வெள்ளி, 17 அக்டோபர், 2014

ஜெயலலிதா வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டும்:ஜாமீன் பற்றி சுப்பிரமணியன் சுவாமி

புதுடெல்லி: ஜெயலலிதாவிற்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும், அவர் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று  உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜெயலலிதா வழக்கு விசாரணையையொட்டி உச்ச நீதிமன்றத்திற்கு பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வந்திருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 'ஜெயலலிதாவிற்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர் வீட்டிலேயேதான் இருக்க வேண்டும், கட்சியினரை சந்திக்க கூடாது. மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை ஆளுநர் ரோசையா கண்காணிக்க வேண்டும். அதேவேளையில், தனது கட்சியினருக்கு தேவையான கட்டுப்பாடுகளை ஜெயலலிதா விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதாக கூறினார்.vikatan.com

கருத்துகள் இல்லை: