி பி எம் முன்னாள் எம் எல் ஏ தோழர் டில்லிபாபு கைது

vlcsnap-2018-06-27-10h28m34s828
Muruganantham Ramasamy : இங்கெல்லாம் பொங்குவது அறச்சீற்றம் கொள்வதெல்லாம் எந்த வகையிலும் அரசியல் செயல்பாடல்ல என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன்.. இருந்தாலும் எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.எம் அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.டில்லிபாபு ஒரு உணவகத்தில் கைது செய்யப்பட்ட கணொளியை பாரத்தேன்.
அது எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதல்ல என்பது ஒருபுறமிருக்க இந்த காவல்துறை முழு வெறிநாய்க்கூட்டமாக மாறியிருப்பது துலலியமாக புலப்படுகிறது.விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன்.ஆனால் டில்லி பாபு போன்ற ஒரு மக்கள் ஊழியர் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற புரிதல்கூட இன்றி எடப்பாடியின் எச்சிலையை பொறுக்கித்தின்னும் ஒருவனால் காக்கி உடை அணிந்த காரணம் ஒன்றினாலேயே அவமதிக்கப்படவும் குறைந்தபட்ச மதிப்புகூட இன்றி நடத்தப்படவும் முடியும் என்றால் நாம் எத்தகைய கையறுநிலையில் உள்ளோம் என்பதை உணர முடிகிறது..

புதன், 27 ஜூன், 2018

பாஜக = பாலியல் ஜல்சா கட்சி .. பாஜகவும் பாலியல் குற்றங்களும் பிரிக்க முடியாதவை

asifa bjp leaderskeeru.com  கீற்று :உலகிலேயே மிகப் பெரிய வன்முறை எது தெரியுமா? திருப்பித் தாக்க முடியாதவனின் மீது செலுத்தப்படும் வன்முறை தான். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை அத்தகையது. 10 பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது கும்பல் மனப்பான்மை தரும் துணிச்சல்தானே தவிர, உண்மையில் அது மிகப்பெரும் கோழைத்தனம், வன்முறையின் உச்சம். அதைவிடக் கொடுமையான வன்முறை, பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது. இதையே நாம் கொடுமை என்றால், துள்ளி விளையாடும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை மனிதர்களாகவேனும் கருத முடியுமா? ஆனால், அத்தகைய மனித மிருகங்களாகத்தான் இந்துத்துவ சக்திகள் இந்த மண்ணில் நடமாடுகின்றன. சிறுமி ஆசிஃபா-வை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்கள் செய்த இந்துத்துவ - பாஜக சக்திகள் வாழும் இந்த நாட்டில், இனி சிறுபான்மையினரும், பெண்களும் பாதுகாப்பாக வாழ முடியுமா?< இந்துத்துவா - பாஜக கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. அவர்களது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பெண்ணுடல் மீது எழுதப்பட்டதாகவே அது இருக்கிறது.
பாஜக கும்பலின் பாலியல் குற்றங்கள் - ஒரு தொகுப்பு

டெல்லி – பெரும் சிக்கலின் தொடக்கம்.. அற்பத்தனங்களும் அச்சுறுத்தல்களும் ..

savukkuonline.com : அரசின் அதிகாரங்களின் வரம்பு மற்றும் அரசியல் அமைப்பு நெருக்கடி குறித்து,  டெல்லியில் நடத்தப்படும்  ஒரு சிறிய  நாடகம் அல்ல இது.  இது இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளுக்கான  ஒரு அச்சுறுத்தலாகும்.  அற்பத்தனங்களும், பழிவாங்கும் எண்ணமும் எப்படி எளிதாக, அரசியல் சட்ட அமைப்புகளை நிறுவனங்களை அழிக்க முடியும் என்பதை விளக்கும் நிகழ்வுகளாகும்.
இந்திய அரசியலில் புதிய கலாச்சாரத்தை டெல்லி நிறுவியுள்ளது.  அந்த சித்திரத்தை பாருங்கள்.  முன்னெப்போதும் இல்லாத ஒரு மிகப் பெரிய மக்கள் ஆதரவோடு ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்படுகிறது.  டெல்லியின் சிறப்பு அந்தஸ்தைப் பொறுத்தவரையில், துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு இடையில் அதிகாரங்களை ஒதுக்குவதில் தெளிவற்ற பகுதிகள் இருக்கலாம் என தாராளமாக கூறலாம்.
ஆனால், அந்த தெளிவற்ற பகுதிகள் எதுவாக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் அதிகார ஒதுக்கீடு என்பது  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தைத் ஒடுக்கி, ஒரு சர்வாதிகார வைசிராய்போல துணைநிலை ஆளுநர் செயல்பட முடியும் என பொருள்படாது. ஆனால் துணை நிலை ஆளுநர் அதைத்தான் செய்துள்ளார்.

கலப்பு திருமண அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி!

கலப்பு திருமணம்: அபராதம் செலுத்தாததால்  வீட்டுக்கு முள்வேலி!மின்னம்பலம்: ஒசூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு விதிக்கப்பட்ட ரூ.3 லட்சம் அபராதத் தொகையை செலுத்தாததால்,வீட்டைச் சுற்றி முள்வேலி போட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜோகிர்பாளையத்தை சேர்ந்த சந்துரு, என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த தேவயானி என்ற பெண்ணைக் காதலித்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். கோவையில் வாழ்ந்து வருகின்ற இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, பஞ்சாயத்து சார்பில், சந்துரு குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், தேவயானி குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை சந்துரு குடும்பத்தால் குறித்த காலத்திற்குள் செலுத்த முடியவில்லை.

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து!..

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து!மின்னம்பலம்: சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 2016 ஆண்டு நடைபெற்ற சோதனையில் ரூ.33.6 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. 100 கிலோவுக்கும் அதிகமாகத் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோதமாகப் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தது.
மேலும், சேகர் ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகத் தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்குச் சொந்தமான இடங்களிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நீதிபதி விமலாவை மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

BBC : தமிழக சட்டப்பேரவையின் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாவது நீதிபதியை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மூன்றாவது நீதிபதியாக எஸ். விமலா அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீதியரசர் எம். சத்யநாராயணா மூன்றாவது நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதின்றத்தின் டிவிஷன் அமர்வு விசாரித்துவந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய இந்த அமர்வு ஜூன் 14ஆம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது, இரு நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம் நாட்டு பயணிகள் தடை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


tamilthehindu : முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் மக்கள் அமெரிக்காவுக்குள் வர அதிபர் டெனால்ட் டிரம்ப் விதித்த தடை செல்லும், அதற்கு தடை விதிக்க முடியாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.< அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் , தான் அதிபராக வந்தால், முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்குத் தடைவிதிப்பேன், தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று கூறி இருந்தார்.
அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாட், ஈரான், லிபியா, வடகொரியா, சோமாலியா, சிரியா, வெனிசுலா, மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்குத் தடைவிதித்தார்.

பிரதமர் மோடிக்கு கடும் பாதுகாப்பு ... அமைச்சர்கள் கூட சந்திப்பது ... யுத்தகால நடவடிக்கைகள் போன்று ...

இனி அமைச்சர்களும் கூட மோடியை சந்திக்க முடியாது!மின்னம்பலம் : மக்களின் தலைவர் என்று பாஜகவினரால் போற்றப்படும் பிரதமர் மோடியை அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் கூட தேவையில்லாமல் நெருங்க முடியாத அளவுக்கு, மோடியின் பாதுகாப்பு நடைமுறைகள் பலப் படுத்தப்பட்டிருக்கின்றன.
பிரதமர் மோடியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய நெறிமுறைகளின்படி மத்திய அமைச்சர்கள் கூட பிரதமரைப் பார்க்க வேண்டும் என்றால் பிரதமரின் பாதுகாப்புப் படையான எஸ்பிஜியின் அனுமதி பெற்ற பிறகே பார்க்க முடியும்.
அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் ராஜீவ் காந்தியைப் போல மோடியைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் பிரதமர் மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்தது.

கனடா: டொரண்டோ பல்கலையில் `தமிழ் இருக்கை' அமைகிறது! chair in Tamil studies - University of Toronto Canada


BBC. : கனடாவின் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார்.
பல ஆண்டு கனவு நிறைவேற இருப்பதாகக் கூறினார் கனடா தமிழ் காங்கிரஸின் துணைத் தலைவரும் தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ. இலங்கைத் தமிழர்களுக்கு இது மிகப் பெருமை வாய்ந்த மைல்கல் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ் இருக்கை அமைக்க ஐந்து மில்லியன் டாலர் தேவை என்று தெரிவித்த பல்கலைக் கழகத்தின் செயல் இயக்குநர் ஜார்ஜெட் ஜிநாடி, துவக்க விழா நிகழ்ச்சியிலேயே 6 லட்சம் டாலருக்கு மேல் நன்கொடை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பன்னீர் உள்பட 7 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் அப்பீல்.. தினகரன் தரப்பு அதிரடி

Balaji - ONEINDIA TAMIL  டெல்லி: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் உட்பட 7 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்னர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா முதல்வராக முயற்சி செய்தார். அதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கினார். 
அவருக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர். மேலும், கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அப்போது நடத்தப்பட்ட சட்டசபை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர் செல்வம் உட்பட 7 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 

சீனா - 50 புதிய நகரங்கள் மக்களின்றி வெறுமையாக .... 60 மில்லியன் மாடி வீடுகளில் யாருமே இல்லை?


Sriravindrarajah Rasiah : சனத்தொகை குறைவால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்
சீனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 50 புதிய நகரங்கள் மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் "பேய் நகரங்கள்" Ghost Cities என்று வர்ணிக்கப்பட்டுகின்றன. 60 மில்லியன் மாடி வீடுகள் யாருமே இல்லாமல் பாழடைகின்றன. வெளிநாட்டில் சீனர்கள் வீடுகளை வாங்கிப் பூட்டி வைத்திருப்பது தொடர்கிறது. கனடா, அவுஸ்திரேலியாவில் பாவிக்காத வீடுகளால் அரசாங்கத்திற்கு மின்சாரம், தண்ணீர் பாவனை இல்லாதபடியால் வருமானம் குன்றியமையால் வரிகள் அதிகம் கட்ட வேண்டும் சட்டம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் டுபாயில் உள்ள அடுக்கு மாடிகள் இரவில் வெளிச்சம் இல்லாமல் பாவனையற்று இருப்பதைக் கண்டேன். வீட்டு சொந்தக்காரர்கள் வெளிநாட்டில் வாழ்வதால் இப்படியான நிலமை உள்ளது. தற்பொழுதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் சனத்தொகை குறைவதால் பல வீடுகள் குடியிருப்பவர்கள் இன்றி அல்லது குறைந்து பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. சில வீடுகள் போரினால் உட்பட்டு பாழடைந்தும் உள்ளன. உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிலையிது.

செவ்வாய், 26 ஜூன், 2018

எடப்பாடி பழனிச்சாமி : மக்கள் தாமாகவே விரும்பி எட்டுவழி சாலைக்கு நிலங்களை தருகிறார்கள்

பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கிறார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி பேட்டிமாலைமலர்: சேலம்:  நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு: கேள்வி:- தொடர்ந்து கர்நாடக அரசு முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறது, ஆணையத்திற்கான உறுப்பினரை நியமிக்கவில்லையே?.
பதில்:- ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டால் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு அதற்குத் தேவையான உறுப்பினர்களை 4 மாநிலமும் வழங்க வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையிலே, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. ஆனால், கர்நாடக மாநில அரசு மட்டும் அவர்களுடைய பிரதிநிதிகளை பரிந்துரைக்காத காரணத்தினால், மத்திய அரசு, தானாக கர்நாடகத்திற்கான பிரதிநிதிகளை நியமித்திருக்கிறது.

24 June 2018 வானவில் சுயமரியாதை பேரணி 2018 - FAQ – பொது கேள்வி பதில்

This page answers the commonly asked questions, many sent in by our readers over the years. If you would like to know more details, you can post your questions on the Facebook event page or use the form at the end of this page.
When is the Chennai Rainbow* Pride march?
Chennai’s tenth Rainbow Pride / Self Respect march has been scheduled for 24th of June 2018, the last Sunday of the month (subject to police permission).  Keep a watch on the Facebook page and event page for for updates of 2018 Pride.

மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறைகள் | வழக்கு நிதி தாரீர் !


போலீசின் துப்பாக்கியும் சிறையும் எம்மை அச்சுறுத்தியதில்லை. ஆனால் நிதி நெருக்கடிதான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் நிதிக்கு எங்கே போவது உங்களைத் தவிர." மக்கள் அதிகாரம் வழக்கு நிதி கோரிக்கை!
தமிழக போராட்ட வரலாற்றில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, பெரும் மக்கள் பங்கேற்று போராடி, அரசை பணிய வைத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தூத்துக்குடி மக்களின் வீரம்செறிந்த அர்ப்பணிப்பான போராட்டம் முக்கியமானது. சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை போராட்டங்களுக்கு இது முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான், போராடிய மக்கள் மீது பெரும் வன்முறையை − படுகொலையை திட்டமிட்டு நடத்தியுள்ளது போலீசு.
துப்பாக்கிச் சூடு படுகொலை, குண்டடிபட்டு காயம், நூற்றுக்கணக்கான வழக்குகள், கைது, சிறை, அடக்குமுறை என ஒரு மாத காலமாக தூத்துக்குடி மக்கள் நிம்மதி இழந்து நிற்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆபத்தைவிட போலீசு ஆபத்து அவர்களுக்கு சவாலாக உள்ளது. ஆண்கள், இளைஞர்கள், மாணவர்கள் வீட்டில் தங்க முடியவில்லை. பெண்களும் இரவில் மாதா கோவிலில் தஞ்சமடைகிறார்கள். மக்கள் அதிகாரம் மட்டுமல்ல போராடிய மக்கள் பலரையும் தூத்துக்குடி போலீசு கைது செய்து மிரட்டி வருகிறது. போராடுவதை குற்றமாக – தீவிரவாத நடவடிக்கையைப் போல சித்தரித்து கைது செய்வது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைப்பது அடக்குமுறையின் உச்சம்.

அண்ணா பல்கலை:,, மாணவர்களுக்கான 70% காலியிடங்கள்?

அண்ணா பல்கலை:70% காலியிடங்கள்? மின்னம்பலம்:  அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில், நடப்பாண்டில் டிப்ளமோ முடித்து விட்டு நேரடியாக இரண்டாமாண்டு பி.இ / பி.டெக். படிப்புகளில் சேர்வோருக்கான இடங்கள் 70 சதவிகிதம் காலியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 525 கல்லூரிகளில் உள்ள 35,000 இடங்களுக்கு இந்த ஆண்டு 12,000 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இது, சமீபத்தில் கிடைத்த அதிகாரப்பூர்வ தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.
சில ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு,பொறியியல் படிப்புகளில் சேர்வது மாணவர்களிடையே விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த படிப்புகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், இந்த படிப்புக்கான கோரிக்கையும் குறைந்துவிட்டது.

கேரளா : ஐந்து பாதிரியார்கள் பெண்களை மிரட்டி பலமுறை பாலியல் உறவு .. Kerala: 5 Priests Use Woman's Confession to Blackmail, Sex...

Five priests of Malankara Orthodox Syrian Church in Kerala were sent off on leave after they were accused of sexually abusing and blackmailing a woman over the last few years. The woman’s husband, in his complaint, had alleged that his wife’s confession to one of the accused priests was supposed to be a secret but was rather used to blackmail her.
கேரளாவில் தேவாலயத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கியது தொடர்பாக 5 பாதிரியார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் மலங்கராவில் ஆர்தடாக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் உள்ள பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு திருமணத்திற்கு முன் ஆர்தடாக்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருடன் உறவு இருந்துள்ளது. அப்பெண் தனது இரண்டாவது மகளின் ஞானஸ்தானத்தின் போது, மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் எனவே திருமணத்துக்கு முன்பு பாதிரியார் ஒருவருடன் உறவு வைத்திருந்ததை மற்றொரு பாதிரியாரிடம் கூறி வருத்தமடைந்துள்ளார்.
இதை ஆடியோவாக பதிவு செய்த அந்தப் பாதிரியார், இதை அப்பெண்ணின் கணவரிடம் சொல்லிவிடுவதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். தொடர்ந்து தேவாலயத்தில் உள்ள மற்ற 3 பாதிரியார்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்களும் ஆடியோவை வைத்து அப்பெண்ணை மிரட்டிப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடு.. பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.. பெற்ற இடத்தை தக்கவைத்து கொள்ளுமா?

BBC : பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள்
பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
1.இந்தியா
2.ஆஃப்கானிஸ்தான்
3.சிரியா
4.சொமாலியா
5.சௌதி அரேபியா
6.பாகிஸ்தான்
7.காங்கோ குடியரசு
8.ஏமன்
9.நைஜீரியா
10.அமெரிக்கா
எதனை அடிப்படியாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது?
சுகாதாரம், பாகுபாடு பார்த்தல், கலாசார மரபுகள், பாலியல் வன்கொடுமை, பாலியல் அல்லாத வன்கொடுமை, ஆள் கடத்தல். இந்த ஆறு மரபுகளைஅடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே, இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடு என்று கூறுகின்றன. re>இதே ஆய்வு ஏழு வருடங்களுக்கு முன்பும் நடத்தப்பட்டது. அப்போது இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.
பெண்கள் பிரச்சனைகளில் வல்லுநர்களாக இருக்கும் சுகாதார பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பாமக பாஜக தொண்டர்கள் மோதல் .... தமிழிசை டாக்டர் ராமதாசை தரக்குறைவாக பேசியதால் ...


tamilthehindu : பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்ததாகக் கூறி, சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற பாமகவினர்.
 மோதலில் ஈடுபட்ட பாமக மற்றும் பாஜகவினரை அப்புறப்படுத்தும் போலீஸார்.
பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்ததாகக் கூறி, சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற பாமகவினர். () மோதலில் ஈடுபட்ட பாமக மற்றும் பாஜகவினரை அப்புறப்படுத்தும் போலீஸார். சென்னை தி.நகரில் பாஜக, பாமகவினர் இடையே ஏற்பட்ட மோத லால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப் பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னை தி.நகர் வைத்தியநாதன் சாலையில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பாமகவினர் அறிவித்தனர்.

இலங்கையில் 40,000 வீடுகளைக் கட்ட சீனாவுக்கு அனுமதி ,, இந்தியா அதிருப்தி தெரிவிப்பு

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 40,000 வீடுகள்!மின்னம்பலம: இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40,000 வீடுகளைக் கட்ட சீன நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40,000 வீடுகளைக் கட்டி தருவதற்கு, கடந்த மாதம் மீள்குடியேற்ற அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்று, சீனாவின் ரயில்வே பெய்ஜிங் இன்ஜினீயரிங் குரூப் லிமிடெட் மற்றும் யப்கா கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. மேலும், நிலச் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 வீடுகளைக் கட்டி தருவதற்குப் தேசியப் பேரிடர் மேலாண்மை அமைச்சகமும் சீன நிறுவனங்களிடமே ஒப்படைத்துள்ளது.

ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான் குண்டுகள் ராக்கெட் லவுஞ்சர்கள் பிடிபட்டான் .. புலிகளால் புதைக்கப் பட்டவையா?

19 தோட்டா பெட்டிகள் . தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் 
5 கண்ணிவெடி பெட்டிகள், கையெறிகுண்டுகள் 15, ராக்கெட் லாஞ்சர் தோட்டா 2 பெட்டி உள்ளிட்டவை இருந்தன. மொத்தம் 50 பெட்டிகளில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. தோண்டத்தோண்ட வெடிகுண்டு, ஆயுதங்கள் கிடைத்த வண்ணம் உள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.
ராமேசுவரம் அருகே கழிவுநீர் தொட்டிக்கு தோண்டிய போது கடற்கரையில் புதைத்த ஆயுத குவியல் சிக்கியதுதினத்தந்தி : ராமேசுவரம் அருகே கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஆயுத குவியல் சிக்கியது. பெட்டி, பெட்டியாக துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. ராமேசுவரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஆயுத குவியல் பற்றிய விவரம் வருமாறு:- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தங்கச்சிமடம் அந்தோணியார்கோவில் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருடைய வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டிக்காக நேற்று பணியாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 3 அடி ஆழத்தில் குழியில் ஒரு இரும்புப்பெட்டி தென்பட்டது. இதையடுத்து அது புதையலாக இருக்கலாம் என்று வீட்டின் உரிமையாளர் எடிசன் இது குறித்து தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசார் மீண்டும் அந்த பகுதியில் ஆழமாக தோண்டி இரும்பு பெட்டியை மேலே கொண்டு வந்து பார்த்தனர்.
இதில் இலகு ரக எந்திர துப்பாக்கிக்கு பயன் படுத்தும் 19 தோட்டா பெட்டிகள் இருந்தன. தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் இருந்தன.

திங்கள், 25 ஜூன், 2018

ஐ நாவில் தூத்துக்குடி படுகொலைகள் ... திருமுருகன் காந்தி உரை


மே 17:இயக்கம் : **தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி**
இந்திய அரசு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மக்களின் மீது ஒரு வன்முறையினை ஏவிவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடி வருகிறார்கள். இந்த பெரிய அபாயகரமான ஆலையானது மன்னார் வளைகுடாவிற்கு 15 கி.மீ சுற்றளவிற்கு உள்ளாக உள்ளது. அந்த ஆலையைச் சுற்றி 7 கி.மீக்கு உள்ளாக 2,50,000 மக்கள் வசிக்கிறார்கள். அந்த ஆலை வெளிப்படுத்தும் நச்சுக்கள் தூத்துக்குடியை சுற்றியுள்ள 7,00,000 மக்களுக்கு பாதிப்பினை உண்டாக்குகிறது. 2018 இல் அந்த ஆலை விரிவாக்கத்திற்கு முன்வைக்கப்பட்ட போது மக்கள் மீண்டும் போராட ஆரம்பித்தனர். போராட்டத்தின் 100வது நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை காவல்துறை நிகழ்த்தியுள்ளது. 17 வயது பள்ளி சிறுமி ஸ்நோலின் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட அப்பாவி போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சீருடையில் இல்லாத நபர்கள் போராட்டக்காரர்களை நோக்கி அவர்களின் உயிரைப் பறிக்கும் நோக்குடன் சுட்டதற்கான காணொளிகள் வெளியாகியுள்ளன. 

வி பி சிங்கை அடையாளம் காட்டிய தமிழக பேரணியும் மெரீனா கூட்டமும்

the Indian National Congress of Rajiv Gandhi (son of Indira), who claimed 414 seats in a 533-seat parliament, the majority being 267.
LR Jagadheesan : மண்டலை அமல்படுத்தியதால் ல் செய்யப்பட்டதாக வரலாறு இல்லை. விபிசிங் ஆட்சிக்கு வரக்காரணமாக இருந்த தேசிய முன்னணி உருவான துவக்கத்தை சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தியவரும் அதே முக தான். அந்த சென்னை பேரணிக்குப்பின்னரே நேருவைவிட அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றிருந்த ராஜீவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்கிற நம்பிக்கை மற்ற பல “தேசிய” கட்சிகளுக்கே உண்டானது. அப்படி விபி சிங் பிரதமராக துவக்கப்புள்ளி வைத்தவரே, ஆட்சி பறிபோன நிலையில் அதே விபி சிங்குக்கு தமிழ்நாடு முழுக்க தன் தலைமையில் சிகப்புக்கம்பள வரவேற்பளிக்கவும் செய்தார். தன் ஆட்சிக்காலங்களில் தன் கட்சி சாராத மாற்றுக்கட்சிகளைச்சேர்ந்த காமராஜர், அம்பேட்கர், விபிசிங் ஆகிய மூவருக்கும் முக செய்த அளவுக்கு மரியாதை செய்த, சிறப்புச்செய்த வேறொரு அரசியல் தலைவர் உண்டா என்பது தெரியவில்லை.
கமண்டலங்களால் பதவிபறிக்கப்பட்ட விபிசிங்கை, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்கி குமரிமுனைவரை தன்னோடு அழைத்துச்சென்று தமிழ்நாடு நெடுக இடைவிடாமல் 48 மணிநேரம் சிகப்புக்கம்பள வரவேற்பளித்து கௌரவித்தவர் அன்றைய முதல்வர் முக. பதவி இழந்த ஒருவருக்கு அப்படி மாநிலம் தழுவிய அளவிலான மாபெரும் கௌரவம், சிறப்பான வரவேற்பு அதற்கு முன்பும் சரி பின்பும் சரி இந்திய அரசியலிலோ தமிழ்நாட்டளவிலோ ஒரு மாற்றுக்கட்சித்தலைமையால் அதுவும் மாநில அரசின் முதல்வர் பதவியில் இருந்த ஒருவரால்.

அந்த டைரக்டர்ஸ்கிட்ட இப்படியொரு கேள்வி கேப்பாங்களா? மாலினி ஜீவரத்தினம்!

Lakshmi Kanth Bharathi :பொதுவாக ஒடுக்குமுறை என்றாலே நம் நினைவுக்கு
வருவது அரசாங்கம் அல்லது மதம் அல்லது சாதி சார்ந்த கொடுமைகள்தான். ஆனால் எத்தனை பேர் தனி மனித உரிமை மறுத்தல் ஒடுக்குமுறைகள் அன்றாடம் தொடுக்கப்படுகின
மாலினி ஜீவரத்தினம் Malini Jeevarathnam யார்?
நான் ஒரு ஒடுக்கப்பட்ட பால் ஈர்ப்பை சேர்ந்தவள். இந்த சமூகத்தில் இருக்க தகுதியான ஆதார், வாக்குரிமை உள்ளிட்டவை பெற்ற, இந்த நாட்டில் பிறந்த, இந்த நாட்டில் வாழும் தீண்டத்தகாத ஒரு உயிர்.
நீங்கள் ஒடுக்கப்படுவதாக எப்போது உணர்ந்தீர்கள்?
இந்த சமூகத்தில் எழுபது சதவீதத்தினர் ஒடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். வர்க்கம், சாதி, மதம், மொழி, நிறம், தோற்றம் அடிப்படையில் ஒரு தரப்பு இன்னொரு தரப்பினர் மீது ஒடுக்குமுறையை நடத்தி வருகிறது. இயற்கையான ஈர்ப்பு அடிப்படையில் ஒரே பாலினத்திற்குள் காதல் கொள்கிறவர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒடுக்குமுறையாக நான் பார்க்கின்றேன். நான் எதை சாப்பிடணும், நான் யாரை காதலிக்கணும் எப்படி நடக்கனும் என்பது அடிப்படையாக வாழ்வதற்கான ஒடுக்குமுறை எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறது.

வைரமுத்துவுக்கு திராவிடர் கழகம் திறந்த மடல் : இந்துத்வாக்களை வாய் தவறியும் பாராட்டி விடாதீர்கள்!

valகதிரவன் - நக்கீரன் :கடவுள் மறுப்புக்கும், நாத்திகத்திற்கும் வழி இருப்பதால், நான் இந்து மதத்தைக் கொண்டாடுகிறேன் என்று தலைப்பிட்டு, தமிழ் இந்து நாளிதழில் ஒரு செய்தி (23.6.2018) தாங்கள் புதுச்சேரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ஒரு கருத்தரங்கத்தில் பேசியுள்ளதாக வந்துள்ளது.
இது சரியாக இருக்குமானால், சில விளக்கங்களை தங்களுக்குத் தெரிவிக்கவேண்டியது கருஞ்சட்டை சகோதரனின் கடமையாகும்!  நீங்கள் ஒரு கோணத்தில் கூறினாலும், அதை இன்றைய, நாளைய இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். சக்திகள் - எந்த சக்திகள் ஆண்டாள் தமிழாற்றுப் படைக்காகத் தங்களை வறுத்தெடுத்தார்களோ, அவர்களே அதை மட்டுமே வைத்து இந்து மதத்தை வைரமுத்துவே கொண்டாடுகிறார் என்று பெருமிதப்படுத்தி திசை திருப்பிட எல்லாவித வாய்ப்புகளும் உண்டு என்பதால், இப்படி நினைக்கும் அல்லது வாதிடும் பலருக்கும் பதிலாக அமையும் என்று கருதி இவ்விளக்கத்தை - மடலை எழுதுகிறேன். முதலாவது,
இந்து மதம் கடவுள் மறுப்பை, நாத்திகத்தை அனு மதிப்பதற்குக் காரணம் அதற்கெனத் தனிக் கொள்கையோடு உருவான மதமே அல்ல - அந்த பார்ப்பன, ஆரிய, சனாதன, வேத மதம்.