செவ்வாய், 23 டிசம்பர், 2014

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி முன்னணியில் ! மெஹபூபா சையத் முதல்வர் ஆவாரா ? பாஜக கடும் போட்டி!


ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 5 கட்டமாக நடந்தது. காஷ்மீரில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியது. இது கடந்த 2008–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பதிவானதை விட 4 சதவீதம் அதிகம் ஆகும். தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்திருந்த போதும், வாக்காளர்கள் அதை பொருட்படுத்தாமல் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
காஷ்மீரில் தற்போது முதல்–மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த போதிலும், சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.
எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியும், பாரதீய ஜனதாவும் தனித்தே போட்டியிட்டன. மாநிலத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

முதல்கட்ட நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 87 சட்டசபை தொகுதிகளில், 72 தொகுதியில் தெரியவந்துள்ள முன்னிலை நிலவரப்படி,  மக்கள் ஜனநாயக கட்சி 30 தொகுதியிலும், பாரதீய ஜனதா 22 தொகுதியிலும், காங்கிரஸ் 6 தொகுதியிலும், தேசிய மாநாட்டு கட்சி 12 தொகுதியிலும் மற்றவை ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஜார்கண்டில்(மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள்) பாரதீய ஜனதா 21 தொகுதியிலும், காங்கிரஸ் 2 தொகுதியிலும்,  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 5 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன.dailythanthi.com

கருத்துகள் இல்லை: