வியாழன், 3 செப்டம்பர், 2026

தமிழின் பெயரால் தமிழர்களை தமிழர்களே கொலை செய்ததுதான் தமிழ் ஈழ போராட்டம்

 Varatharasa Pasupathi : கொஞ்சக்காலம் பிளட்டும் ரெலோவும் தொடர்ச்சியாக கிரியும் பாம்புமாக இருந்ததற்கு காரணம்.அப்பன் யோக்கியவதி அதற்கு மகன் சித்தாத்தன்  
பிளட் அமைப்பை வைத்து  திட்டமிட்டு பழி தீர்தார். 
இன்றும் பலரிடம் அதைத்தான் செய்கின்றார் .பிளட் அமைப்பும் கிட்டத்தட்ட பறிமுதல்தான் செய்யப்பட்டுள்ளது .
தன் சுயநலனுக்காக தூண்டி விட்டு இரு பக்கமும் இறந்தது  அப்பாவி இளைஞர்கள்.   
சித்தாத்தனின் தந்தை துரோகியாக இருந்திருக்கலாம் ரெலோ சுட்டிருக்கலாம் . 
சொந்த பிரச்சனைக்கு பெரிய செந்தில் மிக நல்ல மனிதர் முதல் முதல் வவுனிய மாவட்டத்தில் ஆயுதம் தூக்கிய  முதல் போராளியாக போனவர் ரெலோ சுட்டு குளத்து கட்டில் போட்டிருந்தது 
அந்த படுகொலைகளுக்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது .
பிளட் சுட்டு பல ரெலோ போராளிகள் இறந்தார்கள் 
அதற்கு எல்லாம் யார் பொறுப்பு . 


 நான்  செட்டிகுளத்தில் இருந்து யாழ் நோக்கி  சென்ற போது  வவுனியாவில் ஜெயா கோட்டலில் ரீ குடித்துக்கொண்டு இருக்கும் போது  எந்த ஆயுத அமைப்பு என்று எனக்கு தெரியாமலே அவர்களாள் துப்பாக்கி முனையில் வவுனியா ரயில்வே குவாட்டசுக்கு கடத்தப்பட்டு மூன்று நாட்கள் கடும் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படேன் . 

என் கையலேயே எனக்கு சவக்குழி தோண்ட வைத்தார்கள் . 
வாழை இலையில் படுக்க வைக்கும் அலவுக்கு உடல் எங்கும் வான் வெலிட் அடி காயம் இரும்புக்கம்பி அடிகாயம். 

கையை பின்னுக்கு கட்டிவிட்டு காலை கட்டி  கவுத்தை குவாட்டஸ் வளைக்குள் பொட்டு கட்டி இழுத்து தொங்க விட்டார்கள் . 
கவுறை விட்டால் அந்த  இடத்திலேயே மரணம் நிச்சையம் அவ்வளவு உயரம் . 
அற்குள்ளேயே போட்டி அடே கவுத்த களட்டி விடடா என்று ஒரு கூட்டம் . 
தலை கீழாக தொங்கியபடியே இறக்கப்பட்ட நான் அப்படியே ஒரு கும்பல் கவுத்த பிடித்திருக்க  ஒரு கும்பல்  குதிக்காலில் விழுந்த அடி . 
அதற்கு பின் அவர்கள் மாறி மாறி அடித்த அடி எல்லாம் அவர்களை பார்த்தால் எனக்கு பயித்தியக்காறர்போல் தெரிந்தது 
காரணம் அவர்கள் அடிக்க அடிக்க நோகவோ (வலிக்கவோ) இல்லை. சாகப்போவது உறுதி என்ற போது நோ எல்லாம் தெரியவே தெரியாது . 

இவ்வளவும் நடக்கின்றது இவர்கள் யார் எவர் என்பது எனக்கு  தெரியாது 
.ஆனால் இவர்கள் தமிழ் ஈழ போராட்ட மகா வீரர்கள் என்பது மட்டும் புரிந்து விட்டது .  
தமிழ் ஈழ போராட்டம் என்றாள். தமிழின் பெயரால்  ஈழவர்களை கொலை செய்வதுதானே தமிழீல போராட்டம் . 
எதுவாக இருந்தாலும் நெருப்பு இல்லாமல் புகையாது தானே 
அன்றைய காலகட்டத்தின் அந்த இரு அமைப்புக்களும் புகைய காரணம் சித்தாந்தன் என்பது இப்போது புரிகின்றது .
ஆனால் நான் ரெலோ புளட்டுக்கு மாமனும் இல்லை மச்சானும் இல்லை என்னை போன்று  பிளட்டாளும் ரெலோவாலும் பாதிக்கப்பட்ட  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கின்றார்கள். 

தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பை விட  எத்தனையோ மடங்கு படு கேவலமான கேடு கெட்ட அமைப்புக்கள்தான் இன்று யோக்கியவாதிகள் போல் வெள்ளை அடிக்க முயல்கின்றார்கள் . 
மக்களே இவர் திருந்தி விட்டார்கள் என்று நினைத்தீர்கள் என்றாள் உங்களை காட்டிலும் முட்டாள் யாரும் இருக்க முடியாது

கருத்துகள் இல்லை: