minnambalam.com - Mathi : Brihanmumbai Municipal Corporation
மகாராஷ்டிராவில் 28 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை (Brihanmumbai Municipal Corporation) பாஜக கூட்டணி கைப்பற்றி சரித்திரம் படைத்துள்ளது.
மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று ஜனவரி 15-ந் தேதி நடைபெற்றது. இதனையடுத்து பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 கவுன்சிலர் இடங்களில்- வார்டுகளில் பாஜக- 84; ஷிண்டே சிவசேனா 26; அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்- 2 ஐ கைப்பற்றியுள்ளன.
உத்தவ் தாக்கரே சிவசேனா 63, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 1, காங்கிரஸ் 23, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 6 இடங்களில் வென்றுள்ளன.
தேர்தல் நடைபெற்ற மொத்தம் 2869 கவுன்சிலர் இடங்களில்- வார்டுகளில் பாஜக மட்டும் 1377-ல் வெற்றி பெற்றுள்ளது. ஷிண்டே சிவசேனா 330; காங்கிரஸ் 327; உத்தவ் தாக்கரே சிவசேனா 167; அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 151; சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 34 இடங்களில் வென்றுள்ளன.
மும்பை மாநகராட்சியை 28 ஆண்டுகளாக தாக்கரேவின் ஒருங்கிணைந்த சிவசேனா கோட்டையாக வைத்திருந்தது. தற்போது சிவசேனா பிளவுபட்டதால் பாஜக கூட்டணி வசமாகிவிட்டது மும்பை மாநகராட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக