சென்னை: வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததை
கண்டித்து அதிமுக திருவள்ளூர் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வக்குமாரி
சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 17, 19-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உள்ளாட்சி தேர்தலில் 12 மாநகராட்சிகளிலும் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.