![]() |
| ரஜினி ரசிகர் மன்றத்தில் நல்லகண்ணு |
சாவித்திரி கண்ணன் :
ஒரே மையப் புள்ளியில் இவர்களின் அரசியல் என்பது நிலை பெற்றுவிடுகிறது.
குருமூர்த்தி துக்ளக்கில் எழுதும் தலையங்கம், கேள்வி பதில் எல்லாவற்றிலும்
மீண்டும்,மீண்டும் வலியுறுத்துவது இது தான்; ’’அடேய் அதிமுக பயலுகளே..,
ஒத்துமையாக இருங்கடா...ஒங்க கிட்ட ஒத்துமை இல்லாவிட்டால் திமுக
வந்துடும்..! அய்யோ...! அப்புறம் எங்க நிலைமை என்னாவது..?’’ஆயினும், ’அதிமுகவினர் ஒத்துமையாக இல்லாவிட்டால் என்னாவது...?’ என்ற பயமும் இந்த அம்பிகளை ஆட்டி படைக்கிறது.
சமீபத்திய துக்ளக்கில் ஒரு கேள்வியையும், பதிலையும் கவனியுங்கள்.
அதிமுகவின் ஒற்றை தலைமையை ஒரு வேளை ரஜினி ஏற்றால்,அதிமுக பலப்பட வாய்ப்புள்ளதா?
அதிமுக தலைவர்களை ஜெயலலிதா ஒருமுகமாக போக வைத்து கட்டி மேய்த்தார்..! அதில் யாராவது ஒருவர் தலைவராக வேண்டும்,மற்றவர்கள் மந்தியாக அவர்பின்னால் செல்ல வேண்டும் என்பது இன்றைய நடைமுறைக்கு உதவாது....இதை அதிமுகவினர் புரிந்து கொண்டு, சென்ற வாரம் நாம் தலையங்கத்தில் கூறியது போல,கூட்டுத் தலைமை கலாச்சாரத்தை கொண்டு வந்தால், அதிமுக வலுவடையும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.