![]() |
தினத்தந்தி : பிரபல பழம்பெரும் மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லலிதா தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து உடல்நிலை சற்று தேறியநிலையில் கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.22) இரவு நடிகை லலிதா காலமானார்.





