![]() |
மின்னம்பலம் -Mathi : ‘கூட்டணி ஆட்சி’: டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது காங்கிரஸ். அதே நேரத்தில், கூட்டணி ஆட்சி; அதிக தொகுதிகள் என்கிற நிபந்தனைகளையும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கிறது. இதனை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.
அண்மையில் நீலகிரியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட குழுவினரை சந்தித்துப் பேசும் போது, கூட்டணி ஆட்சி என்ற நிபந்தனையை திமுக ஏற்கவில்லை என தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகமான இந்திரா பவனில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் தற்போது முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
We held a key meeting with our leaders from Tamil Nadu.
We are confident that the people of Tamil Nadu would choose equality, social justice, empowerment and good governance over bigotry, sectarianism, anti-federal and discriminatory politics of the RSS-BJP.
The Congress is… pic.twitter.com/JKoXrx7pIe
— Mallikarjun Kharge (@kharge) January 17, 2026
இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
டெல்லி ஆலோசனை கூட்டம்- படங்கள்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக