தீபாவளிக்கு மிக மிக சொற்பமாக (ஐந்தே படங்கள்) வெளியான படங்களில் அற்புதமான படம் என அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் படம் மைனாதான்.
படம் வெளியாகி ஒரு வாரம்கூட முழுதாய் ஆகாத நிலையில் தற்போது அடைந்து வரும் வெற்றியின் மகிழ்ச்சியை விழாவெடுத்து கொண்டாடவும் தயாராகிவிட்டது படக்குழு. இந்த மகிழ்ச்சியோடு இயக்குனர் பிரபு சாலமனும், மைனாவின் நாயகன் விதார்த்தும் அடுத்தப் படத்தில் மீண்டும் இணையப் போகிறார்களாம்.
படம் வெளியாவதுக்கு முன்பே கமலும், பாலாவும் படத்தை பார்த்து பாராட்டிவிட்டார்கள். விக்ரம் தனது குடுமபத்துடன் வந்து மைனாவை பார்த்தார். இதே போல தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் மைனாவை விரும்பி பார்த்து வருவதால் ஏகப்பட்ட குஷியில் இருக்கிறது மைனா படக்குழு.
இந்த வகையில் இயக்குனர் லிங்குசாமியும் மைனா படம் பார்த்து பிரபு சாலமனை பாராட்டோ பாராட்டு என பாராட்டினாராம். அத்தோடு மட்டும் இல்லாமல், தனது தயாரிப்பில் அடுத்தப் படத்தை பிரபு சாலமன் இயக்க வேண்டுமென கூறி அட்வான்ஸும் கொடுத்துவிட்டாராம் லிங்குசாமி.
இதுபோக, யாரை வேண்டுமானலும் ஹுரோவாக போட்டுக்கொள்ளுங்கள் என்றும் சாலமனிடம் சொல்லிட்டாராம். லிங்குசாமி அப்படி கூறிவிட்டாலும், பிரபு சாலமனின் பார்வை திரும்பி இருப்பது என்னமோ மீண்டும் விதார்த்தின் மீதுதான்.
முதல் படத்திலேயே இயக்குனருக்கு பிடித்த நடிகனாகிவிட்டதால் பிரபு சாலமன் இயக்கும் இந்தப் படத்தில் விதார்த் நடிப்பது முடிவாகிவிட்டது என்பதே திரைவட்டாரத்து லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.
லிங்குசாமியின் தயாரிப்பில் ஆர்யாவின் நடிப்பில் மிஷ்கின் ஒருபடம் இயக்கவிருக்கிறார். அதேபோல, பிரபு சாலமன் - விதார்த் (மைனாவின் வெற்றிக் கூட்டணி) லிங்குசாமியின் தயாரிப்பில் மீண்டும் இணைகிறார்கள் என்பது சிறப்பான விஷயமே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக