வெள்ளி, 17 ஜூன், 2011

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு-4 பாதிரியார்கள் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு

திருச்சி : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை பெற முன்வராத 4 பாதிரியார்கள் வரும் 21 ம் தேதி ஆஜராக வேண்டும் திருச்சி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர் பாதிரியார் ராஜரத்தினம். இவர் தன்னை கற்பழித்து கருக்கலைப்பு செய்ய தூண்டியதாக கோட்டை காவல் நிலையத்தில் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி புகார் செய்தார். அதன் பேரில் பாதிரியார் ராஜரத்தினம் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரிக்கு மிரட்டல் விடுத்த பாதிரியார்கள் தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர் வேதம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1ல் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்ததாக பெண் டாக்டரும் வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் பாதிரியார் ராஜரத்தினம் உள்பட 5 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாக இருந்தது.

இதற்காக அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து. கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட பெண் டாக்டர் மட்டும் , நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகலை பெற பாதிரியார்கள் 4 பேரும் கோர்ட்டுக்கு வரவில்லை.

இதனையடுத்து, இந்த வழக்கை வரும் 21 ம் தேதிக்கு நீதிபதி இளங்கோ தள்ளி வைத்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் 4 பேரும் ஆஜராகி குற்றப்பத்திரிக்கையை பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Charge sheet filed in Trichy court in Florence Mary rape case. On Oct. 12, a former nun accused Father Rathinam Rajarathinam, principal of Jesuit-managed St. Joseph’s College in Trichy, Tamil Nadu, of raping her.She filed a complaint with the All Women Police Station that specializes in crimes against women. According to her case, the priest raped her in 2006 and in 2008 and continuously threatened her not to tell anyone.

செம்மொழி சின்னம் அகற்றப்படுகிறது

சமசீர் கல்வி புத்தகங்களில் இருந்து செம்மொழி சின்னம் அகற்றப்படுகிறது.

அதிமுக அரசு செம்மொழி மீது ஏன் இந்த வெறுப்பை துப்புகிறது என்று எமக்கு புரிகிறது.
கைபர் கணவாய் வழியாக வந்தவர்களின் ஆட்சியில் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?
கலைஞர் கூறியது போல் பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் என்ற வரிகளின் மீதுதான் எத்தனை வெறுப்பு? 
பிறப்பால் நீ தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்ற பாகுபாடு இல்லையென்றால் பலரின் பருப்பு வேகாதே?

Diamonds, Cash found in Satya Sai Baba’s room

PUTTAPARTHI: Nearly two-and-a-half months after his death, the personal chamber of Satya Sai Baba was unlocked in the presence of members of the Satya Sai Central Trust in Puttaparthi on Thursday.
It reportedly revealed heaps of cash and precious stones. Neither the press not government officials were allowed in.
The trustees, Justice P.N. Bhagwati, Mr R.J. Ratnakar, Mr S.V. Giri, Mr V. Srinivasan and the Baba’s personal assistant, Mr Satyajith, gathered at the Yajur Mandir which has been locked since Baba was hospitalised on March 28.
Half-an-hour later, the State Bank of India manager, Mr Shashi Kumar, arrived and handed over the keys of the chamber to Mr Giri.
They offered prayers before opening the Yajur Mandir and sought Mr Satyajith’s assistance to identify the many valuable items found in the chamber.
15 students count Sai Baba wealth
The trustees who are counting Satya Sai Baba’s treasure reportedly videographed huge heaps of cash, gold and diamonds that were piled up in the chamber.
It is learnt that 15 students of the Satya Sai Educational Institute were drafted in to count the treasure trove, together with bank personnel who arrived with currency counting machines.
There were demands from the public and from several political parties that government officials should be present when the chamber was opened, but the trustees did not agree.
The media and police were confined to a compound and prohibited entry into the Yajur Mandir.
Trust member Mr Ratnakar said that details of the cash and ornaments would be disclosed to the public on Friday.
The bank staff whisked away the cash and valuables to safe deposit lockers in the evening.
 
SG Andhra 17/06/2011 - 08:59am
Then why the system is not transparent. Why Satyajit is brought now into the picture, because he'll help the trust members to share things. If it is public money why are assets not revealed.
Everything is maya, isn't it?

சினிமா ஆசையில் மகளை சீரழித்த பெற்றோர்!

கொச்சி: பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர் எர்ணாக்குளத்தை சேர்ந்த பெற்றோர்கள். அவர்களுக்கு உடந்தையாக இருந்து மாணவியை பலாத்காரம் செய்த குமரி கட்டட காண்டிராக்டரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவி
கேரள மாநிலம் எர்ணாகுளம் வாணியக்காடு பகுதியை சேர்ந்தவர் சுதீர் (39). இவருடைய மனைவி சுபைதா. இவர்களுக்கு 18 வயதுள்ள பிளஸ்-2 படிக்கும் மகள் உள்ளார். தனது மகளை சினிமாவில் நடிக்க வைத்து கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற விபரீத ஆசை சுதீர் மனதில் எழுந்தது. இதனையடுத்து கேரள சினிமாவிற்கு துணை நடிகைகளை அனுப்பிவைக்கும் வர்க்கலை சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த விஜயகுமாரை சந்தித்த சுதீர் தனது ஆசையை அவரிடம் தெரிவித்தார்.

பணத்திற்காக விபச்சாரம்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று சுதிரிடம் விஜயகுமார் தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த சுதிர் அப்போது 9 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மகளை விஜயகுமாரின் ஏற்பாட்டின் படி பலரது படுக்கையறைக்கு அனுப்பி வைத்தார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் எதுவும் எடுபடவில்லை.
திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் தமிழ்நாடு என பல இடங்களுக்கும் மாணவியை அனுப்புவதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூலித்ததாகவும் தெரிகிறது.

உறவினர்களிடம் மாணவி புகார்
பணத்திற்கு ஆசைப்பட்டு தந்தை சுதீருடன், தாய் சுபைதாவும் சேர்ந்து பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பினார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரின் பிடியில் இருந்து தப்பி, பாலக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று நடந்ததை தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுபற்றி எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியின் பெற்றோர் சுதீர்-சுபைதா உள்பட 65 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.

காண்டிராக்டருக்கு தொடர்பு
இந்த சம்பவத்தில் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள கண்ணுமாமூடு பளுகல் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டரான மணிகண்டன் (42) என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது

ஒருமுறை ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மாணவியை மணிகண்டனுடன் அனுப்பியுள்ளார் சுதீர். இதனைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்வதற்காக போலீசார் தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். இந்தநிலையில் மணிகண்டன் சென்னையில் பதுங்கி இருப்பதாகவும், சிங்கப்பூருக்கு விமானத்தில் தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை சென்ற கேரள போலீசார் விமானநிலையத்தில் வைத்து மணிகண்டனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சில அதிகாரிகளுக்கு மாணவி விருந்தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மாணவி மட்டுமின்றி பல இளம் பெண்களை சில அரசு அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், வி.ஐ.பி.களுக்கும் மணிகண்டன் சப்ளை செய்து தனது காரியங்களை சாதித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மாணவியின் வாழ்க்கையை சீரழித்த அனைவரது பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கிடையே பாதுகாப்பு கருதி மாணவியை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

Vijeyakanth-Jeyalalitha இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் எக்காலத்திலும் ஒருவருக்கொருவர் ப

கேள்வி 1:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு கனிமொழிக்கு ஆதரவாக இருக்குமா, எதிராக இருக்குமா? இதில் தி.மு.கவின் மற்ற அமைச்சர்கள் ஏன் இல்லை?
கேள்வி 2:
தேர்தலுக்கு பிந்தைய நாட்களில் அ.தி.மு.க, தே.மு.தி.க உறவு எப்படி இருக்கும்?
- சுப்ரமணி
__________________________________________
கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி – பதில் !அன்புள்ள சுப்ரமணி,
அலைக்கற்றை ஊழல் வழக்கு ஏன் இப்போது நடக்கிறது, அந்த ஒதுக்கீடு நடந்த வருடங்களில் ஏன் நடக்கவில்லை என்பதை பரிசீலித்துப் பார்த்தால் இது குறித்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம். இந்த ஒதுக்கீடு குறித்த முடிவுகளில் ராசாவுக்கு மட்டுமல்ல, காங்கிரசு அரசுக்கும், ஏன் அதற்கு முன் இருந்த பா.ஜ.க அரசுக்கும் பங்குண்டு. இரண்டு கட்சிகளும் இதனால் ஆதாயம் அடைந்திருக்கின்றன. கூடவே நிறைய முதலாளிகளும். அதனால்தான் அப்போது இந்த ஊழல் குறித்து ஏதுவும் நடக்கவில்லை.
ஆனால் பின்னர் பொதுநல வழக்கு காரணமாக உச்சநீதிமன்றம் இதில் தற்செயலாக தலையிட்டதின் மூலமே தற்போதைய விசாரணை நடந்து வருகிறது. மன்மோகன் அரசு விரும்பும் வகையில் செயல்படும் சி.பி.ஐ வேறு வழியின்றி நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் ஏதாவது விசாரித்து காட்ட வேண்டியிருக்கிறது. மேலும் இதைத் தொடர்ந்து செய்யும் போது ஊழல் வழக்கு ஆழமும், அகலமும் கொண்டதாக விரிந்து செல்கிறது. இதுதான் ஆளும் காங்கிரசு கூட்டணி அரசுக்கு உள்ள பிரச்சினை.
டெக்னிக்கலாக ராசாதான் அவர் மட்டும்தான் இதைச் செய்தார் என்று காட்ட முயன்றாலும் அது அப்படி மட்டும் காட்டிவிட முடியாது. இப்படித்தான் சில நிறுவன அதிகாரிகள், மற்றும்  கனிமொழி வரைக்கும் கைதுகள் சென்றுள்ளது. ஆகவே இந்த குழி அவர்கள் விரும்பாமலேயே உருவாகிவிட்டது. முடிந்த வரைக்கும் ஒரு சிலரை மட்டும் தள்ளிவிட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகலாம் என்றுதான் அவர்கள் முயல்கிறார்கள்.
தற்போது தயாநிதிமாறனும் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் அரசியல்வாதிகள், தனியார் நிறுவன அதிகாரிகள் மட்டும் மாட்டிக் கொண்டுள்ள நிலையில் தற்போது ஒரு முதலாளியே மாட்டிக் கொண்டுள்ளார். மாறன் சகோதரர்கள் அரசியல் செல்வாக்கு காரணமாக டாடா, சிவசங்கரன் போன்ற முதலாளிகளோடு வணிக நலன் காரணமாக மோதியது வெளியே வந்திருக்கிறது.
இப்படி முதலாளிகளுக்கிடையே ஏற்படும் பகிரங்கமாக போட்டி, மோதல் காரணமாக மேலும் சில விவரங்கள், ஊழல்கள் வெளிவரலாம். இதவரை ராடியா டேப் உள்ளிட்டு பல விவரங்கள் வெளியே வருவதற்கே முதலாளிகளிடையே உள்ள முரண்பாடுதான்.
கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அடிபடும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம் மத்திய அமைச்சர் சரத்பவாருக்குச் சொந்தமானது என்பது மும்பையில் உள்ள அனைவருக்கும் தெரியுமென்று நீரா ராடியாவே கூறியிருக்கிறார். ஆனாலும் இதுவரை சரத்பவார் சி.பி.ஐ வளையத்தில் பிடிபடவில்லை. அப்படி சரத்பவார் மாட்டினால் வரிசையாக பெரிய தலைகள் காத்திருக்கின்றன.
அதே நேரம் ஒட்டுமொத்தமாக தனியார் மயத்திற்கு ஆதரவாக அலைக்கற்றை விவகாரம் இருப்பதால் முதலாளிகளும் இதை எந்த அளவுக்கு கொண்டு செல்வார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் தி.மு.க, காங்கிரசு உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகளுக்கு இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் விருப்பம். இல்லையேல் இந்த வழக்கு நேரடியாக முதலாளிகளை குறி வைத்து சென்றுவிடக் கூடும். பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று…
********
தே.மு.தி.க, அ.தி.மு.க உறவு குறித்து…..
கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி – பதில் !தேர்தலுக்கு பின் என்ன, தேர்தலுக்கு முன்பேயே இந்த இரு கட்சிகளுக்கும் நல்ல உறவு இருக்கவில்லை. அதற்கான வாய்ப்புமில்லை. தங்களது சொந்த இமேஜின் மூலமே தத்தமது கட்சிகள் நடப்பதாக எண்ணிக் கொண்ட இரு சுயநல யானைகள் எப்படி சேர்ந்து இயங்க முடியும்?
தி.மு.க அரசின் மீதான மக்கள் வெறுப்பை அறுவடை செய்வதற்காகத்தான் இருவரும் சந்தர்ப்பவாதமாக உறவு கொண்டார்கள். அதுவும் துக்ளக் சோ போன்ற அதிகாரத் தரகர்கள் இதற்காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார்கள். தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தின் போதே இருவரும் தனித்தனியாகவே செயல்பட்டார்கள். கோவையில் நடந்த அ.தி.மு.க அணி கூட்டத்திற்கு கூட விஜயகாந்த் வரவில்லை. பின்னர் அ.தி.மு.க வெற்றி பெற்ற பிறகும் அழைப்பு வந்தால் பதவியேற்பு விழாவிற்கு செல்வோமென பட்டும்படாமலும்தான் விஜயகாந்த் கூறினார்.
விஜயகாந்த் செல்வாக்கு அடைவதை ஜெயலலிதா விரும்பமாட்டார். அந்த வகையில் தேர்தலின் போது வடிவேலு செய்த பிரச்சாரத்தை கருணாநிதியைக் காட்டிலும் ஜெயாவே மிகவும் விரும்பியிருப்பார். அது போல விஜயகாந்தும் அ.தி.மு.க கூட மிகவும் நெருக்கமாக இருந்தால் தனது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று இடைவெளி விட்டுத்தான் செயல்படுவார். ஆனால் இவர் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் தே.மு.க.தி.க என்ற கட்சி ஆட்சியைப் பிடிக்குமளவு செல்வாக்கை அடையப்போவதில்லை. கூட்டணி பலத்தின் மூலமே அவர்களுக்கு இப்போதைய எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் தனிஆவர்த்தனம் செய்வது இனிமேலும் அர்த்தமுள்ளதாக இருக்காது. எனினும் விஜயகாந்தைப் பொறுத்தவரை கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க காலியாகும், அ.தி.மு.கவிற்கு போட்டியாக தான் வந்துவிடலாம் என்று ஒரு கணக்கை நிச்சயம் போட்டிருப்பார். அப்படி நடந்தால் அடுத்த முதலமைச்சர் தான்தான் என்று கூட அவர் கனவு காணலாம்.
தற்செயலான சில அரசியல் நிகழ்வுகள் மூலம் ஒரு விபத்து போலத்தான் ஜெயாவும், விஜயகாந்தும் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.   இரண்டு கட்சிகளுமே ஊழல் பெருச்சாளிகள் நிறைந்தவைதான். இந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டும்  கூட்டணி வைத்திருக்கவில்லை என்றால் இதுவே அவருக்கு மங்களம் பாடப்பட்ட கடைசி தேர்தலாக இருந்திருக்கும். கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டே கருணாநிதி அரசு எதிர்ப்பு அலை காரணமாக மூன்றாம் முறையாக முதலமைச்சாராகும் வாய்ப்பை பெற்றவர் ஜெயலலிதா.
குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் மக்களிடையே தோன்றுகின்ற அபிப்ராயங்களெல்லாம் வேறு வழியின்றி இத்தகைய கோமாளி பாசிஸ்ட்டுகளை பதவிக்கு கொண்டு வந்துவிடுகின்றன. எது எப்படியோ இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் எக்காலத்திலும் ஒருவருக்கொருவர் பணிந்து போகப்போவதில்லை. அரசியல் உலகில் உண்மையான மாற்று உருவாகாத நிலைமையில் நாமும் இத்தகைய அபத்தங்களை சகித்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.
கடைசியாக இந்த ‘கேப்டன்’ இதுவரை சரக்கு அடிக்காமலேயே சட்டமன்றம் சென்று வருவதை அவரது கட்சிக்காரர்களே வியப்பாக பார்க்கிறார்களாம். இதுதான் தே.மு.தி.கவின் தற்போதைய சாதனை!
நன்றி.

சி.பி.எம்மின் பச்சைத் துரோகம்.சமச்சீர் கல்வி ஒழிப்பை சட்டசபையில்


மார்க்சிஸ்டுகள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளிகளுக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று ‘அம்மா’வையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் என்பதுதான் புது விசயம்.
அதான் 'ஏற்கனவே' சொல்லியாச்சே >மார்க்சிஸ்டு’கள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளி வர்க்கத்துக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று அம்மாவையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் மார்க்சிஸ்டுகள் என்பதுதான் புது விசயம்.
சென்ற 8.6.2011 தினமணியை எடுத்துப் பாருங்கள்.
சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் என்ற பெயரில் அதனை ஒழிப்பதற்கு அம்மா கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து சட்டமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், “சமச்சீர் கல்வி குறித்து ஆராய்ந்த முத்துக்குமரன் குழு 110 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளித்த்து. ஆனால் அதில 3,4 திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அரைகுறைக் கல்வியாக சமச்சீர் கல்வித்திட்டத்தை நிறைவேற்றினார்கள்… இந்தச் சூழ்நிலையில் சமச்சீர் கல்வித்திட்டத்துக்கான திருத்த மசோதாவை பேரவையில் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ ஆறுமுகம், “இந்த சட்டமுன்வடிவு சமூகநீதிக்கான சட்ட முன்வடிவாகும்” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். (தினமணி, 8.6.2011 பக்கம் 9)
அதே 8 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சியைச் சார்ந்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் “சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி” சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். (தினமணி பக்கம் 6)
அதன் பின் 10 ஆம் தேதியன்று மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.
உடனே 11 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சி செயலர் இராமகிருஷ்ணன் ஒரு அறிக்கை விடுகிறார்.
“சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப்பாடத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும், பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சியும் ஏற்கனவே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது. இதையே கல்வியாளர்களும் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர். எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது”
இது எப்படி இருக்கு? அதாவது பொதுப்பாடத்திட்டத்தை நிறுத்துவதற்கும், அச்சிட்ட நூல்களை முடக்குவதற்கும் எதிராக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்தைத்தான் மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியிருந்ததாம். மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தி வரும் இந்தக் கருத்தைத்தான் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துகிறார்களாம்.
ஏற்கெனவே என்றால் எந்த ஏற்கெனவே? 11 ஆம் தேதிக்கு முன்னால் உள்ள “ஏற்கெனவே” என்பது 7 ஆம் தேதி. அதற்கும் முந்தைய “ஏற்கெனவே” என்பது திமுக ஆட்சிக்காலம்.
ஏற்கெனவே திமுக ஆட்சியின் போது சமச்சீர் கல்வி சட்டத்தை மார்க்சிஸ்டு கட்சி ஆதரித்தது உண்மை. இதுதான் “முதலாவது ஏற்கெனவே”.
இந்த மாதம் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் சமச்சீர் கல்வி ஒழிப்பு மசோதாவை “சமூக நீதிக்கான சட்டமுன்வடிவு” என்று கூறி ஆதரித்ததும் உண்மை. இது “இரண்டாவது ஏற்கெனவே”.
இதில் எந்த “ஏற்கெனவே” பற்றி குறிப்பிடுகிறது மார்க்சிஸ்டு கட்சி என்று நமக்குப் புரியவில்லை. ஆனால் வேறொரு விசயம் புரிகிறது. சமச்சீர் கல்வியை ஆதரிப்பவர்களும் சரி – எதிர்ப்பவர்களும் சரி, யாராயிருந்தாலும் மார்க்சிஸ்டு கட்சி “ஏற்கெனவே” வலியுறுத்திய கொள்கையைத்தான் பின்பற்றியாகவேண்டும்.
இராமகிருஷ்ணனின் கூற்றுப்படி, சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டுவந்த கருணாநிதியாகட்டும், அதனை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கும் புரட்சித்தலைவியாகட்டும், இரண்டு பேருமே மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கொள்கை முடிவைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள்.
மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக கருணாநிதியோ, ஜெயலலிதாவோ மேற்படி முடிவுகளை எடுத்திருக்கலாம். மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கை முடிவுகளை திருடி முன்தேதியிட்டு அறிவித்து விட்டார்கள் என்றுதான் இதனைப் புரிந்து கொள்ளவேண்டுமேயன்றி, நேற்று கருணாநிதிக்கும், இன்று ஜெயாவுக்கும் காவடி எடுப்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
ஆகவே, “திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விச் சட்டதை ஆதரித்து அன்று மார்க்சிஸ்டு கட்சி எடுத்த முடிவும், பின்னர் 7 ஆம் தேதியன்று சமச்சீர் கல்வியை ஒழிக்க ஜெ அரசு கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த முடிவும், 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் தற்போது எடுத்திருக்கும் முடிவும், நாளை உச்ச நீதிமன்றத்தீர்ப்புக்குப் பின் கட்சி எடுக்கவிருக்கும் முடிவும், மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முடிவுகளே” என்பதை மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இந்த முடிவுகள் எதையும் கருணாநிதி, ஜெயலலிதா அல்லது சிவபெருமான் உள்ளிட்ட யாரும் தோழர் இராமகிருஷ்ணனுக்கு மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கவில்லை என்பதையும் மாநில செயற்குழு அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறது.
மேலும், “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு” என்று கூறும் சிவபெருமானின் கவிதையும், “இல்லை” என்று கூறும் நக்கீரனின் தீர்ப்பும் இது தொடர்பாக மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தையே வழிமொழிகின்றன என்பதையும் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவினர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
டெய்ல் பீஸ்:
சட்டமன்றத்தில் மசோதாவை வரவேற்று விட்டு, வெளியே வந்து எதிர்ப்பதாகப் பேசும் மார்க்சிஸ்டுகளின் நாடகம் புரட்சித்தலைவிக்குப் புரியாமல் போனதெப்படி? இது பற்றி அம்மாவிடம் எடுத்துச்சொல்ல உளவுத்துறை தவறிவிட்டதா? கடமை தவறும் காவல்துறையை தினமணி கூட கவனிக்கவில்லையா?
புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற சுத்தி அரிவாள் சின்னத்தில் நின்று 9 சீட்டுகளை வென்று, இன்று அம்மாவின் முதுகிலேயே குத்தும் இந்த பச்சைத்துரோகத்தைப் பற்றி அன்பு சகோதரர் “தோழர் தா.பா புரட்சித்தலைவியிடம் உரிய முறையில் போட்டுக் கொடுத்தால், அடுத்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த தேர்தலில் மார்க்சிஸ்டுகளைக் காட்டிலும் ஒரு தொகுதியாவது அதிகம் வாங்கலாமே! தா.பா கவனிப்பாரா?
பின்குறிப்பு: சமச்சீர் கல்வி ஒழிப்பை சட்டசபையில் ஆதரித்து வாக்களித்திருக்கும் சி.பி.எம்மின் பச்சைத் துரோகம் குறித்து பதிவுலகில் இருக்கும்  சி.பி.எம் தோழர்கள் பதில் சொல்ல வேண்டும். தங்கள் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.  செய்வார்களா?

தூத்துக்குடியை வளப்படுத்தும் கொழும்பு கப்பல் சர்வீஸ்

தூத்துக்குடியில் இருந்து, கொழும்புக்கு பயணிகள் கப்பல் சர்வீஸ் துவக்கப்பட்டிருக்கிறது. கடந்த 104 ஆண்டுகளுக்குப் பின் துவங்கப்பட்ட இந்த சர்வீஸ், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., கண்ட கனவை மெய்பிக்கும் நல்ல பணி. முதல் பயணிகள் கப்பலாக, "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல் பயணித்ததை, மக்கள் ஆர்வமுடன் வரவேற்றுள்ளனர். விமானச் சேவையை விட குறைந்த கட்டணம் கொண்ட இந்த பயணிகள் கப்பல் சேவையை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் வாசன் துவக்கி வைத்திருக்கிறார்.

இன்று இலங்கை - இந்திய உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதல், அங்கு தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றங்கள் பெரிதாக உருவெடுத்திருப்பதால், இந்த கப்பல் சேவை தேவையே இல்லை என, சில கட்சிகள் கூறுகின்றன. ஆனால், இன்றைய உலகச் சூழலில் அண்டை நாடுகள் என்பதை, நாம் நிர்ணயிப்பது இல்லை. பூகோள ரீதியாக ஏற்படும் இயற்கை அமைப்பாகும். பாகிஸ்தானுடன் பயணிகள் போக்குவரத்தும், ஓரளவு வர்த்தகப் பரிமாற்றமும் இன்னமும் நடக்கிறது. சீனா - இந்தியா எல்லையில் லாசா பகுதியில், வர்த்தகப் பரிமாற்றம் நடக்கிறது. ஏனெனில், "சார்க்' நாடுகள் வர்த்தகப் பரிமாற்ற அடிப்படையில், இந்தியா தனது சிறப்புத் தன்மையை விட்டுக் கொடுக்க முடியாது. அதையும் விட, தூத்துக்குடி துறைமுகம் அதிக அளவில் வர்த்தகம் கையாளும் துறைமுகமாக மாறிய பின், அங்கு பொருளாதாரப் புழக்கம் அதிகரித்திருக்கிறது. அதற்கு கொழும்பு - தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து சர்வீஸ் நிச்சயம் அதிக மதிப்பைத் தரும். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வர்த்தகம் விரிவடைய, இந்த சர்வீஸ் அதிக உதவி புரியும். இனி நாட்கள் செல்ல செல்ல அதிக அளவில் சுற்றுலா செல்பவர்கள், சிறிய வர்த்தகர்கள் இந்த சர்வீசைப் பயன்படுத்துவர். இலங்கைக்கு தேவைப்படும் ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவைகளை, அதிக அளவில் இனி இங்கிருந்து அனுப்ப, இந்த கப்பல் சர்வீஸ் பயன்படுத்தப்படும்.

மேற்கு மாவட்டத்தில் உள்ள, சிறிய குறு தொழிலதிபர்கள், இந்த சேவையை அதிகம் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே தூத்துக்குடி முக்கிய வர்த்தகக் கேந்திரமாக மாறி வருகிறது. இதனால், வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும். அங்கு தற்போது நடைபெறும் குற்ற எண்ணிக்கைகள் கூட குறையலாம். இந்த கப்பல் சர்வீஸ் மூலம், இந்தியாவின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கப்பல் விட, மத்திய அரசு அதிகம் சிந்திக்க, இது முன்னோடியாகும். அதே சமயம், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் அல்லது கடத்தலில் ஈடுபடுவோர் அபாயம் ஏற்படும் என்பது, இந்த சர்வீசை முடக்கும் செயலாகும். விமான சர்வீஸ் வளர்ந்துவிட்டது. அதில் அதிகம் குற்றச் செயல்கள் நடப்பதை, செய்திகள் காட்டுகின்றன. இந்த கப்பல் சர்வீசில், ஏன் உரிய நடைமுறைகள் மூலம், அம்மாதிரி தவறுகளைத் தடுக்க முடியாது? அதைத் தடுக்க, நவீன சட்ட திட்ட நடைமுறைகள் இருக்கும் போது ஏன் வீண் பீதி. உலகம் முழுவதும் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு வசதியாக, பல்வேறு போக்குவரத்து வசதிகளை முறைப்படுத்தும் போது, இந்தக் கப்பல் சர்வீஸ், எதிர்காலத்தில் தென் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் அதிக உதவி புரியும்.

தென் மாவட்டங்களில் தொழில் துறை அதிகம் வளராத நிலையில், இந்த கப்பல் சர்வீசையும் இனி நிறுத்திவிட்டால், அது வளர்ச்சியின் அறிகுறியாக அமையாது என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது. கால வளர்ச்சிக்கு ஏற்ப, நவீன உத்திகளும், வசதிகளையும் மக்களுக்கு தராமல் தடுப்பது, இப்பகுதியில் வேலைவாய்ப்பை குறைக்கும் செயலாகும். இந்த கப்பல் சர்வீசால் தூத்துக்குடிக்கு, அதிக பொருளாதார முக்கியத்துவம் கிடைக்கும் என்பதையும் ஒதுக்கிவிட முடியாது.

- நமது சிறப்பு நிருபர் -
Pamaran A - chennai,இந்தியா
2011-06-17 07:01:54 IST Report Abuse
வேலை வாய்ப்பு இன்றி, தொழில்கள் எதுவும் இன்றி சென்னை-யிலும் பெங்களூரில்லும் வந்து படும் கஷ்டம் தென் மாவட்ட மக்களுக்கு தான் தெரியும். கப்பல் சேவையை எதிர்த்து கருத்து எழுது பவர்கள் பாதி பேர் இலங்கை தமிழர்கள் அல்லது வைகோ கட்சி காரர்கள் 
Rayen - Singapore,சிங்கப்பூர்
2011-06-17 06:37:48 IST Report Abuse
இந்த கப்பல் சேவையால் தூத்துக்குடி மற்றும் அதன் பக்கத்துக்கு மாவட்டங்கள் கண்டிப்பாக பயன் அடையும்.சில மேதாவிகள் பேசுவதுபோல் நாளையே தூதுகுடிகாரன் எல்லாம் பணக்காரன் ஆகி விடுவானா என்பது விதண்டா வாதம்.சேது சமுத்திர திட்டத்தில் மண்ணை அள்ளி போட்ட ஜெயாவை மன்னித்து தூத்துக்குடி மற்றும் அதன் பக்கத்துக்கு மாவட்ட மக்கள் இந்த தேர்தலில் மு க எதிர்ப்பு அலையால் ஓட்டளிதுள்ளர்கள்.வீண் பிடிவாதம் பிடித்தால் அம்மாவுக்கு தென் தமிழகத்தில் பெரும் நஷ்டம் தான் வந்து சேரும் என்பது உறுதி, தூக்கி வைத்த மக்களுக்கு தூக்கி வீசவும் தெரியும்.அது என்ன பயத்தினாலோ அம்மாவுக்கு காம்றேட்களும் விஜயகாந்தும் பல்லக்கு தூக்கி அம்மா செய்யும் அநியாயங்களை தட்டி கேட்காமல் இருக்கிறார்கள்.இப்படி வாயில் கொழுக்கட்டையை வைத்து மௌனமாக இருக்க மக்கள் உங்களுக்கு ஒட்டு போடவில்லை.
rakesh - singapore,சிங்கப்பூர்
2011-06-17 02:57:05 IST Report Abuse
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தென் மாவட்ட பயணிகளுக்கு சிறந்த திட்டமாகும்.தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்று விமானம் மூலம் கொழும்பு செல்வதை விட கப்பல் மூலம் 14 மணி நேரத்தில் சென்று விட முடியும்.இந்த போக்குவரத்தால் தூத்துக்குடி துறைமுகம் நன்கு முன்னேறும்.வேலை வாய்ப்பும் பெருகும்.இதை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பது அவசியம் அல்ல...!!!
 
Srini Katchi - chennai,இந்தியா
2011-06-17 07:05:54 IST Report Abuse
தேவை இல்லை தூத்துக்குடியில் இருந்து வேறு நாடுகளுக்கு விடட்டும், இன்னும் நூறு நாடுகள் இருக்கின்றன, பிலிப்பைன்சசுக்கு விடட்டும், சிங்கபூருக்கு விடட்டும், மலேயாவுக்கு இருக்கும் கப்பல் எண்ணிகையை அதிகரிக்கட்டும் இங்கு வேண்டாம்...
 
kunjumani - Chennai ,இந்தியா
2011-06-17 02:45:24 IST Report Abuse
கருணாநிதியின் அணைத்து நல திட்டங்களையும் அழித்து விட்டு இந்த ஜெயலலிதா இந்த கப்பல் போக்குவரத்தையும் எதிர்க்கிறாரே ? அவர் செய்வதெல்லாம் பாசிடிவான விஷயம் தட்டி கேட்டா அது நெகடிவான எதிர்மறையான விஷயம் இது எந்த ஊர் நியாயம் ?
S.S.JAHUFER SADIK - Jeddah,சவுதி அரேபியா
2011-06-17 00:33:01 IST Report Abuse
முன்பு இந்த கப்பல் சேவை தலைமன்னாருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற நேரம் தென்மாவட்டங்களில் இலங்கையோடு தொடர்புடைய வியாபாரம் செழித்தது. இங்குள்ளவர்கள் வியாபாரிகளாக திகழ்ந்தனர் .அங்கு கலவரம் ஆரம்பித்து அந்த சேவை நிறுத்தப்பட்டதும் அந்த வாணிபம் செய்த அனைவரும் அரேபியா நாடுகளில் தொழிலாளர்களாக வாழ்கையை மாற்றினார்கள்- இப்போது தொடங்கியிருப்பது நமக்கு ஒரு வரபிரசாதமே-சாதிக் -ஜிட்டாஹ்
 

இன்ஜினியரிங் கல்லூரிகள்: 65 ஆயிரம் சீட்கள் காலி. மூடப்படும் அபாயம்?

தமிழகத்தில் இந்த ஆண்டு, 65 ஆயிரம் இன்ஜினியரிங் சீட்களுக்கு மேல், காலியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைப் போலவே, இன்ஜினியரிங் கல்லூரிகளும் மூடல் அபாயத்தை நோக்கி முன்னேறுகின்றன.

மழைக்காலத்தில் முளைக்கும் காளான்கள் போல, தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. 2010-11ம் கல்வியாண்டு நிலவரப்படி, நாடு முழுவதும், 3,241 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில், தமிழகத்தில் மட்டும், 486 கல்லூரிகள், கட்டடம் கட்டி, மாணவர்களுக்காக காத்திருக்கின்றன. அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த இன்ஜினியரிங் கல்லூரிகளில், 15 சதவீதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. இருக்கிற கல்லூரிகளே, கட்டணம் கட்டுவதற்கு மாணவர்கள் இன்றி, ஈயோட்டிக் கொண்டிருக்கும் வேளையில், பெரிய தெரு பிள்ளையார் கோவில் பிரசாதம் மாதிரி, கேட்பவருக்கெல்லாம் புதிய கல்லூரி துவக்க அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஏ.ஐ.சி.டி.இ., இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்காக காத்திருக்கின்றன. இவற்றில், 18 புதிய கல்லூரிகளுக்கு, இந்த ஆண்டு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இப்படி, தினம் ஒரு கல்லூரி உருவாவதால், அவற்றின் தரம் கேள்விக்குறியாகிவிடுகிறது. அதனால் தான், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் தரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வந்தது. அதில், தரம் குறைந்த பல்கலைகளாக, யு.ஜி.சி.,யால் அடையாளம் காட்டப்பட்டவற்றில், தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது. அவர்களின் கணிப்புப்படி, 16 பல்கலைகள், தரத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், வெறுமனே கல்லா கட்டிக்கொண்டிருந்தவை. தமிழகத்தில் இப்போது, இரண்டு லட்சம் இன்ஜினியரிங் சீட்கள் இருக்கின்றன. ஆனால், இன்ஜினியரிங் சேர்பவர்களின் ஐந்தாண்டு சராசரியோ, வெறும், 97 ஆயிரம் தான். தொடர்ந்து நான்காண்டுகளாக, சராசரியாக, 20 ஆயிரம் சீட்கள் காலியாகக் கிடக்கின்றன. இது, அரசு ஒதுக்கீட்டு சீட்களின் எண்ணிக்கை தான். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைச் சேர்த்தால், காலியிடங்களில் எண்ணிக்கை, 50 ஆயிரத்தைத் தாண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதற்குப் பிறகும், இந்த நிலைமை மாறாதது தான். இன்னும் சொல்லப்போனால், மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட பிறகு, காலியான சீட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது. கடந்த, 2008-09ம் ஆண்டு, இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 931 பேர் சேர்ந்தனர். அதிர்ச்சி தரத்தக்க வகையில், 2009-10ம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 74 ஆகக் குறைந்தது. அந்த ஆண்டு மட்டும் மொத்தம், 52 ஆயிரத்து, 371 சீட்கள் காலியாக இருந்தன.

கடந்த ஆண்டு, 2 லட்சத்து, 4,541 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு, 2.20 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. ஆனால், திக்கித் திணறி ஒரு லட்சத்து, 70 ஆயிரம் விண்ணப்பங்களைத் தான் விற்க முடிந்தது. கடந்த ஆண்டை விட, 34 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக விற்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, நிச்சயமாக இந்த ஆண்டு, 65 ஆயிரம் சீட்கள் காற்றாடும் என எதிர்பார்க்கலாம். இதே மாதிரி தான், புற்றீசல்கள் போல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் துவக்கப்பட்டன. என்னமோ, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கெல்லாம், தங்கத் தாம்பாளத்தில் அரசு வேலை காத்திருப்பது போல, எஸ்.எஸ்.எல்.சி.,யிலும், பிளஸ் 2விலும் நல்ல நல்ல மதிப்பெண் பெற்றவரெல்லாம், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தனர்.

பயிற்சிக் கல்லூரிக்கான எந்தக் கட்டமைப்பும் இல்லாமல், வெறுமனே நான்கு சுவர்களை மட்டும் கட்டி, பிழைப்பு நடத்தியவர்கள் எல்லாம் உண்டு. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, அங்கே, இங்கே நான்கு கம்ப்யூட்டர்களைக் கடன் வாங்கி, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஆசிரியர் வேஷம் போட்டு, அதிகாரிகளைக் கவனித்து, அனுமதியைத் தொடர்ந்தவர்கள் ஏராளம். அவற்றின் நிலைமை, தற்போது பல்லிளித்துவிட்டது. 26 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் உரிமத்தை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை ரத்து செய்துவிட்டது. 54 கல்லூரிகள், "போதுமடா சாமி' என, தாங்களாகவே இழுத்து மூடிவிட்டன.தரம் குறைந்த நிறுவனங்களை அரசு அதிகாரிகள் அனுமதிப்பதும், எந்த முன்யோசனையும் இல்லாத மாணவர்கள், ஏதேனும் ஒரு, "டுபாக்கூர்' கல்லூரியில் சேர்ந்து, எதிர்காலத்தைத் தொலைப்பதும் தான், இதற்கெல்லாம் காரணம். கிடுக்கிப்பிடியை இறுக்காவிட்டால், இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் இதே கதி தான் ஏற்படும்.

- ஆர்.ரங்கராஜ் பாண்டே -
ravi - toronto,கனடா
2011-06-17 02:07:17 IST Report Abuse
இன்னும் நிறைய இன்ஜினிரிங் காலேஜ் வருவது மக்களுக்கு நல்லதுதான். அப்போதுதான் குறைந்த தொகையில், ஆர்ட்ஸ் காலேஜ் போல செலவில்லாமல் படிக்க இயலும். காலேஜ்களை மூடிவிட்டால், எஞ்சிய கல்லூரிகள், கட்டணத்தை உயர்த்திவிடும். வீட்டிற்கொரு ஒரு இன்ஜினியர் வந்தால் என்ன? தமிழகம் குறைந்தா போயிடும்? அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து நிறைய கம்பனிகள் தமிழகத்திற்கு வரும். இல்லையெனில் என்னை மாதிரி வெளிநாட்டிற்கு வந்து பிழைத்து கொள்ளலாம். வெறும் வரலாறு படித்து விட்டு குப்பை கொட்டமுடியாது. ஊருக்கொரு இன்ஜினியரிங் கல்லூரி அவசியம்.
Syran - khobar,சவுதி அரேபியா
2011-06-17 02:40:14 IST Report Abuse
"கேட்பவருக்கெல்லாம் புதிய கல்லூரி துவக்க அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஏ.ஐ.சி.டி.இ., இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்காக காத்திருக்கின்றன" - இது மிகவும் ஆபத்தான நிலைமை. தமிழ் நாட்டில் இத்தனை கல்லூரிகள் தேவையா? எல்லோரும் இன்ஜினியரிங் படித்து விட்டு பின்னர் வேலை வைப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லும்? 6௦,௦௦௦ காலி இடம் கல்லூரியில் சேர்த்துதானே பீஸ் வாங்குவார்கள்? நஷ்டம் படிப்பவர்களுக்குதான்! - syran

காவல்துறை அதிகாரி மாற்றம்: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் செயலா? கலைஞர் கேள்வி


ரகளை செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரி மாற்றம்: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் செயலா? கலைஞர் கேள்வி

ரகளையில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நியாயமாக நடவடிக்கை எடுத்ததற்காக காவல்துறை அதிகாரியை ஒரே நாளில் மாற்றுவதுதான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் செயலா என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலமே ஆகின்ற நிலையில், காவல்துறை விவகாரங்களில் ஆளுங்கட்சியினர் தலையிடும் சம்பவங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
சென்னையில் நள்ளிரவுக்கு மேல் ஓட்டலில் கூடி தகராறு செய்த அதிமுகவினரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது, ஒரு அமைச்சரும் ஆளும்கட்சியின் சட்டமன்ற உறப்பினரும் காவல் நிலையத்திற்கே சென்று அவர்களை விடுவித்த சம்பவம் ஏடுகளில் வந்துள்ளன.
அதிமுகவினர் மீது நியாயமான நடவடிக்கை எடுத்த அந்த காவல்துறை அதிகாரியை ஒரே நாளில் மாற்றம் செய்ததுதான் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் செயலா?. இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழைப் பேசாத தீவிர தமிழ்ப் பற்றாளர்கள் வாழும் மலாக்கா


மலாக்கா நீரிணையின் கேந்திர அமைவிடத்தில் மலேசிய அரசிற்குச் சொந்தமான மலாக்கா துறைமுகம் இருக்கிறது. கிழக்கு மேற்கு வாணிபம் காரணமாகப் 14ம் நூற்றாண்டில் மலாக்காத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. வரலாற்றாசிரியர்களின் பார்வையில் ஐரோப்பாவின் முன்னாள் வர்த்தக மையமான வெனிஸ் (Venice) நகருக்கு நிகரான முக்கியத்துவம் மலாக்காவுக்கு இருந்தது. (Malacca)


கலிங்க பட்டணத்தில் இருந்தும் பிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இருந்தும் பாய்க் கப்பல்கள் மூலம் மலாக்கா வந்த தமிழ் வாணிபர்கள் மலாக்கா செட்டி என்று அழைக்கப்பட்டார்கள். மலாய் மொழியில் செட்டி என்றால் வியாபாரிகள் என்று பொருள். நாட்டுக்கோட்டைச் செட்டிகள் வேறு இவர்கள் வேறு என்பதைக் கவனிக்க வேண்டும்.


சுமத்திரா தீவின் பலம்பாங்(Palembang) நகரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் இந்து இளவரசன் பரமேஸ்வரா 14ம் நூற்றாண்டில் மலாக்காவைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தான். இப்பகுதி மரமொன்றுக்குப் பெயர் மெலாக்கு. அதன் காரணமாக இந்தப் பகுதிக்கு அவன் மலாக்கா என்று பெயரிட்டான்.பரமேசுவராவின் பிரதம அமைச்சர், நிதி அமைச்சர், தளபதி ஆகியோர் தமிழர்களே. ஒரு மீன்பிடிக் கரையோரக் கிராமத்தைத் துறைமுகம் ஆக்கியவர்கள் அங்கு வாழ்ந்த தமிழர்களே. கல்வியிலும் வியாபாரத்திலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள். பரேமேஸ்வரா அவர்கள்உதவியோடு தனது ஆட்சியைப் பலப்படுத்தினான்.


திருமணம் செய்யும் நோக்கில் மன்னன் பரமேஸ்வரா 1414ல் சுமாத்திராவின் ஆச்சே (Acheh) நகருக்குச் சென்று அங்கே பாசாய் (Pasai) பகுதி முஸ்லிம் இளவரசியை மணந்தான். அத்தோடு முஸ்லிம் மதத்தைத் தழுவித் தனது பெயரைச் சுல்தான் இஸ்கந்தர் ஷா (Sultan Ikandar Shah) என்று மாற்றினான்.


மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்றபடி பலர் முஸ்லிம்களாக மதம் மாறினாலும் அரண்மனைத் தமிழர், வாணிபத் தமிழர், கப்பலோட்டிய தமிழர் இந்து மதத்தை கைவிடாமல் ஒழுகி வந்தனர். கஜபதி அம்மன் என்ற கோவிலையும் அமைத்து வழிபட்டனர். ஆனால் பலர் மலாய் மற்றும் சீனப் பெண்களை மணந்து புதிய கலப்பினத்தை உருவாக்கினார். தமிழ் நாட்டிலிருந்து மணப் பெண்கள் கொண்டுவரப்படாததே இதற்கு காரணம்.


அல்போன்சோ டி அல்பூகுவர்குவே (Alfonso) என்ற போத்துக்கீசிய கடற்படைத் தலைவன் மலாக்காவை 1511ல் கைப்பற்றினான். மலாக்காவில் போத்துக்கீசிய ஆட்சி 1641ல் டச்சுக்காரர்கள் வரும் வரை 130 வருடம் நிலைதத்து. சுல்தான்கள் ஆட்சி அத்தோடு முடிவுற்றது.


ஆனால் மலாக்கா செட்டிகளின் செல்வாக்கு மாத்திரம் குறையவில்லை. சிலர் கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். பெரும்பாலானோர் இந்து மதத்தில் நின்றனர். ஆனால் வேற்றினப் பெண்களை மணப்பதை மாத்திரம் நிறுத்தவில்லை. மலாய் மற்றும் சீனப் பெண்கள் செட்டிகளை விரும்பித் திருமணம் செய்து இந்து முறைப்படி வாழ்ந்தார்கள். தமிழ்ப் பண்பாட்டையும் கடைப்பிடித்தார்கள்.


டச்சுக்காரர் வருகையோடு மலாக்கா செட்டிகளின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டது. வாணிப முயற்சிகள் டச்சுக்காரர் கைகளுக்கு மாறின. மலாக்கா செட்டிகள் சிறு வியாபாரம் மற்றும் விவசாயத்தில் இறங்கினர். மலாக்கா செட்டிகள் இந்து மத அனுட்டானங்களில் தீவிரமாக இருந்ததை டச்சுக்காரர்கள் ஏற்றுக் கொண்டனர்.


மலாக்காவின் டச்சு கவர்னர் போர்ட் ( Bort) 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோவில் கட்ட வழங்கினார். 1781ம் ஆண்டின் அரசு கெசட் நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது, சிறீ பொய்யாத விநாயகர் மூர்த்தி என்ற பெயரில் கட்டப்பட்ட கோவில் இன்றும் விமரிசையாக எழுந்து நிற்கிறது. இந்தப் பிரதேசத்தில் கட்டப்பட்ட முதலாவது இந்துக் கோயில் என்ற சிறப்பு பொய்யாத விநாயகருக்கு உண்டு.


மலாக்கா செட்டிகள் ஏழு தலைமுறையைக் கடந்து விட்டார்கள். இந்து மதப் பற்றில் இறுக்கமாக இருக்கிறார்கள் சீன, மலாய்ப் பெண்களை இந்து முறைப்படி திருமணம் செய்கிறார்கள். தேவார திருவாசகங்களை ஆங்கிலம், சீன, மலாய் மொழிகளில் எழுதி நெக்குரிகிப் பாடுகிறார்கள். கலப்பின தமிழ் , சீன மலாய் இளைய தலைமுறையினர் திருநாள் பெருநாள்களில் தமிழர்களுடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, இறவுக்கை சேலை போன்றவற்றை அணிகிறார்கள்.


ஏழு தலைமுறையாக மொழியை இழந்த சோகம் மலாக்கா செட்டிச் சமூகத்தில் காணப்படுகிறது. 1824ல் மலாக்கா ஆங்கிலேயர்கள் வசமானபிறகு ஆங்கிலம் கற்றவர்கள் தமிழைக் கற்க மறந்து விட்டார்கள். 1957ல் மலேசியா சுதந்திரம் பெற்றது. அப்போதும் அவர்கள் தமிழைக் கற்கவில்லை.


யுனெஸ்கோ (Unesco) மலாக்காவை மனித குலத்தின் வரலாற்று இடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. ( World Heritage ) தாய் மொழி இழப்பின் சோகம் அதை அனுபவித்தவர்களுக்கு மாத்திரம் தெரியும். மலாக்கா செட்டிகள் அதிலிருந்து மீள முயற்சிக்கிறார்கள். இந்து மதத்தில் காட்டிய தீவிரத்தை இப்போது தமிழ் மொழியைப் படிப்பதில் காட்டத் தொடங்கிவிட்டார்கள்

வடமாகாண முதலமைச்சர் போட்டியிட அமைச்சர் டக்ளஸ் ஆர்வம்!


எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தான் போட்டியிட விரும்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜ.ம.சு.மு. அரச அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில் வடமாகாணசபைக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றுக்கு அமைய வடக்கும் கிழக்கும் மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டாலும் வடமாகாணத்திற்கு இதுவரை மாகாணசபையொன்று அமைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு 2008ம் ஆண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது.
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடனான இத் தேர்தலில் போட்டியிடுவீர்கள் எனக் கேட்டபோது அவர் ஆம் என பதிலளித்தார்.

இலங்கையில் இன உறவை சீரழிக்கும் சதியே சனல் – 4 காட்சி : இலங்கை அரசாங்கம்!

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சனல் – 4 இன் விவரண படம் முற்றிலும் பொய்யானதென இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் பணிப்புக்கமைய, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பாக அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத ஆயுதக் குழுவொன்றினால் பலாத்காரமாக பணயக் கைதிகளாக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் இதுவரைக்கும் உலகெங்கிலுமே நடைபெற்றிராத பாரிய மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வது நிச்சயமற்றதென்ற நிலையில் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மீட்கும் பணியில் இலங்கை இராணுவம் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதனால் இலங்கையின் கீர்த்தியும், புகழும் உலகம் முழுதும் வியாபித்தது.
இதைத் தாங்கிக்கொள்ள இயலாத புலிச் சார்பு ஊடகங்களே சனல் 4 விவரணப் படத்தில் இலங்கைக்கு எதிராக பாரிய புரளியை கிளப்பி விட்டுள்ளது. யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள இன உறவையும் புரிந்துணர்வையும் சீர்குலைத்து மீண்டும் இங்கு பிரிவினைவாதம் பயங்கரவாதத்தை தூண்டி அதனூடாக ஆதாயம் காண முயல்வோரின் கெட்ட வேலைகளே இவை. நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்க ஆணைக்குழு இதுவரைக்கும் இரு நூறுக்கும் மேலான மக்கள் சந்திப்புக்களை நடத்தியுள்ளது. எனினும் இலங்கை இராணுவத்துக் கெதிரான எந்த முறைப்பாடுகளும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு முன்வைக்கப்பட்டு அவை நிரூபணமானால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நல்லிணக்க ஆணைக்குழு தயாராகவுள்ளது- பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. சட்ட இறைமையுள்ள அரசொன்று செய்ய வேண்டிய பணிகளே இலங்கையின் கடைசி யுத்தத்தில் செய்யப்பட்டன.
சனல் – 4 விவரணப் படம் ஒளிபரப்பிய காட்சிகள் அனைத்தும் புலிகளின் தரப்பால் வழங்கப்பட்டவை. அதிநவீன தொழில்நுட்ப உதவிகள், புலிகளின் பண வசதிகளைக் கொண்டு நன்கு கச்சிதமாக சோடிக்கப்பட்டவை. சனல் 4 விவரணக் காட்சிகளின் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் பெரும்பாலான நாடுகள் இதை நம்பத் தயாராக இல்லை.
ஆனால் வெளிநாடுகளிலுள்ள சில புலிச் சார்பு குழுக்களே தங்களது சொந்த நலனுக்காக இதைத் தூக்கிப் பிடிக்கின்றன. இவ்விடயத்தில் இலங்கை அரசு அதீத அக்கறை செலுத்தி வருகின்றது.
பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழுகின்ற இன்றைய சூழலில் இவ்வாறான போலி விவரணக் காட்சிகள் அம்மக்களின் சந்தோஷம், சுதந்திரம் என்பவற்றை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்ற முயற்சியாகவே இதை மக்கள் கருதுவதாக அரசாங்கம் கருதுகின்றது.

தமிழக சட்டசபைத் தீர்மானங்களும் இலங்கை - இந்திய உறவும்

(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகையில் ஜூன் 13 ஆம் திகதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இது)
rajapaksha-4Jeyalalitha-1இந்திய - இலங்கை உறவு தொடர்பில் தமிழ்நாடு சட்டசபைக்கு வந்த இரண்டு தீர்மானங்கள் செய்தியில் அடிப்படுகின்றன. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முதலமைச்சரான ஜெயலலிதா, இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்தார். யுத்தக் குற்றம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மீள்குடியேற்றம் தொடர்பான தீர்மானம், சர்வதேச சமுதாயத்தின் தற்போதைய மனோநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. சர்வதேச அபிப்பிராயத்தின் மீது இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரின் அழுத்தத்தையும் காணமுடிகிறது. கச்சதீவு தொடர்பான தீர்மானம் கச்சதீவை மீளப்பெற வேண்டுமென இந்திய அரசாங்கத்தை கோரியது.
இரண்டு தீர்மானங்களும் இலங்கை, இந்திய உறவுடன் சம்பந்தப்பட்டவை. இந்த தீர்மானங்கள் தொடர்புடைய பிரச்சினைகளில் இரண்டு அரசாங்கங்களின் மீதும் அழுத்தங்களை கொடுக்கக் கூடியவை. அரசியல், அரசியல்வாதிகள், சர்வதேச சமுதாயம், புலம்பெயர்ந்தோர் என்பதற்கு அப்பால் இனப்பிரச்சினை, மீனவர்களின் உயிர், அவர்களின் வாழ்வாதாரம் என்பன தமிழ்நாட்டில் உடனடி தீர்வை வேண்டி நிற்பவையாகவும் நீண்ட கால கவனம் தேவையானவையாவும் உள்ளன.
இலங்கையிலும் இரு நாடுகளுக்கும் பொதுவான கடற்பிரதேசத்திலும் சமாதானம் தேவையென தமிழ்நாடு கருதுகின்றது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த அக்கறையே இரண்டு தீர்மானங்களினதும் அடிநாதமாக உள்ளது. இதற்கான பெருமையை ஜெயலலிதா கோரமுடியுமாயின், அவர் அதற்கு பின் நிற்கப்போவதில்லை.
இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களும் (ஜி.எல்.பீரிஸ் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணா) புது டில்லியில் சந்தித்த போது வெளியிட்ட கூட்டறிக்கை மீதான வெளிப்படையான அரசியல் மற்றும் ஊடக விமர்சனங்கள் குறிப்பிட்ட ஒரு மனோநிலையை பிரதிபலிக்கின்றன. இலங்கையில் இந்த நிலை காணப்படுமாயின் இதே மனோநிலையை தமிழ் நாட்டிலும் காணலாம். தமிழ்நாடு சட்டமன்றின் தீர்மானங்கள் இலங்கையின் எந்தவொரு மனோநிலைக்கும் எதிர்நடவடிக்கையாக அமையவில்லை.
இனப்பிரச்சினை மீதான தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தின் அடிநாதமாக இலங்கையிலுள்ள இலங்கை தமிழர்களின் பாதுகாப்பும் முப்பது வருடாகால இன மோதலின்போது வாக்களிக்கப்பட்ட அரசியல் தீர்வும் உள்ளது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படுவது போலவே தமிழ்நாடு சட்டசபை தீர்மானமும் யுத்தக் குற்றங்களையும் அரசியல் தீர்வையும் பிணைக்கின்றது. கொழும்பும் சென்னையும், சென்னையும் புதுடில்லியும் இந்தப் பிரச்சினைகளை வித்தியாசமாக காணக்கூடும். ஆனால் கவலைகள் யதார்த்தமானவை, பொதுவானவை.
1983 இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சேர்ந்த பின்னரே இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் அக்கறை முளைகொண்டது. அதற்கு முன் இந்தியா அக்கறைப்படவில்லை இனப்பிரச்சினையில் இந்தியாவின் ஈடுபாடு இந்தியாவின் ஆதிக்கப்போக்கு, இந்தியாவின் சுயநலம் என்பவை சார்ந்தவை எனக் கருதுவது பிழையானது. அது தமிழ்நாட்டில் காணப்படும் கவலைகள், தமிழ்நாடு பற்றிய கவலைகள் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது. கொழும்பு இதை புரிந்து கொள்ள வேண்டும்.
யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கையில் சில பகுதியினர், குறிப்பாக அதிகார மட்டத்தில் உள்ளவர்கள், மீனவர் பிரச்சினை தொடர்பில் இறைமை, ஆட்புல தொடர்ச்சி என்பவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். சிலர் இந்த வகையில் இலங்கை கடற்படையின் தலையீட்டை நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.
அவர்கள் இந்த நடவடிக்கைகள் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய கடற்புலிகளின் பயமுறுத்தலை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டவை எனவும் கூறுகின்றனர். இந்த நியாயத்தை சரியெனக் கொண்டால் ஏனைய நியாயங்களையும் ஏற்க வேண்டும். இதில் தமிழ் நாட்டில் காணப்படும் கவலைகளும் அடக்கப்பட வேண்டும்.
கச்சத்தீவு பிரச்சினை தற்போது புதுடில்லியின் உயர்நீதி மன்றத்தின் முன் உள்ளது. தீர்ப்பு எப்படி இருப்பினும் இலங்கையினால் இதற்கு எதிராக ஒன்றும் கூறமுடியாது. இருபக்க உறவுகள், சர்வதேச உறவுகள் பற்றிய விவாதங்கள் வேறு இடங்களில் சாத்தியமாகலாம். இலங்கையின் உயர் நீதிமன்றம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருபக்க ஒப்பந்ம் பற்றி குறிப்பிடாமலே வடக்கு, கிழக்கு பிரிவை கையாண்டுள்ளது. இலங்கையின் உயர் நீதிமன்றம் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈ. பிரச்சினையை தீர்;த்திருக்கலாம். ஆனால் அது அடிப்படையாக உள்ள பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இது புலம்பெயர்ந்தோர் பற்றியதல்ல. இது இலங்கையிலுள்ள, யுத்தத்துக்கு முகங்கொடுத்த, அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியது.
அபிப்பிராயங்கள் ஒரே மாதிரி இருக்கமாட்டா. இதற்கு இந்தியாவும் இலங்கையும் விதிவிலக்கல்ல. இன்னொரு உதாரணமாக இலங்கையில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் 'வெள்ளைக் கொடி' விவகாரத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப் கேணல் லோறன்ஸ் கூறிய கருத்து அவருடைய சொந்தக் கருத்து எனக் கூறி அமெரிக்க, அக்கருத்திலிருந்து விலகியுள்ளது.
வேறு ஒரு நாட்டில், இப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று மறுத்திருக்கலாம். அரசாங்கம் ஒன்றின் வௌ;வேறு துறைகளுக்கிடையிலும் வித்தியாசமான பார்வைகள் இருக்கமுடியும். இலங்கையில் யுத்தம் மும்முரமாக நடந்த சமயத்தில் அப்போது இராணுவ தளபதியாகியிருந்த சரத் பொன்சேகா, தமிழ் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரான சிங்கள பௌத்தர்களுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென கூறியிருந்தார்.
இலங்கையின் அரசியல் தலைமைப்பீடமும், இராஜதந்திர சேவையினரும் இதை மறுத்துரைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போதைய நிலையில், கண்ணாடி வீட்டில் வசிக்கும் இலங்கையும் இலங்கையரும் இந்தியாவை குறைகான முடியாது. அவர்கள் தமக்குள் காணப்படும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை கட்டுப்படுத்தவில்லை. என்ன பிரச்சினைகள் காணப்படினும் இந்த இரண்டு நாடுகளினதும் உள்நாட்டு அரசியல் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை அல்ல. உள்நாட்டு அரசியல் அவர்களின் வெளிவிகாரங்கள் மீது செல்வாக்கு செலுத்தக் கூடாது.
- தமிழ்மிரர்

வியாழன், 16 ஜூன், 2011

கல்வி முதலாளி ரஜனியின் ஜெயலலிதா புராணம்

தமிழக தனியார் கல்வி நிறுவனங்களும் அவற்றில் தமது பிள்ளைகளை படிப்பிக்கும் பணக்கார வர்க்கமும் சமசீர் கல்வியின் மிகப்பெரும் எதிரிகளாவர்.
குப்பன் சுப்பனின் பிள்ளைகளும் தமது பிள்ளைகளும் ஒரே விதமான படிப்பை படிப்பதா? பின் எமக்கு என்ன மரியாதை?
இக்கல்வி நிறுவனங்களின்  உரிமையாளர்கள் ஒரு புறம் எப்படியாவது திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று துடியாத் துடித்து அதில் இன்று பெருவெற்றி பெற்றும் விட்டனர். ஆனாலும் என்ன நீதிமன்றங்கள் சமசீர் கல்விக்கு ஆதரவான தீர்மானத்தை வழங்கி விட்டன.

பிரபல கல்வி நிறுவன முதலாளிகளான ரஜனி குடும்பமும் தெய்வங்களை எல்லாம் வேண்டி கலைஞர் அரசை வீழ்த்திவிட்டார்கள்.
ரஜனி ஜெயலலிதாவை பார்த்து தமிழகத்தை காப்பாற்றிவிட்டீர்கள் என்று கூறியது உண்மையில் தனது கல்வி நிறுவனங்களின் வருமானத்தை காப்பாற்றிவிட்டீர்கள் என்பதன் உட்பொருளே.
ரஜனி அண்ணே அவசரப்பட்டு விட்டீர்கள்.
தமிழகத்தில் அரிசியும் சத்துணவும் எப்படி நிரந்தரமாகி விட்டனவோ அப்படியே சமசீர் கல்வியும் தான் என்பதை வரலாறு உம்மைப்போன்ற பார்பனிய  மேட்டுக்குடிகளுக்கு இனி சொல்லும்.

ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமானின் 'கண்டுபிடிப்பு'

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததற்கு யார் காரணம்? இந்த கேள்விக்கு ஆளாளுக்கு ஒரு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

என்மீது மக்கள் கொண்ட நம்பிக்கைதான் அதிமுக ஜெயிக்கக் காரணம் என்று ஜெயலலிதா சொல்லிக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் நான்தான் காரணம் என்று சீமான் சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது மூன்றாவதாக இன்னொரு காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார் அதே சீமான். இந்த ஆட்சி மாற்றத்துக்குக் காரணமே விஜய்தான் என்கிறார் அதிரடியாக.

சென்னை பிவிஆர் சினிமாவில் நேற்று நடந்த ஒரு சினிமா விழாவில்தான் இந்த அரிய கண்டுபிடிப்பை அவர் சொன்னார்.

பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சல்மான்கானும் விஜய்யும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

சீமானும் விழாவில் பங்கேற்றார். அவர் மைக் பிடித்ததுமே, வந்திருந்தவர்கள் சீரியஸாக பேச்சை கேட்க ஆரம்பிக்க, அவரோ காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டார்.

சீமான் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே காரணமாக அமைந்தது," என்று கூற, கூட்டத்தில் சிரிப்பொலி. 
அய் அய் யோ சீமானுக்கு விஜயின் மீது ஏன் இந்த கோபம். தான் உண்டு தன் கல்லாப்பெட்டி உண்டு என்று இருந்த விஜயை சும்மா கொம்பு சீவி விடுகிறார். அம்மாவின் காதில் இது விழுந்தால் விஜய்க்கு ஏழரை ஆரம்பம்.

கடந்த தேர்தலின்போது, கடைசி வரை யாருக்கு தனது ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவிக்காதவர் விஜய். விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் மட்டும்தான் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்க உள்ளன. விஜய் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டார், ஆதரவாக அறிக்கையும் தரமாட்டார் என அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் இரு மாதங்களுக்கு முன் பிரஸ்மீட் வைத்து சொன்னது நினைவிருக்கலாம்.

தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகே சந்தித்தது நினைவிருக்கலாம்!

English summary
Naam Tamilar president and director Seeman told that actor Vijay is the predominant reason for the change in Tamil Nadu rule. He told this in a film's audion launch function held at PVR cinema, Chennai.

வக்கீல் சதீஷ்குமாரின் கொலைக்கு கண்டனம்.வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: வக்கீல் சதீஷ்குமாரின் கொலைக்கு கண்டனம்

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் சங்கர சுப்புவின் மகனும், பயிற்சி வக்கீலுமான சதீஷ் குமதார் கடந்த 7ஆம் தேதி திடீர் என்று காணாமல் போனார். அண்ணாநகர் (மேற்கு) தங்கம் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்களில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
கடந்த 13.06.2011 அன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் ஐசிஎப் ஏரி பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. பிரேத பிரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வக்கீல் சதீஷ்குமாரின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் இன்று ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சதீஷ் குமாரின் கொலைக்கு சங்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நேர்மையாக விரைவாக நடத்த கேட்டும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கேட்டும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் நீதிமன்ற புறக்கணிப்பால் ஐகோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டன. இந்த கோர்ட்டு புறக்கணிப்பில் பெண் வக்கீல்கள் சங்கமும் பங்கேற்றது.

திருமாவளவன்: EVKS இளங்கோவன் வார்த்தையை அளந்து பேச வேண்டும்

வரம்பு மீறி அளவுக்கு அதிமாக பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் வார்த்தையை அநளந்து பேச வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்துள்ளார்.

சிதம்பரம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக குறித்தும், திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் அளவுக்கு அதிகமாகப் பேசுகிறார். அவர் வார்த்தையை அளந்து பேச வேண்டும்.

திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டணி தொடர்கிறது. வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றார் அவர்.

திமுகவின் ஊழலால்தான் சட்டசபைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று கூறிய இளங்கோவன், கருணாநிதி முதலில் தனது மகளுக்கு அறிவுரை கூற வேண்டும். அவரது கூடா நட்பால்தான் இன்று கனிமொழி சிறையில் இருக்கிறார் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
English summary
VCK leader Thirumavalavan has condemned Former Minister EVKS Elangovan for blasting DMK and its leader Karunanidhi. He slammed Elangovan that, He is talking too much. He should stop his nonsesne speech.

அனைத்து விமானங்களும் வந்திறங்கும் வகையில் பலாலி விமான ஓடுபாதை

 இந்திய உதவி: இந்தியத் துணைத் தூதர்

இலங்கை-இந்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் வடபகுதியில் இந்திய அரசாங்கம் பாரிய அபிவித்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இதில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை அமைப்பு, பலாலி விமான தள அபிவிருத்திப் பணிகள் முக்கியமானவையென இந்தியத் துணைத் தூதரக உதவி ஸ்தானிகர் ரி.வி.மகாலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் புதிய விமானச் சீட்டு விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காங்கேசன்துறைமுகக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் பணி பூர்த்தியானதும் துறைமுக அபிவிருத்திப் பணி இடம்பெறும்.
பலாலி விமான நிலையத்தில் சகல சரக்கு விமானங்களும் வந்திறங்கிச் செல்ல வசதியாக 1500 மீற்றர் நீளமான விமான ஓடுபாதை அமைக்கப்பட்டு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. தாண்டிக்குளம் முதல் யாழ்ப்பாணம் வரை ஒரு கட்டமாகவும் யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரை இரண்டாம் கட்டமாகவும் ரயில் பாதை நிர்மாணம் ஆரம்பமாகவுள்ளது. ரயில் பாதை முழுவதும் கண்ணிவெடி அகற்றப்பட்ட பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் செல்வம் கொளிக்கும் துறை சுற்றுலாத்துறை. அந்த வகையில் வடபகுதியில் விரைவில் சுற்றுலா மையமாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கச்சத்தீவு முடிந்த பிரச்சினை - இணைந்து செயல்பட இலங்கை அரசு அனைத்து


இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக முதல்வருடன் இணைந்து செயல்பட விரும்புவதாக டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் நேற்று தெரிவித்தார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு மீண்டும் குடியேறுவதற்கான பணிகள் திருப்திகரமான முறையில் நடைபெறவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா டில்லியில் நிருபர்களிடம் கூறியிருந்தார்.

அதுதொடர்பாக இந்திய நிரூபர் ஒருவர் இலங்கைத் தூதரிடம் கேட்டதற்கு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வருடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது, என்றார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: தமிழக முதல்வர், தமிழக மக்கள் ஆகியோருடன் உள்ள நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் விதத்தில் நல்ல உறவை வைத்துக் கொள்ள இலங்கை அரசு ஆர்வத்துடன் இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் சந்தித்தபோது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தெரிவித்த கவலைகளை நீக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மிக நெருக்கமானது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அடிப்படையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண வரும் காலங்களில் தமிழக முதல்வருடன் இணைந்து செயல்படுவோம்.

கச்சத்தீவு பிரச்னை இரு நாடுகளுக்கும் இடையில் இறுதி செய்யப்பட்ட பிரச்சினை ஆகும். இறுதி செய்யப்பட்டுவிட்ட இப்பிரச்னை குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையம் மூலம் விசா வழங்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும். என்றார்

குடியிருப்பாளர் பதிவு என்பதில் உண்மையில்லை: குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவே வழமையான தகவல் திரட்டும் பணி

யாழ். குடாநாட்டில் ஆட்களை பதிவு செய்வதாக கூறப்படுவதில் எதுவித உண்மையுமில்லை என யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நேற்று தெரிவித்தார். குடாநாட்டில் குற்றச் செயல்களை தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து செயற்படுகின்றனர். இதன் ஒரு கட்டமாக குடாநாட் டிலுள்ள பொலிஸ் நிலையங்கள் தமது பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள வீடுகள் வர்த்தக நிலை யங்களின் விபரங்களை திரட்டு கிறது. இப்பகுதிக்குள் புதிய வர்களின் வரவு, இரவு நேர ஆள் நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபடும் நோக்குடனேயே இவ்வாறான தரவுகள் திரட்டப்படுகின்றன. பொலிஸ் நிலையங்கள் தமது பிரிவிலுள்ள அனைத்து வீடுகள், வர்த்தக நிலையங்களின் விபரங்களை திரட்டவில்லை. பதியவுமில்லை. இதனை வைத்துக் கொண்டு குடாநாட்டு மக்கள் அனைவரையும் பதியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. இதில் எதுவித உண்மையுமில்லை என்றும் மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க கூறினார். குடாநாட்டில் குற்றச் செயல்கள், சட்டவிரோத செயல்கள் அதிகரித்திருந்தன. இவற்றை தடுப்பதற்காக இராணுவத்தினரும், பொலிஸாரும் தொடர்ந்தும் எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளன. இரவு நேர ரோந்து சேவைகள் உட்பட பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளன என்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

நம்மூர் டிவி சீரியல் கில்லர்'களைப் பார்த்து மரணம், 'தற்கொலை' செய்து கொள்ளும்!.

 தொலைக்காட்சிகள் எல்லாம் இப்போது தொல்லைக்காட்சிகளாகி வருகின்றன. இது தெரிந்துதான் கடந்த நூற்றாண்டிலேயே தொலைக்காட்சிக்கு “இடியட் பாக்ஸ்” என்று பெயர் வைத்தார்களோ என்னவோ.

ஆனால் மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன்பு கதியாக கிடப்பவர்களை இளம் வயதிலேயே மரணம் நெருங்குவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கர்கள் முன்னிலை

அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் டிவி பார்ப்பதிலும் முன்னிலைதான். ஒரு நாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும், ஐரோப்பியர்கள் 3-லிருந்து 4 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இளம் வயதில் மரணம்

ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் சர்க்கரை வியாதி வரும் என்றும், 3 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் இதய அடைப்பு ஏற்படும் என்றும், அதிக நேரம் டிவி பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும் அமெரிக்காவின் “ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பக்ளிக் ஹெல்த்” என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சோம்பேறிகளுக்கு எச்சரிக்கை
இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுத்தச் சொல்வது மட்டுமில்லாமல், டிவி பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங்க் ஹு மற்றும் கிராண்ட்வெட் ஆகியோர் தெரிவித்தனர்.

1970-லிருந்து 2011 வரை டிவி பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் நிச்சயம், நம்மூர் டிவி நேயர்களை கண்டிப்பாக பாதிக்க வாய்ப்பில்லை. அதிலும், காலை 10 மணிக்கு டிவியை ஆன் செய்து விட்டு அரிவாள் மனையும், காய்கறிகள் சகிதமுமாக உட்கார்ந்து, டிவியில் வரும் நாடகங்களின் கேரக்டர்கள் கதறி அழுவதைப் பார்த்து தாங்களும் குமுறி அழுது புலம்பும் நம்மூர் சீரியல் ரசிகைகளை நிச்சயம் இது ஒன்றும் செய்ய முடியாது. மரணமே இந்த 'சீரியல் கில்லர்'களைப் பார்த்து மரணம், 'தற்கொலை' செய்து கொள்ளும்!.

English summary
Review of studies from the past 40 years shows television watchers have higher chances of diabetes, heart problems and early death. A meta-analysis by Harvard School of Public Health scientists, published in the Journal of the American Medical Association, showed that more than two hours television a day resulted in an increased risk of diabetes and heart disease, and three hours a higher risk of premature death

ரஜனி கலைஞரிடம் பேச்சு damage controlling முயற்சி

சென்னை: மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். தான் பூரண நலமடைந்துவிட்டதாக தெரிவித்த அவருக்கு, கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். மேலும் சில வழக்கமான சோதனைகள் இருப்பதால் சிங்கப்பூரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்தார்.அப்போது தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்காக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அடுத்து திமுக தலைவர் கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார். தமது உடல் நலம் குறித்தும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கலைஞரிடம் தொலைபேசியில் ரஜினிகாந்த் விவரித்தார்.

உடல்நலம் தேறி ரஜினி விரைவில் சென்னை திரும்ப மனமாற வாழ்த்துவதாகவும், மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் கருணாநிதி வாழ்த்தினார்.

அவருக்கு பதிலளித்த ரஜினி, "வாழ்க்கையில் நீங்கள் பார்க்காத ஏற்றத்தாழ்வுகள் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல், உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம்," என்றார் ரஜினி.
 
English summary
DMK president Karunanidhi wished Rajini for his speedy recovery and return to the homeland as soon as possible. When the actor spoke to Karunanidhi after discharged from the hospital, the veteran leader conveyed his wishes to him. 
 
ரஜனி கலைஞரிடம் பேச்சு damage controlling முயற்சி. தனது குடும்ப வியாபாரங்களுக்கு  சமசீர்கல்வி பெரும் சவாலானதால் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தவர், எதிர்காலத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது தனது கல்வி நிறுவனங்களுக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது அல்லவா? ஆட்சிகள் மாறலாம் வியாபாரம் முக்கியம். பண நாதா எங்கள் பார்பனிய குணநாதா. 

சமச்சீர் கல்வி, துக்ளக் சோ முதல் பார்ப்பன அறிவுத்துறையினர், முதலாளிகள், அதிகாரிகள்

மிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும்.  அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.
சுருக்கமாக இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு முடிவை மேற்கொள்ளும்போது அது மக்கள் நலனுக்கானதாக இருக்கும் என்றே கருதவேண்டும். அவ்வாறின்றி தமிழக அரசின் மசோதாவுக்கு நோக்கம் கற்பித்து முடக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே சமச்சீர் கல்வியை மேம்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்.
இதனை எதிர்த்து வாதாடிய பிரசாந்த் பூஷண் (மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில்), கிருஷ்ணமணி, ஹரீஷ் ஆகிய வழக்குரைஞர்கள் “மொத்தப் பாடங்களையும் முடக்கும் அளவுக்கு என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. NCERT மற்றும் NCFP ஆகிய அமைப்புகள் 2005 இல் கொடுத்த வழிகாட்டுதல் அடிப்படையில் துறைசார் வல்லுநர்கள், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, கருத்தறியப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் அளவுக்கு இதில் என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. 214 கோடி ரூபாய் வரிப்பணத்தை செலவு செய்து நூல்கள் தயாராக உள்ளன. இதனை நிறுத்திவிட்டு 2002 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தை அச்சிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது பிற்போக்கானது. உள்நோக்கம் கொண்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்த தனது 10.09.2010 தேதியிட்ட தீர்ப்பில், “அரசுகள் மாறும்போது, அவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தையும் பாடநூலையும் மாற்றுவதையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் பந்தாடுவதையும் இந்த நீதிமன்றம் அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. ஆனால் தற்போது தமிழக அரசு அதைத்தான் செய்கிறது” என்று வாதிட்டனர்.
“அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஏற்கெனவே சமச்சீர் பாடங்கள் அமலில் இருப்பதால் அது தொடரட்டும். மற்றவை குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து 3 வாரத்தில் உயர்நீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெறட்டும். பிள்ளைகள் 3 வாரம் விடுமுறையை அனுபவிக்கட்டும்” என்று தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள்.
சட்டத்துக்கோ நீதிக்கோ இந்தத் தீர்ப்பில் இடமிருக்கிறதா என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும். நீதிபதிகளுக்குப் பின்னால் ஒரு அரச மரமும் முன்னால் ரெண்டு பித்தளை செம்புகளும் இருந்ததா என்பதை டெல்லிக்கு நேரில் சென்றவர்கள் கூறவேண்டும்.
என்ன எழவோ ஒரு பாடத்திட்டம். என்னிக்கி இஸ்கூலு தொறப்பான், அதச்சொல்லுஎன்று கேட்பவர்களுக்கு எமது விளக்கம் பின்வருமாறு:
இத் தீர்ப்பின்படி 1,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே உள்ள சமச்சீர் பாடம்தான் என்பதால் பள்ளிக் கூடத்தை திறந்து அவர்களுக்கு மட்டும் வகுப்பு நடத்தலாம்.
மற்ற வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் பாடப்புத்தகத்துக்காக காத்திருக்க வேண்டும். 15 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பதும் திறக்காததும் புரட்சித்தலைவியின் விருப்பம். அல்லது நீதிபதிகள் போகிறபோக்கில் குறிப்பிட்டதைப் போல எல்லோருக்கும் 3 வாரம் லீவு விடலாம்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிபுணர் குழுவை தமிழக அரசு உடனே அமைத்துவிடும். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் சில கல்வியாளர்களையும் கொண்டு இக்குழு அமைக்கப்படும். இந்த நியமனமே பிரச்சினைக்குரியதாக இருப்பின் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.
“நீக்க விரும்பும் பாடங்களை அரசு நீக்கிக் கொள்ளலாம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்துவது என்று தமிழக அரசு முடிவெடுத்திருந்தால், செம்மொழி வாழ்த்து, சென்னை சங்கமம் முதலான தனக்கு விருப்பமில்லாத பக்கங்கள் அனைத்தையும் கிழித்து விட்டு வெறும் அட்டையை மட்டும் கூட மாணவர்களுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் அப்பீலுக்குப் போய் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு தேடிப் பெற்றிருக்கிறது. இனி, பாடத்திட்டத்திலிருந்து மழித்தல், நீட்டல் எதைச்செய்தாலும் இறுதியாக அதற்கு உயர்நீதி மன்றத்தின் அனுமதியை தமிழக அரசு பெற்றாக வேண்டும். ஆட்சேபங்கள் உயர்நீதி மன்றத்தில் குவிந்தால், வழக்கு முடிவதற்கு எத்தனை காலமாகும் என்று சொல்ல முடியாது.
பாபர் மசூதி வழக்கிலாவது புராணம், தொல்லியல், வரலாறு ஆகியவற்றுடன் பிரச்சினை முடிந்து விட்டது. இதில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களிலும் பிரச்சினை இருப்பதாக புரட்சித்தலைவியின் அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. எனவே இந்த வழக்குக்கு மட்டும் சிறப்பு நீதிமன்றம் போட்டு அன்றாடம் விசாரித்தாலும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி முடியும்வரை விசாரித்து முடியுமா என்று தெரியவில்லை.
ஒரு வேளை 3 வாரத்தில் கமிட்டி அறிக்கை கொடுத்து, ஒரு வாரத்தில் தடலடியாக நீதிமன்றம் விசாரித்து முடித்து விட்டாலும், இறுதியாக்கப்படும் பாடங்களை அச்சிடுவதற்கு 4 மாதங்களாவது தேவை. மொத்தத்தில் நவம்பர் மாதம் பள்ளிக்கூடம் திறக்கலாம். அல்லது வேறு ஏதாவது சதிகாரத் திட்டம் இந்த அரசின் மனதில் இருக்கக் கூடும்.
உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது யார்?
“பாடத்திட்டத்தை அரசு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும். 4 விதமான பாடத்திட்டங்கள் இனி கிடையாது. ஒரே பாடத்திட்டம்தான் என்று முடிவாகி விட்டதல்லவா? இது சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றிதானே!  அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்குக் கிடைத்த வெற்றி தானே என்று கேட்டார் ஒரு நண்பர்.
இல்லை. இதனை வெற்றி என்று கருதுவது மயக்கம். சரியாகச் சொன்னால் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பும், போராட்டத்தின் தேவையும் இப்போதுதான் முன்னைக்காட்டிலும் அதிகரித்திருக்கிறது.
ஏற்கெனவே கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தில் குறைகள் பல இருப்பினும், அது ஆசிரியர்கள், கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மாணவர்களுக்கு கற்பித்த அனுபவம் பெற்றவர்கள். துறை சார் அறிவு கொண்டவர்கள்.
தற்போது அதனை மறுபரிசீலனை செய்ய இருப்பவர்களில் பெரும்பான்மயினர் கல்வித்துறை அறிவோ அனுபவமோ இல்லாத அதிகார வர்க்கத்தினர். உயர் வர்க்கத்தை சேர்ந்த இவர்களது பிள்ளைகள் பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கோ முதலான மேட்டுக்குடிப் பள்ளிகளில் படிப்பவர்கள். எனவே அந்தப் பள்ளிகள் பின்பற்றும் பாடத்திட்டங்கள்தான் தரமானவை என்பதே இவர்களது கருத்தாக இருக்கும்.
சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கும் மசோதாவை அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும், ஐ.ஏ.எஸ் முதலான அனைத்திந்தியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை தமிழக மாணவர்களுக்கு வளர்க்கும் விதத்திலும் நமது பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றார் கல்வி அமைச்சர்.
துக்ளக் சோ முதல் பார்ப்பன அறிவுத்துறையினர், முதலாளிகள், அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் காலம் காலமாகக் கூறி வருவது இதைத்தான். அமெரிக்க ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை ஈடு செய்யும் விதத்திலும், அவர்களுக்கு தரமான ஊழியர்களை உருவாக்கிக் கொடுக்கும் விதத்திலும் நமது கல்வி அமைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். “”பிரவுன் சாகிப்புகளை”" உருவாக்குவது பற்றி மெக்காலே கேவலமான மொழியில் அன்று பச்சையாக கூறியதை, “உலகமயத்தின் சவால்” என்று ஜம்பமாக கூறுகிறார் கல்வி அமைச்சர்.
“ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி முடித்து வெளியே வருபவர்கள் 7 இலட்சம் பேர். இவர்களில் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அனைத்திந்திய தேர்வுகளுக்கு செல்பவர்கள் மொத்தம் 1000 பேர். இந்த 1000 பேரின் தேவைக்கு ஏற்ப 7 இலட்சம் பேரின் கல்வியை மாற்றியமைக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளரும் சமச்சீர் கல்விப் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினருமான எஸ்.எஸ்.இராசகோபாலன்.
நமது நாட்டின் தேவை, மக்களின் தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டோ, வரலாறு முதல் பண்பாடு வரையிலானவற்றைக் கற்பித்து மனிதனை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டோ கல்வியை அணுகாமல், தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏற்ப கல்வி மறுவார்ப்பு செய்யப்படுகிறது. இதயமில்லாத மனித எந்திரங்களை உருவாக்கும் அத்தகைய கல்வி முறையைத் திணிப்பதைத்தான் “மேம்படுத்துவது” என்று கூறுகிறார் கல்வி அமைச்சர்.
தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை ஜெ வுக்கு அளித்திருக்கிறது. புதிய பாடநூல்கள் அச்சிடுவதற்கு தாமதமாகும் என்ற பெயரில், “இப்போதைக்கு மெட்ரிக் பள்ளிகளின் தரமான பாடத்திட்டத்தையே வைத்துக்கொள்ளலாம்” என்று கூறி அவற்றைத் திணிப்பதற்கும், அவற்றையே மேம்படுத்தி அந்த திசையில் கல்வியை எடுத்துச் செல்வதற்குமான வாய்ப்பு அதிகம். உலகமயமாக்கலை முன்னேற்றம் என்று கருதுவோர், இந்தக் கல்வியையும் முன்னேற்றம் என்று கருத வாய்ப்புண்டு. அந்த வகையில் கடுமையானதொரு போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

: ஈரோடு கலெக்டர், தன் குழந்தையை, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

C Suresh - Charlotte,இந்தியா
2011-06-16 04:27:49 IST Report Abuse
நிஜமாகவே புலரிகிறது. எல்லா பெரிய மனிதர்களும் இது போல் நடந்து கொண்டால்., ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்வர், பள்ளிக்கு பராமரிப்பு ஒழுங்காக நாடாகும், ஆசிரியர்கள் தங்கள் தரத்தை உயர்த்தி கொள்வர், குழந்தைகளுக்கு கனிவு மேம்படும், பள்ளியில் பாதுகாப்பு வசதிகள் பெரிதாகபடும். பள்ளி உயர, ஊர் உயரும், ஊர் உயர மாநிலம் உயரும். அற்புதம்!!!
 
Nedunchezhian T - Mayiladuthurai,இந்தியா
2011-06-16 04:12:07 IST Report Abuse
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டின் மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல் பாராட்டுக்குரியது. அரசு பள்ளிகளைத் தாழ்வாக நினைக்கும் போக்கு நடுத்தர மக்களிடம் அதிகம் உள்ளது. அரசு பள்ளிகளில் சில வசதி மற்றும் சுகாதார குறைவுகள் உள்ளன என்பவை மறுக்கமுடியாதவைதான் என்றாலும் அவைகளைப் போக்கிக் கொள்ளமுடியும். கல்விக் கொள்ளையடிக்கும் மெட்ரிக், சிபிசிஎஸ் போன்ற பகட்டு நிறைந்த பள்ளிகளில் முதலில் தரமான ஆசிரியர்கள், கல்வியியலில் பட்டம் ஆசிரியர் இல்லை என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எல்லாருக்கும் முன்மாதிரியாகப் படித்தவர்கள் திகழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆட்சித்தலைவர் ஆனந்தகுமார் அவர்களை வாழ்த்துகிறோம். வழக்கம்போல் இந்தச் செய்தியைச் சிறப்பாக வெளியிட்ட தினமலருக்கு நல்வாழ்த்துகள். படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான்.....போவான்.......ஐய்யோன்னு போவான் என்று மகாகவி பாரதியார் கூறியது நினைவுக்கு வருகிறது.
Veluppillai Thanga - Toronto,கனடா
2011-06-16 03:31:45 IST Report Abuse
கனடாவில் தொடக்க பள்ளி தொடக்கம் பல்கலை வரை எல்லாமே அரச பள்ளிகள் தான். பிள்ளைகளை குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள தொடக்கப்பள்ளிக் கூடத்தில்தான் சேர்க்க வேண்டும். விரும்பிய பள்ளியில் சேர்க்க முடியாது. மழலைப் பள்ளிகளை மட்டும் தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. படிப்பதற்கு அதிசயமாக இருக்கிறதா? அதாவது ஒரு முதலாளித்துவ நாட்டில் சம சீர் கல்வியா என்று?
A.Sivakumar - New Jersey,யூ.எஸ்.ஏ
2011-06-16 01:00:21 IST Report Abuse
வாழ்த்துக்கள். “Collector’s daughter studying in govt. school” இதெல்லாம் இப்போ நியூஸ்சா வருதேன்னு பார்க்கும் போதுதான் கொஞ்சம் வருத்தம். 15 வருசத்துக்கு முன்னடி இது ஒரு மேட்டரே இல்ல. இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லைனு சொன்னது அவரோட தன்னடக்கத்தை காட்டுது. "ஆல் தி பெஸ்ட்"
 

காப்பாற்றப்பட்டது தமிழகம்: ஜெ.,க்கு நடிகர் ரஜினி பாராட்டு

சென்னை: "முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ள

மகா நடிகன் ரஜனி சமசீர்கல்வியின் மிகப்பெரிய எதிரி ஏனைய பார்பனர்கள் போலவே பார்பனராகி விட்ட ரஜனியும் தனது மேட்டுக்குடி சுபாவத்தை காட்டியுள்ளார்.  
ரஜனியின் மனைவி லதாவும் ஒய் ஜி மகேந்திரனின் மனைவி மதுவந்தியும் சகோதரிகள்.
பிரபல தனியார் பார்பன கல்விநிறுவனம் பத்மா சேஷாத்திரி பள்ளிக்கூடம் இவர்களது குடும்ப சொத்தாகும் லதா சகோதரிகளின் தாயார்தான் திருமதி பத்மா சேஷாத்திரி. கணவர் பிரபல ஒய் ஜி பார்த்தசாரதி.
இவர்களது இன்னுமொரு கல்வி நிறுவனமான ஆஷ்ரம் ரஜனியின் சொந்த பள்ளிகூடமாகும். இவை எல்லாம் மேட்டுக்குடிகளின் பள்ளிக்கூடங்களாகும்.
சமசீர்கல்வி என்பது இவர்களின் எதிர்கால வியாபாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டது.
இவர்கள் மனதிற்குள் புழுங்கிய புழுக்கம் தான் ரஜனி மக்கள் ஒரு மாற்றம் தேவை என்று எண்ணுகிறார்கள் என தேர்தலின் பொது ரசிகர்களுக்கு கோடி காட்டியதன் மர்மம் திமுகவினர் கூட அப்போது அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போதாவது  சுயமரியாதை பெரியார் பார்பனர்களை ஏன் மிகவும் மோசமாக வெறுத்தார் என்று புரிகிறதா?
தங்களது சுயநலத்திற்காக லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வியில் கைவைக்க துணிந்துவிட்டார்கள்.
இதில் பெரும் சோகம் என்னவென்றால், ரஜனி எதோ மகா ஞானியென்று குப்பனும் சுப்பனும் கூட இன்னும் நம்பிக்கொண்டு பாலாபிஷேகம்  என்று காவடி எடுக்கும் முட்டாள்தனம்.