திங்கள், 13 மே, 2019

ஈழப்போராட்டம் முடிந்தது 2009 அல்ல .. அது 1986 ஏப்பிரலில் முடிவடைந்து விட்டது!

(தோழர் சுகு (சிறிதரன் theneeweb.com) இன்றையநாட்களில் அவரது வாழ்வும் மரணமும் முக்கியத்துவம்.
33 ஆண்டுகள் காலவெள்ளம் அடித்துக் கொண்டுபோகிறது. சகோதரப்படுகொலை என்பது எத்தனை விபரீதங்களை எவ்வளவு பெரிய வெற்றிடத்தை சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. போராட எனப் புறப்பட்டவர்களை அழித்தொழிக்கும் விபரிதம் சமூகத்தை எங்குகொண்டு போய் சேர்க்கும் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏத்தனை போராளிகள் எத்தனை கல்வியாளர்கள் அரசியல் தலைவர்கள் சாமானிய மனிதர்கள் விடுதலையின் பேரால் கொல்லப்பட்டார்கள் அதில் பால்வேறுபாடு சிறியோர் பெரியோர் என்றபேதம் இருக்கவில்லை. ஏத்தனை பெரிய வளம் ஆற்றல் நிர்மூலம் செய்யப்பட்டது.
சகோதர சமூகங்களை சேர்ந்த சாதாரண மனிதர்கள் தலைவர்கள்- மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைவரை ஆத்திரமூட்டல் அதன் பிரதிவிளைவு மக்கள் மேல் இறங்கட்டும் என்று நிகழ்த்திய தாக்குதல்கள் சகோதர சமூகங்கள் உடுத்ததுணியுடன் தலைமுறை தலைமுறையாக வாழந்த மண்ணில் இருந்து துரத்தப்பட்ட அவலம். சக இயக்கங்கள் சகசமூகங்கள் தொடர்பாக உடல் மீதியின்றி அழிக்கும் விரோதம் மாத்திரம் தான் பராமரிக்கப்பட்டது.
புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கும் எந்த ஜனநாய இடைவெளியும் இருக்கவில்லை.
அவர்கள் றோபோக்களாக வார்க்கப்பட்டார்கள் சிறுவர்களாகவே குரோதமும் வன்மமும் வளர்க்கபட்டது. போராடி செத்துமடிவதற்கு மாத்திரம் தான் அவர்கள் பயிற்றப்பட்டார்கள்.
வாழ்க்கை இங்கு கொண்டாடப்படவில்லை. மரணம் வழிபடப்பட்டது.
இன்றுவரை இதுபற்றிய சுயவிசாரணை இந்த சமூகத்தில் இல்லை!?
மனித உரிமைபற்றி பேசுவதற்கான குறைந்தபட்ச தகுதி ஜோக்கியதை எமது சமூகத்திற்கு வேண்டாமா?

உத்தமர் காந்தியின் உயிரைக் குடித்தது ஒரு ஊதாரி பார்ப்பான்" - 4 பிப்ரவரி 48 முரசொலி..

ஆலஞ்சியார் ; விடுதலை இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற
கமலின் பேச்சு விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது அதை சொன்ன இடம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.. ஒன்றை கவனிக்க வேண்டும்,,ஒரு
இசுலாமியர் கூட கைதட்டவில்லை காரணம் தமிழ்நாட்டில் எந்த மதத்தை குறித்து பேசினாலும் அது மதத்தின் மீதான தாக்குதலாக இருப்பின் யாரும் கண்டுக்கொள்வதில்லை .. மத சடங்கு என்ற மூடநம்பிக்கையை வெகுவாக புறக்கணிப்பார்கள் .. அதை எதிர்ப்பதை கைதட்டி வரவேற்பார்கள் .. ஆனால் இரு மதங்களுக்கிடையான மோதலையோ வெறுப்பையோ யாரும் விரும்புவதில்லை .. மதங்களிடையே நல்லிணக்கத்தை கடைபிடிக்கிறது .. கமல் மிக தெளிவாகதான் பேசியிருக்கிறார் எச்சரிக்கையோடு விடுதலை இந்தியாவின் முதல் தீவிரவாதி பார்பனன் என்றோ ஆர்எஸ்எஸ்காரனென்றோ சொல்லாமல் இந்து என்று பொது அடையாளபடுத்தி காப்பாற்றியிருக்கிறார் .. "தன் தசை ஆடும்"..
இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக .. மத கலவரத்தை திட்டமிட்டு இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு வந்து காந்தியை கொன்றதின் நோக்கத்தை பேசியிருக்கலாம் காந்தி கொல்வது மட்டுமல்ல மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கி இஸ்லாமியர்களை வேட்டையாட வேண்டுமென்ற நோக்கம் தான் காரணம் .. 

இன்றைக்கு கோட்சே தேசபக்தராகவும் காந்தி தேசவிரோதியாகவும் சித்தரிக்கபடுவதும் அதை அரசு கண்டும் காணமல் இருப்பதும் அதைவிட காந்தியை ஏசுகிறவர்களுக்கும் கோட்சேவை புகழ்கிறவர்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தருவதும் தான் உச்சகட்ட கொடுமை.

அடுத்த நிதியமைச்சருக்காக வருந்துகிறேன்: ப.சிதம்பரம்

அடுத்த நிதியமைச்சருக்காக வருந்துகிறேன்: ப.சிதம்பரம்மின்னம்பலம் : நாட்டின் பொருளாதாரம் மிகவும் தவறான வடிவில் இருப்பதாகவும், அடுத்த நிதியமைச்சரை எண்ணி வருந்துவதாகவும் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்துத் தொகுதிகளையும் இம்முறை காங்கிரஸ் கட்சிதான் கைப்பற்றும் என்று எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, “தேர்தலுக்கு முன்பு நாங்கள் அமைத்த கூட்டணி உறுதியானது. ஆட்சியமைப்பதற்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணி முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கமலின் இந்து தீவிரவாதி விவகாரம்

மின்னம்பலம் : தேர்தல் விதிமுறைகளை மீறிப் பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர்
அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் நேற்று (மே 12) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று கூறியிருந்தார். கமலின் இந்தக் கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. ராம்தாஸ் அத்வாலே, நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கமல்ஹாசன் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது பாஜக தரப்பில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “அரவக்குறிச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் பேசியுள்ளார். அவரது தேர்தல் பிரச்சாரத்துக்குக் குறைந்தது 5 நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும். கமல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

படிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள்! பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்!

periyar university periyar university .nakkheeran.in - manosoundar : பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தொலைதூர கல்வி மைய மாணவர்களுக்கு மே 15-ந் தேதி (இன்னும் இரண்டுநாட்கள்தான் உள்ளன) தேர்வுகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழும்பியிருக்கிறது. இதற்குப் பின்னணியை ஆராய்ந்தபோதுதான் துணைவேந்தரின் புத்தக பிரிண்டிங் ஊழலும் அம்பலமாகிறது.
இதுகுறித்து, நம்மிடம் பேசும் தொலைதூரக்கல்வி மையங்களின் ஒருங்கிணைப்பார்களோ, “கோவையிலுள்ள பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்டு  தமிழகத்தில் 200 தொலைதூர கல்விமையங்கள் உள்ளன. வரும் 15ந் தேதி சுமார் 16,000 மாணவர்கள் சேர்ந்து தேர்வு எழுத இருக்கிறார்கள். கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு ஈக்குவலான ஏ.ஓ. முதல் ஐ.ஏ.எஸ்.வரை வேலைவாய்ப்பில்  ஏ டூ செட் முன்னுரிமைகளும் தொலைதூர கல்விமையத்தில் படிப்பவர்களுக்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தொலைதூரக் கல்விமையத்தின்மூலம் டிகிரி முடித்துவிட்டால் பட்டதாரி ஆசிரியராகி  45,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய அளவுக்கு பதவி உயர்வு கிடைத்துவிடும்.

ரயில்வே இந்தி பணியாட்களின் வசதிக்காக இனி தமிழில் பேசக்கூடாதாம் .. ஆங்கிலத்தில் பேச ரெயில்வே உத்தரவு

Southern Railway issued circular operational staff to use commonly understood english language tamil.oneindia.com - VelmuruganP : சென்னை: வட மாநிலத்தவர் பெருமளவில் ரயில்வே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு வசதியாக இனி தாய் மொழியில் பேசக் கூடாது என்றும், ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்றும் ரயில்வே உத்தரவிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் மோதி பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது இதற்கு ஒரு ஸ்டேசன் மாஸ்டர் தமிழில் பேசியதை, மற்றொரு வடமாநில ஸ்டேசன் மாஸ்டர் புரிந்து கொள்ளாததே விபத்து ஏற்படும் சூழலுக்கு காரணம் என்பதை ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இப்போது தமிழகத்தில் ரயில்வே வேலையில் பெருமளவு வடமாநிலத்தவர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதால், இனி அனைத்து ஸ்டேசன் மாஸ்ர்கள் உள்பட பணியாளர்கள் தாய்மொழியில் பேசக்கூடாது என்றும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என ரயில்வே தலைமை நிர்வாக மேலாளர் அனந்தராமன் உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் சந்திரசேகரராவ்..? ஸ்டாலின் சந்திரசேகர ராவ் சந்திப்பு!

Mahalaxmi : · காங். கூட்டணியில் சந்திரசேகர் ராவ்.. திமுக தலைவர் முக
ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். சந்திர சேகர ராவ் பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவுடன் சந்திப்பு மூலம் காங்கிரஸ் கூட்டணியில் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இவரது சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கி பார்க்கப்படுகிறது.
நக்கீரன் - கமல்குமார்  :  இந்த சந்திப்பு சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. உடன் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதால் பத்திரிகையாளர்களை அவர்கள் சந்திக்கவில்லை. ஸ்டாலின், சந்திரசேகரராவிற்கு கலைஞர் சிலையை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒருமணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது

ஹைட்ரோ கார்பன் அனுமதி: தேர்தல் விதிமீறலா?

ஹைட்ரோ கார்பன் அனுமதி: தேர்தல் விதிமீறலா?மின்னம்பலம் : விழுப்புரம், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களும் அதில் அடங்கி உள்ளது. இவ்விடங்களில் மொத்தம் 116 கிணறுகளை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு இருந்தது. அதனடிப்படையில் முதல்கட்டமாக 32 கிணறுகள் அமைப்பதற்கான எல்லைகளை வரையறுத்து கொடுத்து, அதில் ஆய்வுப்பணி மேற்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியல் - முதல் இடத்தில் இந்துஜா சகோதரர்கள்

The Sunday Times Rich List 2019 (Top 10)
  1. Sri and Gopi Hinduja (Industry and finance) | £22bn
  2. David and Simon Reuben (Property and internet) | £18.7bn
  3. Sir Jim Ratcliffe (Chemicals) | £18.2bn
  4. Sir Len Blavatnik (Investment, music and media) | £14.4bn
  5. Sir James Dyson and family (Household goods and technology) | £12.6bn
  6. Kirsten and Jorn Rausing (Inheritance and investment) | £12.3bn
  7. Charlene de Carvalho-Heineken (Inheritance, brewing and banking) | £12bn
  8. Alisher Usmanov (Mining and investment) | £11.3bn
  9. Roman Abramovich (Oil and industry) | £11.2bn
  10. Mikhail Fridman (Industry) | £10.9bn
இந்தியாவில் பிறந்த இந்துஜா சகோதரர்களை பிரிட்டன் நாட்டின் முதல்
கோடீஸ்வர குடும்பமாக அந்நாட்டின் பிரபல பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிகை அந்நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் வசித்தவாறு பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை செய்துவரும் ஸ்ரீசந்த் இந்துஜா(78) மற்றும் கோபிசந்த் இந்துஜா(82) சகோதரர்கள் 22 பில்லியன் பவுண்டுகள்  (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளனர். இவர்களின் மேலும் இரு சகோதரர்களான பிரகாஷ் இந்துஜா(72) மற்றும் அசோக் இந்துஜா(67) ஆகியோர் லண்டன் மற்றும் மும்பையில் உள்ள தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர்.
பெட்ரோலிய உற்பத்தி, எரிவாயு, தகவல் தொடர்புத்துறை, ஊடகங்கள், வங்கிதுறை, ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் இந்துஜா குமுமம் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறது

ஆப்கானிஸ்தான் பெண் ஊடகவியலாளர் சுட்டு கொலை


வீரகேசரி : ஆப்கானிஸ்தானில் முன்னள் பத்திரிகையாளரும், அரச ஆலோசகருமான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் காபூலில் உள்ள மேனா மங்கலின் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவேளையிலேயே மர்ம நபர்கள் சிலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் மேனா மங்கல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆப்கானிஸ்தானின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள நெருக்கடியை அறிவிப்பதன் மூலம் பிரபல்யமானார்.

இலங்கையின் 9 மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ எஸ் ஐ எஸ் .... வெளிவரும் புலனாய்வு ...

Jeevan Prasad : பாஸ்க்கு தாக்குதல்!
பாஸ்க்கு ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கி தற்கொலை தாக்குதல்களை நடத்தி நாடு முழுவதும் இரத்த ஆறு ஓட வைப்பதுதான் குறிக்கோளாக இருந்தது. அது அவர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் இயலாமல் போகிறது. சில கருத்து முரண்பாடுகளால் சஹரானின் குழு இரண்டாக உடைகிறது. அங்கிருந்தவர்களில் சிலர் சஹரானின் தலைமையை ஏற்காது இன்னொரு தலைவரை தேர்தெடுக்கிறார்கள்.
அடுத்த தலைவரை தேர்ந்தெடுந்தவர் பின்னால் தற்கொலைதாரியாக இருந்த 6 -7 பேர் இருந்தார்கள். இதனால் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்க வைக்கும் சஹரானின் கனவு கலைந்து போகிறது. அந்த இரண்டாவது தலைவரும் இப்போது கைதாகி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளார்.
கடந்த தாக்குதல்கள் குறித்து மட்டுமல்ல அவர்களுக்கு தெரிந்த பெரும்பாலான தகவல்களை அடி முதல் நுனிவரை இப்போது கைதாகியுள்ளோர் கக்கி விட்டார்கள். அதனடிப்படையில் சஹரானின் அமைப்பினது வளர்ச்சிக்கு அனைத்து விதங்களிலும் உதவிய உள்நாட்டு - வெளிநாட்டு நபர்கள் முதல் நாடுகள் குறித்த தகவல்களையும் கைதானவர்கள் தெரிவித்துள்ளார்கள். தேசிய ரீதியாக பல வியாபாரிகள் பண உதவி செய்துள்ளார்கள். அவர்களில் தெமட்டகொடை இப்ராகிம் குடும்பத்தினர் முதன்மையானவர்களாக உள்ளனர்.
புலனாய்வு துறையினரது கணிப்பின் படி தற்கொலைதாரிகளில் அநேகர் இப்போது கைதாகியுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகளாக வெடித்து சிதற சத்தியப் பிரமாணம் செய்த காத்தான்குடியைச் சேர்ந்த 5 பேர் தற்போது கைதாகி உள்ளனர்.
அவர்கள் அனைவரும் அம்பாந்தோட்டை பகுதியிலுள்ள ஒரு முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளார்கள். தவிர இன்னும் 150 பேர் வரை கைதாக வேண்டியவர்கள் நாட்டுக்குள் உள்ளதாக குற்றவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அவர்கள் தற்கொலைதாரிகள் இல்லாவிடினும் சஹரானின் கடும் ஆதரவாளர்களாவார்கள். அத்தனைபேரும் சஹரானின் உபதேசங்களை ஏற்றுக் கொண்டவர்களாவார்கள்.

முன் சக்கரங்கள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கி பயணிகளைக் காப்பாற்றிய விமானி


BBC :விமானத்தின் மூக்குப் பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே நகர்ந்தது. விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாததால், முன் சக்கரங்கள் இல்லாமலேயே மியான்மர் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவர் தாம் இயக்கிய விமானத்தைத் தரை இறக்கினார்.
மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் மாண்டலே விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நிற்கும் முன் அதன் முன் அடிப்பகுதி ஓடுதளத்தில் உரசியது. அந்த எம்ரேர் 190 ரக விமானத்தில் இருந்த 89 பயணிகளுக்கும் காயம் எதுவும் ஏற்படாமல் சாமர்த்தியமாக விமானத்தை இறக்கியதற்காக பாராட்டப்பட்டு வருகிறார் கேப்டன் மியாட் மோ ஆங். லேண்டிங் கியர் வெளியே வந்து விட்டதா என்பதை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் உறுதி செய்வதற்காக கேப்டன் மியாட் மோ ஆங், அந்த விமான நிலையத்தைச் சுற்றி இரு முறை வானில் வட்டமடித்ததாக மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 12 மே, 2019

சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்


சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்ஆதவன் ந்யூஸ் : ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டதாக தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இருமாத காலத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வாடகைக்கு தொடர்மாடிக் கட்டடத்தொகுதி ஒன்றில் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாளே ஈஸ்டர் குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்ததாகத் தெரியவருகிறது.

விஜயகாந்த் + பிரேமலதாவும் காரிய கோமாளிகளும்

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!LR Jagadheesan :; விஜயகாந்த் கட்சியின் ”கொளுகை” என்ன என்கிற விடை தெரியாத கேள்வியைப்போலவே அவரது கட்சியில் இன்னும் இருக்கும் ஆட்களின் அரசியல் புரிதல், எதிர்பார்ப்பு என்ன என்பதும் விடை காணமுடியாத மில்லியன் டாலர் கேள்வி. அப்படியான அபூர்வ பிறவிகள் அவர்கள். இல்லாவிட்டால் பிரேமலதாவை பற்றி அவர் கணவரான விஜயகாந்த்திடமே புகார் செய்யப்போன அந்த ஆட்களை எப்படி புரிந்துகொள்வது? பின்வரும் இந்த வரிகள் தான் இதில் highlight:
“வெளியே வந்த நிர்வாகிகள், ‘நாங்க சொன்னதைக் கேட்டு கேப்டன் கண்ணுலேர்ந்து தண்ணியா ஊத்த ஆரம்பிச்சிடுச்சு’ என்று சொல்ல, அதற்கு வீட்டில் இருந்த உதவியாளர்கள், ‘அவர் கண்ணுல இருந்து எப்பவும் இப்படிதாங்க கண்ணீர் வந்துக்கிட்டே இருக்கும்,. நீங்க போங்க’ என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.”
இதை படித்ததும் பரமார்த்த குருவும் அவருக்கு வாய்த்த முட்டாள் சீடர்களும் கதை தான் நினைவுக்கு வந்தது. ஆனால் தமிழக அரசியலில் இதெல்லாம் புதிதும் அல்ல. ஜெயலலிதா பற்றி எம்ஜிஆரிடம் புகார் சொன்ன; சசிகலா பற்றி ஜெயலலிதாவிடம் புகார் சொன்ன அதிமுக தொண்டர்கள் ஆளும் மாநிலத்தில் எந்த கோமாளித்தனத்தையும் காமெடியாக மட்டும் கடந்து செல்ல முடியாது.
ஏனெனில் சுயநினைவின்றி கிடந்த முதல்வர் இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதை நம்பிய நாட்டில் எதுவுமே காமெடியல்ல. எல்லோருமே இங்கே காரியக்கோமாளிகள் தான்

தண்ணீரில் இயங்கும் எஞ்சினைக் கண்டுபிடித்த தமிழன் – கண்டுகொள்ளாத இந்தியா…கைகொடுத்த ஜப்பான் !


வெப்துனியா :முழுக்க முழுக்க தண்ணீரில் இயங்கும் எஞ்சினை தமிழகத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் கண்டுபிடித்துள்ளார். சுற்றுசூழலுக்குப் பாதிப்பில்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதுதான் தற்காலத்தைய முக்கியமானத் தேவையாக உள்ளது. அத்தகைய ஒருக் கண்டுபிடிப்பாக முழுக்க முழுக்க தண்ணீரால் இயங்கும் எஞ்சின் ஒன்றை  குமாரசாமி என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனை எரிபொருளாக உபயோகித்து ஆக்ஸிஜனை வெளியேற்றும் தன்மையுள்ளது இந்த எஞ்சின். அதனால் சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது.  இந்த எஞ்சினை 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த குமாரசாமி அதன் பின்னர் பல நிறுவனங்களிடம் பல நிறுவனங்களிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால் யாரும் கண்டுகொள்ளாத சூழ்நிலையில் ஜப்பான் நாட்டு அரசின் உதவியை நாடியுள்ளார். இப்போது ஜப்பான் அரசு இந்த கண்டுபிடிப்பை ஏற்று ஜப்பானில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இருக்கிறது. இந்த இயந்திரத்தை விரைவில் இந்தியாவிலும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முயற்சி செய்வேன் என இதை அறிமுகப்படுத்திய குமாரசாமி நம்பிக்கை அளித்துள்ளார். அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Coimbatore 'inventor' claims his distilled-water-powered engine can run cars
Sounthirarajan said the Indian government granted him a patent in November 2018 for his Super Sonic Hydrogen IC Engine.

பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸார்... பூந்தமல்லியில்


வெப்துனியா :பாலியல் உறவுக்காக பெண் புரோக்கர் ஒருவருக்கு ஆன்லைன் மூலம் பணம் கட்டி ஏமாந்த போலீசார், அந்த் பெண் புரோக்கரை மிரட்டியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயுதப்படை காவலர்களான மோகன், சார்லஸ் வேளாங்கண்ணி மற்றும் இவர்களது நண்பர்
ராஜசேகரன் ஆகிய மூவரும் பாலியல் உறவுக்கு பெண் கேட்டு பெண் புரோக்கர் ஒருவருக்கு ஆன்லைன் மூலம் பணம் கட்டியுள்ளனர். ஆனால் அந்த பெண் புரோக்கர் பணத்தை பெற்றுவிட்டு பாலியல் உறவுக்கு பெண்ணை அனுப்பவில்லை. செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த போலீசார் உள்பட மூவரும் அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து அவரிடம் சண்டைபோட்டு அவரிடம் இருந்த நகைகளை பறித்து கொண்டுள்ளனர்.

தங்க தமிழ்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும் படை சோதனை கெடுபிடி ..

raid கலைமோகன் நக்கீரன்: திருப்பரங்குன்றம், அவரக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மே 19 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சாரங்களை தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், 
மதுரை பழங்காநத்தத்தில் தனியார் ஓட்டலில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியுள்ள அறையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது அவர் தங்கியுள்ள அறையில் தேர்தல் பறக்கும் படையினர் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் என வந்த புகாரின் பேரில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது<

பாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: ...சர்வதேச பாலியல் தொழிலுக்கு ?


BBC : சாகர் பலோச் -பிபிசி உருது சேவை : சர்வதேச தொண்டு நிறுவனமான மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, பாகிஸ்தானில் நடைபெறும் சம்பவங்கள், பிற ஐந்து ஆசிய நாடுகளில் நடக்‍கும் சம்பவங்களுடன் ஒத்துபோகின்றன.
இவ்விவகாரம் தொடர்பாக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலர்கள், கடந்த ஆண்டு இதே காரணங்களுக்‍காக சீன மக்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள், பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்துகொண்டு சீனாவுக்கு அழைத்துச் செல்வதாகவும், அவர்களின் நோக்கம் திருமண உறவுகளை வளர்ப்பது அல்ல என்றும், மாறாக சர்வதேச அளவிலான பாலியல் தொழிலே என்றும் கூறியுள்ளனர்.
இதன் அடிப்படையில், பிபிசி உருது நிருபர் சாகர் பலோச், சீன ஆணை திருமணம் செய்துகொண்ட ஃபைசாலாபாத்தை சேர்ந்த பெண்ணை சந்தித்தார். அந்த பெண் என்ன சொன்னார்? என்பதை அவரின் சொந்த வார்த்தைகளிலேயே அறிவோம்.

வாக்கு பதிவு தொடங்கு முன்பே 50 வீத வாக்குகள் பதிவு .தேர்தல் அதிகாரியின் தில்லுமுல்லு.. டெல்லியில்

artifacts in delhi loksabha election pollingnakkheeran.in - kirubahar : டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில்  டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் டெல்லியின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சர்ச்சையாகியுள்ளது. அந்த வகையில் டெல்லியின் மாலவியா நகரில் உள்ள 132 ஆம் எண் வாக்கு மையத்தில், ஹஸ்ரானி என்பவர் முதல் நபராக வாக்களிக்கச் சென்றுள்ளார். ஆனால் முதல் வாக்கை அவர் செலுத்த சென்ற போதே வாக்கு எந்திரத்தில் 50 வாக்குகள் பதிவாகியுள்ளதை கண்டுள்ளார்.

மோடி (செல்லூர் 2): மேகமூட்டங்கள் இருந்ததால் ராடாரில் இந்திய விமானங்கள் சிக்கவில்லை


மோடி ரேடார் ட்வீட்vikatan.com -kasi-viswanathan-m : CPRF வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகள் பலரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து News nation என்ற ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதில் "தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நாளன்று வானிலை சற்று மோசமாக இருந்தது. வல்லுநர்கள் தாக்குதலை வேறு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
ஆனால் நான்தான் மேகங்கள் நம்மை ரேடார்களின் பார்வையிலிருந்து காக்கும் என அறிவுறுத்தினேன்" என்றார். ஆனால் ரேடார் தொழில்நுட்பத்தால்
மேகங்களைக் கடந்து பார்க்கமுடியாதா என்ன?
நிச்சயம் பார்க்கமுடியும். சாதாரண ஒளி அலைகளை விட மிகவும் குறைந்த அலைநீளம் (wavelength)  கொண்ட ரேடியோ அலைகள் கொண்ட ரேடார்கள் இயக்கப்படுவதால் மேகங்கள் மேலே செல்லும் விமானங்களைக் கண்டறிய எந்த ஒரு தடங்கலும் இருக்காது.

நிதிஷ்குமாரை பாஜக ஆதரவுடன் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த திட்டம்?

பாஜக நிலை என்ன /tamil.oneindia.com - shyamsundar : மெஜாரிட்டி இல்லையெனில் இவர்தான் பிரதமர்.. பாஜக திட்டம்!- வீடியோ டெல்லி: லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி பெறவில்லை என்றால் பாஜக கூட்டணி மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
லோக்சபா தேர்தல் தற்போது தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு பின் செய்ய வேண்டிய பேச்சுவார்த்தைகளை இப்போதே எதிர்க்கட்சிகள் தொடங்கிவிட்டது.
இதற்காக வரும் மே 21ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த உள்ளது. மொத்தம் 21 மாநில கட்சிகள் இதில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகள்படி, இந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அதாவது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காது. இது பாஜகவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சீமான் விஜயலட்சுமி பாலியல் வழக்கும் சீமானின் அரசியல் முழக்கங்களும்

Venkat Ramanujam : திமுக வை அழிக்கவே அரசியலுக்கு வந்து இருப்பாதாக #NTK தீடிரென பெரும் வலி எடுத்து காட்டு கத்தல் கத்த வேண்டும் ..
சீமான்
இங்கே திமுகவினர் சொல்வதை போல மோடியின் கைபாவையாக சீமான் செயல்படுகிறார் என்பதை என் போன்றவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை..
உண்மையில் ஒரு குறிபிட்ட ஜாதி சமூகம் மட்டுமே பெருவாரியாக நிறைந்து உள்ள #RSS போல மறைமுகமா வன்மத்தை வைத்து கொண்டு சிரித்து பேசி காரியத்தை சாதிக்கும் வேலையை பண்ணமால் இப்படி வெளிப்படையா பேசி கேலிக்கு ஆகும் சீமானை பாரட்டலாம் ..
அதிமுக பிறந்தது 1972ல் வருமானவரிதுறை ரைய்ட்டுக்கு பயந்து.. எம்ஜியார் வரி கட்டாமல் வைத்து இருந்த கறுப்புப்பணம் காரணமாக..
அதே வருமானவரிதுறை ரைய்டை வைத்து எடப்பாடி அரசை பாஜக இப்போது ஆளுவது அதிமுகவின் பிறந்தநேர ராசி ..
இதில் இந்திரா காந்தி கொண்டு வந்த எம்ர்ஜெண்ஸி எதிர்க்க 1976ல் ஆட்சியை இழந்த திமுக ..
இதில் விடுதலைபுலி ஆதரவுக்காக ஆட்சியை 1991 ல் இழந்த திமுக ..
ஆனால் இப்படி எந்த ஒரு கொள்கை காரணம் அன்றி இந்திரா காந்திக்கு கொடுத்த வாக்கை காப்பற்றாமல் 1977ல் மொரஜி தேசாய் காலில் விழுந்து ஏமாற்றியதால் 1980ல் இந்திரா காந்தியின் கோபத்துக்கு ஆளாகி ஆட்சியை இழந்தது அதிமுக..

117 நாள் லீவ் கிடைச்சிடுச்சு; கூடுதலா 180 லீவ் வேணும்!’- சசிகலாவின் விடுதலை பிளான்

சசிகலாvikatan.com - எம்.வடிவேல் ; மே 23-ம் தேதி, தேர்தல் முடிவுகளை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுதான் தனது வருங்கால அரசியல் பயணத்தையும்  வாழ்க்கையையும் வழிநடத்திச்செல்லும் என்று உறுதியாக எண்ணுகிறார்.
சசிகலா இப்படி எண்ணுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிறையில் நான்கு வருட சிறைத் தண்டனையோடு, அபராதத் தொகை 10 கோடியைச் செலுத்துவதில்லை என்ற முடிவால், கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனை அனுபவித்தாக வேண்டும். இதையெல்லாம் சிறை நன்னடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி, தண்டனைக் காலத்தை குறைத்துவிடலாம் என எண்ணிவருகிறார். ஆனால், டிஐஜி ரூபா தெரிவித்த 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகார் தடையாக வந்து நிற்கிறது.

திலகவதியை கொன்றது ஆகாஷ் அல்ல? திலகவதியின் அக்கா கணவர் மீது சந்தேகம்?

peoplesfront.in :ஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல! உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது கருவேப்பிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஆகாஷ் – திலகவதி இருவரும் 8ஆம் வகுப்பு முதற்கொண்டு காதலித்து வந்திருக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். திலகவதி அக்கா ஏற்கனவே தற்கொலை செய்து இறந்திருக்கிறார். எப்பொழுதும் குடிபோதையில் இருக்கும் அக்காவின் கணவர் திலகவதியை பெண் கேட்டிருக்கிறார். திலகவதி மறுத்துவிட்டார்.
கொலை நடந்த அன்று திலகவதி ஆகாஷை அழைத்து சில்லறை மாற்றித்தர கோரியிருக்கிறார். ஆகாஷ் அதனை செய்திருக்கிறார். இதனை தூரத்தில் இருந்து போதையிலுள்ள அக்கா கணவர் பாத்திருக்கிறார். அதன் பிறகு கொலை நடந்திருக்கிறது.
தனக்கு கிடைக்காத நீ அவனிடம் (பறையனிடம்) போறியா? என்ற கோபத்தில் ஏற்கனவே இருந்ததாக சொல்லப்படுகிறது. திலகவதியின் தாய் மாமன் ஒருவர் இருக்கிறார். அவர் மீதும் சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த கொலையை ஒடுக்கப்பட்ட சமூக அப்பாவி இளைஞனான பயம் குணம் கொண்ட காதலனான ஆகாஷ் மீது போடப்பட்டுள்ளது. திட்டமிட்டு வன்முறைக்கு வழிவகுக்கப்பபட்டுள்ளது.

அமரர் கோவை மு.இராமநாதன் .. 27 முறை சிறைசென்றவர் .. 6 ஆண்டுகாலம் சிறையில் கழித்தவர்...!

திமுக முன்னாள் எம்பி கோவை ராமநாதன் மரணம்மாலைமலர் :கோவை: தி.மு.க. முன்னாள் எம்.பி. கோவை மு.ராமநாதன் (87) வயது முதிர்வு காரணமாக வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு ராமநாதன் உயிர் பிரிந்தது.
கோவை ராமநாதன் கோவை தென்றல் என்று அழைக்கப்பட்டவர். கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர் ஆவார்.
1971-76 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 1984-89 வரை கோவை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். 1996 கோவை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
மு.ராமநாதன் மாநகர செயலாளர், தணிக்கை குழு உறுப்பினர், அறக்கட்டளை அறங்காவலர், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்து இருந்தார்.