மின்னம்பலம் :திமுகவில்
ஏதோ ஒரு மாற்றம் தேவை என்பதுதான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில்
எதிரொலித்துள்ளது என்று திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர்
மு.க.அழகிரி கூறியுள்ளார். அழகிரி தன் இருப்பைக் காட்டவே இப்படி
சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு உடனடியாக திமுக சார்பில் பதில்
கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் மருது கணேஷ் உள்ளிட்ட 57 வேட்பாளர்களுக்கு டெபாசிட்கூடக் கிடைக்கவில்லை. தோல்வி குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில் இது திமுகவுக்குக் கிடைத்த தோல்வி அல்ல, தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்த தோல்வி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர்-27) மு.க.அழகிரி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், "தோல்வியை யாரும் தோல்வியென்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கட்சி ஓட்டைப் பணம் சாப்பிட்டுவிட்டது என்று துரைமுருகன் கூறுகிறார். அவர் இப்படிக் கூறலாமா, கட்சியினருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? திமுகவினரை இப்படி கூறினால் எப்படி வருங்காலத்தில் திமுக நிலைத்திருக்கும்?” என்று கேள்விஎழுப்பினார்.
தொடர்ந்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:
























