
Kanal Arasu
- நக்கீரன்:
பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் குருவின் நினைவிடம் அருகே குருவின் மகன் கனல் மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோரை ஒரு கும்பல் மறித்து பிரச்சனை செய்ததாகவும், பின்னர் ஊர்மக்கள் அங்கு வந்து அவர்களை பிரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து ஒரு கும்பல் கனலை அரிவாளால் வெட்ட வரும்போது மனோஜ் குறுக்கே வந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் கனலையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை அறிந்த ஊர் மக்கள் அங்கு வரும்போது அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. உடனடியாக கனல், மனோஜ் ஆகிய இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


























