செவ்வாய், 10 ஜூலை, 2012

நடிகையின் Trick கடுப்பில் முக்கிய ஹீரோக்கள்!

கொஞ்ச நாளாக எந்த இணையதளம் அல்லது செய்தித் தாளைத் திறந்தாலும் முக்கிய செய்தி, 'வாரிசு நடிகை விக்ரமுடன் ஜோடியாமே...', 'அடுத்து விஜய்யுடன் ஆடிப் பாடுவாரா?' 'மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாமே..?' என்கிற கேள்விக்குறி செய்திகள்தான்.
என்ன மேட்டர் என்று விசாரித்த போதுதான், நடிகையின் பிரமாதமான வேலை இது என்று தெரிந்தது. இப்படியொரு யோசனையே இல்லாதவர்கள்கூட, இந்த மாதிரி செய்திகளைப் படித்துவிட்டு, நடிகையை கேட்டுப் பார்க்கலாமா என யோசிக்க வேண்டும். இதுதான் இத்தகைய செய்திகளின் நோக்கம் என்பது தெரிய வந்தது.
சமீபத்தில் மெகா இயக்குநரின் படத்தில் இவர் நடிப்பதாக வந்தது. அவரைக் கேட்டால், என் படத்துலதான் ஏற்கெனவே ஹீரோயின் போட்டாச்சே... என் கதைப்படி இன்னொரு ஹீரோயினுக்கு சான்ஸே இல்லையே..., என்று கிண்டலாகச் சொன்னாராம்.
துப்பறியும் படத்தில் ஜோடியாமே, என்று அந்தப் பட இயக்குநரைக் கேட்டால், அவர் படத்தில் வரும் கெட்ட வார்த்தைகளின் தலையாய வார்த்தையை சத்தமாகச் சொல்லி, இதே வேலையாப் போச்சு... என்கிறார்.

கூடங்குளம் அணு மின் பணிகளில் சுணக்கம், யார் காரணம்?

சென்னை:"ஒவ்வொரு துறையிலும் ஊழல். நிர்வாகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது கேள்வி-பதில் அறிக்கை:
கடந்த தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, மின் வாரியம் நெருக்கடியில் சிக்கித் தவித்தது என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மின்சாரம் எப்போது வரும், போகும் என, யாருக்கும் தெரியாது. இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கட்டணம். மின்சார மீட்டர் கிடைக்காமல், பொதுமக்கள் திண்டாடுகின்றனர். இதிலே, தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை என்று அறிக்கை விடுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஒவ்வொரு துறையிலும் ஊழல். நிர்வாகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

வார்டன் கைது சாந்திநிகேதன் மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த

சாந்திநிகேதன் : விடுதியில் தங்கியிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்து, அந்த மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் கைது செய்யப்பட்டார்
.மேற்கு வங்கம், மக்ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மிஸ்திரி. இவரின் மகள் அஜிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் தன் கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாந்திநிகேதன் பகுதியில், விஸ்வபாரதி பல்கலைக் கழகக் கட்டுப்பாட்டிலுள்ள, பாத பவன் உறைவிட மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவள் அங்குள்ள கராபி மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். இவள், கடந்த வெள்ளியன்று இரவு தூங்கும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள். இதை அறிந்த விடுதி வார்டன் உமா போடார் ஆத்திரமடைந்து, மறுநாள் மாணவியை அழைத்து வலுக்கட்டாயப்படுத்தி, அவளது சிறுநீரை குடிக்க வைத்தார்.

காட்டு மிராண்டி ஆண் தாலிபான்கள் பெண்ணைக் கொன்றதும் ஆரவாரம்


பெண்ணை சுட்டுக் கொன்று வீடியோ வெளியிட்ட தாலிபான்கள் காபுல்: ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் வைத்து தாலிபான் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

 ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் 3 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள் பார்க்க பர்வான் மாகாணத்தைச் சேர்ந்த தாலிபான் தீவிரவாதி முட்டிக் கால் போட்டிருக்கும் பெண் ஒருவர் அருகில் சென்று அவரது தலையில் 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காட்சி வருகிறது. அந்த பெண்ணைக் கொன்றதும் அங்கிருந்த ஆண்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர். ஆப்கானிஸ்தான் முஜாஹீதீன் வாழ்க என்று கோஷமிடுகி்ன்றனர். இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திங்கள், 9 ஜூலை, 2012

நயன்தாரா த்ரிஷா கட்டித் தழுவி முத்தம்

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நாயகிகளாக இருப்பதால் தான் இருவரும் மோதிக்கொள்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்ட ஜோடி தான் த்ரிஷா-நயன்தாரா ஜோடி. முதலிடம் யாருக்கு என்பதில் போட்டி என்ற கோணத்தில் இருந்த இவர்களின் மோதல் ஹீரோ மோதலாக மாறியது.
அவர்களால் இல்லையென்றும் சொல்ல முடியாத அளவிற்கு ஒருவரை பற்றி ஒருவர் ஓபனாகவே பேட்டி அளித்துக்கொண்டிருந்தனர். திடீரென நயன்தாரா சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணத்திற்கு தயாரானதும் த்ரிஷா-நயன்தாரா சண்டை முடிவுக்கு வந்தது என ரசிகர்கள் நினைத்திருந்த போது தன் திருமணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு மறுபடியும் நடிக்க வந்தார் நயன்தாரா.எப்படியும் இவர்கள் மோதல் தொடரும் என நினைத்திருந்த  ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக கட்டித் தழுவி முத்தம் கொடுத்துக் கொண்டு நட்பு பாராட்டியிருக்கிறார்கள்

CPM கட்சி இப்போது Professional கிரிமினல் கும்பலாகிவிட்டது

கொலைகார-கேளரா-சிபிஎம்
உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் கட்சி என்று வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கொலைகாரக் கட்சி. கேரளத்தில் சி.பி.எம். கட்சியிலிருந்து பிரிந்து சென்று “புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை நடத்திவந்த டி.பி. சந்திரசேகரனை கடந்த மே மாதத்தில் கொடூரமாக வெட்டிக் கொன்ற சி.பி.எம். கட்சியின் கொலைவெறியாட்டம், இந்த உண்மையை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.
இப்படுகொலையும், “அரசியல் கொலைகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளோம்” என்று பொதுக்கூட்டத்திலேயே  இடுக்கி மாவட்ட சி.பி.எம். செயலாளரான எம்.எம். மணி திமிராகப் பேசியிருப்பதும், சந்திரசேகரன் படுகொலையையொட்டி சி.பி.எம். கட்சியின் அச்சுதானந்தன் கோஷ்டியும் பினாரயி விஜயன் கோஷ்டியும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டிருப்பதும், அரசியல் எதிரிகளைத் திட்டமிட்டு கொலை செய்வதை சி.பி.எம். கட்சி வாடிக்கையாகக் கொண்டிருப்பதை கேரளம் மட்டும் மட்டுமின்றி, நாடு முழுவதும் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.

குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

குஜராத் கலவரத்தில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் எவை?.. லிஸ்ட் கேட்கும் சுப்ரீம் கோர்ட்! 

டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தின் போது இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

CBI க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ஏன் ராசாவுக்கு முந்திய உரிமங்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை?

 ஜாதி ஜாதி ஜாதி 

ஸ்பெக்ட்ரம் ஊழல்: குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரும் மனு மீது விளக்கம் கேட்டு சிபிஐக்கு நோட்டீஸ்

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2003-2007-ம் ஆண்டு வரை 51 உரிமங்களை தொலைத் தொடர்புத் துறை வழங்கியுள்ளது. அதே விதிமுறைகளை நானும் பின்பற்றி உரிமங்களை வழங்கினேன்.ஆனால் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் தமது பதவி காலத்துக்கு முன் வழங்கப்பட்ட 51 உரிமங்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. வழக்கு விசாரணையில் பாரபட்சம் உள்ளது. ஆகையால் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஆ. ராசா கூறியிருந்தார்.

Best Bakery 14பேர் உயிரோடு கொழுத்தப்பட்டவழக்கில் 4 பேர் குற்றவாளிகள், 5 பேர் விடுதலை

 குஜராத் மாநிலம் கோத்ராவில் வன்முறை வெடித்தபோது 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி இந்த பேக்கரிக்குள் மோடி ஆதரவு  கும்பல் புகுந்தது. அங்கு புகுந்து வன்முறையில் அக்கும்பல் ஈடுபட்டது. பேக்கரியும் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
மும்பை: குஜராத், பெஸ்ட் பேக்கரி எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் குற்றவாளிகள் என்று மும்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களுக்கான தண்டனையையும அது உறுதி செய்துள்ளது. அதேசமயம், ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Greeley Haven செவ்வாய் கிரகம்.. நாசாவின் புதிய தகவல்!

The photo combined 817 images taken by the panoramic camera on the Opportunity. NASA releases 'spectacularly detailed' Mars panorama
The panorama was stitched together from component images taken between December 21, 2011, and May 8, 2012, when Opportunity was stationed on an outcrop nicknamed Greeley Haven.
Opportunity completed its 3,000th Martian day on July 2, and the US space agency marked 15 years of robotic presence on the Red Planet.
NASA's Curiosity rover, formally known as the Mars Science Laboratory but nicknamed a "dream machine" by NASA scientists, blasted off from Florida in November and is expected to land in early August.
The most advanced machine ever built with the aim of roaming the surface of Earth's nearest neighbour cost $2.5 billion to construct and launch, carries its own rock-analysing lab and aims to hunt for signs that life once existed there.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் கிரேட்டர் ஆகியவை படு அழகாக காட்சி தருகின்றன.ஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா. இந்தப் படங்கள் நாசா அனுப்பியுள்ள Mars Exploration Rover Opportunity என்ற விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்டது. இந்த விண்கலத்தின் மீது பொருத்தப்பட்ட பான்கேம் எனப்படும் பானரோமிக் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 817 புகைப்படங்களை இந்த கேமரா எடுத்துத் தள்ளியுள்ளது.

மதுரை ஆதீனம்: சாமிநாதன் என்னை கொல்ல சதி செய்தார்

 Madurai Aadheenam Comments On Former Junior Aadheenam

சாமிநாதனை நான் ஏன் நீக்கினேன்?... மனம் திறக்கும் மதுரை ஆதீனம்!

 என்னால் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட சாமிநாதன் என்னை கொலை செய்யும் அளவுக்கு சதித் திட்டிம் தீட்டியிருந்தார். இதனால்தான் அவரை நீக்கினேன். எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் யாராக இருந்தாலும் நீக்கும் அதிகாரம் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
திடீரென செய்தியாளர்களிடம் பேசினார் மதுரை ஆதீனம். அப்போது அவர் பேசுகையில், இளைய ஆதீனமாக, 2004ம் ஆண்டு, சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆதீனத்துக்கு உட்பட்ட திருவாரூர் பண்ணைத்தெரு சிவன் கோவில் மேலாளர் ஆறுமுகத்திடம் தகராறு செய்தார். ஆதீனத்தின் சொத்து ஆவணங்களை கேட்டு மிரட்டினார். ஆறுமுகம் மறுக்கவே, நாளைக்கு மதுரை ஆதீனமாக வேறு ஒருவர் இருப்பார். அப்போது நீ எப்படி இந்த பதவியில் இருப்பாய் என பார்ப்போம் என்று, சாமிநாதன் மிரட்டியுள்ளார்.

மாணவியை சிறுநீர் குடிக்கவைத்த வார்டன் மேற்கு வங்கம்

விடுதியில் தங்கியிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, படுக்கையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த வார்டன், அந்த மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேற்கு வங்கம், மக்ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மிஸ்திரி. இவரின் மகள் அஜிதா . இவள் தன் கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாந்திநிகேதன் பகுதியில், விஸ்வபாரதி பல்கலைக் கழக கட்டுப்பாட்டிலுள்ள, பாத பவன் உறைவிட மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவள் அங்குள்ள கராபி மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். இவள், கடந்த வெள்ளியன்று இரவு தூங்கும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள்.இதை அறிந்த விடுதி வார்டன் ஆத்திரமடைந்து, நேற்று முன்தினம் காலை மாணவியை அழைத்து வலுக் கட்டாயப்படுத்தி, அவளது சிறுநீரை குடிக்க வைத்தார்.

Air India விமானத்தில் கோளாறு.. பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்!

இஸ்லாமாபாத்: டெல்லியில் இருந்து அபுதாபி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென எந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
130 பயணிகளுடன் அபுதாபி சென்று கொண்டிருந்த அந்த விமானம் (AI 940) பாகிஸ்தானின் மீது பறந்தபோது விமானத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. அதன் சக்கரங்களை கீழே இறக்கும் ஹைட்ராலிக் சிஸ்டத்திலும் பிரச்சனை ஏற்பட்டது.

UP 10 மாநகராட்சி மேயர் பதவிகளை BJP கைப்பற்றியது


 Bjp Sweeps Corporation Polls Uttar Pradesh
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை பாரதிய ஜனதா கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் 12 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை அள்ளிச் சென்றது. லக்னோ, மீரட், கான்பூர், ஆக்ரா, வாரணாசி, ஜான்சி, கோரக்பூர், அலிகார், மொரதாபாத், காஜியாபாத் ஆகியவை பாஜக வசமாயின.
மற்ற 2 இடங்களில் அலகாபாத் மாநகராட்சி மேயர் பதவியை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் அபிலாஷா குப்தா கைப்பற்றி உள்ளார். இவர் மாநில முன்னாள் அமைச்சர் நந்த் கோபால் குப்தாவின் மனைவி ஆவார். பரேலி மேயர் பதவியை ஆளும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஐ.எஸ். டோமர் கைப்பற்றி உள்ளார்.

தலை வழுக்கையா? Stem Cell சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம்

உலகம் முழுவதும் சராசரியாக 25 சதவீத ஆண்கள் 30 வயதுக்குள் வழுக்கை ஆகின்றனர். மற்றவர்கள் 60 வயதுக்குள் ஆகின்றனர். வயது மட்டுமின்றி பரம்பரை, அதிக வேலைச்சுமை, மன இறுக்கம், மன அழுத்தம், சுற்றுச்சூழல் என பல காரணங்கள் தலை வழுக்கைக்குக் காரணிகளாவதாகக் கூறப்படுகிறது.
தலை வழுக்கை ஏற்பட்டாலே ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. இதற்கு காரணம் முடி உதிர்ந்தாலே முழு அழகும் போய்விட்டது என்று கருதுவதுதான். இதனால்தான் கூந்தல் தைல விற்பனையில் அருவிபோல பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. காலகாலமாக, வழுக்கை தலையில் முடி வளர்த்துப் பார்க்க உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் பெரிதும் முயன்று வருகின்றனர். தலை வழுக்கையானவர்கள் இனி கவலை வேண்டாம், ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம் என்று ஜப்பானிய பல்கலைகழக ஆராய்ச்சி ஒன்று நம்பிக்கை அளிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் 3 மாதத்தில் 1149 கொலைகள்

கட்டுப்படுத்த முடியாதம் தடுமாறும் முதல்வர் அகிலேஷ்
 Akhilesh Fails Curb Goondaraj 1149 Murders Three Months
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் பொறுப்பேற்ற 3 மாதங்களில் 1146 கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. ரவுடிகள் ராஜ்ஜியத்தை கட்டுப்படுத்த முடியாமல் அகிலேஷ் யாதவ் தடுமாறி வருகிறார்.
கடந்த ஆண்டில் இதே காலத்தில் 714 கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மொத்தம் 472 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த ஆண்டில் 384 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருந்தன. இதேபோல் மார்ச் மாதம் முதல் ஜூன் வரை மொத்தம் 2001 ஆட்கடத்தல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த ஆண்டோ 1803 வழக்குகள்தான் பதிவாகி உள்ளன.

ஆங்கிலம் உலகின் ஆட்சி....மொழியாகிறது


1780 ஆம் ஆண்டுக் காலப்  பகுதியில்   பிரஞ்சு   மொழியே உலகில்   பலராலும் பேசப்பட்டது. அதற்கு முன்பு லத்தீன் மொழியே உலகில் அநேக மக்களால் பேசப்பட்டது. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். அப்போது உலகில்  130 இலட்சமானோரே ஆங்கிலம்  பேசினர்.  இவர்கள் அனைவரும் பிரிட்டனிலும், வட அமெரிக்க கரையோரங்களிலுமே வசித்து வந்தனர்.
அப்போதைய  உலகின்  சனத் தொகையில்   இது 1 சதவீதமே. அத்தோடு, ஐரிஸ் நாட்டவரையும் வேல்ஸ் நாட்டவரையும் விட வேறு ௭வரும் ஆங்கிலம் கற்பதில் அக்கறை ஏதும் காட்டவேயில்லை. 230 வருடத்திற்கு முன்பு கூறப்பட்ட தைரியமான ஆரூடம்  (Bold prediction) இன்று  ௭ப்படி நிரூபணமாகிறது, நிஜமாகிறது ௭ன்பதை அலசி ஆராய்கிறது இக் கட்டுரை.
சற்று  காலம் அதிகம் ௭டுத்திருக்கிறது. ஆனால், இத்தாலியில்   மிகவும் பிரசித்தி பெற்ற  பல்கலைக் கழகமான   politecnico Di milano 2014 ஆம் ஆண்டிலிருந்து  தனது சகல கற்கை நெறிகளையும் ( Courses ) ஆங்கிலத்தில்  மாத்திரம்   நடாத்த இருப்பதாக கடந்த மாதம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ௭திராக   இத்தாலியில் பலத்த வாத, பிரதி வாதங்கள் ௭ழுந்துள்ள   நிலையில் 1863 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதும் 36,500 மாணவர் கல்வி கற்கும்   பல்கலைக்கழகத்தின் தலைவர் ( Rector  ) ஆன ஜியோ வன்னி  அசோனி  மிகவும்   தெளிவான கருத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

தி.மு.க., மீது எரிச்சலை கக்குவது என்றால் இனிக்கிறது

 இந்திய கம்யூனிஸ்ட் தா பாண்டியன் சொல்லி இருந்தால் நீங்கள் அதை பெரியதாக எடுத்துகொள்ளமாட்டீர்கள் ஏனென்றால் தா பாண்டியன் இப்போது அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளராகவே செயல்ப்படுகிறார் என்ன்பது தமிழக மக்கள் அறிந்த ரகசியம்
சென்னை: ""தி.மு.க., மீது எரிச்சலைக் கக்குவது என்றால், எப்படித் தான் இனிக்குமோ தெரியவில்லை. தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என்றதும், சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கவில்லை,'' என, மார்க்சிஸ்டுகளை, கருணாநிதி தாக்கியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றில், "மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டபோது, வெறும் அறிக்கை மட்டுமே விட்டும், பெயரளவில் ஆர்ப்பாட்டம் நடத்திய, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, நில அபகரிப்பு வழக்குகளை எதிர்த்து, சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.

மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லையாம் TIME அமெரிக்க பத்திரிகை

 madurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ
2012-07-09 05:48:38 IST 
சிங்கு சும்மா இருந்தாலும், கொண்டைக்குள் நெறைய விஷயம் வைத்திருக்கிறார்... உள்ளூரில் (அமெரிக்காவில்) நோண்டுவதை விட்டு இந்தியாவை நோண்டி என்ன பயன் ?? இவனுங்க பேங்குகள் கிழிஞ்சு நார் நாராத் தொங்குது ... அது எப்ப வெடிக்கப் போகுதோ... QE 3 ன்னு இன்னொரு தபா எல்லா வெள்ளை அரசாங்கங்களும் நோட்டடித்து பேங்குகளுக்கு பணம் கொடுத்து நாசமாப் போகப் போகுது.. அந்த தில்லுமுல்லை பற்றி முன் அட்டையில் போடுவதை விட்டுட்டு அதைப் பத்தி கேள்வி கேட்கும் மன்மோகன் சிங்கை கிண்டலடிக்கும் டைம்ஸ் பத்திரிக்கைக்கு வேறு நல்ல செய்தி கிடைக்கவில்லையா ??
 
நியூயார்க்: பிரதமர் மன்மோகன் சிங், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் சென்று, சாதனை புரியாதவர்' என, அமெரிக்காவின் பிரபல, "டைம்' பத்திரிகை கடுமையாக விமர்சித்திருக்கிறது.

முல்லைப் பெரியாறு... அடிதடி கலாட்டாவில் முடிந்த தமிழக, கேரள கலாச்சார கூட்டம்!

கோட்டயம்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது தொடர்பான மாற்றுக் ஆலோசனைகளைத் தெரிவிக்க கோட்டயத்தில் கூட்டப்பட்ட தமிழக, கேரள கலை, எழுத்துலகினர் நடத்திய கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டு கூட்டம் பாதியிலேயே முடிந்து போனது.
உயிரு என்ற தமிழ்-மலையாள கலாச்சார அமைப்பு இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. சிவிக் சந்திரன், தேவிகா, சாரு நிவேதிதா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ரேணிகுண்டா இயக்குனர்: பாலா, சேரன், லிங்குசாமி காணாமல் போய்விடுவார்கள்


 இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளிவந்த ’ரேணிகுண்டா’ படம் பெரிய வெற்றியடைந்தது. ரேணிகுண்டாவைத் தொடர்ந்துபன்னீர் செல்வம் இயக்கும் படம் ’18 வயசு’. ரேணிகுண்டா படத்தில் நடித்த ஜானி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 
நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிக்கும் இந்த படம், இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.  18 வயசு படம் பற்றி பேசிய இயக்குனர் பன்னீர் செல்வம் “ நான் இயக்கிக்கொண்டிருக்கும் 18 வயசு படம் ஒரு ரொமேண்டிக் ஸ்டோரி என்றாலும், அதில் புதுவித யுக்தியை பயன்படுத்தியுள்ளேன். 

India உலகிலேயே குறைந்த செலவில் செல்போன் சேவை

உலகிலேயே குறைந்த செலவில் செல்போன் சேவை தருவது இந்தியா தான் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 
காரைக்குடி,ஜூன் 8-உலகிலேயே குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவையை தருவது இந்தியாவில் தான் என மத்திய உள் துறைஅமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
சிவகங்கை மாவட் டம் காரைக்குடி அருகே உள்ளகோவிலூர் ஊராட்சியில் உள்ள அண்ணாநகரில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து தந்த ரூ.9 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது. தலைமை தாங்கி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சமுதாய கூடத்தை திறந்து வைத்து பேசிய தாவது:-

கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த த்ரிஷா, ஸ்ரேயா

ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருந்தபோதிலும் புதுமுக நடிகருடன் ஜோடி சேர நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோர் மறுத்துவிட்டனர்.
புதுமுக நடிகர் அச்சுதன் சங்கர் என்பவர் கோப்பெருந்தேவி என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் பெரிய நடிகைகளை நடிக்க வைக்க நினைத்தார். இதையடுத்து த்ரிஷாவை அணுகி தனக்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளார். இதற்காக த்ரிஷாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
த்ரிஷா முதலில் ஓ.கே. சொல்லிவிட்டு பிறகு புதுமுக ஹீரோவோடா நடிக்க என்று நினைத்து மறுத்துவிட்டார். இதையடுத்து ஸ்ரோயாவை கேட்டுள்ளனர்.

Blue Film பார்த்த போது கொல்லப்பட்ட Bin Laden


World Osama Was Addicted Sunny Leone Videos பின்லேடன் கொல்லப்பட்டபோது சன்னி லியோன் ஆபாச சிடியைப் பார்த்துக் கொண்டிருந்தார்''



ஆபாசப் பட நடிகை சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர் ஒசாமா பின்லேடன். சன்னி லியோனின் ஆபாசப் பட வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து ரசித்து வந்தார் பின்லேடன். அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட அவர் சன்னி லியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா.
உலகை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன். இவனைப் பிடிக்க அமெரிக்காவைப் போல யாருமே பணத்தை வாரியிறைத்திருக்க மாட்டார்கள். கடைசியில் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் வைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க வீரர்கள்.