திங்கள், 17 அக்டோபர், 2016

மருத்துவர்கள் இல்லாமல் ஜெ.வுக்கு சிகிச்சை: புதிய இயந்திரத்தை வாங்கியது அப்பல்லோ!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை புதிய இயந்திரம் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும் மேலும் அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பிசியோ தெரபி செய்ய மருத்துவர்கள் அடிக்கடி உள்ளே செல்வதால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேலும் நுரையீரல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் இல்லாமல் பிசியோ தெரபி செய்ய புதிய இயந்திரம் ஒன்றை வாங்கியுள்ளது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம். இந்த இயந்திரத்தின் மூலம் மனிதர்களின் உதவியில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க முடியும், இதனை இயக்க ஒரே ஒரு மருத்துவர் இருந்தால் போதும். சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டதாக இந்த இயந்திரத்தை பற்றி அப்பல்லோ மருத்துவர்களுக்கு விளக்கி செய்து காட்ட சிங்கப்பூரில் இருந்து இரண்டு மருத்துவர்களும் சிங்கப்பூர் வந்துள்ளதாக கூறப்படுகிறது வெப்துனியா.காம்   இனி மருத்துவர்கள் நிம்மதியாக பெருமூச்சு விடலாம்

ஜெகோவா சாட்சிகள் இரத்தம் ஏற்க மறுத்தால் தமிழாசிரியர் மரணம்! கர்த்தரும் காப்பாற்றவில்லை

யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ்
பசில்  அவர்கள் நேற்றிரவு 15.10.2016 காலமாகி விட்டார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பசில் ஆசிரியரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து சுய நினைவை இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, 
கோர விபத்தால் ஆசிரியரின் இரு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் ஒரு கால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் அதனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
பின்னர் இரத்தம் ஏற்ற மருத்துவர்கள் முற்பட்ட வேளை அவரின் சில உறவுகள் மற்றும் மதப் பெரியவர்கள் அதனை மறுத்து, தங்கள் மதத்தில் இவ்வாறான செயற்பாடுகளை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

ராஜாத்தி அம்மாளின் கோரிக்கையை சசிகலா புஷ்பா ஏற்க மறுப்பு! விட்டுகொடுக்க முடியாதாம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இந்த நிலமைக்கு சசிகலா தான் காரணம் என தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.சசிகலா கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற பார்கிறார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் போக காரணம் சசிகலா தான். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சசிகலாவை உடனடியாக அப்பல்லோவில் இருந்து வெளியெற்ற வேண்டும் என சசிகலா புஷ்பா பேட்டியளித்தார்.>சசிகலா புஷ்பாவால் சசிகலா தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க சென்ற திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் சசிகலா உடன் 45 நிமிடம் பேசினார்.இந்த சந்திப்பின் போது சசிகலா புஷ்பாவை அமைதியாக இருக்குமாறும், முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது தன்னை பற்றி இப்படி பேசுவதை நிறுத்துமாறும் பேசுமாறு சசிகலா ராஜாத்தி அம்மாளிடம் கூறியதாக கூறப்பட்டது."அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ராஜாத்தி அம்மாள் டெல்லியில் உள்ள சசிகலா புஷ்பாவிடம் தன்னுடைய உதவியாளர் மூலம் பேசியுள்ளார்.

சமுக ஊடகங்கள் மூலம்தான் ஓரளவு உண்மையாவது வெளியே வருகிறது ! தடுக்க நினைக்கும் அதிமுகவின் கூலிகள்?

சமூக  ஊடகங்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கிறோம்!
உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூட முடியாது!!

ப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பியதாக இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளது தமிழகப் போலீசு. அவர்கள் மீது தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பியதாக 3 சட்டப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் படி ஏழாண்டுகள் வரை அவர்களைச் சிறையிலடைத்துத் தண்டிக்க முடியும். முதல்வர் உடல் நிலை பற்றி வதந்திகளைப் பரப்பியதாக இதுவரை 50 பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. கைது நடவடிக்கைகள் தொடரும் என்று  போலீசு  உயர்  அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறந்த சிகிச்சை (இதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது) அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சிகிச்சை முறைகள் மற்றும் அவரது உடல் நிலையில் தொடர்ந்து காணப்படும் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது அப்பல்லோ நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிடுகிறது. ஆனாலும் முதல்வரின் உடல்நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவுவதைத் தடுக்கவே  நடவடிக்கை எடுப்பதாகப் போலீசு கூறுகிறது.

ரயில்கள் ரத்து: ஆயிரக்கணக்கானோர் கைது!

மின்னம்பலம்.காம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய
அரசைக் கண்டித்து, தமிழகம் முழுக்க 48 மணி நேர ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. பாமக, தேமுதிக தவிர மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. மக்கள் நலக் கூட்டணி அறிவித்த இந்த இரு நாள் போராட்டத்தை திமுக-வும் ஆதரித்தநிலையில், இன்று தமிழகம் முழுக்க எழுச்சியோடு நடந்த போராட்டங்களால் ஆங்காங்கே ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், அரியலூர், சேலம், கும்பகோணம், காட்பாடி , சிதம்பரம், மதுரை, நெல்லை, திருப்பூர் மற்றும் தருமபுரி என அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் போராட்டத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சி:
தேசிய தென்னிந்திய நதிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி-கரூர் ரயில் பாதையில் குடமுருட்டி அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் தண்டவாளத்தில் குடிசைகள் அமைத்து தங்கள் எதிர்ப்பைக் காட்டிய அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதேபோல், அரியலூரிலும் ஆயிரக்கணக்கானோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெ-வுக்கு வெளிநாட்டில் சிகிச்சை! - மோடி திடீர் யோசனை!..

minnambalam.com மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். கிரீம்ஸ் ரோட்டில் இருந்து வாட்ஸ் அப் அனுப்பிய மேசேஜ்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தன.
‘‘வழக்கம்போலவே பரபரப்பாக இருக்கிறது கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை. அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் மாறி மாறி வந்துபோனபடி இருக்கிறார்கள். அதிமுக-வின் செய்தித் தொடர்பாளரான சி.ஆர்.சரஸ்வதி மருத்துவமனைக்குள் சென்றார். முதல் தளத்துக்குக்கூட அவர் செல்லவில்லை. தரைத் தளத்தில் நின்று அங்கிருந்த சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். திரும்பி வெளியே வந்தவர், ‘முதல்வர் அம்மா நலமுடன் இருக்கிறார். கண் விழித்துப் பார்க்கிறார். விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்புவார்…’ என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போனார். அடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்னையன் மருத்துவமனைக்குப் போனார். அவர் முதல் தளம்வரை போவதற்கு அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் பன்னீருடன் சில நிமிடங்கள் பொன்னையன் பேசியபடி இருந்தார். பிறகு அவரும் வெளியே வந்து, ‘முதல்வர் புரட்சித்தலைவி அம்மா கண்விழித்துப் பார்த்து, தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி சொன்னார். அம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என்று சொன்னார். இனி பிரதாப் ரெட்டிகாரு  நிம்மதியாக தூங்கலாம்?

தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத
மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தஞ்சை, கடலூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ரயில் மறியல் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மறியல் போராட்டத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் அஷ்ரப், ரயில் மறியல் போராட்டத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தடகள வீராங்கனை சாந்திக்கு அரசு வேலை!

thetimestamil.com:  புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி.
சர்வதேச அளவில் 11 பதக்கங்கள் , தேசிய அளவில் 50 மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இவர், கடந்த 2006-ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆனால், அவரது பாலினம் குறித்து சர்ச்சை எழுந்ததுடன், அவர் கடுமையான பரிசோதனைகளுக்கும் ஆளானார். அவருடைய பதக்கமும் பறிக்கப்பட்டது.

ரூ 200 க்காக சாமியாடி புகை, நெரிசலில் உயிர்விட்ட ஏழைத்தாய் .. மந்திரிகள் போட்டி போட்டுகொண்டு கோவில் கோவிலாக ஜால்ரா

“மந்திரிமாரெல்லாம் போட்டி போட்டு வழிபாடு நடத்துறாங்க.. ஒரு மந்திரி பால்குடம் எடுக்கிறதுக்கு பெண்கள் கூட்டத்தைச் சேர்த்தாருன்னா.. இன்னொரு மந்திரி யாகம் நடத்துறதுக்கு கூட்டம் சேர்க்கிறாரு.. மந்திரி ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்ட திருத்தங்கல் பெருமாள் கோவில் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு சென்றவர் தான் பொன்னுத்தாய்.. யாக புகையில் மூச்சு திணறி மயங்கி விழுந்து செத்துட்டாருன்னு சொல்லுறாங்க.. சாமியாடி கிழே விழுந்து செத்துட்டாருன்னும்
சொல்லுறாங்க.. எல்லாம் அந்த பெருமாளுக்கே வெளிச்சம்..” என்று புலம்பியிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலும் பல கோவில்களில் இதே வேண்டுதலோடு ஹோமம், யாகமெல்லாம் வளர்த்து தொடர்ந்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சத்தியமா இது வதந்தி அல்ல .. அம்மாலோ அல்வா சட்னி இப்படிதாய்ன் நம்புங்கசார்!


அதிமுகவின் ஏவல் துறை... தமிழக காவல் துறை... வதந்திகளே நாட்டின் முக்கிய பிரச்சனை ? அரிய கண்டுபிடிப்புகள்!

thetimestamil.com : உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அதிமுக தொழில்
நுட்பப்பிரிவுடன் இணைந்து திமுகவினரை துன்புறுத்தும் செயல்களை காவல்துறை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பியதாக இதுவரை 7 பேரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். 52-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார்கள். அதிமுகவின் தொழில் நுட்பப் பிரிவில் இருப்பவர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில்தான் இந்த அவசர நடவடிக்கையை சென்னை மாநகர காவல்துறையினர் எடுத்து வருகிறார்கள் என்பது மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது.

நாடார் சங்க ஹரி கைது ! சசிகலா புஷ்பாவின் வலதுகரம்?

நெல்லை நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சசிகலா புஷ்பாவின் வலது கையாக இருந்து செயல்பட்டுவந்தவர் என கூறப்பட்டது தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராகவும், சசிகலாவுக்கு எதிராகவும் பேசி வரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தங்களை கொடுமைப்படுத்தியதாக பானுமதி, ஜான்சி ஆகிய 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்."வேப்துனியா.கம்

சசிகலா புஷ்பாவுக்கு எதிரான புகார்: பெண் வக்கீல், 2 பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

 நெல்லை சசிகலா புஷ்பா எம்.பி.க்கு எதிராக புகார் அளித்த 2 சிறுமிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரான பெண் வக்கீல் ஆகியோருக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு நாடார் மக்கள் பேரவை மாநில தலைவர் குமரேசன், சசிகலா புஷ்பா எம்.பி. மீது பாலியல் புகார் அளித்த பானுமதி உள்பட 2 பெண்கள் மற்றும் புகார் அளித்த பெண்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரான வக்கீல் சுகந்தி ஆகியோர் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் ‘‘சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது தரப்பினரால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு’’ கேட்டு உள்ளனர்.

கர்மா ! சுயாதீன திரைப்பட வெளியீடு .. இன்று பியூர் சினிமா அங்காடியில்

thetimestamil.com :சுயாதீன திரைப்படமான ‘கர்மா’வை இன்று மாலை (16-10-2016) 6 இந்த பணமும் கூட அரங்கு செலவுகளுக்காக மட்டுமே, மற்றபடி அதன் இயக்குனருக்கோ, தமிழ் ஸ்டுடியோவிற்கோ இதில் எள்ளளவும் லாபமில்லை. இது போன்ற நல்ல விடயங்களுக்கு நண்பர்கள் எப்போதும் ஆதரவளிக்க வேண்டும்.
மணிக்கு திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ. இதுகுறித்து தமிழ் ஸ்டுடியோ வெளியிட்ட அறிக்கை: நண்பர்களே, சுயாதீன திரைப்படங்களின் தேவையை தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திரையரங்க வெளியீடு அல்லாமல், வேறு வகையான வெளியீடுகளை பற்றி நாம் சிந்தித்தே ஆகவேண்டும் திரையரங்க வெளியீடுகள் பெரும்பாலும் சினிமாவை ஒரு வணிகப் பொருளாக மட்டுமே மாற்றி வைத்துள்ளது.

48 மணி நேர ரயில் மறியல்: திமுக-வோடு களமிறங்கும் மாணவர் அணி!

மின்னம்பலம்.காம்: தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் சார்பில் நாளை நடைபெறவிருக்கும் 48 மணி நேர தொடர் ரயில் மறியலில் திமுக பங்கேற்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக மாணவர் அணியும் இந்த போராட்டத்தில் களமிறங்க தயாராகியுள்ளது. இதுகுறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 17, 18 ஆகிய நாட்களில் 48 மணி நேரம் தொடர் ரயில் பாதை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவும், பங்கேற்பும் கேட்டு கொடுத்துள்ள கடிதத்தினை ஏற்று, அவர்கள் நடத்தும் ரெயில் பாதை மறியல் போராட்டத்தில் திமுக கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீ சொல்லும் பொய் என்னைக் காப்பாற்றும்' பெண் கான்ஸ்டபிளிடம் கெஞ்சிய எஸ்.ஐ.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பணியாற்றிய கான்ஸ்டபிள் ராமு, தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது மனதை மாற்ற எஸ்.ஐ அருமைநாயகம் போனில் கெஞ்சியுள்ளார். அந்த போன் உரையாடல் வைரலாக வாட்ஸ்அப்பில் பரவிவருகிறது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் ராமு. இவர் கடந்த 9ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்தார். ராமுவின் தற்கொலைக்கு காரணம் போலீஸ் எஸ்.ஐ. அருமைநாயகம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அருமைநாயகத்தை கைது செய்யும்வரை ராமுவின் உடலை வாங்கமாட்டோம் என்று உறுதியாக உள்ளனர்.

ரஷ்யாவிடம் கைமாறிய எஸ்ஸார் ஆயில்!


இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆயில் நிறுவனமான எஸ்ஸார் ஆயில் ரூ,72,800 கோடிக்கு ரஷ்யாவின் ரோஸ்னெஃப்ட் ஆயில் மற்றும் டிராஃபிகுரா குழுமத்திடம் கைமாறியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் நேற்று கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கையெழுத்தாகின. இந்திய பாதுகாப்புத் துறைக்கு ரஷ்யாவிலிருந்து போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்குவது குறித்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் நடந்த மற்றொரு மிகப்பெரிய ஒப்பந்தம் எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரஷ்யாவிடம் கைமாறிய ஒப்பந்தம் ஆகும். எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் 98 சதவிகிதப் பங்குகளை ரூ.72,800 கோடிக்கு ரஷ்யாவின் ரோஸ்னெஃப்ட் ஆயில் நிறுவனமும் டிராஃபிகுரா குழுமமும் இணைந்து தலா 49 சதவிகிதப் பங்குகளை கைப்பற்றியுள்ளன.

கெஜ்ரிவால் அரசுக்கு ஹர்திக் படேல் ஆதரவு

படேல் இட ஒதுக்கீடு போராட்டத்தின் தலைவரான ஹர்திக் படேல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தன் சமூகம் ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறார். குஜராத்தில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், படேல் இன மக்களுக்கு ஓ.பி.சி. அந்தஸ்தும், இட ஒதுக்கீடும் வேண்டும் என்ற கோரிக்கைக்கு கெஜ்ரிவால் ஆதரவளித்ததற்கு பதிலாக, பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி, கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவளிக்கிறது என்று எழுதியிருக்கிறார். படேலின் உதவியாளர்கள், மெஹ்சானாவில் வெள்ளி இரவு இக்கடிதத்தை கெஜ்ரிவாலிடம் அளித்திருக்கின்றனர்.

காசியில் (வாரணாசி) 14 பேர் கூட்ட நெரிசலில் மரணம் ... direct மோட்சம் ?

வாரணாசியில் நெரிசலில் சிக்கி உயிர் துறந்தோரர் குடும்பங்களுக்கு பிரதமர்

மோடி  தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தோருக்கும் நிவாரணம் வழக்கப்படும் என்று கூறியிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை ஒட்டியுள்ள டோம்ரி கிராமத்தில் இன்று பாபா ஜெய் குருதேவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். ராஜ்காட் பாலத்தின் வழியாக அவர்கள் சென்றபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நடந்த சென்றவர்களுடன் வாகனங்களும் ஒருசேர சென்றதால் முன்னும்பின்னும் நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஒருவரையொருவர் நெட்டித்தள்ளியபடி முன்னேற முயன்றனர்.

திருட்டு கல்வி சான்றிதழ் ஸ்மிருதி இரானிக்கு சிக்கல்? மோடியே திருட்டு கல்வி சான்றிதழ் கொடுத்தவர்தாய்ன் கவலைப்பட வேண்டாம்ஜி

மின்னம்பலம்.காம்  : அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதிக்கான சான்றிதழை அக்டோபர் மாதம் 18ம் தேதிக்குள் சமர்பிக்க பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்த பிறகு இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் ப்பவர் ஸ்மிருதி இரானி. இவர் போலியான கல்வித் தகுதியை குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகையாளர் அஹமர் கான் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

நடிகை பூர்ணா: படங்கள் வெற்றி அடைந்தால் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும்

'சவரக்கத்தி' இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா படங்கள் திறமை இருந்தால் போதாது என தெரிந்தது. அதற்குப் பிறகும் படங்களில் நடித்தேன். ஆனால், அதிர்ஷ்டம் எனக்கு சரிவர வேலை செய்யவில்லை. இனி சினிமா வேண்டாம். நடனம் மட்டும் தான் என் வாழ்க்கை என முடிவு செய்தேன். நடன வாத்தியாராக வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அப்போது தெலுங்கில் ஒரு படம் வெற்றியடைந்தது. மறுபடியும் நடிக்க ஆரம்பித்து, தெலுங்கில் சில படங்கள் பண்ணிக் கொண்டே இருந்தேன். தமிழில் படங்கள் வரும் போதெல்லாம், நல்ல படங்கள் வரட்டும் என்று காத்திருந்தேன். கமர்ஷியல் நாயகியாக தெரிவதை விட திறமையான நாயகியாக தெரிய ஆசை. மிஷ்கின் சார் படம் என்னிடம் வந்த போது நான் அன்றிரவு தூங்கவே இல்லை. நான் அவ்வளவு ரசிக்கிற ஒரு இயக்குநர்,

கனடா: தைத்திங்கள் தமிழர் பாரம்பரிய மாதமாக பாராளுமன்றத்தில் பிரகடனம் .. ஒவ்வொருவருடமும் January.. Tamil Heritage Month

Canada .. House of Commons.. Motion No. 24, which states: That, in the opinion of the House, the government should recognize the contributions that Tamil-Canadians have made to Canadian society, the richness of the Tamil language and culture, and the importance of educating and reflecting upon Tamil heritage for future generations by declaring January, every year, Tamil Heritage Month. .
 டொரண்டோ: தமிழ் மொழியின் பழமை, இலக்கிய செழுமை ஆகியவற்றையும், கனடா சமுதாயத்திற்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடாவில் எம்பியாக இருக்கும் தமிழர் கேரி ஆனந்த சங்கரி, தமிழ் மொழியின் செழுமையை அங்கீகரிக்கும் விதமாகவும், கனடாவுக்கு தமிழர்கள் ஆற்றிய சேவையை பாராட்டும் விதமாகவும், ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி ஒரு தீர்மானத்தை கனடா பார்லிமென்டில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தின் மீது மே 20 மற்றும் செப்டம்பர் 29ம் தேதியும் விவாதம் நடந்தது. மோஷன் எம்-24 என அழைக்கப்படும் இத்தீர்மானம் அக்.5ம் தேதி நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, ஜனவரி மாதம், தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த கேரி ஆனந்த சங்கரி, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம். தமிழ் பண்பாடு, தமிழ் கலாசாரம், தமிழின் பழமை, தமிழின் செழுமை, கனடா சமுதாயத்திற்கு தமிழர்கள் ஆற்றிய பணிகள் ஆகியவற்றுக்கான அங்கீகாரம் என்றார்.

அம்பேத்கார் :பாப்பனர்கள் புத்த மதத்தை முறியடிக்கவே மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டனர்

பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் -தலைமுறை
தலைமுறையாக பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்திருக்கின்றனர். அப்படியானால் அவர்கள் ஏன் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டனர்? உச்சகட்ட நடவடிக்கையாக அவர்கள் மாமிசத்தை அறவே ஒதுக்கிவிட்டு சைவத்திற்கு மாறியது ஏன்? இரண்டு புரட்சிகளின் சங்கமம் என இதனைக் கூறலாம். பார்ப்பனர்களது தெய்வீக சட்ட வல்லுநரான மநுவின் அறிவுரைகளால் இந்த புரட்சிகர மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவருடைய ஆணைகளைப் புறக்கணித்தே இந்தப் புரட்சி நடைபெற்றிருக்கிறது. இத்தகைய நடவடிக்கையைப் பார்ப்பனர்கள் ஏன் மேற்கொண்டனர்?...
ambedkar 278ஒரு தந்திரோபாயமாகவே பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை விடுத்து, பசுவை வழிபடத்தொடங்கினார்கள் என்று என் மனதிற்குப் படுகிறது. பார்ப்பனர்கள் ஏன் திடீரென்று பசுவை வணங்கத் தொடங்கினார்கள் என்ற புதிருக்கான விடையை பவுத்த மதத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் காணலாம். பவுத்த மதத்தின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு சாதனமாகவே பார்ப்பனியம் பசு வழிபாட்டை மேற்கொண்டது எனலாம்;

சொல்லுடா பாண்டே! ..அம்மா .. அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு - சிவகார்த்திகேயன் ஏண்டா அழுதாய்ன்?

ராஜசங்கீதன்
தமிழ்நாட்டு அரசியலுக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவு புனிதமானது. கொள்கை பிரச்சாரத்துக்கென உருவாக்கப்பட்ட இந்த கூட்டு, கட்சி வளர்ப்பு, பிம்ப நிர்மாணம், கூட்டம் உருவாக்குதல், முக்கிய பிரச்சினைகளின் தீவிரத்தை சினிமாவாக்கி நீர்த்து போக செய்தல், சமூக பிரச்சினைகளுக்கு திரைவாசிகளை நாடுதல், சினிமா பிரச்சினைகளுக்கு அரசியலை நாடுதல் என பல பரிமாணங்களை கடந்து வந்திருக்கிறது. சினிமாவின் இத்தகைய சமூக ஊடறுப்பால் சமூகத்தின் பல அங்கங்களும் அதை தங்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்கின்றன. சினிமாவும் அவ்வங்கங்களை தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
ரங்கராஜ் பாண்டேவின் சிவகார்த்திகேயன் நேர்காணலும் இப்படியான மற்றுமோர் பரிமாணமே! அதற்குள் ஒளிந்திருக்கும் நுட்பமான திருகு வேலையை நாம் கவனிக்க வேண்டியது அத்தியாவசியம் ஆகிறது.

முதல்வரின் உடல் நிலை ... மர்மம் நீடிக்கிறது ... சிங்கப்பூர் மருத்துவ மனையில் உள்ளது இங்கில்லியா ?

மின்னம்பலம்.காம்  :முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்களும், நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பேலும் தொடர்ந்து சிகிச்சையளித்து வருவது நாம் அறிந்ததேயாகும். 24ஆவது நாளாக அப்பல்லோவில் தொடர்கிறது முதல்வர் ஜெயலலிதாவுக்கான சிகிச்சை. அவசர சிகிச்சை நிபுணரான லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல், எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவருடன் இவர்களுடன் அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள் என ஒரு மருத்துவக் குழுவின் 24 மணி நேரக் கண்காணிப்பில் இருந்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. சிகிச்சையளித்துவிட்டு லண்டன் சென்ற ரிச்சர்ட் பேல் மீண்டும் சென்னை வந்துவிட்டநிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் நிதிஷ் நாயக், கில்னானி, அஞ்சன் திரிகா ஆகியோருடன் இணைந்து இதுவரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஆய்வு செய்தார்.