வியாழன், 27 செப்டம்பர், 2018

சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்- தீனதயாளன் கூட்டல் ரன்வீர் ஷா வீட்டில்

தொழில் அதிபர்- திருடன் ரன்வீர் ஷா
சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்- பொன் மாணிக்கவேல் அதிரடி சோதனைமாலைமலர் : சென்னை சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் இருந்து 82 சிலைகளை ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பறிமுதல் செய்துள்ளார். சென்னை: தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த பழங்கால சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ்கபூர் தமிழகத்தில் உள்ள தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனை செய்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.
இதில் சுபாஷ்கபூரின் நெருங்கிய கூட்டாளியான தீனதயாளன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபரான இவருக்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் 2 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் அப்போது அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டை மூர் தெருவில் நடத்தப்பட்ட சோதனையில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன. பழங்கால ஓவியங்களும் கிடைத்தது.

வளர்ப்பு நாயை கொன்ற கணவன் கைது .. வேலாசேரி..

 நாயை தர மறுப்பு
 பரணியின் பெருமைtamiloneindia :சென்னை: தான் உயிரையே வைத்திருந்த "பரணி"யை கொன்றுவிட்ட கணவனை போலீசில் மாட்டிவிட்டதுடன், சிறைக்கும் அனுப்பியுள்ளார் கட்டிய மனைவி.
சென்னை  வேளச்சேரியில் உள்ள சாரதி நகரில் வசித்து வருபவர் ஜெகநாத். இவர் செல்வி என்பவரை 5 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். பின்னர் 6 மாதத்திற்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். செல்வி திருமணத்துக்கு முன்னமேயே ஒரு நாயை செல்லமாக வளர்த்தும் பராமரித்தும் வந்தார். அந்த நாயின் பெயர்தான் பரணி. பரணியை பற்றி செல்வி ஜெகநாத்திடம் காதலிக்கும்போதே அடிக்கடி பெருமையாக சொல்லி வந்திருக்கிறார். செல்விக்கு திருமணம் ஆனவுடன் பரணி நாயும் கூடவே வந்துவிட்டது.;

ஸ்டாலின் மருத்துவ மனையில் அனுமதி ..

திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிதினத்தந்தி :திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை: திமுக தலைவராக முக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.

5000 கோடி ரூபாய்களோடு நைஜீரியாவுக்கு தப்பி ஓடிய குஜராத்தி பாஜக கும்பல்...சன்தீசரா குடும்பம்

Mahalaxmi : 5000 கோடி கோவிந்தா.. கோவிந்தா... பிரதமர் மோடியின் சொந்த
மாநிலமான குஜராத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் என்னும் நிறுவனத்தின் தலைவரான நித்தின் சன்தீசரா இந்திய வங்கிகளில் சுமார் 5000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டுத் தற்போது நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.
இவரைக் கடந்த ஒரு மாதமாகச் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தேடி வரும் நிலையில், துபாயில் இவர் பிடிபட்டுள்ளதாகத் தகவல் வெளியானது ஆனால் அவர்கள் துபாயில் இருந்து நைஜீரியாவிற்குத் தப்பி இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கும் கிடைத்த தகவல்கள் படி நித்தின் சன்தீசரா மற்றும் இவரது சகோதரர் சேட்டன் சன்தீசரா மற்றும் தீப்திபென் சன்தீசரா ஆகியோர் நைஜீரியாவில் மறைந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
பைஜிரியா உடன் இந்தியா Mutual Legal Assistance Treaty ஒப்பந்தம் கையெழுத்து செய்யாத காரணத்தால் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ரைஜிரியாவில் இருந்து இவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர மிகவும் கடினம்.

சட்ட விரோதத் தடுப்புச் சட்டம் (UAPA) தனிநபர் சுதந்திரத்தை முடக்கும் தெளிவற்ற

சவுக்கு :அமெரிக்காவுக்கு 1950 களில் “ஆன்டி கம்யூனிஸ்ட் ஹிஸ்டீரியா” எனப்படும் மனக் குழப்ப நோய் பிடித்துக்கொண்டது. அதை மக்கார்த்தியிஸம் என்பார்கள். அரசாங்கத்தின் முதன்மைப் பிரச்சாரகராக ஜோசப் மக்கார்த்தி என்கிற செனட் உறுப்பினர் அப்போது இருந்தார்.
இடதுசாரிக் கருத்துகளின் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்று சந்தேகப்படுபவர்களைச் சிறையில் அடைத்தல், வேலைகளிலிருந்து பணிநீக்கம் செய்தல், அவர்களுக்கான கறுப்புப் பட்டியல்களை உருவாக்குதல், அவர்களைக் கொடுமைப்படுத்துவது, காவல் துறை புலனாய்வுகளுக்கும் நீதிமன்ற விசாரணைகளுக்கும் ஆட்படுத்துவது ஆகியவையே மெக்கார்த்திசம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளன.
எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடிய வாசகங்களைக் கொண்ட, தெளிவாக வரையறை செய்யாமல்  உருவாக்கப்பட்ட சட்டங்களின் போர்வையில்தான் அத்தகைய நடவடிக்கைகள் நடந்தன.
பொதுமக்களின் மனப்போக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாத நீதிபதிகளிடமிருந்துதான் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல்கள் பெறப்பட்டன.

புதன், 26 செப்டம்பர், 2018

சிறிசேன, ராஜபக்ச கொலை முயற்சி இந்தியர் இலங்கையில் கைது.. தாமஸ் என்பவர்.

சந்தேக நபர் தாமஸ் இந்தியர் .
BBC :இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சந்தேகிக்கக் கூடிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்த விசாரணைகளில், இந்தியர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்து, தொலைபேசி உரையாடல் ஒன்று அண்மையில் வெளியாகியது.

பதவி உயர்வுகளில் SC, ST இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி: இடஒதுக்கீடு தீர்ப்பு!மின்னம்பலம்: அரசு பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு இடஒதுக்கீடு அவர்களுடைய மக்கள் தொகையின் அடிப்படையில் அளிக்க முடியாது என்றும் இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று (செப்-26) தீர்ப்பளித்துள்ளது.
அரசு பதவிகளில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இவ்வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்குகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2006இல் உச்ச நீதிமன்றத்தில் அரசியல் அமர்வினால் நாகராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தமிழக காங்கிரஸ் தலைவராக சிதம்பரம் நியமிக்கபடுவார் ,, நம்பகமான தகவல்

தினமலர் :தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, முன்னாள் மத்திய
அமைச்சர் சிதம்பரம் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், செயல் தலைவர்களாக, திருநாவுக்கரசர், தங்கபாலு, பிரசாரக் குழு தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.'
வரும் லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின்னும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்; மதவாதத்திற்கு எதிராக, தி.மு.க., தொடர்ந்து போராடும்' என, சமீபத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்மூலம், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் என்பதை, காங்கிரஸ் மேலிடத்திற்கு, ஸ்டாலின் உறுதிப்படுத்தி உள்ளார்.

20 வயது மாணவியை திருமணம் செய்த 65 வயது தலைமை ஆசிரியர் .. ராமேஸ்வரத்தில் பஞ்சாப் தம்பதிகள்

studentமாலைமலர் :பஞ்சாப்பில் 20 வயது மாணவி ஒருவரை 65 வயது தலைமை ஆசிரியர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன்(65). இவர் ஒரு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த மகத்(20) என்ற மாணவி டியூசன் படித்து வந்தார். ஜெயக்கிருஷ்ணன் மாணவிக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இதனால் மாணவிக்கு ஜெயக்கிருஷ்ணன் மீது ஈர்ப்பு வந்துள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.>இந்நிலையில் சபீபத்தில் அவர்கள் இருவருமே எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் அதிர்ந்துபோன மாணவியின் பெற்றோர், ஜெயகிருஷ்ணன் தனது மகளை கடத்திவிட்டதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் பல்வேறு பகுதியில் இவர்களை தேடி வந்த நிலையில் அவர்கள் ராமேஸ்வரத்தில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

BBC :உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பு செய்ய அனுமதி

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் போல, இனிமேல் நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்ய அவை இரண்டுக்கும் தனித்தனித் தொலைக்காட்சிகள் உள்ளன.
ஆனால் சில வெளி நாடுகளில் இருப்பதுபோல நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை மக்கள் பார்க்க ஏதுவாக அதெற்கென தனி தொலைக்காட்சி எதுவும் இதுவரை இல்லை. மத்திய அரசின் செலவில் இனி அதற்கென தனி தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.
பொது மக்களுக்கு நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள உரிமை உண்டு என்றும் இது நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றும் புதன்கிழமையன்று, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.
வழக்கு விசாரணைகளைப் பார்ப்பது சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்றும் இந்தத் தீர்ப்பின்போது தலைமை நீதிபதி கூறினார்.

அதிமுக ஈழ கண்டன கூட்டம் .. ராஜபக்சேவை மகிழ்விக்க ஆடல் பாடல் .. களைகட்டிய கொண்டாட்டம்


thamilthehindu :திமுக என்றாலே சிம்ம சொப்பனம் தான் என்பதால், எப்போதும் நடுங்கும் முதல்வரும், ஆட்சியாளர்களும் துணிவிருந்தால், எங்கள் மீது வழக்குப் போடட்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் பதவிக்கே களங்கம் விளைவிக்கும் வகையில், நாளொரு ஊழல் பொழுதொரு முறைகேடு என கஜானாவைத் தினந்தோறும் திருடிக் கொழுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவையினர், தங்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க
கடந்த 2011 முதல் ஆட்சியில் இருப்பது அதிமுக.தான்; திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது.
எங்காவது, 7 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சிக்கு எதிராக, ஆளுங்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாரும் கூடிக் கும்மாளமிட்டு போராட்டம் நடத்திக் கூப்பாடு போடும் கேலிக்கூத்தைக் கேட்டதுண்டா? கண்டது உண்டா? அந்த இழிவான - மலிவான பெயரைப் பெற்றவர்கள்தான் அதிமுக ஆட்சியாளர்கள்.

வங்கி கணக்கு போன்றவைகளுக்கு ஆதார் தேவை இல்லை .. உச்சநீதிமன்ற தீர்ப்பு விபரம்

1. இந்தியாவில் ஆதார் விவகாரம் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டது. எந்த வகையிலும் ஆதார் கார்டை போலியாக தயாரிக்க முடியாது.

2. ஆதாருக்காக குறைந்த பட்ச அத்தியாவசிய தகவல்கள் மட்டுமே பெறப்படுகிறது.

3. ஆதார் திட்டமும், சட்டமும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டும் தான் பிரச்சனை.

4. அரசின் நலத்திட்டங்களின் பலன்களை பெறவும், மானியம் பெறவும் ஆதார் அவசியமாகிறது என்ற மத்திய அரசின் கருத்து முக்கியமானது. சமூக நல திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும் என்ற மத்திய அரசின் எண்ணமும் குறிப்பிடத்தக்கது.

5. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்கள் போன்றதல்ல. ஆதார் சிறந்ததாக இருப்பதைவிட தனித்துவமானது என்பதே நல்லது. தனித்துவ அடையாளம் என்பது எளிய மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும்

6. ஆதாருக்கான சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட தகவல்கள் கசியாமல் பாதுகாத்திட வேண்டும்.

7. தனிநபர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தனிநபர் பாதுகாப்பை கவனமுடன் கையாள வேண்டும்.

8. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது, ஆதார் கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம்.

கருணாசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி

மாலைமலர் :முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான எம்.எல்.ஏ கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
கருணாசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி சென்னை: முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர்.
3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

திரிகோணமலை பெண் விரிவுரையாளர் கொலையா? தண்ணீரில் தற்கொலையா? கணவர் கவிஞர் வன்னியூரன் செந்தூரன்

சீமான்- கவிஞர் வன்னியூரான் செந்தூரன்
Rathnakumar SE  :திருகோணமலையில் காணாமல் போய் 2018.09.20 இல் திருகோணமலை சங்கமித்த கடற்ப்பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட  திருகோணமலை நடராசா என்பவரது மகளும், கவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவியுமான போதநாயகி (29வயது) அவரது மர்மமான (தற்?????????????????) . விரி­வு­ரை­யா­ள­ரான நட­ராசா போத­நா­ய­கியின் மர­ணத்தில் சந்­தேகம் நில­வு­வ­தாக உயி­ரி­ழந்த பெண்ணின் உற­வி­னர்கள் பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
மறைந்த போதநாயகி - கவிஞர் வன்னியூரன் செந்தூரன்
பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றிய...... ஆசிக்குளம் இல108 ,கட்டுக்குளம், வவுனியா எனும் முகவரியில் வசித்துவரும்
Rathnakumar SE :வவுனியா பெண்ணின் மரணத்தின் காரணம் வெளியாகியது!
Image may contain: one or more people and people standingகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரும் வன்னியூர் செந்தூரன் என்று அறியப்படுபவரின் மனைவியுமான போதநாயகி அவர்கள் திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் எவ்வாறு இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.
நீதி கேட்டு மக்கள்

ஆனால் அவரின் சமீப கால முகநூல் பதிவுகளை பார்க்கும் போது பல கேள்விகளுக்கு விடை இருப்பதுபோல தோன்றுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வன்னியூர் செந்தூரனை திருமணம் முடித்த போதநாயகி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் தந்தை தும்பு மிட்டாய் விற்றும் தாய் கூலி வேலைக்கு சென்றுமே அவரை படிப்பித்தனர். அச்சிறிய கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய முதல் மாணவி போதநாயகி. பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேர்ந்து பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியில் சேர்ந்த போதநாயகியின் வாழ்வு திருமணம் முடித்த ஆறே மாதங்களில் மண்ணோடு மண்ணாகிப்போனது .

போலீசால் தேடப்படும் எச்ச ராஜா ஆளுநர் சந்திப்பு .. என்னை நேரில் அழைத்து விசாரிக்க நீதிபதிக்குக் அதிகாரம் இல்லை.. ஆமால்ல பூணூல் !

எச் ராஜாவுக்கு உத்தரவு /tamil.oneindia.com: கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிவாசல் பகுதி ஒன்றில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொச்சையாக திட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். ஆனால் இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக ஆளுனருடன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார். ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார் எச்.ராஜா. சுமார் அரைமணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. எச்.ராஜாவை தனிப்படை போலீஸ் தேடி வரும் நிலையில் சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது. இதில் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தஞ்சை சாஸ்திரா 58.17 ஏக்கர் ஆக்கிரமிப்பு .. காலி செய்யாவிட்டால் இடிக்க உத்தரவு!

Shankar A : சட்டவிரோதமாக தஞ்சையில் ஆக்ரமிக்கப்பட்ட தமிழக சிறைத்
துறைக்கு சொந்தமான 58.17 ஏக்கர்களில், கட்டப்பட்ட சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் கட்டிடங்களை, காலி செய்து கிளம்பா விட்டால், 3 அக்டோபர் அன்று அந்த கட்டிடங்கள் காவல்துறை உதவியோடு இடிக்கப்படும் என்று, சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்.
சவுக்கின் தொடர் போராட்டத்துக்கு வெற்றி. இந்த விவகாரத்தில், தொடக்கம் முதலே, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுக்கு எதிராகவும், சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார் என்பதை சவுக்கு தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது.
ஒரு கட்டத்தில் திறந்த வெளி சிறை கட்டும் இடம் என்று சிறைத் துறை கோரிக்கை விடுத்தபோது, அந்த இடத்தை விட்டுடலாம்மா. அரசு நிலம் என்று எடப்பாடி சொன்னபோது, புதுக்கோட்டையில் அவர்கள்தான் வேறு நிலம் தருகிறார்களே அதை எடுத்துக் கொள்ளலாம், கைதிகள் எங்கு இருந்தால் என்ன, என்று எடப்பாடியிடமே திமிர்த்தனமாக வாதிட்ட பாவப்பட்ட பாப்பாத்திதான் கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்தில் இளம்பெண் பலி: மகளைக் கொன்றதாக மாமனார், மைத்துனர் மீது எஸ்.ஐ.புகார்

tamil.thehindu.com :யானைக்கவுனியில் சாலை விபத்தில் உயிரிழந்த மகளை தனது மாமனாரும், மைத்துனரும் திட்டமிட்டு விபத்து ஏற்படுத்திக் கொலை செய்ததாக காவல்துறை உதவி ஆய்வாளரான தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் துளசிங்கம் (54). இவரது மாமனார் ரத்தினத்துக்கு (65) சொந்தமான வீடு திருப்பள்ளித்தெரு யானைக்கவுனியில் உள்ளது. இந்த வீடு சம்பந்தமாக சொத்துப் பிரச்சினை இருந்துள்ளது.
துளசிங்கத்தின் மகள் ரம்யாவுக்கு (28) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திருப்பள்ளித்தெருவில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
சொத்துப் பிரச்சினையில் மாமனார் ரத்தினம், அவரது மகன் எத்திராஜ் மற்றும் மருமகன் துளசிங்கத்துக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ரத்தினத்தின் மனைவி சந்திரா கடந்த ஒராண்டுக்கு முன் மரணமடைந்துள்ளார்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

பாளையங்கோட்டை சிறையில் ஜாதி வார்டுகள் .ஜாதி அறைகள் .ஜாதி பெயர்கள் . தொடரும் ஜாதி வெறி அதிகாரிகள்

மின்னம்பலம்: பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலையில் கைதிகள் சாதி அடிப்படையில் வார்டுகளில் அடைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர் முன்னாள் கைதிகள். இது பற்றி, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் சாதி அடிப்படையில் கைதிகள் வகைப்படுத்தப்பட்டு வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்குப் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரிகள் கண்டித்தும், சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
பாளையங்கோட்டை சிறையில் தண்டனை அனுபவித்த முனியப்பன் கூறுகையில், தான் ஏழரை ஆண்டுகள் சிறையில் இருந்ததாகத் தெரிவித்தார். “பாளையங்கோட்டை சிறையில், கைதிகளின் சாதிப் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். கைதிகளைப் பார்க்க ஆட்கள் வரும்போது, சாதிப் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். பார்க்க வந்தவர்களிடம், மற்ற சாதியினரைப் பேசக் கூட அனுமதிக்கமாட்டார்கள். இது குறித்துப் பலமுறை மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்து விட்டேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.

திருவாரூர் , திருப்பரங்குன்றம் தேர்தல்... அக்கறை காட்டாத கட்சிகள் ?

மின்னம்பலம் :“திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்பாளராக யாரை
நிறுத்துவார்கள் என திமுக, அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தங்களுக்குள் சீரியஸாக டிஸ்கஷனில் இருக்க... எடப்பாடியோ வேறு திட்டத்தில் இருக்கிறாராம். ‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதுக்காக தனியாக நடத்தணும்? அப்படி நடத்தி ஒருவேளை ஆர்கே நகர் மாதிரி, அங்கே நமக்கு எதுவும் சறுக்கல் வந்துட்டா, அது நாடாளுமன்ற தேர்தல் வரை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவதுதான் சரியாக இருக்கும். அதுக்கு என்ன வழியோ அதை யோசிக்கலாம்...’ என்று எடப்பாடி சொல்லி வருகிறாராம்.
திமுக தலைவர் ஸ்டாலின்கூட, இடைத் தேர்தல் வேண்டாம் என்பதில்தான் உறுதியாக இருக்கிறாராம். ‘ இப்போ எதுக்கு ஒரு தேர்தலை நடத்திட்டு தேவை இல்லாத செலவு. அதை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தினால் ஒரே செலவாக முடிஞ்சிடும். தேர்தல் முடிவு எப்படி வரும்னு சொல்ல முடியாது. அப்படி இருக்க.. நாம எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்? இடைத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டாம் என நாமும் எதாவது ஒரு வழியில் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்துவதுதான் நல்லது’ என்று சொல்லி வருகிறாராம்.

சசிகலாவை சந்திக்கும் வைரவியாபாரி ... புதிய அரசியல் புரோக்கர்?

மின்னம்பலம் :“பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலாவை டிப் டாப்பாக டிரஸ் போட்ட ஒருவர் அடிக்கடி சத்தமில்லாமல் சந்திக்க வருவதும் போவதுமாக இருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார்கள். இவர்களை வழக்கறிஞர்களும், உறவினர்களும், கட்சியினரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சட்ட ரீதியாகச் சந்தித்துவருகிறார்கள். சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் ஒன்றாகச் சந்திக்க கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதியோடு இருவரையும் ஒரு அறைக்கு வரவழைத்துச் சந்தித்து வருகிறார்கள். இதெல்லாம் வழக்கமாக நடக்கும் நடைமுறைதான். ஆனால், இப்போது லேட்டஸ்டாக டிப் டாப் ஆசாமி ஒருவரின் தலை அதிகமாக பரப்பன அக்ரஹாரா பக்கம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
கடந்த 19ஆம் தேதி, அந்த நபர் சிறைக்கு சென்றுவந்தபோது சில புகைப்படக்காரர்கள் படம் எடுத்துள்ளனர். அதைப் பார்த்த டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் அந்தப் புகைப்படக்காரரை தனியாக அழைத்துக் கொண்டு போய், படத்தை அழித்துவிட்டுதான் அனுப்பியிருக்கிறார்கள். ‘அவரு படம் எங்கேயும் வெளியே வர வேண்டாம்னு அண்ணன் சொல்லியிருக்காரு. வந்தால், எங்களுக்குப் பிரச்னை ஆகிடும்...’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

கருணாஸின் எம்.எல்.ஏ பதவிப் பறிப்பு ?- அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்

tamil.thehindu.com : அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி கருணாஸ் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் கருணாஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்தாகத்தான் முடியும் என்கிற பொருளில் பதிலளித்துள்ளார்.
நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி ஐபிஎஸ் அதிகாரி ஒருவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வரம்பு மீறி பேசியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார். சமூகங்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசுவது, முதல்வரை அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் என பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை ஒத்தைக்கு ஒத்தை யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா என்று அழைத்ததும், காலை உடை என தொண்டர்களிடம் பேசியதும், கொலையே செய்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய் என்று பேசியதும், ஊடகங்கள் இரண்டு குறிப்பிட்ட சமூகத்தினரிடையேதான் உள்ளது என்று பேசியதும் சர்ச்சையானது.

32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்!


32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்!! BBC : 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் காலைவேளை அது… பிரிட்டனின் மான்செஸ்டரில் தனது சிறிய வீட்டில் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நாவோமி ஜைக்ப்ஸ், தான் யார்? எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் திகைத்து நின்றார்.
15 வயது சிறுமியாகவே தன்னை உணர்ந்த அவர், அது 1992ஆம் ஆண்டு என்றே நினைத்தார். “முதலில் நான் இருக்கும் இடம் எதுவென்றே எனக்கு புரியவில்லை. கனவு காண்கிறேனா என்று தோன்றியது. இல்லை அது கொடிய உண்மை என்று புரிந்தது. நான் யார், இந்த இடத்தில் ஏன் இருக்கிறேன் என்று புரியாமல் குழம்பிப்போனேன்.” “கண் விழித்த்தும், முதலில் கண்ணில் பட்டது திரைச்சீலைகள்தான். பிறகு, அலமாரி, நான் படுத்திருந்த படுக்கை என எதுவுமே எனக்கு பரிச்சயமானதாக தெரியவில்லை. என்னை பார்த்தேன், நான் உடுத்தியிருந்த ஆடை என்னுடையதல்ல என்று தோன்றியது” என்கிறார் நாவோமி ஜைக்ப்ஸ்.
“உடனே கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். அது நான் அல்ல என்றே தோன்றியது. நிறம் வெளுத்து வயது கூடிப்போய், வேறு யாரோ கண்ணாடியில் பிரதிபலிக்கிறார்கள் என்றே தோன்றியது. ஆனால், என்னுடைய தோற்றம்தானே கண்ணாடியில் தெரியும் என்று புத்தி சொல்லியது. எதையுமே என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை.

அறநிலைய துறையை களவாட பாஜக கும்பல் சதி .. முறியடிக்க ஒன்று திரள்வீர்! பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ..

அறநிலையத்துறை கோயில்``நீதிக்கட்சி உருவாக்கிய அறநிலையத் துறை பாதுகாக்கப்பட வேண்டும்!vikatan.com -இ.லோகேஷ்வரி : “1927-ம் ஆண்டு இந்து சமயஅறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்கவும், கணக்கு வழக்கற்ற சொத்துகளை ஆவணப்படுத்தி அரசு பதிவேட்டில் ஏற்றும் நோக்கில், கோயிலின் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது நீதிக்கட்சி.” கோ யில் சொத்துகளைப் பாதுகாக்க `இந்து அறநிலையத் துறை பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கப்பட வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்  36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்களும் 60 மடங்களும் உள்ளன. கோயில்களைப் பராமரிப்பது, அவற்றை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை அறநிலையத் துறை செய்துவருகின்றது. இந்நிலையில் அறநிலையத் துறையின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் கோயில்களை முறையாக அறநிலையத் துறை பராமரிக்கவில்லை என்றும் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா `ஆலய மீட்புக் குழு’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து, அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை மீட்டெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பேசி வந்தார்.

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை

dinamalar.com/: சந்தன கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ்குமார், விடுதலை கோபி: நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே, தொட்டகாஜனூர் பண்ணை தோட்டத்தில், 2000 ஜூலை 30ல், கன்னட நடிகர் ராஜ்குமார் தங்கியிருந்தார். அப்போது சந்தனக்கடத்தல் வீரப்பன், அவனது கூட்டாளிகள், 14 பேர், துப்பாக்கி முனையில் ராஜ்குமாரை கடத்தினர். பிணை கைதியாக வைத்திருந்து, 108 நாட்கள் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதுபற்றி அப்போதைய, வி.ஏ.ஓ., கோபாலன் தந்த புகாரின்படி, தாளாவாடி இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமி, வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்தார். வயது முதிர்வால் ராஜ்குமார் இறந்தார். நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 9 பேரையும் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

விவசாயிகள் எதிர்ப்பு -புல்லட் ரெயில் நிதியை ஜப்பான் நிறுத்தியது .... முதலில் விவசாயிகள் பிரச்னையை தீருங்க .. அப்புறமா வாங்க ..

விவசாயிகள் எதிர்ப்பு - புல்லட் ரெயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்
மாலைமலர் :மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. #BulletTrain #Japan
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஆகிய இருவரும் கடந்த மே அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.