சனி, 17 ஜனவரி, 2026

தமிழக நிர்வாகிகளுடன் ராகுல், சோனியா இன்று ஆலோசனை - ஆட்சியில் பங்கா, தவெகவுடன் கூட்டணியா?

 hindutamil.in  : சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறி​விப்​பு, வரும் பிப்​.3-வது வாரத்​தில் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. 
அதனால் தமிழகத்​தில் உள்ள பிர​தான கட்​சிகளான திமுக, அதி​முக ஆகிய கட்​சிகள் தேர்​தலை எதிர்​கொள்​வதற்​கான திட்​ட​மிடல் மற்​றும் கூட்​டணி தொடர்​பாக தீவிர​மாக பணி​யாற்றி வரு​கின்​றன.
இந்நிலை​யில் திமுக கூட்​டணி கட்​சி​யான காங்​கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்​சி, அதி​காரத்​தில் பங்​கு, அதிக இடங்​களில் போட்டி என பேசியும், சமூக வலை​தத்தளங்​களில் பதி​விட்​டும் வரு​கின்​றனர். காங்​கிரஸாரின் இதுபோன்ற நடவடிக்​கை​யால் திமுக தலைமை அதிருப்தியில் உள்​ளது. அதே நேரத்​தில், எந்த கட்​சி​யா​வது ஆட்​சி, அதி​காரத்​தில் பங்கு வேண்​டாம் என சொல்​லுமா என அகில இந்​திய காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கரின் கருத்தை எப்​படி புறந்​தள்​ள முடி​யும் என காங்​கிரஸார் கேள்வி எழுப்​பு​கின்​றனர்.



இந்தச் சூழலில், தமிழக சட்​டப்பேரவை தேர்​தல் குறித்த ஆயத்த கூட்​டம் இன்று (ஜன.17) டெல்லியில் நடை​பெற இருப்​ப​தாக கட்சியின் தமிழகத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார். இக்​கூட்​டம் சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, அகில இந்​திய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்கே ஆகியோர் தலை​மை​யில், தமிழக மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர், அகில இந்​திய செய​லா​ளர்​கள் சூரஜ் ஹெக்​டே, நிவே​தித் ஆல்வா ஆகியோர்

முன்​னிலை​யில் நடை​பெற உள்​ளது. இ​தில் செல்​வப்​பெருந்​தகை, சட்​டப்​பேரவை காங்​கிரஸ் தலை​வர் ராஜேஷ்கு​மார் உள்​ளிட்ட 17 எம்​எல்​ஏக்​கள், 10 எம்.​பி.க்​கள், அகில இந்​திய நிர்வாகி​கள், துணை அமைப்​பு​களின் மாநில தலை​வர்​கள், முன்​னாள் மாநில தலை​வர்​கள் டெல்லி சென்​றுள்​ளனர்.

இக்​கூட்​டத்​தில், திமுக கூட்​ட​ணி​யில் அதிக இடங்​கள், ஆட்​சி​யில் பங்கு கேட்க வேண்​டும் என்று பெரும்​பாலான தலை​வர்​கள் வலி​யுறுத்த இருப்​ப​தாக​வும், இதற்கு திமுக சம்​ம​திக்​கா​விட்​டால் தவெக​வுடன் கூட்​டணி வைக்க வேண்​டும் என்று சிலர் வலி​யுறுத்த இருப்​ப​தாக​வும் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​களை, அந்​தந்த பகு​தி​களைச் சேர்ந்த பொறுப்பு அமைச்​சர்​கள் அணுகி, திமுக கூட்​ட​ணி​யில் தொடர வேண்​டும் என்று வலி​யுறுத்​து​மாறு வேண்​டு​கோள் விடுத்​த​தாக காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இந்​தக் கூட்​டத்​தில் ஆட்​சி​யில் பங்​கு, அதிக இடம் கேட்க வேண்​டும் என்று ஏன் வலி​யுறுத்​துகிறீர்​கள், அதற்​கானதரவு​கள் உள்​ளதா என கட்சி தலைமை கேள்வி எழுப்ப உள்​ள​தாக​வும், இதற்கு பதில் அளிக்க ஏது​வாக கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகள், கட்சியின் இன்றைய செல்​வாக்கு போன்றதரவு​களுடன் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளி​யாகி​யுள்ளது.

சிலர் தவெக​வுக்கு சென்​றால்தான் இனி தமிழகத்​தில் காங்​கிரஸூக்கு வாழ்வு என வலி​யுறுத்த இருப்​ப​தாக​வும், அதற்கு தேவை​யான தரவு​களை​யும் அவர்​கள் சேகரித்து வைத்​திருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. இதனால் டெல்​லி​யில் இன்று நடை​பெற உள்ள ஆலோ​சனைக் கூட்​டம் பரபரப்பாக இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்தக் கூட்​டத்​தில் எடுக்​கப்​படும் முடிவு​களை தெரிவிக்க 19-ம் தேதி பொதுக்​குழு, செயற்​குழு சென்னையில் கூடுகிறது. இதில் தேர்​தல், கட்சி வளர்ச்​சி,குறித்​து ஆலோ​சிக்க உள்​ளனர். இதில் எடுக்​கப்​படும் முடிவு​களின்படி தி​முகவுடன் கூட்​டணி பேச்​சு நடத்​த இருப்​ப​தாக கட்சி​ வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.

கருத்துகள் இல்லை: