திங்கள், 14 செப்டம்பர், 2020

NEET - DMK நீட் தேர்வால் 12 மாணவர்கள் தற்கொலை... மக்களவையில் பிரச்சனை எழுப்பியது திமுக

   malaiamalar :டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது, நீட் தேர்வு தொடர்பான பிரச்சனையை திமுக எழுப்பியது. திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 12 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.

‘நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட 12 மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த அவை மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்கள் பிளஸ் 2-ல் மாநில பாடத்தில் படித்து தேர்ச்சி பெற்றனர். ஆனால், நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மாதத்திற்குள் நீட் தேர்வு வருகிறது. எனவே, அவர்களால் தங்களை தயார்படுத்த முடியவில்லை.

4 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ. 4700 கோடி மோசடி செய்த வாலிபர் கைது .. கோவை பீளமேடு பி.ஆர். புரத்தை சேர்ந்தவ

maalaimalar.com  : சேலம்: கோவை பீளமேடு பி.ஆர். புரத்தை சேர்ந்தவர் கவுதம் ரமேஷ் (வயது 40).இவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 3 நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் ரூ. 4 லட்சமாக திருப்பி தரப்படும் என கவர்ச்சியாக விளம்பரங்கள் செய்தார். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்தனர். கேரளாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவரது நிறுவனத்தில் கோடிக் கணக்கில் முதலீடு செய்தனர். தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் முதலீடு செய்தார்கள். சேலத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிதி நிறுவனங்களை மூடிவிட்டு கவுதம் ரமேஷ் தலைமறைவானார். இதுபற்றி கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 13 பேரை தேடி வந்தனர்,

தமிழ்நாட்டில் சேலம், கோவை மாநகர போலீஸ் நிலையங்களிலும் கவுதம் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலத்தில் 70 பேர் கொடுத்த புகாரின் பேரில் ரூ. 4½ கோடி வரை மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

அமித் ஷா டெல்லி எய்ம்ஸில் அனுமதி!’ – எப்படி இருக்கிறார்?

vikatan.com - தினேஷ் ராமையா : நாடு முழுவதும் ரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47,54,356 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமித் ஷா

இந்தநிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டாவது முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.       55 வயதான அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குர்காவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.          கொரோனாவில் இருந்து அவர் மீண்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14-ல் ட்விட்டரில் பதிவிட்டார். அந்தப் பதிவில், மருத்துவமனையில் இருந்து தாம் வீடு திரும்பி விட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மேலும் சில நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்திருந்தார். 

மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா கொலை: அகிலேஷ் ஆவேசம்!

 மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா கொலை: அகிலேஷ் ஆவேசம்!

minnamblam :தமிழ்நாட்டில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவுக்கு, நாட்டின் வட பகுதியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்திருப்பது, இந்த விவகாரத்தை தேசிய அரங்கில் கவனப்படுத்தியுள்ளது.   

 தமிழகம் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி நள்ளிரவு மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்டார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த முருகசுந்தரம் என்பவர் காவல் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.

சூர்யா: "நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் சமூகமாக ஒன்றிணைவோம்"

 'நீட் எனும் மனுநீதி தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கிறது' - நடிகர் சூர்யா  BBC :”நீட் போன்ற ’மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தொடர்ந்து நீட் தேர்வுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தமிழகத்தில் நீட் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், அனல் பறக்க விவாதிப்பார்கள்.

விகடன் அறிவுரையால் மனம் திருந்திய பில் கேட்ஸ் ... நாட்டு மாடு கத்திரிக்காய் விவசாயம்...

Devi Somasundaram : அன்புள்ள விகடன்.. !   நீங்க பசுமை விகடன்ல எழுதும் கட்டுரைலாம் படிச்சு , பில் கேட்ஸ் தன் பிஸ்னஸ் விட கத்திரிக்காய் வளர்ப்பது லாபம் தரும் பிஸ்னஸ் என்பதை அறிந்து ,அவர் பிஸ்னஸ விட்டு செவத்தம்பட்டில 50 ஏக்கர் வாங்கலாம்னு விலை பேசறாராம் .
நானும் ஒரு ஏக்கருக்கு 2 லட்சத்து 62 ஆயிரம் லாபம் கிடைப்பதால் இத்தனை ஆண்டுகளாக விவசாயம் செய்த செவத்தம்பட்டி ஆட்கள் எல்லாரும் மல்ட்டி மில்லியனரா இருப்பார்கள்

,அவர்கள் மைக்ரோ சாப்ட வாங்கிக் கொள்வார்கள் என்ற ஆசையில் செவத்தம் பட்டி மல்ட்டி மில்லியனிரடம் விலை பேச போனேன்..
கம்மாய்ல கோவ்ணத்தோட குளிச்சுகிட்டு இருந்த கோவிந்தசாமி அய்யா ' விகடன்ல வருமானம் இல்லன்னு எல்லா புத்தகத்தையும் நிறுத்திட்டு இருக்கானுகளாமே? நிறைய பேர வேலை விட்டு வேற அனுப்பறானுகளாம் . பேசாம விகடன் ஆபிஸ இழுத்து பூட்டிட்டு செவத்தம் பட்டில நிலம் வாங்கி விவசாயம் பண்ண் வரச் சொல்லு ,     அதான் ஏக்கருக்கு 2 லட்சம் கிடைக்கிதுல்ல ,     அவன் எதுக்கு பத்திரிக்கை நடத்திட்டு , மூடிட்டு வந்து விவசாயம் பண்ணச் சொல்லுன்னு சொன்னார்...     நானும் நல்ல ஐடியா வா இருக்கேன்னு விகடன் ஆபிஸ மூட பூட்டு வாங்கிட்டேன்..   .எப்ப வரலாம்னு சொன்னிங்கன்னா பூட்டிட்டு கத்திரிக்காய் புடுங்க ச்சேய் .பறிக்க போகலாம்.....

பெரியார் புத்தகங்களை அடித்து நொறுக்கி கொழுத்தி விடுங்கள்! ஒரு ஈழத்தமிழரின் அடாவடி

Kalai Selvi : யாழ் நூலகத்தை தீயிட்டு கொழுத்தியவர்களை இன்றுவரை வறுத்தெடுக்கும் யாழாதிக்கவாதிகளே அடிப்படையில் ஒரு நூலக


கொழுத்திகள்தான் என்பதை இவர் இன்று நிரூபித்து இருக்கிறார் 

 " உங்கள் வீடுகளில் யாரவது பெரியார் திராவிடம் பெண்ணியம் என்று பேசுவதையோ அல்லது நூல்களை வைத்திருப்பதையோ கண்டால் அடித்து நொறுக்கி கொழுத்தி விடுங்கள்" இப்படி பதிவிட்டு இருக்கிறார் இந்த ஈழத்தமிழர்.     அன்று நூலகத்தை எரித்தவர்களை சிங்கள காடையர்கள் இனவாதிகள் என்றெல்லாம் இன்றுவரை ஒப்பாரி வைக்கும் இவர்கள்இன்றே இப்படி கூறுகிறார்கள் அதுவும் பொதுவெளியில் பதிவிடுகிறாரக்ள் என்றால் இவர்கள் எவ்வளவு தூரம் காட்டுமிராண்டி உலகத்திற்கு பின்னோக்கி சென்றுவிட்டார்கள்???   இவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் நூல் நிலையங்களை எரித்தார்கள். அவர்களின் பள்ளிக்கூடங்களை கொளுத்தினார்கள் என்பதை எல்லாம் இப்போது நம்புகிறோம் . நிச்சயம் இவர்கள் அவற்றை கொளுத்தி இருப்பார்கள் என்பதற்கு இவரின் இந்த வாக்கு மூலமே ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகிறது.

புலிகள் பாலூற்றி வளர்த்தது இந்த ஜாதி பாசிசத்தைத்தைதான் என்பதற்கு இதை விட வேறு சாட்சியங்கள் தேவை இல்லை.     

இவர்களைத்தான் நெடுமாறன் முதலாக எல்லா தமிழ் தேசியவியாதிகளும் பெரியார் பெயரை கூவுவோரும் ஜூனியர் விகடனோடு சேர்ந்து உருவேற்றி விட்டார்கள்.  

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

புத்தர் சிலைகளை திருமால் சிலைகளாக்கிய பார்பனீயம் . Budhdha become Vishnu (Ex. Sri Rangam)..

Selva Sel :உண்மையைச் ஆராய்ச்சியின் மூலம் சொல்ல எனக்கு பிடிக்கும்
புத்தரை தோல்வியின் பயத்தில் கடவுளாக ஏற்று ,வைணவக் கடவுள் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாக மாற்றிய இந்து மத பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)
8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்
தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது
மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும் அதன் பெரிய கொள்கையில் பல நாளிது வரையில் இந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன. அவ்வக் காலத்தில் நடை முறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டது. 'அல்லா உபநிஷத்' என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. இது நிற்க.

பட்டினத்தாரின் ஆறு கட்டளைகள் .. பேரண்டத் தத்துவம்.

Sundar P · பட்டினத்தாரின் பேரண்டத் தத்துவம்.பட்டினத்தடிகள் சொல்லும் ஆறு கட்டளைகள் இவை:-  

1“பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்” உயிர்களின் தோற்றம் ஒரு சங்கிலித்தொடர் என்று கண்டுபிடித்திருக்கிறது நவீன அறிவியல். ஒரு உயிர் இறந்து மண்ணில் விழுந்தவுடன், அதிலிருந்து வேறு ஒரு உயிர் தோன்றுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர்போல நடக்கிறது என்று விளக்குவது அறிவியல். 

மண்ணில் பிறந்த எந்த வாழ்வும் ஒரு நாள் இறக்கும்; அவ்வாறு இறந்த வாழ்வு இன்னொறு உயிரின் பிறப்புக்கு காரணியாகிறது
இந்த அறிவியல் உண்மையை எளிய மொழியில் விளக்குகிறார் பட்டினத்தார்.

பிரகாஷ் ராஜ் : இந்தி தெரியாது போடா".. தமிழக ஸ்டைலில் அதிரடி.. டி சர்ட்

tamil.oneindia.com - Arivalagan  :  பெங்களூர்: இந்தி திணிப்புக்கு எதிரான தமிழகத்தின் அதிரடி டி சர்ட் புரட்சி இப்போது கர்நாடகத்திலும் பரவியுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ் தானும் ஒரு டி சர்ட் போட்டு இந்தி திணிப்புக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.   இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன் ..இந்த இரு வாசகங்களும் சமீபத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன. இந்தி திணிப்புக்கு எதிராக இந்த இரு வாசகங்களும் அடங்கிய டி சர்ட் போட்டுக் கொண்டு டிவிட்டரில் வைரலாக்கி விட்டனர் தமிழகத்தைச் சேர்ந்த பலரும்.

மிகப் பெரிய அளவில் வைரலான இந்த இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் இன்று ஒரு பிசினஸ் வாய்ப்பையும் திருப்பூருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய வாசகங்கள் மட்டுமல்லாமல், வேறு சில வாசகங்களும் அடங்கிய டி சர்ட் தயாரித்துத் தரும் ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும், நல்ல பிசினஸாக இது மாறியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

பாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெளியே சமரசம் ..? Flashback

 க.ம.மணிவண்ணன்  : பாரதி(யார்? பாரதியின் கவிதைகளைப் படித்துவிட்டு அவரை வானளாவப் புகழும் நம்மில் பல பேர் அவர் சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளில் எழுதியவைகளையும் அவரது கட்டுரைகளையும் முழுமையாக வாசிப்பதில்லை, அவ்வாறு வாசித்திருந்தால் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி களுக்கு அவர்தான் முன்னோடி என்பதும் அவர் மகாகவி அல்ல மகா"காவி" என்பதும் தெளிவாக விளங்கும்.

1) சுதேசமித்திரன் ஏட்டில் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசமாயினதே” என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
2) 1907 இல், சுதேசமித்திரனில் “வந்தே மாதரம்” பாடலில் “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்” என்றெழுதி இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்றழைத்தவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக “ஆன்ற மொழிகளினுள்ளே – உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்று ஆரியத்தை உயர்த்தி எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
4) சமஸ்கிருதம் ஒன்றே தெய்வபாஷை மற்றவைகள் எல்லாம் மனிதர்கள் பேசும் சாதாரண பாஷை என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், ப.46, வானதி பதிப்பகம், சென்னை, 1981)

2,500 ரூபாய் கட்டினால் வீட்டிலேயே கரோனா சிகிச்சை-வேலூரில் தொடக்கம்!!

 Corona treatment at home in Vellore for Rs 2,500

 nakkheeran.in :கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், மருத்துவமனைகள் நிரம்பின. கரோனா நோயாளிகளுக்கு இடம் கிடைக்காமல் தவித்தனர். இதனால் கரோனா ஏ சிம்டம்ஸ் இருப்பவர்கள் (வாசனை தன்மை அறிய முடியாதது, உணவில் சுவை அறிய முடியாதது) வீட்டிலேயே இருந்து சிகிச்சை அளிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இதனை தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதன்படி தற்போது வேலூர், சேலம், கன்னியாகுமரி உட்பட 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

சீமான் : இனி கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர்களுக்கு பதிலளிக்க வேண்டாம்

 இனி அவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியை விட்டு விலகிய நிலையில் நாம் தமிழர் கட்சியில் உட்கட்சிப் பூசல்கள் இருக்கிறதா என்ற விமர்சனங்கள் வரத் தொடங்கின. வெளியேறிய கல்யாணசுந்தரம் சீமானுக்கு பதில் கொடுத்த நிலையில், கட்சியில் இருந்தும் பல நிர்வாகிகள் வலை தளங்களில் கல்யாண சுந்தரத்துக்கு மீண்டும் பதில்களை அளிக்கும் வகையில் பதிவுகளையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று சீமான் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து செப்டம்பர் 12 ஆம் தேதி இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ் தேசிய இனத்துக்கான தூய்மையான அரசியலை இந்த மண்ணில் உருவாக்க கடந்த 11 ஆண்டுகளாக கடுமையான அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு இடையே பாடுபட்டு வருகிறோம். தமிழ் தேசிய இனத்தின் மக்களை அரசியல் படுத்தி அதிகாரப் படுத்தும் ஜனநாயகப் பெரும் போராக 2021 சட்டமன்ற தேர்தல் நமக்கு அமையவிருக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: அண்ணாமலை ஐபிஎஸ்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: அண்ணாமலை ஐபிஎஸ்

minnambalam :தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் மூன்று மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் மாணவர் சங்கங்களும், விடுதலைச் சிறுத்தைகள், மமக போன்ற அரசியல் கட்சிகளும் தமிழகம் முழுதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டுள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வு இன்று (செப்டம்பர் 13) காலை தொடங்கி நடந்து வருகிறது.  இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, நீட் தேர்வை பாஜக ஆதரிக்கிறது என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் சொல்வது தவறு என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,   “தற்கொலை செய்துகொண்ட குழந்தைகளுக்கு என் இரங்கல். என் கட்சியின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் இந்த டாபிக் பற்றி நாம் மிக விரிவாகப் பேச வேண்டும். நீட் தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் நடக்கும் தேர்வு. தமிழகத்தில் மட்டும்தான் எதிர்ப்பு இருக்கிறது. நீட் தேர்வை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம். தமிழகத்தில் இருந்து நிறைய தமிழ் பிள்ளைகள் பாஸ் ஆகிக் கொண்டிருக்கிறார்கள், குழந்தைகள் உறுதியாக இருக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவியது. இந்த நிலையில் நீட் பற்றி அவர்களுக்கு ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது” என்று கூறிய அண்ணாமலையிடம்,

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம் - டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம் - டி.ஆர்.பாலுmaalaimalar : நீட் தேர்வு பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு அறிவித்துள்ளார். 
டி.ஆர்.பாலு
சென்னை:     கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் பங்கேற்றனர்.  சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருவள்ளூர் , கடலூர், நாமக்கல் , காஞ்சிபுரம், வேலூர் , கன்னியாகுமரி , தஞ்சாவூர் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகு முககவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற்றது.

சீமானால் வஞ்சிக்கப்பட்டவர்கள் வாழ்விழந்தவர்கள் .இளமையை தொலைத்தவர்கள் பட்டியல்! .. தலை சுற்றும்!

Manoj Kumar : வெத்துப் பய சீமானும்,இத்துப் போன தமிழ் தேசிய சாமானும்.. 

 சீமானால் வஞ்சிக்கப்பட்டவர்கள்* சீமானால் வாழ்விழந்தவர்கள்* சீமானால் இளமையை தொலைத்தவர்கள்.

 அய்யோ இந்த கல்யாணசுந்தரமும்,ராசீவ் காந்தியும் எனக்கு துரோகம் பண்ணீட்டாங்க'னு நீலிக்கண்ணீர் வடிக்கும் சீமானால் கடந்த 11 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் பட்டியலை எல்லாம் பார்த்தால் நமக்கே தலை சுற்றும்,,, "எவன் வேணா போங்க,,என்ன எதிர்த்தா இது தான் கதி" என நாம் தமிழர் கட்சியை ஏதோ தனக்கான சொத்து போல ஆணவத்தோடும்,தலைகனத்தோடும் பேசும் சீமான் அவர்களே,,இந்த கட்சி ஒன்றும் உங்கள் ஒருவரால் துவங்கப்பட்ட கட்சி இல்லை,,,

2009 ஈழப்படுகொலையின் போது என்ன செய்வதென்று தெரியாமல் கையறுநிலையில் இருந்த பல பல இளைஞர்கள்,உணர்வாளர்கள் என அனைவரும் இணைந்து,,ஒரு கூட்டத்தலைமையாக இயங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டது தான் நான் நாம் தமிழர் கட்சி,,,

காமராஜர் கொலை முயற்சி வரலாறு .. கல்லெறிந்து கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தீவைத்தனர் ஆர் எஸ் எஸ் ( ஜன் சங் - பாஜக)

திராவிட ஆய்வு : நவம்பர் 7, 1966 ஆம் ஆண்டு டெல்லியில் காமராஜரை தாக்க

தலைநகர் டெல்லியில் திரண்டிருந்தது இந்துத்துவா இயக்கங்கள். அவர்கள் கைகளில் வாள், கடப்பாரை, கத்தி,திரிசூலம் போன்ற ஆயுதங்களுடன் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அவர்களின் வீட்டை நோக்கி விரைந்தனர் . அப்போது வீட்டில் காமராஜர் இருந்தார். அவரை சந்திக்க வந்த ஒரு நண்பர் அவரை ஒரு அறையில் வைத்து வெளியே பூட்டினார். வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டிக்கு தீ வைத்தது கலவர கும்பல். காமராஜரின் வீடு சூறையாடப்பட்டது. காமராஜரின் உதவியாளர் நிரஞ்சன்லால் இந்துத்துவ கலவர கும்பலால் தாக்கப்பட்டார். வீட்டை சூழ்ந்து கொண்டு கற்களை வீசி கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர். குளிர்சாதன கருவிக்கு வைத்த தீயால், வீடே புகை மண்டலம் ஆனது. காவல்துறை வருவதற்குள் காமராஜரை உள்ளேயே வைத்து எரித்து விட வேண்டும் என்று வீட்டிற்கு தீ வைத்து விட்டார்கள் இந்துத்துவ இயக்கத்தினர்.
காமராஜர் அருகில் இருக்கும் எம்.பி கள் குடியிருப்பு பகுதிக்கு பின் வாசல் வழியாக உடனிருந்த சிலரால் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட்டுகளுக்கு திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்.. அமெரிக்கா, குவைத் மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து ஆர்டர்கள்

இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட்டுக்கு திருப்பூரில் குவியும் ஆர்டர்கள் - தயாரிப்பு தொடங்கிய பின்னணி என்ன? மு.ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக : தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி
கார்த்திகேயன்

கார்த்திகேயன்

தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டது சமீபத்தில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பின்னலாடை தலைநகரமான திருப்பூரில் இந்த டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. முதன்முதலாக இந்த டி-ஷர்ட்டை தயாரித்த பின்னலாடை நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன், கடந்த நான்கு நாட்களில் மட்டுமே பத்தாயிரம் டி-ஷர்ட்டுகளை தயாரித்து அனுப்பியுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கிறார்.   

"கடந்த 5 வருடங்களாக திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழக - மாணவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறேன். 'திராவிட சிறகுகள்' என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறேன். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தி மொழி திணிப்பு பிரச்சனைக்கு எதிராக இன்றைய இளைஞர்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளை அணிந்து போராடி வருகின்றனர். அதை நாங்கள் தயாரித்து வழங்குவது பெருமையளிக்கிறது" என கூறுகிறார் கார்த்திகேயன்.

குப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் - விஞ்ஞானிகள்

ரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகை மிரட்டி வருகிற நிலையில் அது தொடர்பான ஆராய்ச்சிகள் நீளுகின்றன. நோயின் தீவிர தாக்கத்தால் நுரையீரல் பாதிக்கிறது. அதனால் சுவாசம் சிக்கலாகிறபோது, அத்தகைய நோயாளிகளை வென்டிலேட்டர்களில் வைக்கிறார்கள். இப்படி வென்டிலேட்டரில் வைக்கிற நிலையில் நோயாளிகளின் நிலை குறித்து, அமெரிக்காவில் நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தின் அங்கமான பெய்ன்பெர்க் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார்கள்.  இந்த ஆராய்ச்சியின் முடிவை ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் அனஸ்தீசியா’வில் வெளியிட ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்-

* வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை முகம் குப்புற படுக்க வைக்கிறபோது, அது அவர்களின் சுவாசத்தை எளிதாக்கும். அவர்களின் உயிரைக் காப்பாற்றி விடலாம். அதே நேரத்தில் அது அவர்களுக்கு நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தி விடும்.

ரஷிய தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கியது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    maalaimalar : மாஸ்கோ: கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலகையே கதிகலங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக ரஷியாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது. இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

சசிகலா: அக்டோபரில் அபராதம்... அடுத்து விடுதலை!

/minnambalam.com : சசிகலாவின் விடுதலைக்கு அடிப்படையாக இருக்கும் அபராதத் தொகை செலுத்துதல் தொடர்பாக புதிய தகவல் கிடைத்துள்ளது,சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம்சசிகலா: அக்டோபரில் அபராதம்... அடுத்து விடுதலை!

வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததால் 2017 பிப்ரவரி மாதம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனைக் காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது.       இதே வழக்கில் ஜெயலலிதாவோடு சிறையில் இருந்த நாட்கள், சிறை விதிகளின்படியான சலுகைகள், அவருக்கான விடுமுறை நாட்கள் ஆகியவற்றின் காரணமாக சசிகலா இன்னும் சில மாதங்களில் விடுதலையாவார் என்று அமமுகவினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுபோலவே, சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளன.

நீட் மையங்களுக்கு 12 ஆயிரம் கோடி லாபம்.. . மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு பங்கு எவ்வளவு???

JP Prakash : தகர்ந்த நீட் மாயைகள்.. மாயை 1 : நீட் தேர்வு தகுதியை உறுதிப்படுத்துகிறது.. இந்திய அளவில் நீட் தேர்வை எழுதிய 12.69 லட்சம் பேரில் 7.14 லட்சம் பேர் கட்-ஆப் மார்க்வை விட அதிகமாக எடுத்து தகுதி பட்டியலில் இடம் பெறுகிறார்கள்.. ஆனால், இந்தியாவில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களோ 52,965... அதாவது, நீட் கிளியர் செய்தவர்களில் வெறும் 7.4% சதவீத பேர்களுக்கு மட்டும் தான் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும்.. 2018 இல் பொது பிரிவினர் கட்ஆப் 720 க்கு 119 (16.5%) ; இடஒதுக்கீடு பிரிவினருக்கு 720 க்கு 96.. அதாவது நீட் தேர்வில் 16.5% & 13.3% சத மதிப்பெண்களை எடுத்தாலே தகுதி பட்டியலில் இடம் கிடைத்துவிடும்.. ஆனால், மாநில +2 பொது தேர்விலோ 50% சத மதிப்பெண்களை எடுத்தால்தான் தகுதி. மாயை 2 : நீட்டால் தனியார் கல்லூரிகளில் டொனேஷனுக்கு வேட்டு..

நீட் .. திருச்செங்கோடு மாணவர் மோதிலால் தற்கொலை... தமிழகத்தில் ஒரே நாளில் மூன்றாவது மாணவர்

Shyamsundar -  tamil.oneindia.com : நாமக்கல்: நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்றாவதாக ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாளை நாடு முழுக்க நீட் தேர்வு நடக்க உள்ளது. கடும் எதிர்ப்பிற்கு இடையே நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் வரிசையாக அடுத்தது மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். 

மாணவர்களின் தொடர் தற்கொலை தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த நிலையில் சற்று நேரம் முன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மூத்தப் பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்

            Karuppu Neelakandan : மறைந்தவர்களுக்கு அஞ்சலி குறிப்புகளை எழுதுவதை விட மிகையாகப் புகழ்வது தமிழில் மிக ஆர்வக்கோளாறான கடும் நோய்.. சுதாங்கன் தன் வாழ்நாள் முழுவதும் பச்சை பார்ப்பனராகவும் காஸிப் எழுத்து மனநோயாளியாகவும் ஸநாதன சந்தர்ப்பவாதியாகவுமே இருந்துவந்தவர். பெரியார் திடலில் வந்து ஒரு முறை
'நான் பிராமணன்தான்' ' வர்ணம் தீட்டப்பட்டவன்தான்' என மார்பின் குறுக்காக பூணூல் அணிபவன்தான் என சைகையில் பெருமிதத்தோடு காண்பிக்க மொத்த கூட்டமுமே அவரது அருவெறுக்கத் தக்க அந்த ஆபாச செய்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னிப்பு கேட்க கோரியது பிடிவாதத்தோடு மறுத்த அவரை. மதிமுக தொண்டர்களும் திக தோழர்களும் அன்றைக்கு நாகரீகமாகவும் பாதுகாப்போடும் வெளியேற உதவவில்லையென்றால் அவர் கதி அன்றைக்கு அதோகதிதான். 

Mr. Seeman U2 Burtus ? மிக பெரிய வெறுப்பு அரசியலை விதைத்திருக்கிறார்.

Thangaraj Gandhi : U2_Brutus உண்மையில் இந்த பெயரை நாங்கள்
தேர்ந்தெடுத்ததற்கு சீமானும் ஒரு காரணம். அவர் மட்டுமே காரணம் அல்ல ஆனால் அவரும் ஒரு மிக முக்கிய காரணம். சீசருக்கு தனது நண்பன் புரூட்டஸ் துரோகம் இழைக்கும்போது தனது நண்பனை பார்த்து "நீயுமாடா?" என்று கேட்பது தான் இந்த வசனம் You Too Brutus ?

நாங்கள் பள்ளி, கல்லூரி படித்த காலத்தில் அரசியல் பற்றிய கொள்கை புரிதலோ, தத்துவ புரிதலோ இல்லாமல் சராசரி இளைஞர்களை போல எந்த கவலையும் இன்றி தான் இருந்தோம். ஆனால் தினம் தினம் ஏதோ ஒரு வழியில் காதுகளுக்கு வரும் ஊழல் செய்திகள் மக்களை பற்றிய கவலையற்ற அரசியல் சண்டைகள் போன்ற செய்திகளை பார்த்து ஒரு மாற்று அரசியல் வராதா என்ற ஏக்கம் மட்டும் இருந்தது. 2009 ல் ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் போது தமிழ்நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது. முக்கியமாக பள்ளி கல்லூரிகள் என அனைத்து தரப்பு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாங்கள் கருப்பு சட்டை அணிந்து தேர்வு எழுதிவிட்டு வந்தபோது பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினரால் அடித்து விரட்டப்பட்டோம். கருப்பு சட்டை அணிந்திருந்தோம் என்ற ஒரே காரணத்திற்க்காக.