செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

அனிருத் - காவ்யா மாறன் ( கலாநிதி மாறன் மகள்) திருமணம் கிரீஸில் நடக்கப் போகிறது

 தினமலர் : சென்னை: ராக் ஸ்டார் அனிருத் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. 
இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே ஒய்ஜி மகேந்திரன் பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்திய நிலையில், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவது உறுதியானது. 


சமீபத்தில் வெளியான லோகேஷ் கனகராஜின் டிசி படத்துக்கு அனிருத் ஸ்பெஷல் மெனக்கெடல் எடுத்து மியூசிக் போட்டு மாமனார் படத்தை பிளாக்பஸ்டர் ஆக்கிவிட்டார் என ரசிகர்களே போஸ்ட் போட தொடங்கினர். 

அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் 2 படத்துக்கும் இசை தரமாக இருக்கும் என்கின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் வெளியான உடனே அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் திருமண தேதி மற்றும் திருமண இடம் குறித்த தகவல்களும் தற்போது இணையத்தில் கசிந்து தீயாக பரவி வருகிறது. 

காதலும் வதந்திகளும்: 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத். 

அவருடைய அப்பா ரவிச்சந்திரன் ஏற்கனவே நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். நடிகையாகவும் பாடகியாகவும் அசத்தி வந்த ஆண்ட்ரியா உடன் அனிருத் காதல் வயப்பட்டார் என்றும் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்ததாக ஏகப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. 

அதன் பின்னர் அனிருத் - ஜொனிதா காந்தியை காதலிக்கிறார், கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யப் போகிறார் என ஏகப்பட்ட ரூமர்கள் கிளம்பின. ஆனால், அனிருத் தற்போது காவ்யா மாறனை தான் காதலித்து வருகிறார். அவரைத்தான் திருமணம் செய்யப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: 

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி அனிருத் - காவ்யா மாறன் திருமணம் டெஸ்டினேஷன் வெட்டிங்காக க்ரீஸ் நாட்டில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தனது மகளின் திருமணத்தை வெளிநாட்டில் பிரம்மாண்டமாக கலாநிதி மாறன் நடத்துவார் என்கின்றனர். 

திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க சென்னையிலும் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெறும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுவரை இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: