ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்த
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதியை
வழங்கியுள்ளார். மேலும் ரிசானாவின் சகோதரிக்கு இலங்கை வெளிநாட்டு வேலை
வாய்ப்புப் பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்தில் வேலை செய்வதற்கான
நியமனக் கடிதமும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
புதன், 23 ஜனவரி, 2013
மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ரசீது: தேர்தல் ஆணையம்
புதுடில்லி: "மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஓட்டை பதிவு செய்ததும்,
வாக்காளர்களுக்கு ஓட்டளித்ததற்கான ரசீது வழங்குவது விரைவில்
நடைமுறைப்படுத்தப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது.மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் ஓட்டை
பதிவு செய்ததும், ரசீது கிடைக்கும்படி செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு
உத்தரவிடக் கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சுப்ரீம் கோர்ட்டில்
மனு தாக்கல் செய்திருந்தார்.
Linux பயன்படுத்துவோருக்கான சில சிறந்த Browsers
WINDOWSக்கு
அடுத்தபடியாக LINUX தான் மக்களால் அதிகம் பயன்படுத்த படும்
இயங்குதளம்.லினக்ஸ் பயன்படுத்துபவர்களும், அந்த சிஸ்டத்திற்கென உள்ள
அனைத்து பிரவுசர்கள் குறித்து அறிந்திருப்பதில்லை. ஒன்றிரண்டு பிரவுசர்களை
மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் முதல் இரண்டு இடங்களைப்
பிடித்திருப்பது பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டுமே. லினக்ஸ்
இயக்கத்தில் இயங்கக் கூடிய மற்ற பிரவுசர்கள் குறித்தும் இங்கு காணலாம்.
குரோம்:
எந்த சந்தேகமும் இன்றி, குரோம் பிரவுசர் தான் நல்ல வேகத்தில் இயங்கக் கூடிய
ஒரு பிரவுசராகும். லினக்ஸ் சிஸ்டத்தில் இயங்க குரோம் மற்றும் குரோம்
பிரிமியம் (Chrome and Chromium Browser) என இரண்டு பிரவுசர்கள்
கிடைக்கின்றன. குரோம் பிரவுசரின் ஓப்பன் சோர்ஸ் பிரவுசரே குரோமியம்
பிரவுசராகும். இரண்டும் ஒரே மாதிரியான வசதிகளை அளிக்கின்றன.
இந்த பிரவுசரைப் பெற http://www.google.com/chrome/intl/en/w00t.html என்ற முகவரி யில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
செவ்வாய், 22 ஜனவரி, 2013
விநோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்!
வினவு,
‘பெண்ணின் வாழ்க்கை ஆணின் காலடியில்தான்’ என்ற பாடத்தை கற்பிக்கின்றனர் ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகள்
விநோதினி
தன் ஒரே மகளுக்கு நிகழ்ந்த துயரத்தைக் கண்டு வெதும்பும் வினோதினியின்
தந்தை ஜெயபால் காரைக்காலில் ஒரு நிறுவனத்தின் செக்யூரிட்டியாக
பணிபுரிகிறார். பல கஷ்ட நஷ்டங்களுடன், சொந்த நிலத்தை விற்று, கடன்பட்டு
விநோதினியை படிக்க வைத்துள்ளார். ‘மகள் நல்ல வேலைக்குப் போனால் தன்
குடும்பமே முன்னுக்கு வரும், அவளுக்கும் நல்ல வாழ்க்கை கிட்டும்’ என்ற
எல்லா கனவுகளையும், ஏன் அப்பெண்ணின் எதிர்காலத்தையும் திருப்பிப்
போட்டிருக்கிறது இச்சம்பவம்.23 வயதான வினோதினி குடும்பத்தில் முதல் முறையாக உயர் கல்வி பயின்றவர். பி.டெக். (ஐ.டி) படித்து, 3 மாதங்களாக சென்னையிலுள்ள சைதாப்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கி ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
திரிஷா : பெண்கள் மது குடிப்பது அவரவர் விருப்பம்
வருத்தம் தெரிவிக்க மறுத்த திரிஷாவுக்கு மதுபாட்டில்கள் அனுப்ப இந்து மக்கள் கட்சி என்ற பெயர்பலகை வைத்திருக்கும் பயங்கர வாதிகள் அல்லது தீவிர வாதிகள் முடிவு`
சமர்'
படத்தில் திரிஷா மது அருந்துவதுபோல் காட்சிகள் உள்ளன. இதுபற்றி அவரிடம்
கேட்டபோது நான் மது அருந்துவது போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள்
ஹிட்டாகியுள்ளன. எனவே `சமர்' படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும்
என்பதற்காக மது அருந்துவதுபோல் நடித்தேன் என்றார். பெண்கள்
மது குடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அது அவரவர்
விருப்பம் என்று பதில் அளித்தார். திரிஷாவின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை
ஏற்படுத்தி உள்ளன. தமிழ் கலாசாரத்துக்கு எதிராக அவர் பேசி உள்ளதாக கண்டனம்
எழுந்துள்ளது. அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பேசியதை வாபஸ் பெற
வேண்டும் என்று வற்புறுத் தப்பட்டன.
அடுத்த
கட்டமாக மது பாட்டில்களை பார்சலில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்க இந்து
மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சென்னை மண்டல
தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’மது
அருந்துவது குறித்து திரிஷா சொன்னவை பண்பாட்டுக்கு எதிரான செயல். பெண்களை
மது அருந்த தூண்டுபவை. இதற்கு வருத்தம் தெரிவிக்க கேட்டும் திரிஷா செவி
சாய்க்கவில்லை. எனவே அவருக்கு மது பாட்டில்கள் பார்சலில் அனுப்பப்படும்.
அதோடு மதுவின் தீமையை விளக்கும் புத்தகமும் வைத்து அனுப்பப்படும்’’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளார்.
Jeya coming 22 நாட்களும் ஹாயாக இருந்த 32 அமைச்சர்களும் திக்திக்!

கொடநாட்டில் இருந்து முதல்வர் திரும்புகிறார்! அமைச்சர்கள் அமாவாசை பார்த்து திக்திக்!!
Viruvirupu
முதல்வர் ஜெயலலிதா நாளை மாலை சென்னை வந்து சேர்வார் என தமிழக
அரசு தலைமைச் செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. 22 நாட்களின் பின், மாநில
தலைநகருக்கு திரும்புகிறார் அவர்.
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து இம்மாதம் 1-ம் தேதி கொடநாடு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை அவர் கவனித்து வந்தார்.
கொடநாட்டில் இருந்தபடி அவர் முதல்வர் பணிகளை செய்வது குறித்து, தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்த போதெல்லாம், அவர்கள்மீது, அவதூறு வழக்குக்கள் பாய்ந்தன. பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. மேலும் சில வழக்குகள் இனிமேல்தான் போடப்படவுள்ளன.
அதே நேரத்தில், கடந்த 22 நாட்களும், அமைச்சர்கள் மன அழுத்தம் ஏதுமின்றி, ஹாயாக இருந்தார்கள். அம்மா சென்னையில் இருந்தால்தானே, புதிய பட்டியலுடன் ராஜ்பவனுக்கு புறப்பட்டு செல்கிறாரா என்பதில் கண் வைத்திருக்க வேண்டும்?
22 நாட்கள் கொடநாட்டில் இருந்து அரசு பணிகளை கவனித்து வந்த முதலமைச்சர் ஜெயலலிதா நாளை (புதன்கிழமை) மதியம் சென்னை திரும்புகிறார். கொடநாட்டில் இருந்து 2.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் வரும் அவர், பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
22 நாட்களும் ஹாயாக இருந்த 32 அமைச்சர்களும், அடுத்த அமாவாசை எப்போது என்று காலன்டரில் தேடத் தொடங்கியுள்ளார்கள். அமாவாசையின்போது அமைச்சர்களை மாற்றுவதே அம்மாவின் வழக்கம்.
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து இம்மாதம் 1-ம் தேதி கொடநாடு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை அவர் கவனித்து வந்தார்.
கொடநாட்டில் இருந்தபடி அவர் முதல்வர் பணிகளை செய்வது குறித்து, தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்த போதெல்லாம், அவர்கள்மீது, அவதூறு வழக்குக்கள் பாய்ந்தன. பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. மேலும் சில வழக்குகள் இனிமேல்தான் போடப்படவுள்ளன.
அதே நேரத்தில், கடந்த 22 நாட்களும், அமைச்சர்கள் மன அழுத்தம் ஏதுமின்றி, ஹாயாக இருந்தார்கள். அம்மா சென்னையில் இருந்தால்தானே, புதிய பட்டியலுடன் ராஜ்பவனுக்கு புறப்பட்டு செல்கிறாரா என்பதில் கண் வைத்திருக்க வேண்டும்?
22 நாட்கள் கொடநாட்டில் இருந்து அரசு பணிகளை கவனித்து வந்த முதலமைச்சர் ஜெயலலிதா நாளை (புதன்கிழமை) மதியம் சென்னை திரும்புகிறார். கொடநாட்டில் இருந்து 2.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் வரும் அவர், பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
22 நாட்களும் ஹாயாக இருந்த 32 அமைச்சர்களும், அடுத்த அமாவாசை எப்போது என்று காலன்டரில் தேடத் தொடங்கியுள்ளார்கள். அமாவாசையின்போது அமைச்சர்களை மாற்றுவதே அம்மாவின் வழக்கம்.
சிவகிரியில் கல்லூரி மாணவி எரித்துக்கொலை 1000 கடைகள் அடைப்பு
சிவகிரியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
ஈரோடு
மாவட்டம் சிவகிரி அருகே கோட்டப்புதூரை சேர்ந்த விவசாயி நல்லசிவத்தின் இளைய
மகள் நந்தினி (19). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம்
ஆண்டு படித்து வந்த இவரது சடலம் பாதி எரிந்த நிலையில் சிவகிரி அரசு
மருத்துவமனைக்கு பின்பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) கிடந்தது.உடலில்
உள்ள காயங்களை பார்க்கும்போது யாரோ சிலர் இவரை, பாலியல் பலாத்காரம் செய்து
கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக
சிவகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hariyana Ex Cm சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை
முன்னாள் துணைப்பிரதமரும் ஹரியானாவின் முன்னாள் முதல்வருமான தேவி லாலின் மகன் சௌதலாதான் பின்னாளில் ஹரியானாவின் முதலமைச்சராக வந்தார் தற்போது அதே சௌதலாவுக்கும் அவரது மகன் அஜய்க்கும் ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது அதிர்ச்சியாக உள்ளது,.
ஆசிரியர் நியமன வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கேட்டதும் சவுதாலா ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக சவுதாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலத்தில் 2000ம் ஆண்டு இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரான ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது 3 ஆயிரம் ஆசிரியர்க நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார். இந்த புகார் மீது சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 55 பேரும் குற்றவாளிகள் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த 17ம் தேதி தீர்ப்பளித்தது.உடனடியாக அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் அதிகாரிகள் சஞ்சீவ் குமார், வித்யாதார் ஹெர்சிங் உட்பட 10 பேருக்கும் 10 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏன் பணம் பதவி போன்றவை சரியாக வேலை செய்யவில்லை ?
ஆசிரியர் நியமன வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கேட்டதும் சவுதாலா ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக சவுதாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலத்தில் 2000ம் ஆண்டு இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரான ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது 3 ஆயிரம் ஆசிரியர்க நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார். இந்த புகார் மீது சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 55 பேரும் குற்றவாளிகள் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த 17ம் தேதி தீர்ப்பளித்தது.உடனடியாக அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் அதிகாரிகள் சஞ்சீவ் குமார், வித்யாதார் ஹெர்சிங் உட்பட 10 பேருக்கும் 10 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏன் பணம் பதவி போன்றவை சரியாக வேலை செய்யவில்லை ?
கலைஞர்: ரிசானாவின் பெற்றோர் வேதனையையும் சகோதரிகளின் துயரத்தையும் யாரால் போக்கிட முடியும்
We failed you Rizana!
ரிசானாவின் பெற்றோர் வேதனையையும் சகோதரிகளின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட ரிசானா நபீக்கைப் பெற்று,
வளர்க்க வாய்ப்பில்லாமல், அனுப்பி வைத்த அந்தப் பெண்ணின் பெற்றோர்
வேதனையையும் மற்றும் சகோதரிகளின் துயரத்தையும் யாரால் போக்கிட முடியும்?''
என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.மரண தண்டனையை
தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி
எழுதியுள்ள கடிதத்தில் '' உலகம் முழுவதிலும் தூக்குத்தண்டனை என்பது அறவே
ஒழிக்கப்பட வேண்டுமென்று நான் கூறி வருகிறேன். அதைப்பற்றி பலவிதமான
கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு
தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்து கூறப்பட்ட
நேரத்திலேகூட, அவர்களுக்கு தனிமைச்சிறை ஆயுள் முழுவதும் வழங்கலாம் என்ற
கருத்தினைத் தான் நான் தெரிவித்தேன்.
தூக்குத்தண்டனை கூடாது என்ற
என் எண்ணவோட்டத்திற்கு பதில் அளிக்கின்ற வகையில் ஒரு சம்பவம்.
அந்தச்சம்பவம் பற்றி பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விரிவாக
எழுதியிருக்கிறார். இதிலே தூக்குத் தண்டனையை விட கொடுமையான தண்டனை! அதுவும்
ஓர் இளம் பெண்ணுக்கு! அந்தப்பெண் செய்த தவறு என்ன? அனைவரின் உள்ளத்தையும்
உலுக்குகின்ற அந்தக் கோரக்கொடுமை இதோ!
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எண்ணங்கள் youtube
சென்னை : மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நேற்று உடல் நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85.
இவரது
மனைவி சீதா லட்சுமி 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.
சித்தார்த்தா, அசோகன் என்ற 2 மகன்களும், கமலா என்ற மகளும் அமெரிக்காவில்
பணி புரிகின்றனர்.
உதயமூர்த்தி தனது அண்ணன் மகன் ஜெகதீசனுடன்,
நீலாங்கரை அடுத்த அக்கரை விஜிபி லேஅவுட் 5வது லேனில் வசித்து வந்தார். நாகை
மாவட்டம் மயிலாடுதுறை விலா நகரில் 1928ல் பிறந்தவர். அண்ணாமலை பல்கலை,
கிண்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்துள்ளார். 1989ல்
மக்கள் சக்தி இயக்கம் தொடங்கி நடத்தி வந்தார். நேற்று முன்தினம் ரத்த
அழுத்தம் குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று காலை 10.30 மணிக்கு மரணம்
அடைந்தார்
வகுப்பறையில் தலைமை ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம்
வால்பாறை
அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர்
சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். இவரிடம்
இருந்து எண்ணற்ற பெண்களின் ஆபாசப் படக் காட்சிகள், "சிடி'க்களாக பறிமுதல்
செய்யப்பட்டன. இவரே வீடியோ எடுத்திருந்ததும் அம்பலமானது.இந்த
அசிங்கமே இன்னும் மறையாத நிலையில், அடுத்ததாக, வால்பாறை தாசில்தார்
குணாளன் மீது, அலுவலகத்தில் தற்காலிக எழுத்தராக பணிபுரிந்து வந்த காளீஸ்வரி
என்ற பெண், செக்ஸ் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்விரு
சம்பவங்களின் பரபரப்பே அடங்காத நிலையில், மூன்றாவது சம்பவமாக, பள்ளி
ஆசிரியர், ஆசிரியையின் ஆபாச காட்சிப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி,
போராட்டத்தில் மக்கள் குதிக்கும் அளவுக்கு, பிரச்னை விஸ்வரூபம்
எடுத்துள்ளது.கோவை
மாவட்டம், வால்பாறையில், சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது;
150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு
அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப்
படங்கள், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் வெளியானது.
கனிமொழி: ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும் என்னங்க உறவு?
Viruvirupu
“ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்ன உறவு இருக்கிறது?” இவ்வாறு சந்தேகம் எழுப்பியுள்ளார், கனிமொழி எம்.பி.
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நாட்டுப்புறக் கலைவிழா திருவொற்றியூர் விம்கோ நகர் விளையாட்டு திடலில் நடந்தபோது, அதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி., “கடந்த தி.மு.க. ஆட்சியில், தை திருநாளை தமிழர்களின் புத்தாண்டாக கருணாநிதி அறிவித்தார். ஆனால் ஆட்சி மாறியதும் பழையபடி மாற்றி விட்டார்கள்.
தமிழர்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்ன உறவு இருக்கிறது? தமிழகத்தை இருண்ட நிலைக்கு தள்ளிய பெருமையை தவிர வேறொன்றும் இல்லை.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. மின்சாரம் இன்றி சிறிய, பெரிய நிறுவனங்கள் நடத்த முடியாமல் நஷ்டத்தில் உள்ளன. தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை பற்றி கவலைப்படாமல் கொடநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார்” என்றார்.
ஆ! அம்மா கொடநாட்டில் தங்கியிருந்து ஆட்சி நடத்துவது பற்றி இவரும் பேசிவிட்டாரா? அவதூறு வழக்கு பாய வேண்டுமே!
“அந்தம்மா எங்கோ கொடநாட்ல இருக்காப்ல”
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நாட்டுப்புறக் கலைவிழா திருவொற்றியூர் விம்கோ நகர் விளையாட்டு திடலில் நடந்தபோது, அதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி., “கடந்த தி.மு.க. ஆட்சியில், தை திருநாளை தமிழர்களின் புத்தாண்டாக கருணாநிதி அறிவித்தார். ஆனால் ஆட்சி மாறியதும் பழையபடி மாற்றி விட்டார்கள்.
தமிழர்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்ன உறவு இருக்கிறது? தமிழகத்தை இருண்ட நிலைக்கு தள்ளிய பெருமையை தவிர வேறொன்றும் இல்லை.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. மின்சாரம் இன்றி சிறிய, பெரிய நிறுவனங்கள் நடத்த முடியாமல் நஷ்டத்தில் உள்ளன. தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை பற்றி கவலைப்படாமல் கொடநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார்” என்றார்.
ஆ! அம்மா கொடநாட்டில் தங்கியிருந்து ஆட்சி நடத்துவது பற்றி இவரும் பேசிவிட்டாரா? அவதூறு வழக்கு பாய வேண்டுமே!
கூட்டணி அமைக்க வேண்டும் எனும் நோக்கில் அ.தி.மு.க
சென்னை: "மத்திய அரசில் குழப்பம் ஏற்பட வேண்டும். அதை வைத்து, குழம்பிய
குட்டையில், மீன் பிடிக்க முயல வேண்டும் என்ற எண்ணத்தில், அ.தி.மு.க.,வும்,
சில கட்சிகளும் உள்ளன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: இம்மாதம்,
24ம் தேதி, மத்திய அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துகிறது. ஆர்ப்பாட்டம் தொடர்பான ஜெயலலிதா அறிக்கையில், "மத்திய
அரசுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு, தமிழகத்திற்கு தொடர்ந்து, துரோகம்
இழைத்து வரும் கருணாநிதிக்கு, என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்
கொள்கிறேன்' என்கிறார்.குழம்பிய குட்டையில் மீன் :காங்.,
கட்சியின் கூட்டணிக் கட்சி என்ற முறையில், கூட்டணிக்கு துரோகம் செய்யாமல்,
மத்திய அரசுக்கு உறுதுணையாக தி.மு.க., இருந்த போதிலும், தமிழகத்திற்கான
பிரச்னைகள் என்று வரும் போது, தி.மு.க., அவற்றைக் கைவிட்டது உண்டா?
அதற்காக, ஓங்கிக் குரல் கொடுக்காமல் இருந்தது உண்டா? ஆனால்,
ஜெயலலிதாவுக்கும், அவரோடு லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் எனும்
நோக்கில், அவரை மறைமுகமாக ஆதரிக்கும், சில கட்சிகளுக்கும், காங்.,
கூட்டணியிலிருந்து, எப்படியாவது தி.மு.க., விலகி விட வேண்டும்.
மத்திய அரசில் குழப்பம் ஏற்பட வேண்டும். அதை வைத்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டும் என்பது தான், அவர்களின் உள்ளார்ந்த எண்ணம். அதை தி.மு.க., நன்றாகவே உணர்ந்துள்ளது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார் dinamalar,com
மத்திய அரசில் குழப்பம் ஏற்பட வேண்டும். அதை வைத்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டும் என்பது தான், அவர்களின் உள்ளார்ந்த எண்ணம். அதை தி.மு.க., நன்றாகவே உணர்ந்துள்ளது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார் dinamalar,com
வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தடயம் இலங்கையில் கண்டுபிடிப்பு
உலகில்
வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தேடல்களும் சுவாரசியமான விடயங்களும்
அங்காங்கே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் முதல் தடவையாக வேற்றுக்கிரக
உயிரனங்கள் பற்றிய உறுதியான தடயம் ஒன்றை விஞ்ஞானிகள் இலங்கையில் இருந்து
கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இதனை அரலகன்வில பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எரிகல் துண்டுகளை
ஆராய்ச்சி செய்த பிரித்தானிய - இலங்;கை ஒன்றிணைந்த ஆராய்ச்சிக்குழுவே
தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ரஷ்யா ருடே இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்றில் இது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பக்ஹின்காம் பல்கலைக்கழகத்தின் வானசாஸ்திரவியல் பேராசிரியர் சந்திரா
விக்கரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இதனை கண்டுபிடித்திருக்கின்றனர் என பிரபல
ரஷ்யா ருடே இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வேற்றுக்கிரக உயிரனங்களின் இருப்பு தொடர்பான கோட்பாட்டை உறுதி
செய்வதற்குரிய தடயம் இலங்கையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜேர்னல்
ஒவ் கொஸ்மொலொஜி என்ற சஞ்சிகையும் ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி
செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி நாம் வாழும் பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவாவதற்கு வேற்றுக்கிரக
மற்றும் எரிகல் தொகுதிகளே அடிப்படையாக அமைந்துள்ளன என்று பிரித்தானிய -
இலங்;கை ஒன்றிணைந்த ஆராய்ச்சிக்குழு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளுக்கமைய பிரபஞ்சத்தில் ஏனைய கிரகங்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பூமிக்கு வெளியில் உயிரினங்கள் உள்ளன என்பதை பொலநறுவை எரிகல்
உறுதிசெய்துள்ளது என சந்திரா விக்கிரமசிங்க தெரிவித்திருந்ததும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
Written By
ilankainet
வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்
இயக்குநர்
பாலாஜி சக்திவேலின் படமான வழக்கு எண் 18/9 படம், தெற்காசிய திரைப்பட
விழாவில் சிறந்த படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளது. பாரிஸில் நடைபெற்ற
தெற்காசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், படத்தின் இயக்குநர் பாலாஜி
சக்திவேல், தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு விருதினை
பெற்றுக் கொண்டனர். இந்த திரைப்பட விழாவில் வழக்கு எண் 18/9 படம்
திரையிடப்பட்டதும், அதனை பார்த்த பார்வையாளர்களில் பெரும்பாலானோரை
கவர்ந்ததே இவ்விருதுக்கு இப்படம் சற்றும் குறைச்சல் இல்லை என்பதை
நிரூபித்தது. ஆசிய நாடுகளில் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் மிக முக்கிய
விருதான தெற்காசிய திரைப்பட விருதினை பெற்ற இயக்குநர் பாலாஜி
சக்திவேலுக்கும், வழக்கு எண் படக் குழுவினருக்கும் பல இடங்களில் இருந்து
வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.thenee.com
திங்கள், 21 ஜனவரி, 2013
நக்கீரனின் சரித்திர சாதனை சட்டமன்றம் VS பத்திரிகை சுதந்திரம்!

2012 ஜனவரியில் ஜெயலலிதா பற்றி வெளியான ஒரு செய்திக்காக நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதும், குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவை துண்டிக்கப்பட்டதும் ஆசிரியர் மற்றும் இணையாசிரியர் மீது தமிழகம் முழுவதும் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. அதே
செய்திக்காக சட்டசபை செயலாளர், சட்டசபை உரிமை மீறல் குற்றம் புரிந்ததாக
விளக்கம் கேட்டு நக்கீரன் ஆசிரியர் மற்றும் இணையாசிரியருக்கு உரிமை
மீறல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க கால
அவகாசம் வேண்டி, தங்களது சார்பில் வழக்கறிஞர்களை அனுப்பி சட்டசபை செயலாளர்களுக்கு பதில் அளித்தனர் ஆசிரியர் மற்றும் இணையாசிரியர். ஆனால் சட்டசபை செயலாளரோ, சட்டசபையில் வழக்கறிஞர் ஆஜராக முடியாது என்றும், தாங்கள்தான் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் வழக்கறிஞர் ஆஜராவது எந்த நடைமுறையிலும் இல்லை என்றும், இதுவரையில் இந்தியாவில் எந்த சட்டமன்றத்தில் நடைபெறாதது எனவே ஆசிரியர் மற்றும் இணையாசிரியர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.இதனை எதிர்த்து நக்கீரன் ஆசிரியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில்,சட்டசபையில் அறிவார்ந்த அறிஞர்கள் மற்றும் நூலகர்கள், உதவி நூலகர்கள், செயலாளர்கள், உதவி செயலாளர்கள் ஆகியோர் உள்ளனர். சட்டசபை உரிமை குழு கேட்கும் சட்டபூர்வமான விளக்கத்திற்கு ஒரு சாதாரண பத்திரிகையாளரான நான் வழக்கறிஞர் மூலம் தான் தகுந்த சட்ட விளக்கம் அளிக்க முடியும். மேலும் சம்மந்தப்பட்ட பிரசுரம் முதல் அமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சேர்ந்தது. எந்த விதத்திலும் அது சட்டசபையின் கண்ணியத்தை குறைக்காது என்பதை என் சார்பில் நிலைநாட்ட சட்ட விளக்கங்களும், நீதிமன்ற முன் தீர்வு விளக்கங்களும் அளிக்க வழக்கஞர்களால்தான் முடியும். சட்ட உரிமைக் குழுவில் என் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யவும், சாட்சிகளை விசாரிக்கவும் எனது வழக்கறிஞர்கள் என்னுடன் ஆஜரானால்தான் முறையானதாக இருக்கும். அரசியலமைப்பு பிரிவு 20ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட சட்ட அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களின் உதவி மறுக்க இயலாது. மேலும் சட்டசபை உரிமை குழுவின் பரிந்துரைகளை ஏற்று சபாநாயகர் என்னை தண்டிக்கவும், சிறைக்கு அனுப்பவும் அதிகாரம் உள்ளது. இந்த எல்லையில்லா அதிகாரங்களுடன் என்னை தண்டிக்க முயலும் போது என் தரப்பு வாதங்களை கேட்கவும் எனக்கான எதிர்வாதங்களை சமர்பிக்கவும் சட்டம் கற்று நீதிமன்ற நெறிமுறைகள் தெரிந்த வழக்கறிஞர்களை என் சார்பாகவும் அல்லது தேவைப்படும்போது என்னுடனோ அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
ஆசிரியர் சார்பாக வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
இதே பிரச்சனையை மேற்கோள்காட்டி நமது வழக்கறிஞர் எட்விக், சட்டசபையில் வழக்கறிஞர்களை அனுமதிக்க முடியாது என்பது வழக்கறிஞர் சட்டம் பிரிவு
30க்கு எதிரானது. எனவே நக்கீரன் கோபால் சார்பாக சட்டசபையில் வழக்கறிஞர்கள்
தாக்கல் செய்த வக்காலத்து மற்றும் பதில் உரைகளை ஏற்க முடியாது என்று சட்டசபை செயலாளர் கூறுவதை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கறிஞர் எட்விக் சார்பாக, நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரூபட் பர்ணபாஸ் ஆஜராகி வாதாடினார்.
படிக்கட்டுப் பயணப் படுகொலைகள்!
vinavu/
சென்னை மாநகரில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத்
தமிழக அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே
இயக்குகிறது. இந்த 3,300-லும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால்
அடிக்கடி நிறுத்தப்படுகின்றன.
பதின் வயதைச் சேர்ந்த மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் சாவும் தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திவருவதன் விளைவாகத்தான் நடந்திருக்கிறது. வேண்டுமென்றே அலட்சியமாக நடந்துகொண்டு நான்கு உயிர்களைப் பறித்திருக்கும் தமிழக அரசு மீது கொலைக் குற்றம் சுமத்த வேண்டும்.
சென்னை மாநகரில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத்
தமிழக அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே
இயக்குகிறது. இந்த 3,300-லும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால்
அடிக்கடி நிறுத்தப்படுகின்றன.பதின் வயதைச் சேர்ந்த மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் சாவும் தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திவருவதன் விளைவாகத்தான் நடந்திருக்கிறது. வேண்டுமென்றே அலட்சியமாக நடந்துகொண்டு நான்கு உயிர்களைப் பறித்திருக்கும் தமிழக அரசு மீது கொலைக் குற்றம் சுமத்த வேண்டும்.
அமெரிக்காவில் 2வது முறையாக அதிபராக முறைப்படி பதவியேற்றார் ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா
இன்று பிற்பகல் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி
ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாளை பொது மக்கள்
முன்னிலையில் மீண்டும் ஒபாமா பதவியேற்பு விழா நடக்கிறது. அமெரிக்காவில் 4
ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. ஒருவர் 2
முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக
இருந்த ஒபாமா கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் 2வது முறை போட்டியிட்டு
வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர்
மிட் ரோம்னி தோல்வி அடைந்தார்.
Rahul Ghandhi பெரிய வெற்றிகளைப் பெறவில்லை
இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்கும் காங்கிரஸ் கட்சியின்
துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பில் மாறுபட்ட
கருத்துக்கள் வந்துள்ளன.
அவரால் அடுத்து வரக்கூடியத் தேர்தல்களில் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச்
செல்ல முடியும் என ஒரு சாராரும், அவருக்கு அத்தகைய வல்லமை இல்லை என்று மறு சாராரும்
கூறுகிறார்கள்.காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தை மட்டுமே
நம்பியுள்ளது பரிதாபகரமான நிலை<
என் ராம்
தற்போது காங்கிரஸ் கட்சி தோல்வி மேல் தோல்வியடைந்து ஒரு நெருக்கடியில் உள்ளது
என்றும், ராகுல் காந்தியால் உறுதியாக கட்சிக்கு வெற்றியை தேடித் தரமுடியும் என்று
கூற முடியாது என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ''இந்து''பத்திரிகையின்
முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம்.
என். ராம் பேட்டி
ராகுல் காந்தியின் பதவி உயர்வு:ராம் கருத்து
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி
நியமிக்கப்பட்டுள்ளது குறித்து இந்து பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்
ராம் கருத்து.
ராமதாஸ்: திருமாவளவனுடன் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை
ஈரோட்டில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க ஆலோ சனை கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர், ‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சமாதானம் என்ற பேச்சு க்கே இடமில்லை.
சாதியை
ஒழிக்க கலப்புத் திருமணம் ஒன்றே வழி என்ற தவறா ன பிரச்சாரம் பரப்பப்பட்டு
வருகிறது. இத்த கைய பிரச் சாரங்களில் குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே
ஈடுபடுகின்றனர்’’ என்று தெரிவித்தார்.தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்
தமிழகத்தில், குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதால், அவற்றை
முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில், கடந்த, 10 ஆண்டுகளாக
குறைந்துஇருந்த குழந்தை திருமணங்கள், மீண்டும் தலைதூக்கி வருகிறது.
அதுவும், சில மாதங்களாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், வேலூர்,
திருவண்ணாமலை, அரியலூர், சிவகங்கை, விழுப்புரம், திருவள்ளூர் போன்ற,
பொருளாதாரத்தில் பின்தங்கிய வறட்சி மாவட்டங்களில், குழந்தை திருமணங்கள்
அதிகரித்து வருகின்றன.குழந்தை திருமணங்கள்
அதிகரிப்பதற்கு அதிகாரிகளே காரணம். குறிப்பிட்ட பகுதியில் திருமணம்
நடக்கிறது என, தெரிந்தவுடன், அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தாமல்,
தாமதப்படுத்துகின்றனர். அதனால், அதிகாரிகள் செல்வதற்கு முன், திருமணம்
நடந்து முடிகிறது.சில இடங்களில், அதிகாரிகள் திருமணத்தை தடுத்து
நிறுத்தினாலும், அதன் பின், ஒரு வாரத்திற்குள் திருமணம் நடக்கிறது.கிராம
புறங்களில் வசிக்கும் பெற்றோர்களிடம், குழந்தை திருமணங்கள் குறித்த
விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை.முற்றிலும் தடுப்பது எப்போது?
Stalin..5000 ரூபாய் கொடுத்தால் முத்தம் கொடுத்தும் போட்டோ
நாம் முத்தம் கொடுத்தால் தினமலர் நாளிதழுக்கு என்ன சங்கடம்?” ஸ்டாலின் கேள்வி!
நாமென்ன unkissableஆ?
தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசியபோதே, இவ்வாறு குறிப்பிட்டார். “நாடாளுமன்ற தேர்தல் குறித்த நேரத்திலோ, முன்பாக வந்தாலோகூட நாம் அதற்கு தயாராகவே உள்ளோம்” என்றவர், தேர்தல் நிதி பற்றி குறிப்பிடும்போதே, தினமலர் முத்தம் பற்றி விமர்சித்தது குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தல் நிதியாக, பாசறையில் கலந்து கொண்டவர்கள் 100 ரூபாய் கொடுத்தால் அவர்களுடன் போட்டோவும், 500 ரூபாய் கொடுத்தால் கைகுலுக்கியும், 1000 ரூபாய் கொடுத்தால் தோளில் கை போட்டபடியும் , 5000 ரூபாய் கொடுத்தால் முத்தம் கொடுத்தும் போட்டோ எடுக்கலாம் என்று நான் நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் கூறினேன். இப்படி நான் கூறியதற்கு தினமலர் நாளிதழில் முத்தம் கொடுப்பது குறித்து விமர்சனம் செய்திருந்தனர்.
இதைப் பற்றி அவர்களுக்கு என்ன சங்கடம்? தினமலர் நாளிதழில் அவ்வாறுதான் செய்வார்கள். அதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை” என்றார்.
ஞாயிறு, 20 ஜனவரி, 2013
அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில பங்கேற்ற நீதிபதி பணியிடை நீக்கம்
நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வேலு பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அ.தி.மு.க நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சிககு வந்த நீதிபதி வேலு, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கூட்டம் முடிவடையும் வரை நிகழ்வுகளைக் கவனித்தார். நீதிபதி ஒருவர், கட்சி நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்து கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், நீதிபதி வேலுவை பணியிடை நீக்கம் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது webdunia
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












