
சிறீலங்கா முதலீட்டுச்சபையுடன் கல்வி அமைச்சு இணைந்து மேற்கொண்டுவரும் திட்டங்களின் அடிப்படையில் 78 தனியார் பல்கலைக்கழகங்கள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் எஸ் பி திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்காவில் கல்விமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். புதிய கல்வித்திட்டங்களும், மேலதிக வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை எட்டுவதற்கு நாம் தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும்.
தற்போதைய கல்வித்திட்டத்தை நாம் தனியார் மயப்படுத்தவில்லை. ஆனால் புதிய தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டமிட்டுவருகிறோம். எமது இந்த திட்டங்களுக்கு அமைவாக 78 புதிய பல்கலைக்கழகங்களை சிறீலங்காவில் ஆரம்பிப்பதற்கான பதிவுகள் முதலீட்டுச்சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றில் 50 பல்கலைக்கழகங்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக