திங்கள், 13 அக்டோபர், 2014

தமிழகத்தில் 37 பேர் வடமாநிலத்தவர்கள் கொத்தடிமைகளாக ! போர்வெல் நிறுவனர் கைது !

கந்தம்பாளையம் அருகே கொத்தடிமை போல பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் 37 பேர் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக ரிக் அதி பரை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.; கலெக்டரிடம் புகார்t; நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள திடுமல் தி.ராசாம்பாளை யத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). இவர் போர்வெல் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் வேலை செய்து வந்த மத்திய பிர தேசத்தை சேர்ந்த 9 தொழி லாளர்கள் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து, தாங்கள் கடந்த 6 மாதங்களாக முருகேசன் என்பவரிடம் பணிபுரிந்து வருவதாகவும், இதுவரை தங்களுக்கு சம்பளம் ஏதும் தராமல் வேலை வாங்கிக் கொண்டு வெளியில் செல்வ தற்கு விடாமல் அடிமைபோல் நடத்தி வருவதாகவும் புகார் தெரிவித்தனர். வந்தாரை கொத்தடிமைகளாக வாழவைப்பது தப்பா ? கேட்டாலும் கேப்பாய்ங்க ?


இதை அடுத்து கலெக்டர் தட்சிணாமூர்த்தி, அந்நிறு வனத்திற்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள திருச்செங்கோடு உதவி கலெக்டர் செங் கோட்டையனுக்கு உத்தரவிட் டார். இதன் தொடர்ச்சியாக அவர் வருவாய்த்துறை அலுவ லர்களுடன் நேரில் சென்று தி.ராசாம்பாளையத்தை சேர்ந்த ரிக் அதிபர் முருகேசன் மற்றும் அத்தொழிலாளர்க ளிடம் விசாரணை நடத்தி னார்.

37 தொழிலாளர்கள் மீட்பு

விசாரணையின் போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த 11 தொழிலாளர்கள், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 9 தொழி லாளர்கள், மாராட்டி மாநி லத்தை சேர்ந்த 16 தொழிலா ளர்கள், ஒடிசாவை சேர்ந்த ஒரு தொழிலாளி என மொத் தம் 37 பேர் கடந்த சில மாதங்களாக விவசாயம், ரிக் வேலை, ஆடு, மாடு மேய்த்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்து வருவது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு இது வரை சம்பளம் ஏதுவும் வழங்கப்படவில்லை என்றும், தினசரி இருவேளைகள் மட்டும் தரம் குறைந்த உணவு வழங்கப்பட்டதாகவும், மிகவும் மோசமான இடத்தில் தங்க வைத்திருந்ததாகவும், வெளியே எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் அத்தொழிலாளர்கள் அதிகாரி களிடம் புகார் தெரிவித் தனர்.

இது குறித்து தொழிலாளர்கள் மற்றும் ரிக் உரிமையாளர் குடும்பத்தினரிடம் நேரில் விசாரணை செய்ததில், அவர்கள் ஆட்டுக்கொட்டகை மற்றும் மின் மோட்டார் அறையில் தங்க வைக்கப்பட்டு இருப்பதும், வெளியில் எங்கும் செல்ல முடியாமல் மிகவும் மோசமான நிலையில் கொத்த டிமைகளாக நடத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதை யடுத்து 37 தொழிலாளர்களை மீட்ட அதிகாரிகள், மணிய னூர் கந்தம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ரிக் அதிபர் கைது

இது தொடர்பாக திடுமல் கிராம நிர்வாக அலுவலர் ராணி, நல்லூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொத்தடிமை களாக இருந்து மீட்கப்பட்ட 37 வெளிமாநிலங்களைசார்ந்த தொழிலாளர்களும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தட்சிணாமூர்த் தியை சந்தித்து, தங்களை மீட்க உதவி செய் தமைக்கு நன்றியை தெரி வித்துக்கொண்டனர். அவர் களுக்கு உடனடி நிவாரண தொகையாக தலா ரூ.1000 வீதம் ரூ.37 ஆயிரம் வழங்கப் பட்டது. அனைவரை யும் அவர்களது சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: