சனி, 18 அக்டோபர், 2014

உலகின் 80 வீத போலியோ நோயாளிகள் பாகிஸ்தானியர்கள் !

உலக அளவில் போலியோவால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 80 சதவீதத்தினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:;
கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அதிகபட்ச அளவாக 199 குழந்தைகளுக்கு போலியோ நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு அதனையும் தாண்டி 206 குழந்தைகளை போலியோ தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
உலகில் போலியோவால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 80 சதவீதத்தினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
உலகம் முழுவதும் போலியோவை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சிக்கு பாகிஸ்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
அந்த நாட்டின் வடக்கு, தெற்கு வஜிரிஸ்தான் மாகாணங்களில் போலியோ தடுப்பு மருந்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் தடை விதித்திருப்பதுதான் இந்த நிலைக்குக் காரணம். இந்த லட்சணத்தில இந்தியாவுக்கு எதிரா முழக்கம் வேற? நல்ல காலம் காஷ்மிரில இந்த அளவு போலியோ இல்லை !

போலியோ தடுப்பு முகாம்களில் பங்கேற்கும் பல சுகாதாரப் பணியாளர்களை தலிபான்கள் கொன்றுள்ளனர்.
அதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கிடைக்காத நிலை அங்கு நிலவி வருகிறது.
இந்தப் பிரச்னைக்கு பாகிஸ்தான் அரசு முற்றுப்புள்ளி வைத்தால்தான் போலியோவுக்கு எதிரான போரில் வெற்றியடைய முடியும் என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலியோ தடுப்பு மருந்துகள், முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனை அழித்து, அச்சமுதாயத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக வெளிநாடுகள் செய்யும் சதி என தலிபான்கள் கூறி வருகின்றனர். dinamani.com

கருத்துகள் இல்லை: