செவ்வாய், 8 செப்டம்பர், 2026

விஜய் மீண்டும் எழுப்பிய ‘சர்க்காரியா கமிஷன்’: அன்றே ‘இதே’ சட்டமன்றத்தில் கலைஞர் தந்த பதிலடி!

மின்னம்பலம்  விஜய் மீண்டும் எழுப்பிய ‘சர்க்காரியா கமிஷன்’: அன்றே ‘இதே’ சட்டமன்றத்தில் கலைஞர் தந்த பதிலடி!
தமிழக சட்டமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 7) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் அறிக்கையை முன்வைத்து கலைஞரையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.
விஜய் பேசியது என்ன?
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், 1970-களில் செயல்படுத்தப்பட்ட வீராணம் குடிநீர்த் திட்டத்தின் ஒப்பந்தம் தொடர்பாக ரூ.40 லட்சம் கமிஷன் கோரப்பட்டதாகவும், ரூ.29 லட்சம் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி முரசொலி கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக விஜய் குற்றம்  சாட்டினார்.

“இவை எங்களுடைய குற்றச்சாட்டுகள் அல்ல; சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள். அதற்கான ஆவணங்கள் சட்டமன்ற நூலகத்திலேயே இருக்கின்றன” என்றும் விஜய் கூறினார்.

திமுக ஆர்.எஸ். பாரதி பதில்

இதற்குப் பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சர்க்காரியா கமிஷன் தொடர்பாகத் திமுகவுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று விஜய்க்கு சவால் விடுத்தார்.

அண்ணா தியேட்டர், அருண் ஹோட்டல், வெளிநாட்டு டிராக்டர் உள்ளிட்டவை கலைஞருக்குச் சொந்தமானவை அல்லது அவருக்கு லஞ்சமாக வழங்கப்பட்டவை என்று ஆதாரமற்ற புகார்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், “வார்த்தைக்கு வார்த்தை விவாதிக்க நாங்கள் தயார்” என்றார். சர்க்காரியா கமிஷனுக்குப் புகார் அளித்த எம்.ஜி.ஆர். பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் கலைஞர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

சர்க்காரியா கமிஷன் பின்னணி என்ன?

இந்த நிலையில் சர்க்காரியா கமிஷன் எப்போது, எந்தப் பின்னணியில் அமைக்கப்பட்டது? அதன் விசாரணையின் பரப்பு என்ன? அந்த விசாரணை குறித்து கலைஞர் தனது நெஞ்சுக்கு நீதி நூலிலும் தமிழக சட்டமன்றத்திலும் என்ன பதிவு செய்திருக்கிறார்?

1972-ல் தொடங்கிய புகார்கள்

சர்க்காரியா கமிஷன் அமைக்கப்படுவதற்கு ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் தொடங்கிவிட்டது.

கமிஷன் ஆவணங்களின்படி, 1972 நவம்பர் 4ஆம் தேதி எம்.ஜி.ராமச்சந்திரன் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினார். கலைஞர் தலைமையிலான தமிழக அமைச்சரவை மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன.

அதைத் தொடர்ந்து 1972 நவம்பர் 6ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் மற்றொரு மனுவை அளித்தனர். பின்னர் கல்யாணசுந்தரம் தரப்பிலிருந்து மேலும் ஒரு மனுவும் அளிக்கப்பட்டது.

1975 டிசம்பர் 1ஆம் தேதி நாஞ்சில் மனோகரன், ஜி.விசுவநாதன் ஆகியோர் அளித்த மனுவும் பின்னர் கமிஷனுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்றது.

கலைஞரிடம் விளக்கம் கேட்ட இந்திரா காந்தி

புகார்கள் கிடைத்தவுடன் நேரடியாக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்படவில்லை.

1972 நவம்பர் 15ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, புகார்கள் தொடர்பாக கலைஞரிடம் விளக்கம் கேட்டார்.

அதற்கு 1972 டிசம்பர் 14ஆம் தேதி கலைஞர் தனது பதிலை அனுப்பினார். குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். 1973 ஜனவரி 10ஆம் தேதியும், எம்.கல்யாணசுந்தரம் 1973 பிப்ரவரி 5ஆம் தேதியும் மறுப்புப் பதில்களை அனுப்பினர். அவற்றுக்கும் 1973 மே 28ஆம் தேதி கலைஞர் மேலதிக விளக்கத்தை பிரதமருக்கு அனுப்பினார்.

இந்த மனுக்கள், மறுப்புகள், கலைஞரின் விளக்கங்கள் ஆகியவை அன்றைய தமிழக அரசால் மூன்று புத்தகங்களாக வெளியிடப்பட்டன என்பதையும் சர்க்காரியா கமிஷன் ஆவணம் பதிவு செய்கிறது.

அதாவது, 1972-ல் புகார்கள் எழுந்தபோதே அவற்றுக்கான பதில்களும் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டிருந்தன என்பது கமிஷனின் சொந்த ஆவணத்திலேயே பதிவாகியுள்ளது.

திமுக அரசு கலைப்பு; அடுத்த மூன்றாவது நாள் கமிஷன்

இதற்கிடையே 1975 ஜூன் 25ஆம் தேதி நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு 1976 ஜனவரி 31ஆம் தேதி மத்திய அரசால் கலைக்கப்பட்டது.

அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, 1976 பிப்ரவரி 3ஆம் தேதி, மத்திய அரசு S.O.74(E) அறிவிப்பின் மூலம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தது. 1952ஆம் ஆண்டின் விசாரணைக் கமிஷன்கள் சட்டத்தின் கீழ் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்டோர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதே கமிஷனின் பணியாக இருந்தது.

54 புகார்கள்; விசாரணைக்கு வந்தவை 28

திமுக அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 54 புகார்களில் 28 புகார்கள் சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பின்னாளில் இதையே கலைஞர் சட்டமன்றத்திலும் குறிப்பிட்டு, மீதமுள்ள 26 புகார்களையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கமிஷனின் விசாரணைப் பட்டியலில் கலைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் சொத்துகள், வீராணம் திட்டம், வான்வழி பூச்சிமருந்து தெளிப்பு, சர்க்கரை தொடர்பான விவகாரம், சமயநல்லூர் மின் நிலையம், கொடைக்கானல்–பழனி சாலை, சிம்சன் நிறுவனம், சக்தி பைப்ஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தனித்தனி பகுதிகளாக இடம்பெற்றன. இதில் வீராணம் திட்டம் தனியாக விரிவாக விசாரிக்கப்பட்ட விவகாரங்களில் ஒன்று.

86 முறை கூடிய சர்க்காரியா கமிஷன்

கமிஷனின் முன்னுரையில் விசாரணையின் அளவு குறித்த புள்ளிவிவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சர்க்காரியா கமிஷன் மொத்தம் 86 முறை கூடியது. விசாரணை அமைப்புகள் சுமார் 1,600 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தன. சுமார் 13,000 முழுத் தாள்கள் அளவிலான வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், கமிஷனின் சாட்சியப் பதிவுகள் சுமார் 11,777 பக்கங்கள் அளவுக்கு இருந்ததாகவும் அறிக்கையின் முன்னுரை தெரிவிக்கிறது.

கமிஷனின் முதல் அமர்வு

கமிஷன் அமைக்கப்பட்ட பின்னர் விசாரணைக்கு உதவ சிபிஐ மற்றும் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்க்காரியா கமிஷனின் முதல் அமர்வு 1976 மே 14ஆம் தேதி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

புகார்தாரர்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் சார்பில் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் ஆஜரானார்கள். கலைஞர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சார்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி விசாரணையில் பங்கேற்றனர்.

குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்ல

சர்க்காரியா கமிஷனின் முதல் அமர்விலேயே அதன் விசாரணையின் சட்டரீதியான தன்மை குறித்த முக்கியமான விளக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமிஷனின் பணி தனக்கு அளிக்கப்பட்ட வரம்புக்குள் உண்மைகளைக் கண்டறிவது. அது ஒரு குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்ல. கமிஷன் முன்பு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பவர்களை, குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் கருத முடியாது என்பதும் அங்கு விளக்கப்பட்டது.

கமிஷனின் findings தாமாகவே நீதிமன்றத் தீர்ப்புக்குரிய சட்ட அமலாக்க வலிமையைப் பெறுவதில்லை என்பதும் அதன் விசாரணை நடைமுறை தொடர்பான முக்கிய அம்சமாகும்.

முதல் அறிக்கையில் என்ன இருந்தது?

சர்க்காரியா கமிஷனின் First Report முகப்பில் 3, 11(a), 11(b), 12, 15, 16, 19, 22(c), 22(d) ஆகிய ஒன்பது serial/sub-serial விவகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

டிராக்டர் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம், நாதன் பப்ளிகேஷன்ஸ், வான்வழி பூச்சிமருந்து தெளிப்பு, எஸ்.கந்தப்பன் தொடர்பான விவகாரம், நியூ குளோப் தியேட்டர் நிலம், ஏ.எல்.சீனிவாசன் தொடர்பான விவகாரம் உள்ளிட்டவை முதல் அறிக்கையில் இடம்பெற்றன.

எனவே முதல் அறிக்கையை “28 புகார்களின் முழுமையான இறுதி அறிக்கை” என்று கருத முடியாது. குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றிய முதல் அறிக்கையாகவே அது வெளியானது.

வீராணம் எங்கே வருகிறது?

தற்போது விஜய் முன்வைத்திருக்கும் வீராணம் திட்ட விவகாரம் சர்க்காரியா கமிஷனின் விசாரணைப் பொருள்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

நமக்குக் கிடைத்த கமிஷனின் தமிழ் அறிக்கையின் பொருளடக்கத்தில் வீராணம் திட்டம் பக்கங்கள் 71 முதல் 150 வரை தனிப் பகுதியாக இடம்பெற்றுள்ளது.

அதில் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆவணங்கள், வாக்குமூலங்கள் மற்றும் அவற்றின் மீதான கமிஷனின் ஆய்வு இடம்பெற்றுள்ளது.

அடுத்து, இந்த கமிஷன் குறித்து கலைஞர் என்ன கூறினார் என்பதை அவரது சில பதிவுகளிலிருந்தே பார்க்கலாம்.

நெஞ்சுக்கு நீதியில் கலைஞர்…

நெஞ்சுக்கு நீதி தொகுதி 3-ல் சர்க்காரியா கமிஷன் பற்றி கலைஞர்

பக்கம் 49–50

இந்த உடன்பாடு (திமுக- ஜனதா கட்சி) தமிழ்நாட்டில் ஏற்பட்டது என்ற செய்தி கிடைத்தவுடன் அவசர அவசரமாக சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியை இந்திரா அரசு வெளியிட்டது. பொதுவாக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் முடிவுகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதுதான் மரபு.

அந்த மரபு சர்க்காரியா கமிஷன் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. தி.மு.க. அமைச்சரவை மீது ஆதாரங்களின்றிக் கொடுக்கப்பட்ட புகார். புகார் மனு கொடுத்த எம்.ஜி.ஆர். அவர்களோ புகார்கள் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்ற முகப்புரையுடன்தான் புகார்மனுவையே சர்க்காரியா கமிஷனுக்குத் தரும் போது எழுத்து வாக்குமூலம் அளித்திருந்தார். சர்க்காரியா கொடுத்த அறிக்கையும் முற்றுப் பெற்ற அறிக்கையல்ல. 28 புகார்களில் 7 புகார்களை மட்டும் ஒட்டிய அறிக்கையாகும். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுத்து வழக்குத் தொடர இந்திரா அரசு, தமிழகக் கவர்னர் ஆட்சிக்குத் தாக்கீது அனுப்பியது. பிப்ரவரி 15-ஆம் நாள் சஞ்சீவரெட்டியாருடன் பேசி தி.மு.க.-ஜனதா தேர்தல் உடன்பாடு ஏற்படுகிறதென்றால் மறுநாளே பிப்ரவரி 16-ஆம் நாள் சர்க்காரியா கமிஷனின் முதல் அறிக்கையை மிகுந்த அவசரத்துடன் வெளியிட்டு, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளையும் தொடரச் செய்ததற்குக் காரணம்-தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம் கழகத்தைப் பற்றிய ஒரு களங்கத்தைப் பரப்ப வேண்டுமென்ற நோக்கம்தான். எந்த இந்திராகாந்தி 1977ல் இந்த வழக்குகளால் தி.மு.க.வைப் பூண்டோடு அழித்து விடலாமென்று திட்டமிட்டுச் செயல்பட்டாரோ அதே இந்திராகாந்தி 1980ல் தி.மு.க.வின் ஆதரவைப் பெற்று பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் செலுத்திய விஷத்தை அவரே திரும்ப எடுத்துக் கொண்டார்.

அரசியலில் பழிவாங்கவோ, வஞ்சம் தீர்க்கவோ அரசியல் கட்சிகளை அச்சுறுத்தவோ வேண்டுமென்று திட்டமிட்டுப் பொய்யாகப் போடும் வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சலும் இடையூறுகளும் பணியில் சில தடங்கல்களும் விளையக்கூடுமே தவிர அந்த வழக்குகளின் முடிவுகள் அரசுக்குச் சாதகமாக அமைவதுமில்லை! ஒருவேளை அமைந்தாலும் அதனால் உறுதிமிக்க அரசியல் கட்சிகளை அறவே அழித்து விட்டதாகச் சரித்திரமும் இல்லை!

இந்திரா அரசு மெத்த எரிச்சலுடன் போட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்துக்கொண்டே நானும் நண்பர்களும் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டோம்.

பிப்ரவரி 18-ஆம் நாள் முரசொலியில் நான் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

உடன்பிறப்பே, தி.மு.கழகம்-ஜனதா கட்சி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதா, என்று டெல்லியிலிருந்து ஒருவர் மிக்க ஆவலுடன் தொலைபேசி வாயிலாக என்னைக் கேட்டார். கருணாநிதி மீதும் மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் மீதும் மேலும் சில புதிய வழக்குகள் தொடுக்கப்படும் என்று வானொலியிலும் பத்திரிகைகள் மூலமும் செய்திகள் பரப்பப்படுகின்றனவே; அதிலிருந்தே தெரியவில்லையா? தி.மு.க.-ஜனதா உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பது? என்று நான் அவரிடம் பதிலுக்குக் கேட்டேன். அவருக்கு மெத்த மகிழ்ச்சி உடன்பாடு ஏற்பட்டதில்! எனக்கும் மிக்க மகிழ்ச்சி புதிய வழக்குகள் வருவதில்.

ஒவ்வொரு வழக்கிற்கும் ஐந்து ஆண்டு – பத்து ஆண்டு எனத் தண்டனை வழங்கப்பட்டு அந்தத் தண்டனைகளைத் தனித் தனியாக அனுபவிக்க வேண்டுமென்று தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் ஒரு முப்பது அல்லது நாற்பது ஆண்டுக்காலத் தண்டனை எனக்குக் கிடைக்கும். இப்போது வயது எனக்கு ஐம்பத்து மூன்று நடக்கிறது (1977ல்) இன்னும் என்னதான் வாழ்ந்தாலும் பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதென்பது இயலாத காரியம் – அதற்குள் எப்போதோ? அதுவும் சொல்ல முடியாது. எனவே வழக்குகளின் மூலம் எனக்கு வலை பின்னிச் சிறைக் கொட்டடியிலேயே எனது இறுதி மூச்சுக் கலந்துவிடக் கூடும். அந்த முடிவை முகமலர்ச்சியோடும் அமைதியோடும் ஏற்றுக் கொள்ள நானும் என்னுடன் உள்ளவர்களும் தயாராகி விட்டபிறகு எத்தனை வழக்குகள் வந்தால் என்ன?

நானும் நமது கழகமும் செய்த குற்றமெல்லாம்-ஜனநாயகத்தைக் காப்பாற்ற அவசரகாலப் பிரகடனத்தைத் திரும்பப் பெறுக என்று கூறியதுதான்! அதற்கான விலையை நாம் கொடுத்துத் தான் தீர வேண்டும்.

பக்கங்கள் 143–147 — ஐ.ஏ.எஸ். அதிகாரி வாக்குமூலம்

அந்த அதிகாரியின் பெயர் இராயப்பா – கழக ஆட்சிக்காலத்தில் 1971ல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு தலைமைச் செயலாளராக இருந்த அவரை, பதவி மாற்றம் செய்து வேறு ஒரு பொறுப்புக்கு நியமித்ததால் அதனை எதிர்த்து அவர் என்னிடம் வழக்குத் தொடுத்தார். அதை நினைவில் வைத்துக் கொண்டு எனக்கெதிராக சர்க்காரியா கமிஷனில் வாக்குமூலம் பெறலாமென்று மத்திய அரசின் அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

அதனைப்பற்றி 21.2.1977 அன்று அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸின்படி முன்பு அவர் அளித்திருந்த வாக்குமூலம், தானாகவே முன்வந்து அளித்ததா அல்லது அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ‘ரெடிமேட்’ வாக்குமூலத்தில் கையெழுத்திட்டாரா? வற்புறுத்தல், ஆசை காட்டல் ஏதாவது உண்டா? என்றெல்லாம் கேட்கப்பட்டதற்கு பதில் அளிக்கும் வகையில் இராயப்பா ஐ.ஏ.எஸ். அளித்த பிரமாண வாக்குமூலம் வருமாறு:-

“சர்க்காரியா விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு சி.பி.ஐ. அதிகாரியான சிவாஜி என்பவர் திருவண்ணாமலையில் உள்ள எனது விவசாயப் பண்ணையில் என்னை வந்து சந்தித்தார்; சி.பி.ஐ. மூத்த அதிகாரிகளில் ஒருவரான ராஜகோபாலன் கருணாநிதி மீதும் இதர அமைச்சர்கள் மீதும் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்னிடம் விசாரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்; பைல்களில் நான் எழுதியிருக்கும் குறிப்புகளையும், சுப்ரீம் கோர்ட்டில் நான் தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தையும் அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம் – எனவும் கூறினேன். அதற்குப் பத்து நாட்களுக்குப் பிறகு முன்கூட்டியே என்னிடம் தெரிவிக்காமல் அந்த ராஜகோபாலன் திருவண்ணாமலையில் என்னை வந்து சந்தித்தார். நான் முன்பு சிவாஜியிடம் கூறியதையே அவரிடம் திரும்பச் சொன்னேன்.

சில வாரங்களுக்குப் பிறகு எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் என்னிடம் தொலைபேசி மூலம் பேசினார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடுவதற்காக 1972-ல் அவரிடம்தான் நான் சென்னையில் உள்ள என் பங்களாவை விற்றேன்.

சி.பி.ஐ.யில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பணியாற்றும் லட்சுமிநாராயணன் தனக்கு நெருங்கிய நண்பர் என்றும்; அவர் சென்னையில் இருக்கும்போதெல்லாம் – இரவு நேரங்களில் தன் வீட்டில் தன்னோடு குடிப்பது வழக்கம் என்றும் கூறினார்.

நான் உடனே “ஒரு சொந்தக் காரியமாக சென்னையில் சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.ஜி.யான லட்சுமிநாராயணன் சொல்கிறபடி ஒரு வாக்குமூலத்தில் நான் கையெழுத்துப் போட வேண்டும் என்றும்; அரசாங்கத்திடமிருந்து எனக்குப் பென்ஷனும் இதர வசதிகளும் கிடைக்க லட்சுமிநாராயணன் உறுதி அளித்திருப்பதாகவும் அவர் கூறினார். லட்சுமிநாராயணனைச் சந்திக்க நான் அக்கறை கொண்டிருக்கவில்லை – என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.

சில வாரங்களுக்குப் பிறகு எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் மறுபடியும் என்னிடம் தொலைபேசி மூலம் பேசினார்.

“எனது நலன் நாடுபவர் என்கிற முறையில் எனக்கு அறிவுரை கூறுவதாகவும்; சி.பி.ஐ. தலைவராக இருக்கும் லட்சுமிநாராயணன் சொல்கிறபடி நான் ஆளாகக் கூடாது என்றும்; லட்சுமிநாராயணன் சொல்கிறபடி நடக்காவிட்டால் எனக்குப் பென்ஷனோ இதர வசதிகளோ கிடைக்காது – என்றும் அவர் கூறினார். இவ்வாறு ‘பிரஷர்’ கொடுப்பதே எனக்குப் பிடிக்காது என்றும்; எனவே உடனடியாக நாராயணனைச் சந்திக்க விரும்பவில்லை என்றும் நான் அவரிடம் தெரிவித்தேன்.

1976-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி நான் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் குடி புகுந்தேன். சர்க்காரியா கமிஷன் தனது விசாரணையைத் துவங்குவதற்கு முன்பு சி.பி.ஐ.யில் பணியாற்றும் மூர்த்தி எனது வீட்டிற்கு வந்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி வைத்தியலிங்கம் ஒரு வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும்; பூச்சி மருந்து தெளிப்புச் சம்பந்தமாக ஏக்கருக்கு ரூ.5 வீதம் சிபாரிசு செய்து பைலைத் தயார் செய்யும்படி என்னிடம் முதலமைச்சர் சொன்னதாகவும்; உடனே நான் வைத்தியலிங்கத்திற்குப் போன் செய்துவிட்டு முதலமைச்சர் அங்கீகாரத்திற்காகப் பைலை நேரடியாக அவருக்கு அனுப்பி வைத்ததாகவும் வைத்தியலிங்கம் அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக – அவர் சொன்னார்.

அந்த அடிப்படையில் ஒரு வாக்குமூலம் ‘டைப்’ செய்து கொண்டு வந்திருப்பதாகவும், அதில் நான் கையெழுத்துப் போட வேண்டும் – என்றும் கேட்டுக் கொண்டார்.

அந்த ‘பைல்’ விவசாயச் செயலாளர் மூலமாக விவசாய அமைச்சருக்கும்; பின்னர் அவர் மூலமாக முதலமைச்சருக்கும் செல்ல வேண்டும் – என்று நான் குறிப்பிட்டிருக்கிறேனா? அல்லது முதலமைச்சருக்கே நேரடியாகச் செல்ல வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறேனா என்று நான் அவரைக் கேட்டேன்.

நான் சரியான காரியத்தையே செய்திருப்பதாகவும்; விவசாயச் செயலாளர் – பிறகு விவசாய அமைச்சர் மூலமாகவே பைலை ‘மார்க்’ செய்திருப்பதாகவும்; அந்த ‘பைல்’ எப்படி முதலமைச்சருக்கு நேரடியாக வந்தது என்று சொல்ல முடியாதென்றும் அவர் கூறினார்.

விவசாயச் செயலாளருக்கு, விவசாய அமைச்சருக்கு – பின்னர் முதலமைச்சருக்கு ‘பைல்’ செல்ல வேண்டும் என்று நான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும்போது; நான் வைத்தியலிங்கத்திற்கு டெலிபோன் செய்து அவருக்கு பைலை அனுப்பியதாக நான் பொய் சொல்ல வேண்டும் – என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? என நான் அவரிடம் கேட்டேன். ‘டைப்’ செய்யப்பட்ட அந்த வாக்குமூலத்தில் நான் கையெழுத்துப் போட மறுத்துவிட்டேன்.

எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யப் பின்னர் வருவதாகக் கூறிவிட்டு அவர் உடனே போய்விட்டார். அதன் பிறகு அவர் வரவேயில்லை.

பூச்சிமருந்து தெளிப்புக் குற்றச்சாட்டு சம்பந்தமாக சர்க்காரியா கமிஷன் தாக்கீதின்படி நான் 1976 அக்டோபர் மாதம் 15ஆம் தேதி எனது வாக்குமூலத்தை அளித்திருந்தேன்.

பிறகு அக்டோபர் 28-ஆம் தேதி இரண்டாவது வாக்குமூலம் அனுப்பும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

ஆனால் அதில்கூட எனது முந்தைய வாக்குமூலத்தின் சில பகுதிகள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட சொற்களுக்குப் பதிலாக, அதற்கான காரணங்களும் காட்டப்படவில்லை.

அதற்குச் சில தினங்களுக்கு முன்பு ஐ.ஜி. லட்சுமிநாராயணன் எனது வீட்டிற்கு வந்து; தான் சி.பி.ஐ.யில் ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்றும் அறிமுகம் செய்து கொண்டார். தான் நீதிபதி விசாரணையின் சமூகநர் என்றும் கூறினார்.

தான் எனது இரசிகர்களில் ஒருவர் என்றும்; முன்பு நான் கருணாநிதியை எதிர்த்து வழக்குப் போட்ட துணிவைப் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருணாநிதி என்னைப் பதவி மாற்றம் செய்துவிட்டதால் எல்லோரும் அவருக்கு எதிராக நான் வாக்குமூலம் கொடுப்பேன் என்று எதிர்பார்த்ததாகவும்; முதலில் நான் கொடுத்திருந்த வாக்குமூலம் பிராசிகியூஷன் தரப்பிற்கு உதவும் வகையில் இல்லையென்றும்; இதனால் கிடைத்தார் கோபமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனது இரசிகர் – நலன் நாடுபவர் – என்கிற முறையில் இன்னொரு வாக்குமூலத்திற்கான நகலைத் தயாரித்துத் தன் கையோடு கொண்டு வந்திருப்பதாகவும்; அவர் தயாரித்துக் கொண்டு வந்திருக்கும் வாக்குமூலத்தின் நகலை நான் அப்படியே சமர்ப்பித்துவிட்டால் என்னுடைய பென்ஷன், கிடைப்பதற்கு உறுதி அளிப்பதாகவும்; எனது வருங்காலம் பிரகாசமாக இருக்குமென்றும் அவர் சொன்னார்.

அவர் கொண்டு வந்த வாக்குமூலத்தைப் பார்த்ததும் “படித்துப் பார்க்க நான் நேரம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி அதை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். (ஐ.ஜி.) லட்சுமிநாராயணன் கொடுத்த நகலிலிருந்து சில பாராக்களை மாற்றி; சில புதிய பாராக்களைச் சேர்த்து நான் எனது இரண்டாவது வாக்குமூலத்தை அனுப்பி வைத்தேன்.

சி.பி.ஐ.யில் ஐ.ஜி.யாகப் பணியாற்றும் லட்சுமிநாராயணன் கொடுத்த வாக்குமூல நகல் இன்னும் என்னிடமே இருக்கிறது.

வீராணம் திட்டம் பற்றிய குற்றச்சாட்டு குறித்து 11.8.76 அன்று இன்னொரு சி.பி.ஐ. அதிகாரி எனது வீட்டிற்கு வந்தார். நான் கையெழுத்துப் போடுவதற்காக ‘டைப்’ அடித்து ஒரு வாக்குமூலத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும்; அது இதர ஆட்சிகள் சொன்னதற்கு ஒத்திருப்பதாகவும் – அவர் கூறினார்.

நான் அந்த வாக்குமூலத்தைப் பார்ப்பதற்கும் மறுத்துவிட்டு சுப்ரீம் கோர்ட்டில் எனது பிரமாண வாக்குமூலத்தில் சொன்னதையும், பைலில் முன்பு எழுதியிருப்பதையும் சுருக்கமாக அவரிடத்தில் ‘டிக்டேட்’ செய்தேன்.

முதலில் இரண்டு வாக்குமூலங்களை நான் தாக்கல் செய்த நேரத்தில், வாக்குமூலங்கள் எப்படி அதிகரித்தால் போதுமா? என்று என்னிடம் கேட்கப்படவில்லை; எனவே அப்போது அவை குறித்துத் தெளிவாகக் கேட்டிருப்பதால் இவைகளையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன்.

இவ்வாறு இராயப்பா தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இராயப்பா தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது தெரிந்ததே.

அவருக்கே இந்த கதி – என்பது குறிப்பிடத்தக்கது.

“எமர்ஜென்சி” நெருக்கடிக் காலத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தித் தி.மு.க. மீது, மீதான குற்றச்சாட்டுகளுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

பக்கம் 226 — 16.1.1978

16.1.1978 அன்று திருச்சியில் என்னைச் சந்தித்த நிருபர்கள் “சர்க்காரியா கமிஷனை நீங்கள் புறக்கணித்ததற்கும், ஷா கமிஷனை இந்திரா காந்தி புறக்கணித்ததற்கும் உள்ள வேறுபாடு என்ன?” என்று கேட்டார்கள்.

“நாட்டில் ஜனநாயகம் இல்லாத சூழ்நிலையில் சர்க்காரியா கமிஷன் விசாரணை நடைபெற்றது. தி.மு.க.தரப்பில் எடுத்துவைக்கப்பட்ட வாதங்கள், பத்திரிகைகளில் வானொலியில் வெளிவர முடியாத சூழ்நிலையில் அது நடைபெற்றது. புகார் மனு கொடுத்தவர்களையோ, சாட்சிகளையோ குறுக்கு விசாரணை செய்ய இடமளிக்காத சூழ்நிலையில் சர்க்காரியா கமிஷன் விசாரணை நடைபெற்றது. எனவே நாங்கள் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டோம். ஷா கமிஷன் நடைமுறைகளைக் காணும்போது அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய வாக்குமூலங்கள், விளக்க அறிக்கைகள் அனைத்தும் நாட்டுக்கு அறிவிக்கப்படுகிற அளவிற்கு உரிமையுள்ள சூழ்நிலையில் அது நடைபெறுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நெருக்கடி காலத்தில் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அதிகாரிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டார்கள் என்று ஷா கமிஷன் விசாரணையிலிருந்து தெரிகிறது. அந்த அடிப்படையில் சர்க்காரியா கமிஷன் விசாரணையில் கலந்து கொள்ளாததற்கு நாங்கள் அறிவித்த காரணங்கள் நியாயமானவை என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். நாங்கள் அப்போது சொன்ன காரணங்களையும், இப்போது இந்திராகாந்தி சொல்லும் காரணங்களையும் ஒன்றாகக் கருத முடியாது. இரண்டும் வெவ்வேறானவை” என்று கூறினேன்.

சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் பற்றி கலைஞர்

1978-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி நடைபெற்ற விவாதம்

கலைஞர்: சாராய வழக்குகளைப்பற்றி இங்கு விரிவாகப் பேசப்பட்டது. இங்கு ஆளும் கட்சி நண்பர்கள் வேண்டுமென்றே என்னை புஸ் படுத்த வேண்டும் என்ற ஆசையில் ஏதோ சர்வர் சுந்தரம் என்றும், சுந்தரம் என்றும், சுந்தர சாம்ராஜ்யம் என்றெல்லாம் குறிப்பிட்டுப் பேசினார்கள். இதைக் கேட்டுக்கொள்வதற்கோ அல்லது அதைப்பற்றிப் பேசுவதற்கோ கொஞ்சமும் நான் கூச்சப்படவில்லை.

நமது முதலமைச்சர் அவர்கள் கூட ஜனாதிபதி அவர்களிடம் கொடுத்த புகாரில் கூட மைலாப்பூர் சுந்தரம் என்பவர் என்னோடு நெருங்கிய தொடர்பு உடையவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் நான் கேள்விப்பட்டதை இதற்கு முதலாவது பொறுப்பு ஏற்றுக்கொண்டவர், சர்க்காரியா கமிஷன் முன்னால் வந்தபோது, சேலம் வக்கீல் சொன்னார், அவர் சொல்லக் கேட்டுத்தான் இதைச் சொன்னேன் என்று கமிஷன் முன்னால் சொன்னார்கள். ஆனால் நான் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த மைலாப்பூர் சுந்தரம் என்பவரை நான் சொல்வதை நம்ப வேண்டும் — நான் இதுவரை பார்த்தது கூட கிடையாது.

மைலாப்பூர் சுந்தரம் என்பவர், கழக ஆட்சியால் 156 பேர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நேரத்தில் — இந்த 156 பேர்களில் ஒருவர். அதற்கு முன்பு இவரது சாராய கிடங்கில் சாராய பானைகள் இருந்தது ஆணையாளரால் — கமிஷனரால் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். நெருக்கடி காலத்தில் 156 பேர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் என்ற முறையில் கைது செய்யப்பட்டார்கள். போலீசார் இடத்தில் அப்படிப்பட்ட பட்டியலில் இருந்து அந்தப் பட்டியலின்படி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதில் ஏழெட்டு பேர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். வேறு சில கட்சியைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். இப்படிக் கைது செய்யப்பட்ட 156 பேர்களில் இந்த மைலாப்பூர் சுந்தரம் என்பவரும் ஒருவர் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதே நேரத்தில், நாயர், தாமஸ் என்ற இரண்டு பேர்கள் சிக்கிக் கொண்டார்கள் என்பதற்காக அன்றைக்கு மத்திய அரசில் இருந்த பிரமானந்த ரெட்டியார் அவர்களிடம் சென்று, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரினார்கள்.

பிறகு பிரமானந்த ரெட்டி அவர்களை நான் டெல்லியிலே சந்தித்தபோது, “சாராய வியாபாரிகளைக் கூட மிசாவின் அடிப்படையிலே நீங்கள் சிறையில் போடுகிறீர்களா” என்று கேட்டார்.

சமூக விரோதச் செயல்களைச் செய்கின்றவர்களை மிசாவின் கீழ் சிறையிலே போட வேண்டுமென்று சொல்கிறீர்கள், பதுக்கல் பேர்வழிகளை, கடத்தல்காரர்களை இப்படிப்பட்ட சமூக விரோதிகளை சிறையிலே போட வேண்டுமென்று சொல்கிறீர்கள். அதைப்போல்தான் உயிர்களை வார்னிஷ் மூலமும், சாராயம் மூலமும் கொன்று குவிக்கின்றவர்களை, சமூக விரோதிகள் என்ற அடிப்படையில் ஏன் சிறையில் அடைக்கக்கூடாது என்று வாதிட்டேன். அப்போது அவர்கள் மௌனமாக இருந்து விட்டார்கள்.

நான் திரும்பி வந்த ஒரு வாரத்திற்கெல்லாம் டெல்லியிலே இருந்து மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு தாக்கீது வந்தது. அது இப்போதும் பைலில் இருக்கும். இப்போது முதல் அமைச்சர் அவர்கள் வாங்கிப் பார்க்க வாய்ப்பிருக்கின்ற காரணத்தினால் பார்க்கலாம். என்ன உத்தரவு போட்டார்கள்? யாரோ 2, 3 பேர்களைக் காப்பாற்றுவதற்காக, பொதுவாக சாராயத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும், பெரிய சாராய வியாபாரியாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் இந்த மிசாவின் கீழ் அடங்கமாட்டார்கள். ஆகவே, அவர்கள் சமூக விரோதிகள் அல்ல என்கின்ற ஒரு நிலைமையை எடுத்துக்காட்டி, அவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்ற உத்தரவை, இங்கே முன்பிருந்த மாநில அரசுக்கு, கழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து வந்தது. அதற்குப் பிறகுதான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

நான் பிரதம அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களிடத்திலே கூட இதைப்பற்றி எடுத்துச் சொன்னேன். வாலாஜாவுக்குப் பக்கத்திலே இருக்கின்ற கிராமத்திலே உள்ளவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். யூனியன் சேர்மனாக இருக்கிறார், அவரும் இந்த மிசாவின் கீழே கைது செய்யப்பட்டிருக்கிறார், அவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்று இந்திரா காந்தி அம்மையாரிடத்திலே எடுத்துச் சொன்னேன். அதற்குப் பிறகும், யாரோ 2, 3 பேர்களைக் காப்பாற்ற இந்த 156 பேர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற உத்தரவு வந்தது. இன்னமும் இந்த உத்தரவு மாநில சர்க்காரின் கோப்பிலே இருக்குமென்று நம்புகிறேன். ஆகவே, முதல் அமைச்சர் அவர்கள் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.

ரகுமான்கான் அவர்கள் பேசும்போது முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டுக் கூறிய கருத்துக்குக் கலைஞர் பதில்:

இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. நண்பர் ரகுமான்கான் அவர்கள் பேசும்போது நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் குறுக்கிட்டு, புகார் கொடுத்ததைப் பற்றி விளக்கம் சொன்னார்கள். நாங்கள் பல புகார்களைக் கொடுத்தோம். அதிலே மத்திய சர்க்கார் அல்லது சர்க்காரியா கமிஷன் அதிலே ஏற்றுக்கொள்ளக் கூடிய புகார்களை எடுத்துக்கொண்டு, மற்றவைகளை, ஆதாரமில்லாதவைகளை விட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள்.

அவர்கள் பூர்வாங்கமாக உள்ளவைகளை எடுத்துக்கொண்டு, எஞ்சியதை விட்டுவிட்டார்கள் என்று நேற்றைய முன்தினம் இந்தத் துறை பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது குறிப்பிட்டார்கள்; பிரைமா ஃபேசி கேஸ் இல்லாதவற்றை விட்டு விட்டார்கள். இருப்பவற்றை எடுத்துக்கொண்டார்கள் என்பதுதான் அதன் பொருள்.

நான் ஒன்றை எடுத்துக்காட்டாகச் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய முதல்வர் அவர்கள் அன்றைய தினம் எதிர்க்கட்சியின் சார்பிலே தந்த புகாரில், திருவாரூர், தெற்கு வீதியிலே 94-ஆம் எண் உள்ள வீடு பல லட்சக்கணக்கான ரூபாயில் கருணாநிதியால் கட்டப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உள்ளபடியே இந்தக் குற்றச்சாட்டு பிரைமா ஃபேசி கேஸ் உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்திருப்பார்களேயானால்…

புத்தகத்திலும் சரி, நான் அதற்கு இந்திரா காந்தி அம்மையார் அவர்களுக்கு அளித்த பதிலிலும் சரி அந்த வீட்டினுடைய புகைப்படத்தை எடுத்து அனுப்பியிருக்கிறேன். ஒரு இடிந்து போன வீடு அது.

இந்த வீட்டை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல நண்பர்கள் பார்த்திருக்கக் கூடும். இப்போது அடித்த புயலால்கூட சுவர் விழுந்துவிட்டன. அந்த வீட்டைக் கட்ட வேண்டுமென்று நகராட்சி ஆணையருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால் பல லட்ச ரூபாய் போட்டு கட்டப்பட்ட பெரிய பங்களா என்றும் போடப்பட்டிருக்கிறது. இப்படி புகைப்படம் அனுப்பிய பிறகும்கூட, பதில் உரையை இந்த மாமன்றத்திலே இணைத்த பின்னரும், அவர்கள் இதிலே பிரைமா ஃபேசி கேஸ் இருக்கிறதா என்று உள்ளபடியே பார்த்திருக்க வேண்டும்.

ஆனால், ஒரு 28 குற்றச்சாட்டுகளை மட்டும் எடுத்து, இதை சர்க்காரியா விசாரிப்பதற்கு ஆதாரம் இருக்கின்றது என்று சேர்த்திருக்க மாட்டார்கள். இதிலே பிரைமா ஃபேசி கேஸ் இருக்கிறதா என்று பார்த்திருந்தால் இதை இணைத்திருக்க மாட்டார்கள். காரணம், வீட்டின் புகைப்படம் இருக்கிறது; இடிந்து விழுந்த வீடு. பங்களா அல்ல. பல லட்சக்கணக்கான ரூபாய்கள் போட்டு கட்டப்பட்ட வீடல்ல என்று விவரங்களையெல்லாம் பூர்வாங்க விசாரணையில், பிரைமா ஃபேசியில் வெளியிட்டிருக்கக் கூடும்.

ஆனால் அவசர அவசரமாக, கழக ஆட்சி கலைக்கப்பட்ட உடன், இந்த 54 குற்றச்சாட்டுகளில் அதிகமாக கருணாநிதியைச் சார்ந்த குற்றங்களைப் பொறுக்கி எடுக்கச் சொல்லி, அப்படி எடுக்கப்பட்ட 28 குற்றச்சாட்டுகள் மீது விசாரணை செய்தார்கள்.

உள்ளபடியே அதிலே உள்ள மொத்தக் குற்றச்சாட்டுகள் 54 ஆகும். எனவே, நான் கேட்டுக் கொள்கிறேன். “இந்த 28 குற்றச்சாட்டுக்களின் மீது எந்தவிதமான தீர்ப்பு வந்தாலும் சரி; மீதம் இருக்கின்ற 26 குற்றச்சாட்டுகள் மீதும் அவைகளையும் விசாரிக்கின்ற வகையிலே, ஒரு விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அன்றைய தினம் சொன்னீர்களே, நாங்கள் பாரபட்சம் இல்லாமல் எந்தக் கட்சியில் இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கட்சியில் இருந்தாலும் அல்லது நடவடிக்கைக்குப் பயந்து தங்கள் கட்சிக்கு வந்தாலும் யாரையும் விடாமல் நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, மிச்சமுள்ள 26 குற்றச்சாட்டுகளுக்குத் தாங்களே ஒரு நீதி விசாரணை வைக்க வேண்டுமென்று மிகுந்த பணிவன்போடு, நேச உணர்வோடு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

28 குற்றச்சாட்டுகளைப் பற்றி விரைவில் அறிக்கை வர இருக்கிறது. அவைகளைப் பற்றி மாநில அரசோ, மத்திய சர்க்காரோ நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அவைகளை எப்படித் தாங்குவது, சந்திப்பது என்பதைப் பற்றி நாங்கள், தொடர்புடையவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவைகளைச் சமாளிக்க இருக்கிறோம். அது வேறு விவகாரம்.

ஆனால் 54 குற்றச்சாட்டுகளில் 28 குற்றச்சாட்டுகள் மாத்திரம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. 26 குற்றச்சாட்டுகள் விடப்பட்டிருக்கின்றன. நாம் தொடர்ந்து வலியுறுத்திச் சொல்லி வருவது — முதலமைச்சர் அவர்கள் விடப்பட்ட 26 குற்றச்சாட்டுகளின் பேரிலும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இன்னொரு கமிஷன்கூடப் போடப்பட்டிருக்கிறது — கிருஷ்ணசாமி நாயுடு கமிஷன் என்று போடப்பட்டிருக்கிறது. முன்பே அறிவித்தார்கள் — அதற்கேற்ப போடப்பட்டிருக்கிறது. அறிவித்த நேரத்திலேயே நான் அறிக்கைகள் மூலமாகச் சொன்னேன்: 1972-ல் இருந்து கணக்கெடுத்திருக்கிறீர்கள். 1969-ல் இருந்து நான் முதலமைச்சராக வந்த அந்த 1969-ல் இருந்து கணக்கெடுங்கள் என்றேன்.

எனக்குள்ள நிலை எல்லாம் 1972-ல் இருந்து நீங்கள் போட்ட பிறகு அதற்குப் பிறகு நீங்களே ஆட்சிக்கு வந்து அல்லது வேறு கட்சி ஆட்சிக்கு வந்து மீண்டும் 1969-ல் இருந்து 1972 வரை விசாரணை என்று சொல்லி என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை.

1972 முதல் 1975 வரை விசாரணை முடிந்த பிறகு — காங்கிரஸ் கட்சியோ, ஜனதா கட்சியோ, கம்யூனிஸ்டு கட்சியோ ஆட்சிக்கு வந்து அப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர், “மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் மூன்று வருஷத்தை விட்டு விட்டார்கள்; ஆகவே, 1969-ல் இருந்து 1978-ஆம் ஆண்டு வரை விசாரணை செய்ய கமிஷன் போடுகிறோம்” என்று போட ஆரம்பித்தால் விசாரணைக் கமிஷன் வேலையே சரியாக இருக்கும்.

அடிக்கிற அடியை ஒரே தடவையாக அடித்து முடித்துவிடுங்கள்; பல தடவையாக அடித்துக் கொண்டிருக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

1972-ல் திராவிட முன்னேற்றக் கழக அரசின்மீது சில முறைகேடுகளைச் சொல்லிவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டது. 1972-ல் வெளியேற வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டபோது 1969 முதல் 1972 வரை தவறுகள் நடந்தன; எனவே வெளியேறினேன் என்றுதான் காரணம் சொன்னீர்கள்.

தவறுகள் நடந்தன என்று சொல்லப்பட்ட காலத்தை ஏன் விட்டுவிட்டீர்கள் என்பதுதான் என்னுடைய வாதம். எனவே, இந்த நாயுடு கமிஷனுக்கு காலத்தை விரிவாக்கி 1969-ல் இருந்து, என்றைக்கு இந்தப் பாவி முதலமைச்சராக வந்து உட்கார்ந்தானோ அதிலிருந்து, நீங்கள் நிர்ணயித்திருக்கிற 1975-ஆம் ஆண்டு வரை அந்தக் கமிஷன் ஆராய வேண்டுமென்று நியமிப்பதுதான் முறையானதாகவும், பொருத்தமானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்கும் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

1997-ம் ஆண்டு ஜனவரி 28-ல் நடந்த விவாதம்

பி.ஆர். சுந்தரம்: ஊழலை ஒழிப்பதற்காக ஒட்டு மொத்தமாக அவதாரம் எடுத்ததாக பேசிக் கொண்டிருக்கிற நீங்கள், சர்க்காரியா கமிஷன் முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்டதை இந்த நாடு இன்னும் மறந்துவிடவில்லை. சி.பி.ஐ. முன்பு, இரண்டு வழக்குகளில், கோதுமை பேர ஊழல், பூச்சி மருந்து ஊழல் ஆகிய இரண்டு வழக்குகளை சி.பி.ஐ. தொடுத்தபோது, நீங்கள் எல்லாம் இந்திரா காந்தி அவர்களிடம் மன்றாடி அந்த வழக்கை வாபஸ் பெற்றதையும் இந்த நாடு மறந்துவிடவில்லை…

கலைஞர்: மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களே, அவையில் உண்மைக்கு மாறான ஒன்றை இட்டுக்கட்டி, வேண்டுமென்றே யாரோ சொல்லிக் கொடுத்ததை இங்கே சொல்லி அங்கே போய் பாராட்டைப் பெறுவதற்காக உறுப்பினர் அவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கிறார். சர்க்காரியா கமிஷனிலே போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கவேண்டும் என்று இந்திரா காந்தி இடத்திலே போய் யாரும் முறையிடவும் இல்லை; மன்றாடிக் கேட்டுக் கொள்ளவும் இல்லை.

ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அவர்கள் அதை வாபஸ் வாங்கினார்கள். அதுமாத்திரமல்ல, எங்கள் மீது புகார் கொடுத்த எம்.ஜி.ஆர். அவர்களே, ‘அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்லிவிட்டார். ‘I have no knowledge about this’ என்று அப்பட்டமாக அருமை எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் புகார்களைப் பற்றி சர்க்காரியா கமிஷனுக்கு எழுதிக் கொடுத்து விட்டார். இதையெல்லாம் நம்முடைய நண்பர் அவர்களுக்குத் தெரியாது என்று கருதுகிறேன். அல்லது தெரிந்ததை மறைத்துக் கொண்டு பேசுகிறார் என்று கருதுகிறேன்.

1997-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நடந்த விவாதம்

டாக்டர் அ. செல்லக்குமார்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, சீக்கிரம் பேசி முடித்துவிடுகிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அண்ணா வழியில் வந்தவர்கள். அண்ணா அவர்கள் ஒரு வார்த்தையைச் சொல்வார்கள். ‘குற்றவாளி மீது ஒரு விரலைக் காட்டும்போது, மற்ற விரல்கள் தன்னுடைய நெஞ்சைக் காட்டும்’ என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும்போது, முதல்வர் அவர்கள், தான் நிரபராதி என்று இந்தநாட்டு மக்களுக்கு நிரூபிக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை இந்தச் சபையில் உள்ளவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால், பத்திரிகையிலே பார்க்கின்றோம்.

கலைஞர்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். திரு. செல்லக்குமார் அவர்கள் என்ன பேசுவார்கள் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். அதைப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு விரல் சுட்டிக்காட்டும்போது, 3 விரல் தன்னைச் சுட்டிக்காட்டும் என்று சொல்கிறார்; எனக்கு அறிவுரை. அவருடைய விரலும் அப்படித்தான் இருக்கிறது என்பதை அவரும் மறந்துவிடக் கூடாது. (மேசையைத் தட்டும் ஒலி)”

டாக்டர் அ. செல்லக்குமார்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, நான் மாற்றுக் கருத்தை வைக்கவில்லை. நான் என்னையும் உட்படுத்தி, சேர்த்துத்தான் சொல்கிறேன். அந்த முறையிலே அது ஒரு அரசியல் கருத்தாக இருந்தாலும்கூட, இன்றைக்குப் பத்திரிகைகளிலே வந்து கொண்டிருக்கிறது. ஐயப்பாடு என்று வந்துவிடக் கூடாது என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். (மணியடிக்கப்பெற்றது) இன்றைக்கு சர்க்காரியா கமிஷனுடைய அறிக்கை…”

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: இது காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை சம்பந்தப்பட்ட மானியம்; இதிலே பேசுங்கள். சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள். (குறுக்கீடு) சரி பேசுங்கள். நீங்கள் விவாதத்தைத் துவக்கி வைத்ததால் 20 நிமிடம் தரப்பட்டது. நீங்கள் பேச ஆரம்பித்து 21 நிமிடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நீங்கள் எவ்வளவு நேரம் பேச விரும்புகிறீர்களோ அவ்வளவு நேரம் பேசுங்கள்.

டாக்டர் அ. செல்லக்குமார்: இன்றைக்கு அந்த அறிக்கை ஏதோ ஒரு ஐயப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் குறிப்பிடுகிறேன். முதலமைச்சர் அவர்கள் சில பேரை ஆதரித்து, நாங்களும் ஆதரவு கொடுத்து, ஒரு அமைச்சரவை மத்தியிலே இருக்கின்றபோது, ஐயப்பாடு இருக்கும் என்று சொன்னால், அந்த ஐயப்பாட்டை தெளிவுபடுத்துவது நம்முடைய பங்கு என்கின்ற காரணத்தால்தான் இதைச் சொல்கிறேன். (குறுக்கீடு) தொலைக்காட்சியிலே முன்னாள் முதலமைச்சர்கூட சொன்னார். சர்க்காரியா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைப் பற்றி சொல்கிறார். ஏதோ பூதம் போல அதைச் சொல்கிறார்கள். அந்தப் பூதம் என்ன என்பதை வெளியே கொண்டு வந்துவிட்டால் தெரிந்துவிடப் போகிறது. எனவே அதை மூடி மறைக்க வேண்டிய தேவையில்லை. அதை வெளியே கொண்டு வருவதைத் தவிர…..”

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: நீங்கள், லைப்ரரியிலுள்ள அந்த அறிக்கையின் 4 வால்யூம்களையும் எடுத்து படித்துக்கொள்ளுங்கள். படித்தால் அதிலே தெரியும். (குறுக்கீடு) அவை ஒன்றும் மூடிவைக்கப்படவில்லை. லைப்ரரியில் கேட்டால் கொடுப்பார்கள்.”

டாக்டர் அ. செல்லக்குமார்: அதை வெளிப்படுத்தி விட்டால் முடிந்துபோகும். அதனால்தான் சொல்கிறேன்.

கலைஞர்: சர்க்காரியா கமிஷனுடைய அறிக்கை அப்பொழுதே அளிக்கப்பட்டது. இது எல்லாம் வரும் என்று தெரிந்துதான் ஆதாரத்தோடு வந்திருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) சும்மா வரவில்லை. அந்த அறிக்கை அடிப்படையில் அன்றைக்கே முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் என்மீது வழக்கு தொடர்வதற்காக, அந்த அறிக்கை அடிப்படையில், இரண்டு முறை முயற்சித்தார்.

அப்போது அட்வகேட் ஜெனரலாக இருந்த திரு. வி.பி. இராமன் அவர்கள் அந்த அறிக்கையை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு வழக்கு தொடர்வதற்கான எந்த ஆதாரமும் கிடையாது என்று, அட்வகேட் ஜெனரலாக இருந்தவர் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலே எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அறிவுரை கூறினார். (மேசையைத் தட்டும் ஒலி) அவருடைய ஆலோசனை காப்பியை ஏற்கெனவே இங்கு சில தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்களுக்குக்கூடக் காட்டியிருக்கிறேன். திரு. சொக்கர் அவர்கள் அதை முழுவதும் படித்துப் பார்த்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடத்திலும் இதை காட்டியிருக்கிறேன். எம்.ஜி.ஆர். என் மீது வழக்கு போட, சர்க்காரியா கமிஷன் விசாரணையின் அடிப்படையில் வழக்கு போட, இரண்டு முறை முயற்சித்தார்.

15-11-1977-ல் ஒன்றும், 24-10-1979-ல் ஒன்றும், ஆக இரண்டு முறை அப்போது முயற்சித்து, அப்போதிருந்த அட்வகேட் ஜெனரல் அவர்கள் சொல்கிறார்.

“I have already expressed my opinion- vide opinion 1877 dated 15-11-1977.

I do not see any reason to modify the position.”

“என்னுடைய கருத்தை நான் மாற்றிக் கொள்ள இரண்டாவது முறையிலும் விரும்பவில்லை; ஆகவே வழக்குப் போட எதுவுமே இல்லை” என்று அட்வகேட் ஜெனரலாக இருந்த திரு. வி.பி. இராமன், முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்கே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

சர்க்காரியா கமிஷன் என்பது ஒரு சில வரிகளைக் கொண்ட ஆவணம் அல்ல. 1972-ல் தொடங்கிய புகார்கள், அதற்கான கலைஞரின் பதில்கள், புகார்தாரர்களின் மறுப்புகள், மீண்டும் அளிக்கப்பட்ட விளக்கங்கள், சாட்சிகள், ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள், பல கட்ட விசாரணைகள், தனித்தனி குற்றச்சாட்டுகள் மீதான ஆய்வுகள், முதல் அறிக்கை, இறுதி அறிக்கை என விரிந்த முழுமையான விசாரணைப் பதிவு அது.

எனவே அந்த ஆவணத்தில் இருந்து விஜய் சில பத்திகளை மட்டும் மேற்கோள் காட்டியிருப்பதை வைத்து, “இதுதான் முழு சர்க்காரியா கமிஷன் ஆவணம்” என்று சொல்ல முடியாது. அதைவிட முக்கியமாக, அந்த சில பத்திகளை மட்டுமே அடிப்படையாக வைத்து “கலைஞர் ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்றும் முடிவு கட்ட முடியாது.

விசாரணைக் கமிஷன் முன் ஒரு குற்றச்சாட்டு இடம்பெறுவது, அதைப் பற்றிய சாட்சிகள் பதிவு செய்யப்படுவது, கமிஷன் அதைப் பற்றி ஒரு கருத்தை அல்லது முடிவைப் பதிவு செய்வது — இவை அனைத்தும் ஒரு விசாரணைக் கமிஷன் செயல்முறையின் பகுதிகள். அவை தாமாகவே குற்றவியல் நீதிமன்றத்தின் குற்ற நிரூபணமாகவோ தண்டனைத் தீர்ப்பாகவோ மாறிவிடுவதில்லை.

மேலும் இந்த விவகாரத்தில் கலைஞர் தரப்பின் பதில்களும் ஆவணங்களிலேயே உள்ளன. 1972-லேயே குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். பின்னர் சர்க்காரியா விசாரணையின் நடைமுறையை எதிர்த்தார். மீதமிருந்த குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கச் சவால் விட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகும் சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை நேரடியாக எதிர்கொண்டு தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்தார்.

ஆக, சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் சில பத்திகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுவது ஒரு விஷயம்; அந்தப் பத்திகளையே வைத்து கலைஞர் ஊழல்வாதி என்று தீர்ப்பு எழுதுவது முற்றிலும் வே

கருத்துகள் இல்லை: