செவ்வாய், 23 டிசம்பர், 2014

சுங்க கட்டணம் செலுத்துவதில் தனியார் வாகனங்களுக்கு விலக்கு: இழப்பை ஈடு செய்ய பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம்!

புதுடில்லி: பஸ், கார், ஜீப் உள்ளிட்ட, வர்த்தக பயன்பாடு அல்லாத தனியார் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, பெட்ரோல், டீசல் விற்பனையில் கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை பராமரிப்பு பணிகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, முக்கிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் கூட, சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்யாவிட்டால் சுங்க கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டி வரும் என, சென்னை உயர்நீதி மன்றம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, சுங்கச் சாவடிகளில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.   அட பாவிகளா.... கார்ல போறவனுக்கு சலுகை கொடுத்து... அத பைக்ல போறவன் தலைல கட்டப்போறீங்க.... அதாவது பணக்கார குடும்பத்துக்கு சலுகை.... நடுத்தர குடும்பத்துக்கு சுமை. நல்லா நடத்துறீங்க ஆட்சி..... எல்லாம் ஓட்டு போட்ட எங்களை சொல்லனும்.....
இதனால், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இதையடுத்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான நிதின் கட்காரி, புதிய திட்டத்தை தீட்டியுள்ளார். இந்த திட்டத்தின்படி, பஸ் மற்றும் தனியாருக்கு சொந்தமான, வர்த்தக பயன்பாடு அல்லாத, கார், ஜீப், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், பிரதமரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், இதற்கு சாதகமாகவே பதில் அளித்துள்ளது. இந்த திட்டம் குறித்து, விரிவான அறிக்கை அளிக்கும்படி, சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு, பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. 'இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில், மத்திய அரசுக்கு, 26,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடு செய்ய, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விற்பனையின் போது, கூடுதல் வரி விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.>இழப்பை ஈடுசெய்வது எப்படி?

1 வர்த்தக பயன்பாடு அல்லாத தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், அரசுக்கு, 26,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
2 இந்த இழப்பை ஈடு செய்ய, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின்போது, சாலை பராமரிப்புக்காக, லிட்டருக்கு, தலா, ஒரு ரூபாய் கூடுதலாக வரி வசூலிக்கப்படும்.
3 புதிதாக கார் வாங்குவோரிடமிருந்தும், காரின் மொத்த விலையில், 2 சதவீத தொகை, ஒரே தவணையாக சுங்க கட்டணமாக பெறப்படும்.
4 ஏற்கனவே கார் வைத்துள்ளவர்களிடமிருந்து, இதற்காக, 1,000 ரூபாய் பெறப்படும்.
5 இவ்வாறு கூடுதலாக வசூலிக்கப்படும் வரி மூலம், அரசுக்கு 32,000 கோடி ரூபாய் கிடைக்கும்.
6 இந்த தொகை, சுங்க கட்டண விலக்கு அளிப்பதால் ஏற்படும் இழப்பை விட, 6,000 கோடி ரூபாய் அதிகம்.



விலக்குக்கு காரணம் என்ன?



கட்டணம் வசூலிப்பதற்காக, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏராளமான வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால், நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து வர்த்தக பயன்பாடு அல்லாத வாகனங்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க முடியும் என்பது, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் திட்டம்.தினமலர்.com

கருத்துகள் இல்லை: