வியாழன், 15 அக்டோபர், 2026

“CJP-க்கு தி.மு.க துணை நிற்கும்!” : பா.ஜ.க.வைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

 kalaignarseithigal.com   : இந்திய அளவில் பாசிச பா.ஜ.க.வை அச்சுறுத்தும் வகையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வளர்ந்து வருவதையடுத்து, அக்கட்சியை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பா.ஜ.க அரசு திட்டமிட்டு வருகிறது.
பா.ஜ.க அரசின் நேர்மறை மற்றும் எதிர்மறையான ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஆயிக்கணக்கான இளைஞர்கள் கூடி ஆதரவளிப்பதால், டெல்லியில் போராட்டத் தளமாக விளங்கும் ஜந்தர் மந்தரை இனி போராடுவதற்கு உகந்த இடம் இல்லை என்றுகூட அறிவித்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க அரசு.



இதனைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று (அக்.13) கரப்பான்பூச்சி கட்சியின் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் போராட முற்பட்டபோது, அவர்களை கைது செய்தது டெல்லி காவல்துறை.
“CJP-க்கு தி.மு.க துணை நிற்கும்!” : பா.ஜ.க.வைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அதனைத் தொடர்ந்து, அவர்களை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க, டெல்லி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“பா.ஜ.க அரசு இன்னும் எத்தனை போராட்டக்காரர்களை கைது செய்யும்? எத்தனை இளம் குரல்களை முடக்கும்?

பா.ஜ.க.வின் கைதுகள் தொடர... தொடர... பொதுமக்கள் சாலைகளில் இறங்கிப் போராடுவதும் அதிகரிக்கும். உண்மையான மக்கள் அதிகாரத்தை அவர்கள் விரைவில் காண்பார்கள்.

பா.ஜ.க அரசால் கைது செய்யப்பட்டுள்ள கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோருக்கு தேவையான சட்ட உதவிகளை தி.மு.க வழங்கி, உறுதுணையாக இருக்கும்.”

கருத்துகள் இல்லை: