ஞாயிறு, 8 ஜூலை, 2012

India உலகிலேயே குறைந்த செலவில் செல்போன் சேவை

உலகிலேயே குறைந்த செலவில் செல்போன் சேவை தருவது இந்தியா தான் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 
காரைக்குடி,ஜூன் 8-உலகிலேயே குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவையை தருவது இந்தியாவில் தான் என மத்திய உள் துறைஅமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
சிவகங்கை மாவட் டம் காரைக்குடி அருகே உள்ளகோவிலூர் ஊராட்சியில் உள்ள அண்ணாநகரில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து தந்த ரூ.9 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது. தலைமை தாங்கி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சமுதாய கூடத்தை திறந்து வைத்து பேசிய தாவது:-

ஊராட்சி பகுதிக ளுக்கு தேவையான அடிப் படை வசதிகள் அனைத் தையும் அதன் தலைவர் தான் முன்னின்று செய்து கொடுக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வா கம் ஆகியவை தனது பங்கினை உரிய முறை யில் ஊராட்சிக்கு செலுத் தினால் ஊராட்சிகள் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்ள முடியும்.ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேர்மையாக செயல் பட்டு தங்களது பகுதி யில் அடிப்படை வசதி களைபெருக்கிக் கொள்ளவேண்டும்.
எம்.பி.களாலும், எம்.எல்.ஏகளாலும் சட்டங்களை இயற்ற தான் முடியும். ஊராட்சி மன்ற தலைவர்களால் தான் நேரடியாக அடிப் படை வசதிகளை ஏற் படுத்தி தரமுடியும். உலகத்திலே குறைந்த கட்டணத்தில் செல் போன் சேவையினை தருவது இந்தியாவில் தான். இந்தியாவின் மொத்த மக்கள் தொகை, குழந்தைகள், முதியவர் கள் உள்பட 110கோடி பேர் ஆவார்கள். இவர் களில் செல்போன் பயன் படுத்துவோரின் எண் ணிக்கை 90 கோடி பேர் ஆவர்.இது நாடு வளர்ச்சி பாதையில் செல்வ தையை காட்டுகிறது. ஊராட்சி மன்ற தலை வர்கள் அனைத்து வசதி களையும் செய்து கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செய லாற்ற வேண்டும்.-இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: