![]() |
Bilal Aliyar : மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா போன்றோரை சம்பந்தமே இல்லாமல் மோடியை தாக்கபோவதாக நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பதும்
இப்போது வரை யாரென்றே தெரியாத பிரவீன் சக்ரவர்த்தி என்ற நபரை ஊடகங்களில் உளற வைப்பதும்
மாணிக்தாகூர், மோகன் குமாரமங்கலம் போன்றோர் காங்கிரசை பெரிய சக்தியாக பேசி திமுகவினரை, திமுக தலைவர்களை தரக்குறைவாக பேசுவதும்
வேலுச்சாமி போன்ற புரோக்கர்கள் கலைஞர் குறித்து அருவருப்பான வார்த்தைகளை தெளிப்பதையும்
துக்ளக் மேடைகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுவதையும்
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிகழ்வுகள் அல்ல.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை உடைக்க, காங்கிரசை பெரிய சக்தியாக ஆர்எஸ்எஸ்சே கட்டமைக்கிறதோ என்ற சந்தேகம் நிரூபணமாகிறது!
இதன் மூலம் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த வாய்ப்புகளை உருவாக்குவது!
அதுகுறித்த அரசியல் உரையாடல்களை அதிகப்படுத்தவது!
இதன் மூலம் திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவதை, குழப்பத்தை உருவாக்குவதை விட, அதிமுகவையும், காங்கிரசையும் ஒன்றுமில்லாமல் செய்வதே முக்கிய நோக்கமாக இருக்க முடியும்!
2026 தேர்தலில் கட்சி அளவில் அதிமுகவை (ஏறகனவே டிடிடி கூட்டணியாக இருக்கிறார்,
ஓபிஎஸ் வேறு தனி ஆவர்த்தனம் புரிகிறார்) ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் பாஜக-ஆர்எஸ்எஸ் முன்னெடுத்து வருவதன் பலகட்ட நகர்வுகள் தான் தற்போதைய தேவையற்ற பேச்சுகள்.
காங்கிரசை பெரிதாக காட்டி தவெகவுடன் இணையச் சொல்வது.
திமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதை பாஜக சக்திகள் நன்றே உணர்ந்து இருக்கின்றன!
ஆனாலும் தேர்தலுக்கு பின்பான தமிழ்நாடு அரசியலில் அதிமுக, காங்கிரசை முழுமையாக துடைத்தெறிவது, அந்த இடத்திற்கு தவெக, பாஜகவை இடம்பெற செய்வது என்ற அரசியல் சதுரங்க காய்கள் நகர்கின்றன என நாம் உணர முடிகிறது!
காங்கிரசுக்குள்ளேயே தொடர்ந்து எதிர்க்குரல்களை உருவாக்குவது,
பத்து பைசாவுக்கு பியோசனமற்ற, களத்தில் நிற்க இயலாத காங்கிரஸ் எம்பிக்களை மோடியை எதிர்ப்பதாக பிம்பங்களை உருவாக்குவதன் மூலம்,
பாஜக, மோடி எதிர்ப்பில் காங்கிரசும் இருப்பதாக காட்ட பாஜகவே துணைபுரிகிறது!
ஆனால் இன்றுவரை இராகுலுக்கு ஆதரவாக ஒரு மக்கள் திரள் போராட்டத்தை கூட தமிழ்நாடு காங்கிரஸ் எம்பிக்களால் செய்ய முடிந்ததில்லை என்பதை உண்மை!
இராகுல் காந்திக்காக இரயில் மறியல் செய்ய சென்ற அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் அழகரி, கும்பகோணம் இரயில் நிலையத்தில் மூன்று பேருடன் மட்டும் அநாதையாக நின்ற ஒற்றை போட்டோ போதும் இவர்களின் கட்டமைப்பு பலம்!
இப்படியான அரசியல் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை இதை வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கிறது!
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள், எம்பிக்கள் பாஜகவின் அரசியலுக்கு துணைபோகும் சூழல் அபாயகரமானது!
விஜய் போன்ற சமூகச்சூழல் புரிதல் இல்லாத, திரைக் கவர்ந்த நபர்களை வளரப்பதற்கு காங்கிரஸ் துணைபோவது மக்களுக்கு எதிரான செயல்!
இத்தனை நடந்தும், தமிழ்நாட்டின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூட திமுகவை எதிர்த்தோ,
திமுக கூட்டணியை வெறுத்தோ கருத்துகளை கூறவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
திமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் உணர்ந்து அமைதி காப்பதைக் கூட புரியாமல் இந்த எம்பிக்கள் கூட்டம் உளறுவதற்க்கு காரணமில்லாமல் இல்லை.
அதனடிப்படையில் பார்த்தால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்ச காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கையை காலி செய்ய தற்போதைய காங்கிரஸ் எம்பிக்கள் செயல்படுகின்றனர்!
திமுக கூட்டணியை தவிர்த்து எந்த கூட்டணிக்கு சென்றாலும் காங்கிரஸ் பூஜ்யத்திற்கு செல்லும் என்பதை அடிப்படை காங்கிரஸ் உறுப்பினர்களும், அரசியல் அறிந்தவர்களும் அறிவார்கள்!
ஆனால் ஒன்றிய பாஜகவிடம் அரசியல் ஆதாயம் தேட பாஜகவின் குரலை தன் குரலாக ஒழிக்கும் காங்கிரஸ் எம்பிக்களால் தமிழ்நாடு காங்கிரஸ் தன்னை முழுமையாக பாஜகவிடம் ஒப்படைத்திருக்கிறது!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும் என்பதை உறுதியாக கூற முடிந்தாலும்,
சட்டமன்றத்தில் காங்கிரசின் சார்பில் யாருமே இருக்க போவதில்லை என்பதை இப்போதே கூற முடியும், அவர்கள் திமுக கூட்டணியை தவிர்த்தால்!
மரியாதைக்குரிய இராகுல் காந்தியும், கார்கேயும் இப்போதாவது விழிக்காவிட்டால், 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் காங்கிரசுக்கு தெவசம் தான் பண்ண வேண்டும்!
பிலால் அலியார்
துபாய்-அமீரகம்
06/02/2026

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக