தினமலர் : இஸ்லாமாபாத்: உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, 9 மாதங்களுக்கு பின்னர் இம்ரான் கான் அவரது மனைவி, சகோதரியை சிறையில் சந்தித்து பேசினர்.
ஊழல் வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனால் சிறையில் அவர் மரண படுக்கையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற தொடர்ச்சியான செய்திகளை தொடர்ந்து இம்ரானை இஸ்லாமாபாதில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை குடும்பத்தினர் வாரம்தோறும் சந்திக்க, மகன்களிடம் தொலைபேசியில் பேசவும் அனுமதி அளித்தது.
இந் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, 9 மாதங்கள் கழித்து இம்ரான் கானை அவரது மனைவி புஷ்ரா பீபி, சகோதரி நொரீன் நியாசி ஆகியோர் அடியலா சிறையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீடித்தது.
சந்திப்பின் போது, இம்ரான் கானை ஷிபா மருத்துவமனைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து அவரிடம் நொரீன் தெரிவித்தார். மேலும் சில சட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக