திங்கள், 26 ஆகஸ்ட், 2013

Khushboo: ரம்யாவின் வெற்றி சில ஆண்களுக்கு பொளேர்னு இருக்கிறது! சபாஷ் ! குஷ்பூ மாம் எங்கே அடிக்கிறீர்கள் என்று புரிகிறது good

சென்னை: நடிகை ரம்யா லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி தருகிறது. இது, அவர் குறித்து கீழ்த்தரமாக கேள்விகளை கேட்ட சில ஆண்களின் முகத்தில் விழுந்த அடியாகும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குத்து ரம்யா கர்நாடக லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸில் பல காலம் உள்ள ரம்யா இதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்துள்ளார். இந்நிலையில் ரம்யாவின் வெற்றி குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நடிகை ரம்யா லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி தருகிறது. இது, அவர் குறித்து கீழ்த்தரமாக கேள்விகளை கேட்ட சில ஆண்களின் முகத்தில் விழுந்த அடியாகும். பெண்கள் அரசியலுக்கு வந்து பெண்கள் மரியாதை மற்றும் கௌரவத்துடன் வாழ சிறந்த சமூகம் கிடைக்க போராட வேண்டும். இதை ரம்யா துவங்கியதில் மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

மகனுடன் பழகியதால் தலித் சிறுவனை கத்தியால் குத்திய ஜாதிதந்தை

மகனுடன் நட்பாக பழகியதால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரையைச் சேர்ந்த அந்த சிறுவன், தனியார் பள்ளியொன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவனும், அதேபகுதியைச் சேர்ந்த கார்த்தி என்ற சிறுவனும் நண்பர்களாகப் பழகி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கார்த்தியிடம் தலித் சிறுவன் தொடர்ந்து பேசிவந்ததால், ஆத்திரமடைந்த கார்த்தியின் தந்தை மணி, கடந்த 21ஆம் தேதி, தலித் சிறுவனை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்தக் காயமடைந்த அந்த சிறுவன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது கை, கன்னம், காது உள்ளிட்ட 30 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அலங்காநல்லூர் காவல்நிலைய காவலர்கள் மீது, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, தமது மகளை தலித் சிறுவன் கேலி செய்ததாக மணி தரப்பில் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள் webdunia.com

18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் சம்மத பாலுறவு வைப்பது குற்றம் ஆகாது டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன், அவரது சம்மதத்துடன் ஒரு ஆண் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் இல்லை என்று டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
வாலிபர் விடுதலை
தலைநகர் டெல்லியில் 15 வயது பெண் ஒருவரை கடத்தி கற்பழித்ததாக 22 வயது வாலிபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கை டெல்லி கூடுதல் செசன்சு நீதிபதி தர்மேஷ் சர்மா விசாரித்து வந்தார்.
விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபரை விடுதலை செய்து அவர் தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி அச்சம்
தீர்ப்பு விவரம் வருமாறு:–
இந்த வழக்கில் டெல்லி போலீசாரும், டெல்லி மகளிர் ஆணையமும், சமீபத்தில் இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டப்படி (குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின்படி) 13 வயது முதல் 18 வயது வரையிலான பருவ வயதினர் எந்த விதமான செக்ஸ் உறவும் வைத்துக்கொள்ள ஒட்டுமொத்த தடை வேண்டும் என்றார்கள்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டால், 18 வயதுக்கு உட்பட்ட எந்த ஒரு தனி நபரின் உடலும் அரசின் சொத்தாகி விடும், 18 வயதுக்குட்பட்ட தனி நபர் மற்றொருவருடன் உடல் இன்பம் அனுபவிக்க முடியாமல் போய் விடும் என அஞ்சுகிறேன்.

பெண் மீது உடைத்த பீர் பாட்டிலை வைத்து பலாத்காரம் செய்தான்

 மும்பை பெண் புகைப்பட நிபுணர் பலாத்கார வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர். சந்த் பாபு சத்தார் சேக் என்ற முகமது அப்துல், விஜய் ஜாதவ், சிராஜ் ரெஹ்மான் சேக், காசிம் பங்காலி, முகமது சலீம் அன்சாரி ஆகியோர் ஆவர்.கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது. பெண் புகைப்பட நிபுணரை பீர் பாட்டிலை உடைத்து, அதை அவரது கழுத்தில் வைத்து மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொடூர இந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், இந்த ஆபாச காட்சியை வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளனர்.டந்த சம்பவத்தில் காசிம் பங்காலி கொடூர குற்றவாளி ஆவான். அவன் அந்த பெண்ணை இரு முறை பலாத்காரம் செய்துள்ளான். போலீசார், சம்பவ இடத்தில் கிடந்த உடைந்த பீர் பாட்டிலையும், முதலில் பிடிபட்ட முகமது அப்துலின் உடை உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர். கைதான 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகாராஷ்டிரா: மாந்திரீகம் பில்லி சூனியம் சாமியாடுதல் தடை! அரசு அவசர சட்டம் !

இது போன்ற சட்டம் இந்திய முழுமைக்கும் கொண்டு வரவேண்டும்
மும்பை : மகாராஷ்டிராவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் மற்றும் இதர மூட பழக்க வழக்கங்களை தடுக்க, அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மந்திர, தந்திர வேலைகள் மற்றும் பில்லி, சூனியங்களில் ஈடுபடுவோருக்கு, இந்தச் சட்டப்படி, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.புனேயை சேர்ந்த சமூக ஆர்வலர், நரேந்திர தபோல்கர், 68. "மகாராஷ்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி' என்ற அமைப்பை நிறுவி, மூட பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தார். மாந்திரீகம், பில்லி, சூனியம் மற்றும் மாயாஜால வித்தைகள் மூலம் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக, அரசு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வந்தார். இந்நிலையில், 20ம் தேதி, தபோல்கர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற நபர்கள், இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, தபோல்கர் படுகொலைக்கு எதிராக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்கள், "மாந்திரீகம் மற்றும் பில்லி, சூனியத்திற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்' என்றும், கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இதுதொடர்பான அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் சங்கர நாராயணனும் ஒப்புதல் அளித்தார். மாந்திரீகம், பில்லி, சூனியம் மற்றும் மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக, நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா வில்தான், அவசர சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின்படி, நரபலி, பில்லி, சூனியம் மற்றும் மந்திர, தந்திர வேலைகளில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

திருடனை பிடித்து பொதுமக்கள் பயங்கர வன்முறை வெறியாட்டம் ! (படங்கள்)

ஒரு மணி நேரமாக ஆட்டம் காட்டிய திருடர் ஒருவரை சினிமா திரைப்பட ஸ்டன்ட் காட்சிகளை நடத்தி மடக்கி பிடித்துள்ளனர் பொதுமக்கள். எடிட்டிங் செய்யாத இந்த ரியல் சேசிங் மற்றும் ஸ்டன்ட், பெருத்த விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. தவறு செய்தவரை பிடித்து தருவது சரி தான். ஆனால் அதற்காக அவர்கள் நடந்துகொண்ட விதம் சரியா? தவறா? வாசகர்களே தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு செய்திக்குள் செல்லலாம்.< ‘சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்கெட் பகுதியில் ரெயில்வே ட்ராக்கை ஒட்டி குடியிருப்புகள் இருக்க பொதுமக்கள் கூச்சலிட்டபடியும் சிலர் பரபரப்பாக ஓடியபடியும் இருந்தனர். வெறும் டிராயர் மட்டும் போட்டுருந்த ஒரு இளைஞன் மாடி மாடியாக தாவி வர அங்கிருந்த பொதுமக்களிடம் பேசினோம்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் சிரியாவை எந்த நேரமமும் தாக்க தொடங்கலாம்

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் நூற்றூக்கணக்கான பொதுமக்கள் விஷக்குண்டுகள் தாக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்தனர். அதற்கான வீடியோ ஆதரங்களும் வெளியிடப்பட்டன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசு வீசிய விசக்குண்டு தாக்குதல்களில் 322 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளது. இதையடுத்து மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயுத்த நிலையில் உள்ளன. அமெரிக்க தலைமையில் இப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றன.

Mumbai Gang Rape கயவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுங்கள்... பெண் பத்திரிக்கையாளர் கதறல்

மும்பை: என்னை சீரழித்த கயவர்களை சும்மா விடக்கூடாது, குறைந்த பட்சம் ஆயுள் தண்டனையாவது வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் புகைப்பட பத்திரிகையாளர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மும்பையில் கடந்த வியாழன்று பாழடைந்த கட்டிடத்தை புகைப்படம் எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண்ணிற்கு பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், தற்போது அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது. அபாய கட்டத்தை தாண்டினாலும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தாயார் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார். நடந்த சம்பவத்தை தன் தாயிடம் கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார்.அவர் கூறும்போது, '5 பாவிகளும் என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டனர். உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டனர். எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை இங்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது.

திருமா விவகாரம் அப்படி என்னதான் நடக்கிறது ? நெருப்பில்லாமல் புகையுமா ?

கவிதா என்ற பெண் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது
புகார் கூறியதை அடுத்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது,  ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரங்களிலோ இந்த விவகாரம் கடந்த சில காலமாகவே பேசப்பட்டு வருகின்றது. கவிதா என்ன சொல்கிறார்? நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். அத் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டில்லி சென்ற போது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகின்றன. எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர்” என்பது அவரது புகார். கவிதா தரப்பு ஆதாரமாக சில போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.

Hollywood நோக்கி bollywood நடிகைகள் !

ஜேம்ஸ் வான் இயக்கும் Fast & Furious 7 திரைப்படக் குழுவும் இந்த முயற்சியில் தான் இறங்கியிருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, கங்னா ரனாவத், சித்ரங்டா சிங் ஆகிய மூவரில் ஒருவரை Fast & Furious  7-வது பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆடிஷன் நடத்தி வருகிறார்களாம். பெரும்பாலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அடித்து தூள் கிளப்பும் தீபிகா படுகோனே தான் இறுதியில் செலக்ட் ஆவார் என்கிறது பாலிவுட் திரையுலகம். Furious 6-ஆம் பாகம் இந்தியாவில் வெளியாகி பெரும் வசூலை அள்ளிக் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதிக ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய் நடிக்காததும், இந்தியாவுடம் தொடர்புள்ள ஹாலிவுட் கதைகளில் அதிகமாக நடித்துள்ள பூஜா குமார் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் பிஸியானதும் தான் தீபிகா படுகோனே, கங்னா ரனாவத் ஆகியோருக்கு ஹாலிவுட்டில் வழிவிட்டிருக்கிறதாம்.

மயக்க ஸ்பிரே அடித்து ரயிலில் பெண்ணிடம் நகை திருட்டு

திண்டுக்கல்: தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் முனியாண்டி (61). ஓய்வு பெற்ற இன்ஜினியர். புனேயில் இருந்து மனைவி  கலைச்செல்வியுடன் மும்பை&நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்சில் மதுரை புறப்பட்டனர். ஏசி பெட்டியில் மிடில் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்ததால், கீழ் படுக்கையில் பயணித்தவரிடம் முனியாண்டி இருக்கையை மாற்றிக்கொண்டார்.கீழ் இருக்கையில் இருந்த மர்ம நபர் மிடில் பெர்த்தில் படுத்துக்கொண்டார். ரயில் நேற்றுமுன்தினம் சேலம் வந்தபோது அசைவின்றி தூங்கிய கலைச்செல்வி மீது சந்தேகமடைந்த முனியாண்டி அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார். ஆனால், அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். அதற்குள் அந்த மர்ம நபர் தலைமறைவாகி இருந்தார். கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை. ரயில் திண்டுக்கல்லுக்கு வந்ததும் போலீசாரிடம் முனியாண்டி புகார் செய்தார். அதில், மயக்க ஸ்பிரே அடித்து நகை திருடப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாதாள சாக்கடையில் இறங்கியபோது விஷ வாயு தாக்கி 3 பேர் பலி - இதுக்கு இன்னும் இயந்திரம் கண்டு பிடிக்கலையாம் ? ஆனால் செவ்வாய்க்கு போகபோகிறார்கள் ? கொடுமை!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


தர்மபுரி:நள்ளிரவில் பாதாள சாக்கடையில் அடைப்பை சரி செய்வதற்காக இறங்கிய 3 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்து, பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளுக்கு  இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பஸ் நிலையம் அருகே 4 ரோடு பெட்ரோல் பங்க் எதிரில் பாதாள சாக்கடையில்  அடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் குருசாமிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  சூப்பர்வைசர் லட்சுமணன் (28)  தலைமையில் தொழிலாளர்கள் கம்ப்ரசர் வாகனத்துடன் அங்கு சென்றனர். தொழிலாளர்கள் மாதேஸ் (30), ராஜா (40) இருவரும் சாக்கடைக்குள் இறங்கி  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த லட்சுமணன், சாக்கடைக்குள் இறங்கி  பார்த்தார். அவரும் வெளியே வரவில்லை.

ஒரு தீர்க்கதரிசி ! M.R.Radha: சினிமா நடிகன்தான் நாட்டையே குட்டி சுவராக்குபவன்!

ஒரு வழியாக, "தலைவா' படம் தியேட்டருக்கும் வந்துவிட்டது. இனிமேல் கடலில் கலந்து வீணாய் போன, 6 டி.எம்.சி., தண்ணீர் திரும்ப கிடைத்து விடும், எல்லை மீறி வந்து பாக்., படையினர் தொல்லை கொடுக்க மாட்டார்கள், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் நல்ல தீர்ப்பு கிடைத்து விடும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்...
அடப்போங்கய்யா... ஏற்கனவே, பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் பார்த்தாகி விட்ட படத்திற்கு, தமிழகத்தில் கிடைக்கப் போவது லாபப் பணமே. அதிலும், ஏதாவது வரிவிலக்கு கிடைக்குமா என்று பார்த்தனர்... அதற்கு வழியில்லை, அந்த வகையில், 3 கோடி ரூபாய் நஷ்டம் வரும். அதை யார் ஏற்பது என்பதில் தான், "நெஞ்சுவலியே!' மற்றபடி, உண்ணாவிரத போராட்டமெல்லாம் ஒரு உதார் தான். எங்கே அனுமதி கொடுத்துவிடுவரே என்று பயந்து கொண்டே தான், மனுவே கொடுத்தனராம்; நல்லவேளையாக அனுமதி கிடைக்கவில்லை. இல்லையென்றால், அமலாபால், சந்தானம் இவர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரதத்தின் புனிதத்தையே கெடுத்து காமெடியாக்கி இருப்பர்; தப்பித்தது தமிழகம்.

தினமலரின் கவலை ! திமுகவுக்கு கூட்டணி அமைப்பதில் குழப்பம்

லோக்சபா தேர்தலில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்க முடியாத நிலையில், தி.மு.க.,வுக்கு, "இடியாப்ப சிக்கல்' ஏற்பட்டுள்ளது. கூட்டணி குறித்து அ.தி.மு.க., எடுக்கும் முடிவுக்கு பின், கூட்டணியை உருவாக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், அறிவாலயத்தில் நடந்த தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் காங்கிரஸ், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. கூட்டணி யாருடன் என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ், பா.ஜ., அல்லாத கூட்டணியை அமைக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் முதலில் ஆர்வம் காட்டப்பட்டது. ராஜ்யசபா தேர்தல் ஒட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தி.மு.க., ஆதரவு கேட்டது. ஆனால், அக்கட்சி, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தி.மு.க., அதிருப்தி அடைந்தது. ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,விடம் ஆதரவும் கேட்டும், அக்கட்சி தி.மு.க.,வை உதாசீனப்படுத்தியது. காங்கிரசை தவிர்த்து விட்டு, தே.மு.தி.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., போன்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என, கருதிய தி.மு.க.,வின் திட்டமும் கைகொடுக்கவில்லை.

மும்பை பலாத்கார சம்பவம் மேலும் ஒரு குற்றவாளி சிக்கினான்

மும்பையில் பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 4வது குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். குற்றத்தில் தொடர்புடைய 5 பேரில் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ராகிங்: மதுவை பருக்கி மயக்கத்தில் ரோட்டில் போடப்பட்ட மாணவர்கள்!

தருமபுரி பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் 8 கல்லூரி மாணவர்கள் கிடந்துள்ளனர். இதனை பார்த்து பதறிய பொதுமக்கள் 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்த அவசர ஊர்தி ஊழியர்கள், மாணவர்களை சோதித்துப் பார்த்து சொன்ன விஷயம் தகவல் கொடுத்த பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
அளவுக்கு அதிகமாக மது அருந்தி, தன்னையே மறந்து, எழுந்து நடக்க முடியாத நிலையில் மாணவர்கள் இருப்பதாக தெரிவித்த அவசர ஊர்தி ஊழியர்கள், அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
மது மயக்கத்தில் இருப்பதால் அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர் மருத்துவர்கள்.

அபாண்டமான அவதூறாம் ! வி சி கட்சி அறிக்கை! எங்கோயோ இடிக்கிறதே திருமா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.
காவல்துறையினரிடம் கொடுத்த புகாரில், கோவையைச் சார்ந்த கார்த்திக், அவரது மனைவி ஜெயந்தி, வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் அவரது உதவியாளரான லதா, லதாவின் கணவர் சந்துரு ஆகியோர், கவிதாவுக்குச் சொந்தமான எஸ்.டி.கே.எஸ். நர்சரிப் பள்ளியை குத்தகைக்குக் கேட்டதாகவும், பின்னர் மிரட்டி 'பவர்' எழுதி வாங்கிக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.  புகாரில் எந்த இடத்திலும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் பெயரைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சனி, 24 ஆகஸ்ட், 2013

MGR வேண்டாம் மதகஜராஜா போதும் ! அலறும் விஷால் ! தலைவா தமிழ் சினிமாவுக்கு தந்த பாடம்

விஷால் நடித்த படத்துக்கு சூட்டப்பட்டிருந்த ‘எம்.ஜி.ஆர்.’ என்ற பெயர் திடீர்
என்று மாற்றப்பட்டது. ‘‘எம்.ஜி.ஆர். என்பவர் மாபெரும் சக்தி. அவருடைய பெயரை தவறாக பயன்படுத்த விரும்பவில்லை’’ என்று விஷால் கூறினார்.‘எம்.ஜிஆர்.’ ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்த படம், ‘மதகஜராஜா.’ இதில் விஷால் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். சுந்தர் சி. டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில், படத்தின் கதாநாயகன் விஷால் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
‘‘நான், 2003–ம் ஆண்டில், ‘செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனேன். செப்டம்பர் 6–ந்தேதி வந்தால், சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. அந்த நாளில்தான் ‘மதகஜராஜா’வை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் நடித்த எல்லா படங்களுமே குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வந்துள்ளன. இந்த படம் தாமதமாகி விட்டது. அதனால் விஷால் பிலிம் சர்க்யூட் என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் தொடங்கி நானே வெளியிடுகிறேன்.
பெயர் மாற்றம்
இந்த படத்துக்கு முதலில், ‘மதகஜராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பின்னர், ‘எம்.ஜி.ஆர்.’ என்று மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆர், ஒரு மாபெரும் சக்தி. அதை தவறாக பயன்படுத்த விரும்பவில்லை. அதனால் படத்தின் பெயர் மீண்டும் ‘மதகஜராஜா’ என்றே மாற்றப்பட்டு இருக்கிறது.’’
இவ்வாறு விஷால் கூறினார்.அடடா  அப்ப முதல்ல தப்பாதான் பயன்படுத்தி இருக்கீங்க?

தொல் திருமாவளவன் கவிதாவை ஏமாற்றி விட்டாராமே ? யாரைத்தான் நம்புவதோ ?

கோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புார் அளித்துள்ளார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று பிற்பகல் சென்ற கவிதா என்ற பெண், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கவிதா கூறியுள்ளதாவது: நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். அத் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டெல்லி சென்ற போது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஓ ! நமக்கு வாய்த்த அடிமைகள் லிஸ்டில் பன்னீர்செல்வம் இல்லையாமே ? கடும் கோபத்தில் இதயதெய்வம்

சென்னை: தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாகவும் வில் வர உள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்றும் பரவிய தகவலால் அதிமுக வட்டாரம் பரபரப்பாகி இருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தான் தற்போதைய அமைச்சர்களில் சீனியர். கடந்த சிலவாரங்களாகே மூத்த அமைச்சர்கள் மற்றும் 21 மாவட்ட செயலர்களை ஜெயலலிதா எந்த நேரத்திலும் மாற்றுவார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூத்த அமைச்சர்களில் ஓ. பன்னீர்செல்வம் தலைதான் உருட்டப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ. பன்னீர்செல்வம் மீது ஜெ. காட்டம்? கல்தா பட்டியலில் முதலிடமா? ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் மிகவும் நம்பிக்கைக்குரியவர் ஓ. பன்னீர்செல்வம் என்பதாலேயே முன்பு முதல்வர் பதவியையே கொடுத்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு இப்போது போகும் ஏகப்பட்ட புகார் கடிதங்களில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரானவை அதிகம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். அதிலும் பல புகார்களுக்கு கத்தை கத்தையாக ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது கண்டு முதல்வர் ஜெயலலிதா அதிர்ந்து போனாராம்.

இடைத்தேர்தலில் நடிகை குத்து ரம்யா பெருவெற்றி !


கர்நாடகாவில் நடைபெற்ற 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகை குத்து ரம்யா, தன்னை எதிர்‌த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளரை விட 47, 662 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பிடிபட்ட மும்பை பாலியல் குற்றவாளி விலாவாரியாக விபரித்தான் ! 2வது குற்றவாளியும் கைது

மும்பை: மும்பையில் இளம் பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்துவிட்டு சாவகாசமாக வீட்டில் போய் பாவ்பாஜி சாப்பிட்டுள்ளான் குற்றவாளி சந்த். மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராகப் பணிபுரிந்து வந்த 23 வயது பெண், வியாழக்கிழமை மாலை தனது ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மும்பை லோயர் பேரல் பகுதியில் ஆள் அரவமின்றி பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தது. அப்பெண்ணின் நண்பரை தாக்கி, கட்டிப் போட்டது. பின்னர் அந்த 5 பேரும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இடைத் தேர்தல்: (thivya spandana) குத்து ரம்யா முன்னிலை, அனிதாவுக்கு பின்னடைவு

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா, பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பெங்களூரு புறநகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மருமகளும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சுரேஷ் நிறுத்தப்பட்டார். மாண்டியா தொகுதியில் காங்‌கிரஸ் வேட்பாளராக திரைப்பட நடிகை குத்து ரம்யாவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் புட்டராஜூ போட்டியிட்டனர். கடந்த 21-ந் தேதி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இரண்டு தொகுதிகளிலுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர tamil.oneindia.in

சிக்கிய பெங்களூர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர்களும் தீவிரவாதிகளா ? கியூ பிரான்ச் விசாரணை

புதுக்கடை:புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் நேற்று
இரவு நடந்த சோதனையில் பெங்களூர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர் சிக்கினர். இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் ஊடுருவி மதுரை, மயிலாடுதுறை நகரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு  இருக்கிறது. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் ~ China Pakistan ஐ தொடர்ந்து தற்போது மியன்மரும்

பாகிஸ்தான், சீனாவைத் தொடர்ந்து மியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்
இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் தலைவலியை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக்கொண்டிருக்கும் வேளையில் புதிய திருகுவலியாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.