"ஆகா...! கமல்ஹாசன் ஒரு கலைஞானி மட்டுமல்ல... ஒரிஜினல் ஞானியும் கூட' என,உடனடி முடிவுக்கு வந்தேன். நாத்திகம் பற்றி, பகுத்தறிவுப் பகலவன்கள் எனதங்களைப் பறைசாற்றிக்கொள்ளும் தி.க., வீரமணிக்கும், தி.மு.க., தலைவருக்கும்கூட தோன்றாத கருத்துப் பெட்டகங்களைக் கடைவிரித்தார்.இந்த ஏகலைவனின் கவித் திறன் பற்றி, துரோணராக இருந்து சொல்லித் தராத தமிழகமுதல்வர் கருணாநிதி பாராட்டிப் பேசினார். அதைத் திரையில் கண்கள் பிதுங்க பார்த்தபிறகு தான், கமலஹாசன் அந்த முத்துக்களை உதிர்த்தார். நிறைய சொன்னார்.அவற்றில், என் நினைவில் நின்ற சில:
1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.
இப்படியாக நீண்டன அவரது சிந்தனைச் சிதறல்கள்.
இத்தகைய புகார்களுக்கு ஏற்கனவே பல முறை பதில் அளிக்கப்பட்டுவிட்டன. எழுத்தாளர் பாலகுமாரன் கூட ஒரு முறை வாங்கு வாங்கென்று வாங்கியிருந்தார்.இருந்தாலும் கமல் விடுவதாக இல்லை. அவருடைய பகுத்தறிவுக்கு முன்னால், நம்சாதா அறிவெல்லாம் செல்லுபடியாகாது. இருந்தாலும்...
1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.
2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன்
வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா?
தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!
3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?
4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா?
சுமித்திரன் - singapore,இந்தியா
2010-11-08 16:38:24 IST
கமலஹாசன் பேசியது அனைத்தும் 100௦-க்கு 100௦௦ உண்மை. கடவுள் கோடியில் குளிக்கிறார், கடை கோடியில் இருக்கும் மக்களுக்கு சாப்பாடு இல்ல. சாமி பெற சொல்லி சொல்லியே ஊரை கொள்ளை அடிக்கிறீங்களே.. பாவிங்களா... அன்பே சிவம்.. சாமிக்கு அபிஷேகம் பண்ற பால, பசி -ல அழுற கொழந்தை க்கு கொடுயா.. நீ தான் கடவுள். அத தான் கமலும் சொல்றாரு.. அந்த கடவுளே அதை தான் விரும்புவாரு......
ச Raghuraman - Bangalore,இந்தியா
2010-11-08 16:36:38 IST
Your comments are superb. No one has the rights to comment about others beliefs. No one is supreme!!...
தங்கதுரை - பெங்களூர்,இந்தியா
2010-11-08 12:47:22 IST
அதானே குமுதம் ல அடுத்தவன் படுக்கை அறையை எட்டி பார்க்காதே என்று சொல்லிவிட்டு தன் வீட்டு படுக்கை அறை கதவை திறந்து வைக்கும் இவரை என்னவென்று சொல்ல்வது...
lakshi - நியூdelhi,இந்தியா
2010-11-08 12:35:56 IST
இவரை உலக நாயகன் என்று சொல்வதே தப்பு. எந்த வெளி நாடு மொழியில் ந்டித்து இருக்கிறார் இவர் ?? ,....
J.Anand - Madurai,இந்தியா
2010-11-08 09:33:19 IST
சபாஷ் சரியான பதிலடி. தான் மட்டுமே இவ்வுலகில் மேதாவி என நினைத்துக்கொண்டு எப்போதும் தான்தோன்றித்தனமாக பேசும் கமலுக்கு நல்ல குட்டு....
sittu - che,இந்தியா
2010-11-08 07:45:27 IST
இது நமக்கே கொஞ்சம் ஓவரா தெரியலெ ? நாம் உலக நாயகன் தான்! இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் திரைபடத்தில் தான் நடிக்கிறோம் என்றில்லாமல், நிஜத்திலும் அப்படியா? நம்மை ஏற்றி விட்ட ஏணி பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் மஞ்சள் துண்டுகள் அல்ல! தமிழ் மக்கள் என்பதை மறந்து விட வேண்டாம். கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்!...
nimesh - chennai,இந்தியா
2010-11-07 19:31:17 IST
ulaga nayaganukku sariya pathil. avarai eppadiyavathu ithai padikka sollunka......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக