சனி, 25 ஜூலை, 2015
குமாரசாமியின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் மீது பூசப்பட்ட கரி! நீதித்துறையை என்கவுண்டர் செய்த ஜெயா + குமாரசாமி +தத்து.....
இதோ அதோ என்று இருந்த அந்த மேல்முறையீடு விசாரணைக்கு திங்களன்று வர
இருக்கிறது. பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கின்
தீர்ப்பு செப்டம்பர் 27 அன்று வர இருந்தபோது, இருந்த பரபரப்போ, மே 11 அன்று
கர்நாடக உயர்நீதிமனறத் தீர்ப்பு வர இருந்தபோது இருந்த பரபரப்போ,
உச்சநீதிமன்றத்தில் வர உள்ள மேல் முறையீட்டுக்கு சுத்தமாக இல்லை.அவ்வழக்கு கர்நாடகத்தில் இருந்த வரை, தினமும் அது குறித்து ஒரு மணிநேரம் விவாதிக்கும் பத்திரிக்கையாளர் கூட, “அதை விடுடா” என்று சலிப்போடு சொல்கிறார். ஊடகங்களிலும் இது குறித்த பரபரப்பு முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. வாரமிருமுறை இதழ்களில் கூட இது குறித்த செய்திகள் குறைவாகவே இருக்கிறது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் கொலை? முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முக்கிய சாட்சி
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட
வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரும் முன்னாள் அமைச்சர் அக்ரி
கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளருமான ரவிக்குமார் மர்மமான முறையில்
மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம மரணம் தொடர்பாக
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். திருநெல்வேலியைச் சேர்ந்த வேளாண் அதிகாரி கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு அப்போதைய
வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த அக்ரி
கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது
உதவியாளர்கள் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதாவது வேளாண்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்மையான முறையில்
முத்துக்குமாரசாமி நியமித்த போதும் அப்படி நியமிக்கப்பட்ட நபர்களிடமிருந்து
லஞ்சமாக பணத்தைப் பெற்றுத்தருமாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில்
நெருக்கடி கொடுக்கப்பட்டது என்பது குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தை
எதிர்க்கட்சிகள் கையிலெடுத்த நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து
முதலில் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு பின்னர் அமைச்சர் பதவியில் இருந்தும்
டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு
சிறையிலடைக்கப்பட்டார்.
வெங்கைய்யா நாயுடு:மோடி பிரபலமாகி வருவதை காங்கிரசால் தாங்க முடியல்ல !
பிரதமர் நரேந்திர மோடி பிரபலமாகி வருவதை காங்கிரஸ் கட்சியால் தாங்கிக்கொள்ள
முடியாததால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருவதாக மத்திய மந்திரி
வெங்கையா நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியவை பின்வருமாறு:-
பிரதமரை பற்றியும், மற்ற மந்திரிகளை பற்றியும் அவதூறான கருத்துக்களை பரப்பி
வருவதை ஒரு பேஷனாகவே காங்கிரஸ் இப்போது கையாண்டு வருகிறது. சர்வதேச
அளவிலும், இந்திய அளவிலும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் பரவி வருவதை
காங்கிரஸ் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பிரதமர் மோடியின்
புகழையும், அவரது தலைமையிலான மத்திய அரசின் மதிப்பையும் சிதைப்பதிலேயே
காங்கிரஸ் குறியாக இருக்கிறது. மோடியும் அவரது ஒரு கோடிரூபாய் கோர்ட்டும் அவர் ஒரு பவர்ஸ்டார்தான் என்பதை காட்டுகிறது .ஆனா வீணாய்ப்போன காங்கிரஸ்காரங்க புரிஞ்சுக்க மாட்டாய்ங்க! வரலாறு முக்கியம் அமைச்சரே
வழக்கில் இருந்து விடுவிப்பு! IPL மேட்ச் பிக்சிங் குற்றவாளிகள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா விடுதலை!
2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். மேட்ச் பிக்சிங் முறைகேடு வழக்கில் குற்றம்
சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் மீதான
குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறிய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்,
அவர்களை இன்று விடுவித்தது. தீர்ப்பைக் கேட்ட மூன்று வீரர்களும் மகிழ்ச்சி
அடைந்தனர்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் கோர்ட்டுக்கு வெளியில் ஸ்ரீசாந்த்
நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து விளையாட பி.சி.சி.ஐ. எங்களை
அனுமதிக்கும் என்று நம்புகிறேன். அனுமதி கிடைத்தால் உடனே பயிற்சியை
ஆரம்பித்து உடற்தகுதி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்களுக்காக
பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன். இனி எந்த குற்றத்திற்கும் பணக்காரங்க ஆட்டோமட்டிக்காகவே விடுவிக்கப்படுவாங்கன்னு பேசாம சட்டம் போட்டுங்க ! மக்கள் வரிப்பணம் மிச்சம் பாருங்க?
இன்னொரு பூமி கண்டுபிடிப்பு
ariviyal.in :ந்மது பூமியிலிருந்து மிக மிகத் தொலைவில் இன்னொரு பூமி - அதாவது நமது பூமி மாதிரியில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது பூமியானது சூரியனை ( சூரியன் ஒரு நட்சத்திரமே) சுற்றி வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமி போன்ற கிரகமும் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இப்படி ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கலாம். சூரிய மண்டலத்துக்கு அப்பால் விண்வெளியில் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. அப்படியான நட்சத்திரங்களும் சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் போலவே கிரகங்களைப் பெற்றிருக்கலாம் என நீண்டகாலமாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் அந்தக் கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் நீண்ட காலமாகப் பல பிரச்சினைகள் இருந்து வந்தன.
ஹாலிவுட் படமாக இருந்தால் உரிமை பெறாமலேயே தமிழில்
கமல், இந்திய மொழிகளில் வந்த படங்களாக இருந்தால் உரிமை பெற்றுத் தமிழில்
தருவார். ஹாலிவுட் படமாக இருந்தால் உரிமை பெறாமலேயே தமிழில் தருவார்.
அதனால் தான் அவர் உலக நாயகன்.
‘தாய் மதம் திரும்புதல்’ என்று ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் ‘இந்து மத’ மாற்றத்திற்கு முயற்சித்தும் முடியாததை,
நமது உலகநாயகன் எளிதில் சாதித்து விட்டார். திர்ஷயம் ‘ஜார்ஜ்’ – பாபநாசம் ‘சுயம்புலிங்கம்’. இந்துவாகப் பிறந்த ஒருவன், தன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, கிறித்துவ மதத்திற்கு மாறிவிடுவதாகக் காட்டினார்; இந்துவான ஸ்ரீதர். ‘சுமைதாங்கி’ யில்.
கிறிஸ்துவராக இருந்த கதையின் நாயகனை இந்துவாக மாற்றினார்; கடவுள் மறுப்பு கமல். பாபநாசத்தில். மதிமாறன் wordpress.com
நமது உலகநாயகன் எளிதில் சாதித்து விட்டார். திர்ஷயம் ‘ஜார்ஜ்’ – பாபநாசம் ‘சுயம்புலிங்கம்’. இந்துவாகப் பிறந்த ஒருவன், தன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, கிறித்துவ மதத்திற்கு மாறிவிடுவதாகக் காட்டினார்; இந்துவான ஸ்ரீதர். ‘சுமைதாங்கி’ யில்.
கிறிஸ்துவராக இருந்த கதையின் நாயகனை இந்துவாக மாற்றினார்; கடவுள் மறுப்பு கமல். பாபநாசத்தில். மதிமாறன் wordpress.com
மகாராஷ்ட்ராவிலும் மதுவிலக்கு? மாட்டிறைச்சுக்கு தடைவித்த மகாராஷ்டிரா ....
மும்பை : மாநிலம் முழுவதும், மாட்டிறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை
கொண்டு வந்துள்ள மகாராஷ்டிராவில், விரைவில், மாநிலம் தழுவிய அளவில், மதுபான
விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், 45,
நேற்று அறிவித்தார்.மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி
ஆட்சி நடைபெற்று வருகிறது; முதல்வராக, கடந்த ஆண்டு அக்டோபர் முதல்,
பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார். இந்த ஆண்டு மார்ச் முதல், அங்கு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில்,
அம்மாநில சட்ட மேலவையில், தேசியவாத காங்கிரசை சேர்ந்த, எம்.எல்.சி.,
ஒருவர், முதல்வர் பட்நாவிசிடம், 'மாநிலம் முழுவதும் மதுவிலக்கு
அமல்படுத்தப்படுமா?' என, கேள்வி எழுப்பினார்.
தமிழக கர்நாடக காய்கறிகளுக்கு கேரளா தடை- நள்ளிரவு முதல் அமல்! தரச்சான்றிதழ் விவகாரம் .....
தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் காய்கறிகள் மற்றும்
பழங்களில் நச்சுத்தன்மை இருப்பதாக கூறி கேரள அரசு விதித்த தடை நள்ளிரவு
முதல் அமலுக்கு வந்தது.
உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள்,
ரசாயனம் பயன்படுத்தி விளைவித்த, பழங்கள், காய்கறிகள், கேரளாவுக்கு வருவதை
தடுக்கும் வகையில், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு
கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பழங்கள், காய்கறிகள்
நிரம்பிய வாகனங்களை சோதனையிட, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காய்கறி, பழங்களின் சாம்பிள் பெறும் சிறப்பு குழு, அதே இடத்தில், விஞ்ஞான
ரீதியில் சோதனையிடும். பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயனம் பயன்படுத்தவில்லை
என உறுதியானால் மட்டுமே, அந்த வாகனங்கள் கேரளாவுக்கு செல்ல
அனுமதிக்கப்படும் கேரளாவின் விஷமபிரசாரமாகதான் இது தெரிகிறது.
வெள்ளி, 24 ஜூலை, 2015
ஐட்டம் சாங் அரசி இனி சின்மயிதாய்ன்
மேரா நாம் மேரி’ பாட்டுதான் இப்போது இந்தி
சினிமாவின் ஹாட்டஸ்ட் ஹிட்டு. அக்ஷய்குமார் நடிப்பில் வரும் ஆகஸ்ட் பதினைந்துக்கு ரிலீஸ் ஆகப்போகும் ‘பிரதர்ஸ்’ படத்தின் டீசராக இந்த பாட்டு இணையத்தில் வெளியாகி, முதல் ஐந்து நாட்களிலேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.கரீனாவின் காட்டுத்தனமான இளமைக்கு வலு சேர்க்கிறது நம்மூர் சின்மயியின் போதைக் குரல். பதினைந்து ஆண்டுகளாகப் பாடிவரும் சின்மயிக்கு இதுதான் முதல் ஐட்டம் சாங். முதல் போட்டியிலேயே டபுள் செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேனைப் போல, மகத்தான வெற்றியை எட்டியிருக்கிறார். இதுவரை இந்தியில் எத்தனையோ பாடல்களை அவர் பாடியிருந்தாலும், இந்த பாட்டு பெற்றிருக்கும் அதிரிபுதிரி ஹிட் அவரை எங்கோ கொண்டு போகப்போகிறது. ஐட்டம் சாங்குக்கு ஆடப்போகும் நடிகைகள் அத்தனை பேரும் இனிமேல் சின்மயி வாய்ஸுக்குத்தான் ஆடுவேன் என்று கண்டிஷன் போடுமளவுக்கு வட இந்தியா முழுக்க வைரலாகி இருக்கிறாள் மேரி - See more /cinema.dinakaran.com/
சினிமாவின் ஹாட்டஸ்ட் ஹிட்டு. அக்ஷய்குமார் நடிப்பில் வரும் ஆகஸ்ட் பதினைந்துக்கு ரிலீஸ் ஆகப்போகும் ‘பிரதர்ஸ்’ படத்தின் டீசராக இந்த பாட்டு இணையத்தில் வெளியாகி, முதல் ஐந்து நாட்களிலேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.கரீனாவின் காட்டுத்தனமான இளமைக்கு வலு சேர்க்கிறது நம்மூர் சின்மயியின் போதைக் குரல். பதினைந்து ஆண்டுகளாகப் பாடிவரும் சின்மயிக்கு இதுதான் முதல் ஐட்டம் சாங். முதல் போட்டியிலேயே டபுள் செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேனைப் போல, மகத்தான வெற்றியை எட்டியிருக்கிறார். இதுவரை இந்தியில் எத்தனையோ பாடல்களை அவர் பாடியிருந்தாலும், இந்த பாட்டு பெற்றிருக்கும் அதிரிபுதிரி ஹிட் அவரை எங்கோ கொண்டு போகப்போகிறது. ஐட்டம் சாங்குக்கு ஆடப்போகும் நடிகைகள் அத்தனை பேரும் இனிமேல் சின்மயி வாய்ஸுக்குத்தான் ஆடுவேன் என்று கண்டிஷன் போடுமளவுக்கு வட இந்தியா முழுக்க வைரலாகி இருக்கிறாள் மேரி - See more /cinema.dinakaran.com/
மஹிந்தவை சந்திக்க வைத்த பின்னரே பிரபாகரனை கொன்றனர்: கருணா - .tamilmirror.lk
பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக்
கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும். இருப்பினும், அவரை
எவ்வாறு கைது செய்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. எவ்வாறாயினும்,
கைது செய்யப்பட்ட பிரபாகரன், மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச்
செல்லப்பட்டுள்ளார். அவரை மஹிந்த கடுமையாக தாக்கியுமுள்ளார் என அவரது
ஆட்சியில் இருந்த பிரபல அரசியல்வாதிகள் இருவர் என்னிடம் தெரிவித்தனர் என்று
புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும் முன்னாள்
பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்
தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'நான் அறிந்தளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஆர்.சம்பந்தன், நேர்மையான அரசியல்வாதியாவார். யதார்த்தவாதியாகச் செயற்படக்கூடியவர்.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'நான் அறிந்தளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஆர்.சம்பந்தன், நேர்மையான அரசியல்வாதியாவார். யதார்த்தவாதியாகச் செயற்படக்கூடியவர்.
ஜெயாவின் மனதில் எஸ்.எஸ். சந்திரனின் வெற்றிடத்தை நிரப்ப துடிக்கும் தினமணி வைத்தி!
எஸ்.எஸ்.சந்திரன்
ஆபாசமாக கருணாநிதியைப் பேசும் போது ஜெயா குலுங்கிச் குலுங்கிச் சிரிப்பாரே
அத்தகைய ஒரு ஆசிக்காகத்தான் இந்த கனவான் இப்படி கண்ணியத்தோடு கார்ட்டூன்
போடுகிறார்.தமிழகத்தின் அவமானங்களில் ஒன்று தினமணியின் மதி. புதுப் பெரியவாள் அல்லது சங்கராச்சாரி என்று எழுதும் ஜெயேந்திரனை கொலை புகழ் என்றோ, சொத்து திருட்டு வழக்கு புகழ் ஜெயாவை குறைந்தபட்சம் ஊழல் தலைவி என்றோ எழுதுவது இருக்கட்டும், கற்பனையில் கூட சிந்திக்கத் துப்பில்லாத இந்த ஜென்மத்திற்கு டாஸ்மாக்கால் தமிழக மக்கள் படும் துன்பத்தை விட அதை மூடுமாறு கருணாநிதி சொன்னது கொலை வெறியூட்டுகிறது என்றால் போயஸ் தோட்டத்து நாய்களே பொறாமையில் தலை குனியும் வினவு.com
கரசேவை செய்ய எதற்கு கருப்புத் துண்டு வைகோ அவர்களே?
எதுகை
மோனை என்சைக்ளோபீடியாவா இல்லை சந்தர்ப்பவாதமா இரண்டில் வைகோவிடம்
விஞ்சுவது எது என்றால் சாலமன் பாப்பையாவே திணறுவார். 22.07.2015 அன்று
மோடியை சந்தித்த வைகோ அருளியிருக்கும் பொன்மொழிகளைப் பாருங்கள். 12.30க்கு
நேரம் ஒதுக்கிய மோடி 12.00 மணிக்கே அழைத்தாராம். அப்பாயிண்ட்மெண்ட்
வாங்கியதே சாதனை மேல் சாதனையாக காட்ட வேண்டுமென்றால் அந்த இதயம்தான் எத்தனை
பெரிய வேதனையில் வாடிக் கொண்டிருக்கும்?“தினமும் உங்களை விமரிசித்து வருகிறேன். ஆனாலும் நீங்கள் எனது நண்பர். சந்திக்க நேரம் கேட்டவுடன் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி” என்று நெஞ்சம் கலங்க மோடியிடம் நெகிழ்ந்திருக்கிறார் வைகோ. ஜெயாவிடம் சந்திக்க அப்பாயின்ட் மெண்டு கேட்டுகிட்டு இருக்காராம்ல ! கிடைத்ததும் மீண்டும் உணர்ச்சி பிழம்பாக ஆயுடுவார்ல ? வடிவேலு ஏன் இன்னும் இந்த கரக்டரை படத்துல யூஸ்பண்ணல?
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீசாருக்கு ஐகோர்ட் இறுதி கெடு!
திருச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராமஜெயம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் கிளை இறுதி கெடு விதித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சியில் அதிகாலை நடைப்பயணம் செய்த ராமஜெயம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாததால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.போலீசு பம்முற பம்மல்ல இருந்து இன்னா தெரியுது ?
மலையாள நடிகை ஷில்பா மரணம் ! அவரது காதலன் கைது!
மலையாள நடிகை ஷில்பா சாவில் திடீர் திருப்பமாக, தலைமறைவாக இருந்த அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.சினிமா நடிகை
திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டை சேர்ந்தவர் ஷாஜி. இவருடைய மகள்
ஷில்பா (வயது 19) பிளஸ்–2 படித்துள்ள இவர் தமிழ், மலையாள சினிமா மற்றும்
கேரள டி.வி தொடர்களில் நடித்து வந்தார்.
‘சந்தன மழை’ உள்பட பல
தொடர்களில் நடித்துள்ள ஷில்பா தனியார் டி.வி. நிகழ்ச்சிகளில்
தொகுப்பாளராகவும் பணியாற்றினார். பாலராமபுரத்தில் பெற்றோருடன் வசித்து
வந்தார். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அடிக்கடி வெளியே
சென்று வருவது வழக்கம்.காதலனுடன் சென்றவர்
கடந்த 17–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அந்த பகுதியை சேர்ந்த பெண்ணுடன், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது ஷில்பாவின் காதலன் என்று கூறப்படுபவரும், அவருடைய சொந்த போட்டோகிராபருமான லிஜின் என்ற வாலிபரும் உடன் சென்றதாக தெரிகிறது.
வியாழன், 23 ஜூலை, 2015
நபிகள் நாயகத்தின் பேரில் திருப்புகழைப் படைத்த காசிம் புலவர்
அருணகிரிநாதர் முருகனைச் சிறப்பித்துப் பாடிய திருப்புகழை அடிக்கடி பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் திருவடிக் கவிராயர். அவருடைய மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்பார்கள். “திருப்புகழுக்கு மறு புகழ் உலகில் எங்குமே கிடையாது. உங்களால் ஒரு திருப்புகழைப் படைக்க முடியமா?” என்று மாணவர்களைக் கேட்டார். “முடியும்!” என்று முன்வந்தார் மாணவர் காசிம். “உன்னால் அதைச் செய்ய முடியாது” என்று மறுத்தார் ஆசிரியர்.
“உங்கள் ஆசி கிடைத்தால் நான் ஒரு திருப்புகழைப் பாடி முடிப்பேன்!” என்று உறுதியுடன் சொன்னார் காசிம். “உன்னால் முடிந்தால் ஒரு திருப்புகழை இயற்று!” என்று அன்புடன் கூறினார் திருவடிக் கவிராயர். இது கதையல்ல, முந்நுாறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம்.நபிகளின் முதல் வார்த்தை<
நபிகள் நாயகத்தின் பேரில் திருப்புகழைப் படைக்க முடிவு செய்தார் காசிம் புலவர் அதை எப்படித் தொடங்குவது என்ற சிந்தனை ஏற்பட்டது. அதனால், முறையாக இறைவனைத் தொழுது, நபிமணியின் நல்லாசியுடன் பாட விரும்பி, காயல்பட்டணம் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால்...இலவசத் திட்டங்களுக்கு???

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக்கு அதிகமாக இழப்பு ஏற்படும். இதன் விளைவாக இலவசத் திட்டங்களுக்கு மூடுவிழா காண நேரிடும்.
"திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற கருணாநிதியின் அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் 20% வருமானத்துக்கு வழி செய்யும் டாஸ்மாக்குக்கு மூடுவிழா காண்பது சாத்தியமா என்பது குறித்து பொதுநிதி நிபுணர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
மதுவிற்பனையும் வருமானமும்:
கடந்த 2003-04 காலகட்டத்தில் மது விற்பனையால் ஈட்டப்பட்ட வருமானம் ரூ.3,639 கோடி. 2010-11 காலகட்டதில் ரூ.14,965 கோடி, 2011-12 ரூ.18,081 கோடி, 2012-13 ரூ.21,680 கோடி, 2013-14 ரூ.21,641 கோடியாகும். நம்பியார் பாணியில்: சாய்ஸ் இஸ் யூவர்ஸ் !
27 குழந்தைகளை கொலை செய்த கொடூரனுக்கு கோர்ட் வளாகத்தில் பளார்
துளியும் மனசாட்சியின்றி பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற
தொடர் கொலைக் குற்றவாளியை இன்று டெல்லி நீதிமன்றத்தில் வைத்து மர்ம நபர்
ஒருவர் தாக்கியுள்ளார்.
6 வயது சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட,
24 வயது தொடர் கொலைக் குற்றவாளியான ரவீந்திர குமார் இன்று நீதிமன்றத்திற்கு
கொண்டு வரப்பட்டான். அவனது போலீஸ் காவலை 4 நாட்கள் நீட்டிக்க வேண்டும்
என்று போலீசார் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இதை நிராகரித்த நீதிபதி,
ரவீந்திர குமாரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த 7 நாட்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று போலீசாரிடம்
கேள்வியெழுப்பினார்.
இதற்கு, போதுமான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம் என்று பதில் சொன்ன
போலீசார், ரவீந்திர குமார் மிகக் குறுகிய காலத்தில் 27 குழந்தைகளை கொலை
செய்துள்ளதைக் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட குமாரை
நெருங்கிய சில மர்ம நபர்கள் அவனைத் தாக்க முயற்சித்தனர். அதில் ஒருவர்
அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார்.
அவர்களை போலீசார் விலக்கிவிட்டு குமாரை பத்திரமாக கொண்டு சென்றனர். இந்த
வழக்கு விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. maalaimalar.com
வணக்கம் :தமிழகத்தில் மதுவை ஒழிப்பேன் ; திருச்சி கூட்டத்தில் ராகுல் பேச்சு! ராகுல்
கொட்டும் மழையில் ராகுல் பேசுகையில்;நல்ல மழை நல்ல அறிகுறி என்றார். திருச்சி கூட்டத்தில் தமிழில் வணக்கம் சொன்ன ராகுல் , தொடர்ந்து பேசுகையில் ; கொட்டும் மழையிலும், கலையாமல் இருப்பதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.தமிழகத்திற்கு காமராஜர் பெரும் துணையாக இருந்தார். காமராஜர் குறித்து ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. காட்டுக்கு போய் வா என்று இளவரசரை அரசர் அனுப்பி வைத்தார். அங்கு என்ன பார்த்தாய் என்று அரசன் கேட்டார். அங்கு காட்டு விலங்குகள் சப்தம் போட்டதை கேட்டேன் என்றார். இன்னும் முழுமையாக எதையும் கேட்கவில்லை. இன்னொரு முறை காட்டக்கு போ என்று அனுப்பி வைத்தார். ஒரு மரத்தடியில் அமர்ந்து கவனித்தார். இயற்கை ஓசை காதில் விழுந்தது. அரசன் மீண்டும் என்ன சப்தம் கேட்டது என்று மீண்டும் கேட்டார். நான் கூர்ந்து மென்மையான ஓசை கேட்டேன், சூரிய கதிர்கள் விழுந்த சப்தம் கேட்டேன். புல் தண்ணீர் குடிக்கும் சப்தம் கேட்டேன் என்றார்.
பெண்களை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றுக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் நிலத்தை மீட்க அங்கு சென்றபோது, ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி ஆத்திரம் அடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது இடுப்பில் துப்பாக்கியை சொருகியபடி டிராக்டரில் ஏறிய அவர், அந்த பெண்களை நோக்கி டிராக்டரை இயக்கி கொல்ல முயன்றுள்ளார்.
இந்த கொடூர தாக்குதல் நடந்த இடத்திற்கு எதிரே மாவட்ட ஆட்சியரின் வீடு அமைந்துள்ளது. தகராறு ஏற்பட்டு நீண்ட நேரம் ஆன பிறகே போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்தனர்.
பெண் ரவுடி போல் நடந்துகொண்ட ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவியை மரியாதையுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் போலீசார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.nakkheeran,in
புதன், 22 ஜூலை, 2015
இந்தியாவுக்கு ரூ.645 கோடி வருவாய் ! 45 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதால்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ பிற நாடுகளின்
செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 19 நாடுகளுக்கு
சொந்தமான 45 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளதாகவும், அதன்மூலம் ரூ.645 கோடி
வருவாய் கிடைத்திருப்பதாகவும் பாராளுமன்றத்தில், மத்திய விஞ்ஞானம்
மற்றும்
தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.2017–ம்
ஆண்டுக்குள், இன்னும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவ உள்ளதால் கூடுதல்
வருவாய் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.2017–ம்
ஆண்டில் இருந்து 2020–ம் ஆண்டுக்குள், ரூ.3 ஆயிரத்து 90 கோடி மதிப்புள்ள
15 சிறியரக பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனங்களை வடிவமைக்க மத்திய அரசு
ஒப்புதல் அளித்திருப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.dailythanthi.com
கலைஞரின் பூரண மதுவிலக்க்கிற்கு அமோக வரவேற்பு! ஆதி தமிழர் பேரவை அறிக்கை!
மது விலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கலைஞர் அறிவிப்பிற்கு ஆதரவாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை
அமல்படுத்தி அதை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என தலைவர் கலைஞர்
அவர்கள் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும்
பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவுக்கு எதிராகவும், கள் இறக்க எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த காலங்களில்
பல போரட்டங்களையும், ஒன்றியம், மாவட்டம் வாரியாக "மதுஒழிப்பு"
மாநாடுகளையும் ஆதித்தமிழர் பேரவை நடத்தியுள்ளது, இப்போதும்
நடத்திவருகின்றது. இதேபோன்று பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும்
போரடிவருகின்றது, இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் இந்த
அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
கறுப்பு இன பெண் சந்திரா கைதான பின் மரணம் ! வீடியோ வெளியானது
டெக்ஸாஸில் இறந்த கறுப்பு இன பெண்ணின் மரணம் குறித்து புலனாய்வு செய்யும் அமெரிக்க பொலிஸ் விசாரணையாளர்கள், அவர் கைது செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
வீதியில் ஒரு வரிசையில் இருந்து அடுத்த வரிசைக்கு மாறும் போது சமிக்ஞை செய்ய தவறினார் என்பதற்காக சண்டிரா பிளண்ட் என்னும் போலிஸாரால் நிறுத்தப்பட்டதை போலிஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த கமெரா காட்டுகின்றது.
தன்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்று அவர் திரும்பத் திரும்ப கேட்டதை அடுத்து அங்கு போலிஸ் அதிகாரியுடனான வாக்குவாதம் திடீரென அதிகரித்தது.
பின்னர் இருவரும் கமெராவில் தெரியாத பகுதிக்கு நகர்ந்தனர். ஆனால், பின்னர் அவர்களது வாய்த்தர்க்கம், தள்ளுமுள்ளாக மாறியது கமெராவின் ஒலிப்பதிவில் கேட்கிறது.
ஒளிப்பதிவில் உள்ள பல தொடர்ச்சியற்ற இடைவெளிகள் அந்த வீடியோ எடிட் பண்ணப்பட்டுள்ளதை காண்பிக்கிறது.
சிறையில் மூன்று நாட்களின் பின்னர் பிளண்ட் அவர்கள் தானே தூக்கிட்டு இறந்ததாக மரண விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினர் ஒரு சுயாதீன விசாரணை கோரியுள்ளனர்.
இது குறித்த காணொளி. இதில் ஒலிக்குறிப்பு கிடையாது
ஏழைகளின் பழம் வாழைப்பழம்
நகரத்து வாழ்வின் பல சிக்கல்களில் ஒன்று இந்த
மலச்சிக்கல். இந்த சிக்கலை கடந்து போக நாளிதழ் படிப்பதில் ஆரம்பித்து வரவு
செலவு கணக்கு பார்ப்பதோடு கதை கவிதை என படைப்பு அவஸ்தைகளும் சங்கமிக்கும்
திருத்தலமாகவும் கழிப்பறை இருக்கிறது. குனிந்து நிமிர்ந்து ஆடி ஓடி வேலை
செய்யும் பழக்கம் மறைந்து விட்டதால் காலைக் கடனே நேரம் பிடிக்கும்
பெருங்கடனாக மாறிவிட்டது.இந்த அவஸ்தையை தீர்ந்து வைக்கும் பெரும் பங்கு வாழைப்பழத்துக்கு உண்டு. மற்ற பழங்களை விட விலை குறைவாக இருப்பதால் ஏழைப் பழம் வாழைப்பழம் என்பார்கள்.
மக்களுக்கு எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம், இதை பயிரிட எந்த காலநிலையும் ஏற்றது, சீசனுக்கு மட்டும் இல்லாமல் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பதுமாய் பல சிறப்புக்கள் அடங்கியது வாழைப்பழம். பழக்கடைகள் மட்டும் இல்லாது பெட்டிக்கடை முதல் டீக்கடை வரை வாழைப் பழத்துக்கு இடமுண்டு.
மதுவிலக்கு ! ராமதாஸ் அவர்களுக்கு கோபம் கொப்பளிப்பதேன்? துரைமுருகன் கேள்வி
“திராவிட
முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமுதாய
மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை
அமுல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அறிவித்து ஓர்
அறிக்கையை கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் 20-7-2015 அன்று வெளியிட்டார்.
இந்த
அறிவிப்பினை பல்வேறு கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர் களும், பல
ஊடகங்களும் வரவேற்று கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நற்செய்தி
ஊடகங்கள் மூலமாக உடனடியாக நாடு முழுவதும் பரவிவிட்டது. செய்தியறிந்த
தாய்மார்களும், பெரியவர்களும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துகளைத்
தெரிவித்தவண்ணமாக இருக்கிறார்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின்
நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு மட்டும் இந்த நற்செய்தி வேம்பென
கசந்திருக்கிறது. கோபம் கொப்பளிக்க அவைகள் எல்லாம் வார்த்தைகளாக
வடிவெடுத்து அவர் பெயரில் ஓர் அறிக்கையாக வெளிவந்திருக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





