சனி, 5 ஜனவரி, 2019

பொங்கல் பரிசு: 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்தார்

பொங்கல் பரிசு: ₹ 1000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் EPS...zeenews.india.com -tamil : பொங்கல் பரிசுத் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார்....
தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்றும் கூறுவார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஆண்டு தோறும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழ் மக்களுக்கு தமிழக முதலவர் பொங்கல் பரிசு அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு வழங்கப்படும் என கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதில் 2, கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்க 258 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் உரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் தொகுதி நீங்கலாக அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது. மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 98 ஆயிரத்து 102 அட்டை தாரர்களுக்கு ஆயிரத்து 980 கோடி ரூபாய் நிதி சிறப்பு திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தலைமைச்செயலகத்தில் முதற்கட்டமாக 10 பேருக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
வரும் திங்கட்கிழமை முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில் ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்த சிறப்பு பரிசு தொகுப்போடு 1000 ரூபாயையும் சேர்த்து பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டவிட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: