tamil.asianetnews : விசிக, காங்கிரஸுக்காக மெகா பிளானை இறக்கிய திமுக... குழு அமைக்காமலேயே ஸ்டாலின் அதிரடி..!தொகுதி எண்ணிக்கை முடிவுக்கு வந்த பிறகு மூன்று நாட்களில் மொத்தமாக அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2017 முதல் திமுக கூட்டணியில் தொடர்ந்து காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொங்குநாடு மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர்களுடன் இந்த பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது. மொத்தமாக வெரும் தொகுதி எண்களை உறுதி செய்த பிறகு அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதி என்பது கூட்டணி பேச்சு வார்த்தை மூலம் தெரியவரும்.
தற்போது இந்த மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி, அவர்களுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இடங்கள் கொடுப்பது குறித்து பேசி வருகிறார்கள்.
தொகுதி எண்ணிக்கை முடிவுக்கு வந்த பிறகு மூன்று நாட்களில் மொத்தமாக அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சு வார்த்தை எளிதாக இருக்கும் நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இரண்டு முறை, மூன்று முறை, நான்கு முறை வந்து செல்லாமல் மூத்த அமைச்சர்கள் முன்கூட்டியே பேசும் பட்சத்தில் அனைத்து விதமான கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிவு பெற்று அந்த குழுவுடன் அமர்ந்து 3 நாட்களில் மொத்தமாக ஒப்பந்தம் செய்து இறுதி முடிவுக்கு வர உள்ளனர்.
கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மற்றும் புதிதாக திமுக கூட்டணிக்குள் வரவிருக்கும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய தேவை திமுகவிற்கு இருக்கிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கும் நிலையில், இதுவரை திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படவில்லை. அதற்கு காரணம், திமுக இன்னும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதே. ஆனால், ஏற்கனவே தொகுதி பங்கீட்டு குழுவில் யார், யாரை நியமிக்கவேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது.
கூட்டணி இறுதி செய்யப்படும் நிலையில், அந்த அறிவிப்பும் வெகு விரைவில் வரவிருக்கிறது. கடந்த தேர்தலைகளை பார்த்தாலும் திமுகவில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்ட பின்னரே, தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த முறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படும் என அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கூட்டணிக்கான முடிவுகள், தொகுதி பங்கீடு என அனைத்தையும் முடித்துவிட திமுக தலைமை திட்டமிட்டிருக்கிறது. அதனால், அதற்கான பணிகள் திமுக தலைமையால் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதல் தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சமாதானப்படுத்தும் படலமும் தொடங்கியிருக்கிறது.
பிப்ரவரி இறுதியில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு முடிவுகள் என அனைத்தும் எடுக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்ததினமான மார்ச் 1ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை திமுக வெளியிட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக