இலங்கை இந்திய கூட்டுப் பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டுப் போர்ப் பயிற்சி ஆறு நாள்கள் நடைபெறவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இரு நாடுகளினதும் கடற்படைகள் சார்பில் குறைந்தது தலா நான்கு போர்க் கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளன.
இலங்கையில் போர் நடை பெற்ற காலப்பகுதியிலும் இந்தியக் கடற்படை இலங்கைக் கடற்படையுடன் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்ட போதும், இன்று ஆரம்பமான ஒத்திகை பெரியளவிலானது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போர் ஒத்திகையில் பங்கேற்பதற்காக இலங்கை வரும் இந்தியப் போர்க் கப்பல்களில் இருக்கும் படையினர் திருகோணமலை நகருக்குள் வந்து நல்லெண்ண நடவடிக்கைகள் சிலவற்றிலும் ஈடுபடவுள்ளார்கள் என்று உள்ளூர் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக