செவ்வாய், 9 நவம்பர், 2010

பாலிவுட்டில் கர்ஜிக்கும் சிங்கம்...!




       சூர்யா போலீஸ் கெட்டப்பில் கலக்கிய ‘சிங்கம்’ இங்கிலாந்து மற்றும் கனடா பாக்ஸ் ஆஃபிஸிலும்கூட கர்ஜனை செய்த படம்.இப்போது பாலிவுட்டிலும் கர்ஜிக்கப் போகிறது.



எம்.ஜி.ஆருக்கு ஒரு காவல்காரன். சிவாஜிக்கு ஒரு தங்கப்பதக்கம். ரஜினிக்கு ஒரு மூன்றுமுகம் என்பது போல் சூர்யாவுக்கு சிங்கம்.  இயக்குனர் ஹரிக்கு ‘சாமி’க்கு அடுத்தும்... சூர்யாவுக்கு ‘காக்க காக்க’வுக்கு அடுத்தும் அதிரடியான போலீஸ் ஸ்டோரி ‘சிங்கம்’.   
கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காக ஞானவேல் ராஜா தயாரித்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியிட்டு வசூலை வாரிக்குவித்தது. 

இப்போது பாலிவுட்டில் சிங்கத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளது ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம்.சூர்யா கம்பீரம் காட்டிய போலீஸ் கெட்டப்பில் கலக்கவிருப்பவர் அஜய் தேவ்கான். 

ரோஹித் செட்டி இயக்கத்தில் ரீமேக் ஆகவுள்ளது சிங்கம்.அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் ஹிட்டான ‘கஜினி’... இந்தியில் ரீமேக் ஆகி அமீர்கானின் வெற்றிப் படவரிசையில் ஹைலைட்டாக அமைந்தது.  அதேபோல் இப்போது அஜய் தேவ்கானுக்கு அதிரடி ஹிட் கொடுக்க போகிறது சிங்கம்.

கருத்துகள் இல்லை: