பெய்ரூட்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, யாஸிடி
சிறுபான்மையின பெண்களை, அந்த பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய
கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும், பெண்களும் தற்கொலை செய்து
கொண்ட தகவலும் தெரிய வந்துள்ளது.மேற்காசிய நாடுகளான சிரியா
மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர்
போன்ற சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை கொடுத்து
வருகின்றனர்.குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி இனத்து
ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள், அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள்
மற்றும் சிறுமியரை பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின்
செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ் அடிமைகளாக மாற்றினர்.இத்தகைய
கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர்
தான். அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட, இளம் பெண்களையும்,
சிறுமியரையும் பலாத்காரம் செய்த கொடுமையும் நடந்துள்ளது. இதுதான் இந்த மதவெறியர்கள் உலகிற்கு கூறும் ஒழுக்க நெறி. இன்று நேற்றல்ல
பலநூறு ஆண்டுகளாக இந்த மத வெறியர்கள் பெண்களைப போகப் பொருளாகவே
பார்த்துவருவதன் வெளிப்பாடுதான் யாசிடிப் பெண்களின் தற்கொலை.
புதன், 24 டிசம்பர், 2014
போடோ தீவிரவாதிகள் சுட்டதில் அசாமில் 37 பேர் பலி
கவுகாத்தி: அசாமில் பல்வேறு இடங்களில் போடோ தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக
நடத்திய பயங்கர துப்பாக்கி சூட்டில் 37 பழங்குடியின மக்கள் பலியாயினர்.
அசாமில் பூர்வீக குடிமக்களுடன் போடோ இன மக்களும் வசித்து வருகிறார்கள். போடோ மக்களுக்கு தனி ‘போடோ லேண்ட்‘ மாநிலம் கேட்டு தேசிய ஜன நாயக முன்னணி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். இவர்கள் அவ்வப்போது கிராமமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 21ம் தேதி பூடான் எல்லையை ஒட்டியுள்ள சிராங் மாவட்டத்தில் 2 போடோ தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், போடோ தீவிரவாதிகள் நேற்று மாலை பயங்கர தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.
அசாமில் பூர்வீக குடிமக்களுடன் போடோ இன மக்களும் வசித்து வருகிறார்கள். போடோ மக்களுக்கு தனி ‘போடோ லேண்ட்‘ மாநிலம் கேட்டு தேசிய ஜன நாயக முன்னணி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். இவர்கள் அவ்வப்போது கிராமமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 21ம் தேதி பூடான் எல்லையை ஒட்டியுள்ள சிராங் மாவட்டத்தில் 2 போடோ தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், போடோ தீவிரவாதிகள் நேற்று மாலை பயங்கர தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.
ஓசூர் பஸ்நிலைய போலீஸ் கட்டுபாட்டு அறையில் 3 வடநாட்டு பெண்களை போலீசே பாலியல் ........
Two women and two children from a migrant Rajasthani community were
allegedly sexually abused by a Grade-I police constable at the Hosur
police outpost late on Wednesday.ஓசூர் பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் ராஜஸ்தான்
பெண்களை பிடித்துச்சென்று பாலியல் கொடுமை செய்ததாக போலீஸ்காரருக்கு எதிரான
குற்றச்சாட்டை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு, சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவி
உ.வாசுகி, தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
பாலியல் கொடுமை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் 8–ந்தேதி
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 பெண்கள் 2 சிறுமிகளுடன் காத்திருந்தனர்.
அப்போது, ஓசூர் போலீஸ் நிலைய ஏட்டு வடிவேலு, அந்த பெண்களில் சிலரை புறநகர்
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று பணத்தை பறித்து, அவர்களை
பாலியல் கொடுமையும் செய்துள்ளார். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி
வெளியானதும், ஏட்டு வடிவேலுவை போலீசார் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.
பெண்கள் எங்கே?
செவ்வாய், 23 டிசம்பர், 2014
அடிபட்ட குரங்கை போராடி மீட்ட ஹீரோ குரங்கு (வீடியோ இணைப்பு)
மின்சாரக் கம்பியில் அடிபட்டு தண்டவாளத்தில் விழுந்த தனது நண்பனை தூக்கி
ஆசுவாசப்படுத்தி 20 நிமிடங்கள் விடாமல் போராடி சுயநினைவைக் கொண்டு வந்து
காப்பாற்றிய ஹீரோ குரங்கு பற்றியது தான் இந்த செய்தி.
கான்பூர் ரயில் நிலையத்தில் ஓடித் திரிந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் அடிபட்டு மயக்கமடைந்து தண்டவாளத்தில் விழுந்தது.
கான்பூர் ரயில் நிலையத்தில் ஓடித் திரிந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் அடிபட்டு மயக்கமடைந்து தண்டவாளத்தில் விழுந்தது.
காவிக் கொடி? ஒவ்வொன்றாக வெளிவரும் அசிங்கங்கள்?
ஆக்ராவிலும் அலிகாரிலும் பிற மதத்தினரை இந்துக்களாக மாற்றம் செய்யத்
தொடங்கியபோது ‘இது இந்துத்துவத்தின் ஆட்டம்’ என்று எதிர்கட்சிகள்
குற்றம்சாட்டின. பாராளுமன்றம் முடங்கிய போதும் கூட பெரும்பாலானவர்களுக்கு
இந்த மதமாற்றத்தின் பின்னணி தெரியவில்லை. வெளிநாடுகளுக்கு பறந்து
கொண்டிருந்த நரேந்திரமோடியும் பட்டும்படாமலும் பதில் சொன்னாரே தவிர
அழுத்தமான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை. பிரதமர் ஏன் பாராளுமன்றத்தில்
பேசுவதேயில்லை எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது
காவியணிந்த எம்.பிக்கள் மிகக் காட்டமாக பதில் சொன்னார்கள். மோடிக்கு
ட்விட்டரில் பதில் சொல்லத்தான் நேரமிருக்கிறது என்ற கிண்டல்களும் எழுந்தன.
எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? குஜராத், டெல்லி என பெரும்பாலான இடங்களில்
காவிக் கொடியைப் பறக்கவிடுகிறார்கள். இதுவரை மதச்சார்பற்ற நாடு என்று
உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின்
தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். எம்பிக்கள் வெறியெடுத்துப்
பேசுகிறார்கள். திட்டம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் இது திருடிக்கொண்டே இருக்கும்
Kashmir மெகபூபா கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபைதான்
உருவாகியிருக்கிறது. மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 28
இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க 25 இடங்களில் வென்றுள்ளது. இப்படி எந்த
கட்சி ஆட்சி அமைக்கும் என்ற குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதால் ஜம்மு
காஷ்மீர் அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.
87 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் 5
கட்டங்களாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கட்சிகள்
வென்ற இடங்கள் விவரம்:
காஷ்மீர்: மெஹ்பூபா கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி? ஆதரவு தரப் போவது யார்?
குழப்பம் ஆரம்பம்!
மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) - 28
பாரதிய ஜனதா கட்சி - 25
தேசிய மாநாட்டு கட்சி (என்.சி) - 15
காங்கிரஸ் -12
மக்கள் மாநாட்டு கட்சி -2
சி.பி.எம்- 1
சுயேட்சைகள் - 3
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக முன்னணி - 1
பி.டி.பி.ஆட்சி? 'கமிட்' பண்ணாத கட்சிகள்
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி 44 இடங்களைப் பெற்ற கட்சிதான் ஆட்சி அமைக்க
முடியும். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்த ஒரு கட்சியுமே தனித்து
ஆட்சி அமைக்கவே முடியாத 'தொங்கு சட்டசபை' நிலை ஏற்பட்டுள்ளது.Kashmir
இயக்குநர் கே.பாலச்சந்தர் காலமானார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட
அவர், சிகிச்சை பலனின்றி 23.12.2014 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு
வயது 84.மேடை
நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த கே.பாலச்சந்தர் 1965-ல்
வெளியான நீர்க்குமிழி மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரஜினிகாந்த்,
கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை அறிமுகம் செய்தவர்.மனித
உறவுச் சிக்கல்களுடன் சமூகப் பார்வை கொண்ட எதிர் நீச்சல், சிந்து பைரவி,
அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம்
சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை உள்ளிட்ட படைப்புகளைத்
தந்தவர்.திரைப்படத்
துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, கே.பாலச்சந்தருக்கு 1987-ல் மத்திய
அரசின் பத்மஸ்ரீ விருதும், 2010-ல் தாதா சாகேப் பால்கே விருதும்
வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாகபூமி தான் கத்தி ? குறும்பட இயங்குனர் வழக்கு! முருகதாஸ் விஜய் மீது வழக்கு!
விஜய்யின் கத்தி கழுத்தில் மீண்டும் கத்தி குறும்பட இயக்குநர் கண்ணீர் கத்தி
திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட 5பேர் மீது
2கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு குறும்பட இயக்குனர் அன்பு.ராஜசேகர் வழக்கு
தொடுத்திருக்கிறார். தாகபூமி என்ற குறும்படத்தை இயக்கிய அன்பு.ராஜசேகருக்கு
"கத்தி"யால் என்ன பிரச்சினை?.தஞ்சை
மாவட்டம், இளங்காடு பகுதியை சேர்ந்த தாகபூமி குறும்பட இயக்குனர் மற்றும்
தயாரிப்பாளரான அன்பு.ராஜசேகர் தஞ்சையில் அளித்த பேட்டி வருமாறு:-விவசாயிகளின்
அவலநிலை, விவசாயிகளின் தற்கொலை பற்றிய கதையாகத்தான் தாகபூமி என்ற
குறும்படத்தை கடந்த 24.12.2012 அன்று தயாரித்து வெளியிட்டேன். 2012 மார்ச்
10ஆம் தேதி நார்வே தமிழ்பட விழாவில் தாகபூமி இந்தியா சார்பாக
தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. மாநில அளவில் நடைபெற்ற குறும்பட
போட்டியில் இயக்குநராக இருந்த மறைந்த பாலுமகேந்திரா-வால் விருதுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டது, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்ளிட்ட பலர்
முன்னிலையில் படம் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் பெற்றேன்
PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா ! தமிழில் இப்படியொரு படத்தை எடுப்பார்களா?’
வே.மதிமாறன்
மதமற்றவனாகக் காட்டுவதற்கும் மதங்களைக்
கேலி செய்து கிழிப்பதற்கும் ‘வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன்’ என்ற
நாயகனின் அடையாளம் ரொம்பப் புத்திசாலித்தனம்.
‘அறிவாளியாக’ மதங்களை அம்பலப்படுத்தும்போது
எழுகிற எதிர்ப்பு, ‘அப்பாவியாக’ கேட்கிற கேள்விகளில் மதங்கள் கிழிந்துத்
தொங்குவதை மதவாதிகளே கை தட்டி வரவேற்கிற முறையாக மாறிவிடுகிறது.
நாயகனின் ‘வெகுளி’த்தனம்; இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி அறிவாளி, மாமேதை என்பதை அடையாளப்படுத்துகிறது.
இவரின் முந்தைய படங்களான Munna Bhai M.B.B.S. – 3 Idiots படங்களை விட ‘PK’ மிகச் சிறப்பான படம் மட்டுமல்ல, மிகத் தைரியமான படம்.
இவரின் முந்தைய படங்களான Munna Bhai M.B.B.S. – 3 Idiots படங்களை விட ‘PK’ மிகச் சிறப்பான படம் மட்டுமல்ல, மிகத் தைரியமான படம்.
தேர்தல் முடிவுகள் : ஜார்கண்டில் பாஜ வெற்றி; ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்
பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஜார்கண்டில் பெரும்பான்மையான
இடங்களில் பாஜ முன்னணியில் உள்ளது. இங்கு பாஜ ஆட்சி அமைப்பது உறுதியாகி
விட்டது. ஜம்முகாஷ்மீரில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல்
இழுபறி நிலை காணப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில்
கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை 5
கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 5 கட்டங்களிலும் பதிவான வாக்குகளின்
எண்ணிக்கை இன்று மொத்தமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜம்மு
காஷ்மீரில் மொத்தமுள்ள 87 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 821 வேட்பாளர்கள்
களத்தில் இருந்தனர். முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான ஆளும் தேசிய
மாநாட்டு கட்சி, முக்கிய எதிர்கட்சியான முப்தி முகமது சயீதின் மக்கள்
ஜனநாயக கட்சி, மற்றும் காங்கிரஸ், பாஜ ஆகியவற்றிற்கு இடையே கடும் போட்டி
நிலவியது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை
வாக்குபதிவு சதவீதம் அதிகரித்தது. 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1–ந் தேதி.
நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி
திட்டத்தை அறிவித்தது. இத்ன்படி, 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட
ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால்,
2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து
பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி
ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது இந்த உத்தரவின்படி பொதுமக்கள் தங்களிடமுள்ள, 2005–ம் ஆண்டுக்கு முன்பாக
அச்சிடப்பட்ட 500 ரூபாய், 1,000 ரூபாய் உள்ளிட்ட அனைத்து மதிப்பிலுமான
ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ்
வங்கி அறிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி முன்னணியில் ! மெஹபூபா சையத் முதல்வர் ஆவாரா ? பாஜக கடும் போட்டி!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு
எண்ணிக்கையில் பாரதீய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி
நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 5 கட்டமாக நடந்தது.
காஷ்மீரில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள்
பதிவாகியது. இது கடந்த 2008–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பதிவானதை விட 4
சதவீதம் அதிகம் ஆகும். தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு
விடுத்திருந்த போதும், வாக்காளர்கள் அதை பொருட்படுத்தாமல் திரளாக
வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
காஷ்மீரில் தற்போது முதல்–மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த போதிலும், சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.
காஷ்மீரில் தற்போது முதல்–மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த போதிலும், சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.
சுங்க கட்டணம் செலுத்துவதில் தனியார் வாகனங்களுக்கு விலக்கு: இழப்பை ஈடு செய்ய பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம்!
புதுடில்லி: பஸ், கார், ஜீப் உள்ளிட்ட, வர்த்தக பயன்பாடு அல்லாத
தனியார் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு
அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய,
பெட்ரோல், டீசல் விற்பனையில் கூடுதல் வரி விதிக்கவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், அனைத்து
வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை பராமரிப்பு
பணிகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, முக்கிய
நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா உள்ளிட்ட
மாநிலங்களில், சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, அரசியல் கட்சிகள் கடும்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் கூட, சென்னை - பெங்களூரு
நெடுஞ்சாலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்யாவிட்டால் சுங்க கட்டணம்
வசூலிப்பதை தடை செய்ய வேண்டி வரும் என, சென்னை உயர்நீதி மன்றம் கடந்த வாரம்
எச்சரித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, சுங்கச் சாவடிகளில் அடிக்கடி
தகராறு ஏற்படுகிறது. அட பாவிகளா.... கார்ல போறவனுக்கு சலுகை கொடுத்து... அத பைக்ல போறவன் தலைல
கட்டப்போறீங்க.... அதாவது பணக்கார குடும்பத்துக்கு சலுகை.... நடுத்தர
குடும்பத்துக்கு சுமை. நல்லா நடத்துறீங்க ஆட்சி..... எல்லாம் ஓட்டு போட்ட
எங்களை சொல்லனும்.....
EVKS.இளங்கோவன் : கிரிமினல் பின்னணி கொண்ட அமித்ஷா பாஜகவின் தேசியத்தலைவர்!
தமிழக
காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சென்னைக்கு
வருகை புரிந்த பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷா மறைமலை நகரில் நடந்த
பொதுக்கூட்டம் ஒன்றில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ்
கட்சிக்கு எதிராக சுமத்தியிருக்கிறார் ஒரு
தேசிய கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதியே இல்லாதவர் அமித்ஷா. 2005–ல்
குஜராத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் எண்கவுண்டர் வழக்கில் அன்றைய குஜராத்
மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா கைது செய்யப்பட்டு சபர்மதி
சிறையில் அடைக்கப்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாத மூன்று
மாத சிறை வாசத்திற்கு பிறகு குஜராத்தில் நுழையக்கூடாது. மும்பை
மாநகரத்தில் தான் தங்கியிருக்க வேண்டுமென்று நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே
வந்தவர் தான் இன்றைய பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் அமித்ஷா. இத்தகைய
கிரிமினல் பின்னணி கொண்டவரை வைத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டில் காலூன்ற கனவு
காண்கிறார்கள்.
பன்னீரின் உறவினர்கள் செயல்படுகிறார்கள்? அமைச்சர்கள் பூஜை வேண்டுதல் யாகம் அர்ச்சனை?
எல்லாத் துறைகளிலும் முதல்வர் பன்னீர்செல்வம் பெயரைச் சொல்லி, பலரும்
தலையிடுவதால், தாங்கள் முழுமையாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக,
அமைச்சர்கள் பலரும் புலம்ப ஆரம்பித்திருக்கும் விஷயம், தலைமை செயலக
வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறத
ஆட்சி பொறுப்பு:கடந்த,
2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில், அ.தி.மு.க.,
பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. ஜெயலலிதா முதல்வராக
பொறுப்பேற்றார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்ததால், ஜெயலலிதா,
முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ., பொறுப்பையும் இழந்தார். புதிய முதல்வராக,
நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக
பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக
இருந்தவர்களே, மீண்டும் அமைச்சர்களாயினர்.
தனுஷ்கோடி புயல் தாக்கி 50 ஆண்டுகள் நிறைவு: உயிர்தப்பிய ரெயில் டிரைவர் உருக்கமான பேட்டி
இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி நகரத்தை கடந்த 1964-ம் ஆண்டு
டிசம்பர் 22ம் தேதி கடுமையான புயல் தாக்கியது. புயல் கரையை கடந்தபோது,
எழுந்த ராட்சத அலை அந்த நகரத்தை மூழ்கடித்தது. இதில், ஏராளமானோர்
பலியாகினர். சென்னையில் இருந்து சென்ற போட் மெயில் என்ற ரெயிலும் அலையில்
இழுத்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வாணிப நகரமாக இருந்த தனுஷ்கோடி இந்த புயலில் முற்றிலுமாக அழிந்து விட்டது. புயலில் இருந்து தப்பித்த மானாமதுரை ரெயில்வே காலனியில் இருக்கும் ஓய்வு பெற்ற ரெயில் என்ஜின் டிரைவரான ராமமூர்த்தி (வயது 85) சோகத்துடன் கூறியதாவது:–
தனுஷ்கோடி ரெயில் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தபோது நான் உதவி டிரைவராக இருந்தேன். தினமும் சென்னையில் இருந்து இரவில் வரும் ரெயிலில் பணிபுரிந்து வந்தேன். அந்த ரெயிலை ‘போட் மெயில்’ என்று அழைப்பார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வாணிப நகரமாக இருந்த தனுஷ்கோடி இந்த புயலில் முற்றிலுமாக அழிந்து விட்டது. புயலில் இருந்து தப்பித்த மானாமதுரை ரெயில்வே காலனியில் இருக்கும் ஓய்வு பெற்ற ரெயில் என்ஜின் டிரைவரான ராமமூர்த்தி (வயது 85) சோகத்துடன் கூறியதாவது:–
தனுஷ்கோடி ரெயில் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தபோது நான் உதவி டிரைவராக இருந்தேன். தினமும் சென்னையில் இருந்து இரவில் வரும் ரெயிலில் பணிபுரிந்து வந்தேன். அந்த ரெயிலை ‘போட் மெயில்’ என்று அழைப்பார்கள்.
Sony இணையதளத்தை வடகொரியா முடக்கியது! அமேரிக்கா கடும் கோபம்?
சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை வடகொரியா முடக்கியது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் பற்றி அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் பட நிறுவனம் ‘தி இன்டர்வியூ’ என்னும்
திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் வடகொரியா அதிபரை கொலை செய்வதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம் 2
செய்தியாளர்களை வாடகைக்கு நியமிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வருகிற 25-ந் தேதி
உலகமெங்கும் திரையிடப்பட முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதனிடையே தங்கள் நாட்டு தலைவரை கேலி செய்து படமாக எடுத்திருப்பதை விரும்பாத வட கொரியாவின்
‘அமைதியின் பாதுகாவலர்கள்’ என்ற அமைப்பினர், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கினர்.
திங்கள், 22 டிசம்பர், 2014
மீண்டும் இந்தி / சம்ஸ்கிருத திணிப்பு? Email SMS ATM Slips All should be in which language? Braille?
இந்தி மொழி திணிப்பு மற்றும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிப்பிரிவு பொதுத் துறை வங்கிகளுக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில், பணப் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களுக்கு
அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், செல்போன் குறுந்தகவல்கள் இந்தி மொழியில்
இருப்பதை உறுதி செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக
ஏடுகளில் செய்தி வந்துள்ளன.
இது போலவே ஏ.டி.எம். இயந்திரங்களில் வழங்கப்படும் “ஸ்லிப்”களிலும் இந்தி
மொழியைப் பயன்படுத்த வேண்டுமென்று வங்கிகளுக்கு மத்திய அரசு பரிந்துரை
செய்திருக்கிறது. மேலும் வங்கிகளின் இணைய தளங்கள், மற்றும் மொபைல்
விண்ணப்பங்களிலும் இந்தி மொழியைப் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
எடுத்து வருவதாகச் செய்தி வந்துள்ளது. நாம் எத்தனை முறை கண்டனம் தெரிவித்த
போதிலும், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதில் பா.ஜ.க. அரசு
தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இப்படியே பாஜக இந்துத்வா போக்கில் போனால் திமுக இழந்த செல்வாக்கைஎல்லாம் மீண்டும் பெற்றுவிடும்,நல்லது பார்பனீயம் வாழ்க! காவி வாழ்க! வி ஹெச் பி வாழ்க!அசோக் சிங்கால் வால்க வால்க வால்க!
சென்னை ஆசிரியரிடம் பட்டபகலில் கத்தியை காட்டி வழிப்பறி !
Daylight robbery in chennai street . A man threaten a teacher with knife ,she gave all her jewels and money to save herself. சென்னையில் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
தனியாக செல்லும் பெண்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் செல்லும் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியும் மிகவும் துணிச்சலுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் துரைப்பாக்கம் பகுதியில் மொபட்டில் சென்ற ஆசிரியை ஒருவரை டிப்–டாப் ஆசாமி ஒருவன், கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் செல்கிறான். அந்த காட்சிகளை தனது வீட்டு மாடியில் இருந்தபடியே கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அந்த காட்சிகளின் விவரம் வருமாறு:–
சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பேட்டை 10–வது தெருவில் வசித்து வருபவர் வேலம் (39) அதே பகுதியில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
தனியாக செல்லும் பெண்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் செல்லும் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியும் மிகவும் துணிச்சலுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் துரைப்பாக்கம் பகுதியில் மொபட்டில் சென்ற ஆசிரியை ஒருவரை டிப்–டாப் ஆசாமி ஒருவன், கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் செல்கிறான். அந்த காட்சிகளை தனது வீட்டு மாடியில் இருந்தபடியே கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அந்த காட்சிகளின் விவரம் வருமாறு:–
சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பேட்டை 10–வது தெருவில் வசித்து வருபவர் வேலம் (39) அதே பகுதியில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
அரவிந்தர் ஆஸ்ரம பெண் பலாத்காரம்! குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம்!
புதுவை அரவிந்தர்
ஆசிரம பெண் லதா (வயது 39) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது சகோதரிகள்
மற்றும் பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காலாப்பட்டு
கடற்கரைக்கு சென்றபோது தன்னை 2 பேர் கற்பழித்ததாக காலாப்பட்டு போலீசில்
புகார் செய்திருந்தார். மேலும் தனது கையில் அணிந்திருந்த பஞ்சலோக மோதிரம்
மற்றும் வெள்ளி மோதிரம் உள்பட 5 மோதிரங்களை காணவில்லை என்றும் புகாரில்
கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை அப்பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் யார்? யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை அப்பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் யார்? யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
குஷ்பூ ராஜ்யசபா எம் பி ? அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்?
Kushboo for Rajya Sabha plus congress spokesperson? டெல்லி: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்புவை
ராஜ்யசபா எம்.பியாக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் உலா
வருகிறது.
ஆரம்பத்தில் ஜெயா டிவியின் முக்கியப் புள்ளியாக திகழ்ந்தவர் குஷ்பு.
பின்னர் கற்பு குறித்த கருத்தால் ஏற்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில்
சிக்கினார். அதன் பின்னர் அவர் மீது சரமாரியாக வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால் இந்த வழக்குகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தால் ஒரே உத்தரவின் மூலம்
தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த உத்தரவைப் பிறப்பித்தது அப்போது தலைமை
நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச். அதன் பின்னர்
அவர் காங்கிரஸில் சேரப் போவதாக அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் யாரும்
எதிர்பாராத வகையில் திமுகவுக்கு வந்து சேர்ந்தார் குஷ்பு.
அசோக் சிங்கால் :இந்து மத நெறிகள் மீண்டும் நிலைநாட்டப்படும்! அப்படியே ஜாதி நெறி முறைகளும்???
800
ஆண்டுகளுக்குப் பின்னர் இந்துத்துவத்தை பாதுகாக்கக் கூடிய அரசு
அமைந்துள்ளதாகவும், நாட்டில் இந்து மத நெறிகள் மீண்டும் நிலைநாட்டப்படும்
என்றும் விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால்,
துள்ளது என்று கூறக்கூடிய நாள் தற்போது
வந்துள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து அகற்றப்பட்ட
இந்துக்களின் சாம்ராஜியத்தை மீண்டும் அமைப்பதற்காக கடந்த 50 ஆண்டுகளாக
போராட்டம் நடத்தப்பட்டது.
அமித் ஷா :முதல்வர் வேட்பாளரை (நிர்மலா சீதாராமன்?)அறிவித்து விட்டு சட்டபேரவை தேர்தலை சந்திப்போம்
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு
2016 சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி
எதிர்கொள்ளும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள அவர், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியது:
நாடு முழுவதும் தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் 10 கோடி உறுப்பினர்களையும், தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களையும் புதிதாகச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள அவர், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியது:
நாடு முழுவதும் தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் 10 கோடி உறுப்பினர்களையும், தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களையும் புதிதாகச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
போலீசாரின் மாமுலுக்கு வழிசெய்யும் திருட்டு சிடி வேட்டை! போலிஸ் மீது மனு தாக்கல்!
சென்னை ஐகோர்ட்டில் மூவிலேண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
>
எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஆயிரத்து 891 சினிமாக்களின் வீடியோ, டி.வி.டி., எம்.பி.3 போன்றவற்றுக்கான
காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் வி.சி.டி., டி.வி.டி. வடிவில் எங்களின்
ஏஜெண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்கப்படுகின்றன.
ஆனால் முகவர்களை திருட்டு வீடியோ ஒழிப்பு போலீசார் தேவையில்லாமல் துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது
வழக்கு பதிவு செய்கின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். அதில் எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் நிறுவனத்தின் சார்பில் டி.வி.டி., சி.டி. விற்பனை செய்கிறவர்கள்
மீது நடவடிக்கை எடுப்பதை தடுத்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிக்கிறார். இந்த நிலையில் மனுவுக்கான பதில்மனுவை திருட்டு
வீடியோ தடுப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி சார்பில் கூடுதல் அரசுப் பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல்
செய்தார். முதல்ல திருட்டுதனமா அதிக விலைக்கு டிக்கெட்டுக்கள் விற்பதை தடை செய்யவேண்டும் அப்புறமா திருட்டு சிடியை தேடுங்க. நடிகருங்க படங்களை பில்டப் பண்ணி ஜனங்களை முட்டாளாக்கி அதிகவிலைக்கு டிக்கெட்டுக்களை விக்கிறத யாரும் கண்டுக்கிறதில்லை ஏன்?
வதேரா கைது செய்யப்படலாம்? பிரியங்காவின் மோசடி கணவன் மீது சட்டம் பாய்கிறது?
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா,
அரியானா மாநிலத்தில் செய்த நில முறைகேடுகளால், அவருக்கு இரண்டாண்டு சிறை
தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த மாநில நில உச்சவரம்பு சட்டத்தை மீறி,
146 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரராக விளங்கும் ராபர்ட் வாத்ரா மீதான
விசாரணையின் பிடி இறுகி வருவதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என,
கூறப்படுகிறது.
டில்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில், சில
மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆட்சியிலிருந்த, முதல்வர்
பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து,
எம்.எல்.கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்றது.பா.ஜ., அரசு
பொறுப்பேற்கும் முன், ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடுகளை
அம்பலப்படுத்தினார், அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அதனால்,
அப்போதைய காங்கிரஸ் அரசின் கோபத்திற்கு ஆளான அவர், மூன்றாண்டுகளில், பல
முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திருமணத்தின் போது, சில லட்சம் ரூபாய் சொத்துகள் மட்டுமே வைத்திருந்த
வாத்ராவுக்கு இப்போது, 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன. அதானி ஒரு 10 வருஷத்திற்கு முன்பு எப்படி இருந்தார் இப்போது எப்படி
இருக்கிறார், ஒரு வேளை ஆட்சி மாறினால் சுவாமியே இந்த விஷயத்தை கிளப்புவார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




